PDA

View Full Version : பாரதிக்கு ஒரு தனிமடல் (நெடுங்கவிதை) -நட்சத்ரன்



natchatran
03-12-2004, 09:54 AM
பாரதிக்கு ஒரு தனி மடல் (நெடுங்கவிதை)

-நட்சத்ரன்

ஒண்ணாம் வகுப்பில் அப்பா
சேர்த்துவிட்ட முதல் நாளில்
ஓடுவேய்ந்த பள்ளியின் உட்சுவர் புகைப்படத்தில்
மீசை முறுக்கி விழிகூர்த்திருந்த உன்னை
முதன்முதல் தரிசித்தேன்.
அப்போது நீ யாரென்று தெரியாது!
உனக்கருகில் தாடிமீசையோடான ஒருவர்
கையில் சுவடியுடன் படமாய் இருந்தார்.

எப்போதும் குறட்டைவிட்டபடியிருந்த
மீசைவாத்தியார் விழித்தெழும்வரை
உன்னைப்பார்த்திருப்பதே என் வேலையாச்சு!

(தொடரும்...)

பாரதி
03-12-2004, 03:35 PM
பாரதிக்கு நீங்கள் எழுதும் தனிமடலை நாங்களும் அறியத்தந்தமைக்கு நன்றி நட்சத்திரன். என்ன எழுதப்போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்புடன் நான்....

பிரியன்
03-12-2004, 04:33 PM
தங்கள் தனிமடலை ஆவலுடன் துவக்கி இருக்கிறீர்கள்.தொடருங்கள்.

இளசு
03-12-2004, 05:06 PM
அருமை கவிஞர் நட்சத்ரன் அவர்களே..

ஆவலைத்தூண்டும் தொடக்கம்...

பாராளுமன்றத்தில் பாரதியார் உருவம் பதித்த சேதியும்
திசைகள் இதழை பாரதிக்கு அர்ப்பணித்த நிகழ்வும் கண்டு வந்தால்..

இங்கே உங்கள் நெடுங்கவிதை..

எத்தனை பூமாலைகள் சார்த்தினாலும்
நம் மனம் நிறையாத தமிழ்ச் சின்னம் பாரதி..

தொடருங்கள்...

manitha
04-12-2004, 03:07 AM
பாரதிக்கு ஒரு தனி மடல், அருமை!
நாங்களும் (தமிழ்மன்ற பங்கேற்பாளர்கள்) பாரதியை நலம் விசாரித்ததாக சொல்லவும்.
மேலும் தமிழ்மன்றம் வைத்து தமிழ் வளர்ப்பதையும் சொல்லவும்.
மிகவும் சந்தோசப்படுவார்.

பரஞ்சோதி
04-12-2004, 05:42 AM
நன்றி அண்ணா.

பாரதிக்கு அனுப்பும் மடலில் பரஞ்சோதி பற்றியும் சொல்லவும், இன்னமும் என் பள்ளி நண்பர்களிடத்தில் "வால் பாரதி" என்றால் அது நான் தான் என்று நினைவு வரும் என்பதையும் நினைவு படுத்தவும். பாரதி வேடம் என்றால் என்னைத் தான் அழைப்பார்கள் என்பதையும் சொல்லுங்கள்.

தொடர்ந்து படிக்க ஆவலோடு இருக்கிறோம்.

rambal
29-12-2004, 04:00 PM
பாரதியோடு வள்ளுவனையும் குறிப்பிட்டுள்ளீர்கள்..
தூங்கும் மீசை வாத்தியார் அற்புதமான உருவகம்..
தொடருங்கள்.. படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

gragavan
31-12-2004, 06:05 AM
தொடருங்கள். மிகவும் எதிர்பார்ப்பைத் தூண்டும் தலைப்பும் தொடக்கமும். ஆவல் அதிகரித்து விட்டது. அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்