PDA

View Full Version : கண்மணியே பேசு



இராஜிசங்கர்
28-05-2012, 12:20 PM
ஆறேழு மொழிகள் தெரியுமென்ற
ஆணவம் எல்லாம் அழிந்து விட்டது - உன்
மௌனத்தின் அழுத்தம் வெட்கமா
வெறும் உதாசினமா என்பது தெரியாததால்....

ஆதி
28-05-2012, 01:05 PM
உணர்வுப்பூர்வமான வரிகள், பெண்மைக்கு இது இன்னும் ஆழப்பொருந்தும்

மௌனப்புதி ரவிழ்க தெரியாமல்
மௌனப்புதி ரெதற்கு புரியாமல்
மனந்தத்த ளித்து குழம்பி
பித்தமுற்ற காளைகள் இங்கு அதிகம்
சித்திரமங் கையர்கள் இரங்கி
சித்தமதை சொன்னால் உயிர்
பிழைத்துக் கொள்வர் சிலவிகிதம்

பாராட்டுக்கள்

இராஜிசங்கர்
28-05-2012, 01:08 PM
மௌனப்புதி ரவிழ்க தெரியாமல்
மௌனப்புதி ரெதற்கு புரியாமல்
மனந்தத்த ளித்து குழம்பி
பித்தமுற்ற காளைகள் இங்கு அதிகம்
சித்திரமங் கையர்கள் இரங்கி
சித்தமதை சொன்னால் உயிர்
பிழைத்துக் கொள்வார் சிலவிகிதம்


அழகான வரிகள் ஆதன் .

இராஜிசங்கர்
28-05-2012, 01:09 PM
பாராட்டுக்களுக்கு நன்றி

jayanth
28-05-2012, 05:28 PM
ஆறேழு மொழிகள் தெரியுமென்ற
ஆணவம் எல்லாம் அழிந்து விட்டது - உன்
மௌனத்தின் அழுத்தம் வெட்கமா
வெறும் உதாசினமா என்பது தெரியாததால்....

அருமை...

jayanth
28-05-2012, 05:30 PM
உணர்வுப்பூர்வமான வரிகள், பெண்மைக்கு இது இன்னும் ஆழப்பொருந்தும்

மௌனப்புதி ரவிழ்க தெரியாமல்
மௌனப்புதி ரெதற்கு புரியாமல்
மனந்தத்த ளித்து குழம்பி
பித்தமுற்ற காளைகள் இங்கு அதிகம்
சித்திரமங் கையர்கள் இரங்கி
சித்தமதை சொன்னால் உயிர்
பிழைத்துக் கொள்வர் சிலவிகிதம்

பாராட்டுக்கள்

கவிதைக்குப் பின்னூட்டம் அருமை...

சிவா.ஜி
28-05-2012, 08:35 PM
மௌனம்..ஆறேழல்ல..ஏரேழுலக மொழிபேசி...கேட்பவரை கிறுகிறுக்கச்செய்யும்...பாவம் அந்தக் காதலன்.

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் சகோதரி.

கீதம்
28-05-2012, 11:54 PM
மௌனம் எதையும் சொல்லாது
ஆனால் எதையும் சொல்லாமலிருக்காது.
சொல்லிய சொல்லைவிடவும்
சொல்லாத மௌனத்திற்கு வலி அதிகம்.
அது சொல்லாத சொல்லும் வலி தரும்.
மௌனத்தின் வேதனையைப் பிரதிபலிக்கும்
வரிகளில் காண்கிறேன் எதிர்பார்ப்பின் ஏக்கத்தை!

மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
29-05-2012, 04:36 AM
நன்றி jayanth, சிவா.ஜி & கீதம்

ஜானகி
29-05-2012, 06:00 AM
மௌனம் பேசவைக்கிறதோ...?

மஞ்சுபாஷிணி
29-05-2012, 06:44 AM
அமைதி எல்லோருக்கும் பிடிக்கும்
மௌனம் எல்லோரையும் வசப்படுத்தும்....
அன்பு என்றும் நிலைத்து இருக்கும்...

அருமையான வரிகள் இராஜி...

இராஜிசங்கர்
29-05-2012, 08:50 AM
நன்றி மஞ்சு அக்கா