PDA

View Full Version : லஞ்சம்

இராஜிசங்கர்
28-05-2012, 12:24 PM
ஏ இதயமே !
என்ன வாங்கினாய் அவனிடம்??
எனக்குள் இருந்து கொண்டு -
அவனுக்காய் தினம் துடிப்பதற்காக!!!

சிவா.ஜி
28-05-2012, 10:11 PM
என்ன வாங்கினாய் என்றால்....லஞ்சம்தான்.....லஞ்சமாய் அவனது காதலைத்தான்.....!!!

அழகான வரிகள். சின்னச் சின்ன வரிகளில் அருமையான கவிதையளித்திடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

கீதம்
28-05-2012, 11:49 PM
எதையும் கையூட்டாய் வாங்கவில்லையாம்,

இங்கேயும் அங்கேயும் இதயங்கள் இடம் மாறித் துடிக்க,

காதலூட்டி, இதயமாற்றம் நிகழ்ந்துவிட்டதாம்.

அழகான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
29-05-2012, 04:40 AM
நன்றி சிவா அண்ணா & கீதம் அக்கா

மஞ்சுபாஷிணி
29-05-2012, 10:53 AM
ரசிக்க வைத்த வரிகள் இராஜி... அன்பு வாழ்த்துகள்...

HEMA BALAJI
06-06-2012, 02:32 PM
ஹா ஹா... என்ன தைரியம் இந்த இதயத்துக்கு, ஒருத்தருக்குள் இருந்து கொண்டு அடுத்தவருக்காய் துடிப்பதற்கு. அது சரி என்ன வாங்கியது என்பதையும் தெரியப் படுத்தாமலே அல்லவா டென்ஷன் ஆக்குகிறது?
குட்டிக் கவிதை மிக நன்று ராஜி. வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
06-06-2012, 03:28 PM
கவிதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். எதுகை மோனையோடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இராஜிசங்கர்
07-06-2012, 04:12 AM
ஹா ஹா... என்ன தைரியம் இந்த இதயத்துக்கு, ஒருத்தருக்குள் இருந்து கொண்டு அடுத்தவருக்காய் துடிப்பதற்கு. அது சரி என்ன வாங்கியது என்பதையும் தெரியப் படுத்தாமலே அல்லவா டென்ஷன் ஆக்குகிறது?
குட்டிக் கவிதை மிக நன்று ராஜி. வாழ்த்துக்கள்.
நன்றி HEMA BALAJI அவர்களே

இராஜிசங்கர்
07-06-2012, 04:14 AM
கவிதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். எதுகை மோனையோடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நான் கத்துக்குட்டி ஐயா.எதுகை மோனையோடு நயம்பட எழுத விரைவில் பழகி விடுகிறேன்.அக்கறை நிறைந்த விமர்சனத்துக்கு நன்றி ஐயா ..