PDA

View Full Version : பப்பியின் : டாக்டர் நகைச்சுவைpuppy
01-02-2004, 07:50 PM
மன்றத்தில் உள்ள மருத்துவர்கள் மன்னிப்பார்களாக....அவர்களுக்கே இது சமர்ப்பணம்

puppy
01-02-2004, 07:53 PM
ஊசி போட்ட பிறகு எதுக்கு ஸ்கேன் பண்ணனும் சொல்றீங்க டாக்டர்

இல்லே உள்ளே போன ஊசி எங்கே இருக்குன்னு பார்க்கதான் ?

puppy
01-02-2004, 07:55 PM
அந்த டாக்டர் போலின்னு நினைக்கிறேன்

ஏன் அப்படி சொல்றே ?

சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா..ஒரு கிலோவுக்கு 20ருன்னு சொல்றாரு

puppy
01-02-2004, 07:56 PM
என்ன உங்க வயிற்றிலே ஸ்பூனா இருக்கு..

நீங்க தானே டாக்டர் மருந்து கொடுத்து இரண்டு ஸ்பூன் சாப்பிட சொன்னீங்க?

thiruarul
01-02-2004, 07:58 PM
மன்றத்தில் உள்ள மருத்துவர்கள் மன்னிப்பார்களாக....அவர்களுக்கே இது சமர்ப்பணம்

நகைச்சுவைத் துணுக்குகளானாலும் சிந்திக்க வைக்கும் துணுக்குகள்.போலிவைத்தியர்கள் இருக்கும்வரை இவ்வாறான துணுக்குகளுக்கான கருவிற்குப் பஞ்சமேயில்லை.

தந்த மதிப்பிற்குரிய பப்பி அவர்கட்கு நன்றிகள் பல!!

அன்புடன் திருவருள்
________________________________________________
தமிழருடன் தமிழர் தமிழ் மூலம் தொடர்பாடுவோம்

puppy
01-02-2004, 08:02 PM
வீட்டுக்கே வந்து டாக்டர் பிரசவம் பார்த்தார்

அப்போ டோர்-டெலிவரின்னு சொல்லுங்க ...

puppy
01-02-2004, 08:03 PM
டாக்டர் ஒரு மாசமா தூக்கமே வரலை.

ஒரு மாசமா என்ன பண்ணீங்க ?

முழிச்சிட்டு இருந்தேன் டாக்டர்.

puppy
01-02-2004, 08:04 PM
அந்த டாக்டர் ஆபரேஷனைவிட போஸ்ட்மார்ட்டம் பண்னும் போது ஜாக்கிரதையாக இருப்பார்..

ஏன்?

கத்தியை உள்ளே வைச்சுட்டா கிடைக்காதே.

இளசு
01-02-2004, 11:49 PM
பொதுவாய் டாக்டர் ஜோக்குகளை டாக்டர் அல்லாதவர்தான் மற்றவர்களுக்கு சிறப்பாய்
சொல்லுகிறார்கள்..

(வெ.சீதாராமன் விதிவிலக்கு)

பாராட்டுகள் பப்பி அவர்களுக்கு.

அறிஞர்
02-02-2004, 04:31 AM
வாழ்த்துக்கள்.. பப்பி....

நன்றாக சிரித்தேன்.

aren
02-02-2004, 06:47 AM
டாக்டர் அகத்தியன் மற்றும் டாக்டர் திருவருள் ஆகியோர் நிச்சயமாக பப்பி அவர்களை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பப்பி அவர்களே, ஜோக்குகள் அருமை. தொடருங்கள்.

karikaalan
02-02-2004, 05:05 PM
டாக்டர்கள் மாட்டிக்கொண்டார்களா! பப்பிஜி, நன்றிகள்.

===கரிகாலன்

mania
03-02-2004, 05:14 AM
அருமையான ஜோக்குகள் பப்பி........ ரசித்து சிரித்தேன். நன்றி
அன்புடன்
மணியா

puppy
04-02-2004, 12:51 AM
ஒரு பேராசிரியர் தனது காரை மெக்கானிக் ரிப்பேர் செய்வதை பார்த்து கொண்டு இருந்தார்....ஒரு மருத்துவர் தனது காரை சரி செய்ய காத்து கொண்டு இருக்கும் நேரத்தில் பேராசிரியர் காரை என்ன பன்றாங்கன்னு பார்க்க பக்கத்தில் வர, பேராசிரியர் சொன்னார்

டாக்டர்...நம்ம பார்க்கிற வேலை மாதிரி இதுவும் ரொம்ப கஷ்டமான வேலைதான் போல என்றார்

உடனே டாக்டர் ..கண்டிப்பா...ஆனால் வண்டி ஓடும்போது இதை செய்ய சொல்லுங்க பார்ப்போம்.

இளசு
04-02-2004, 01:01 AM
கொஞ்சம் ஆதரவான ஜோக். அடிபட்ட இடத்துக்கு களிம்பு போல.

நன்றி பப்பி அவர்களே.

puppy
04-02-2004, 01:02 AM
டாக்டரின் வீட்டில் ஒரு பைப் உடைந்து வீடு எல்லாம் தண்ணியாக , உடனே பிளம்பரை கூப்பிட்டார்...

வந்தவன் ஏதோ பண்ணி சரி செய்து விட்டு 600 என பில் கொடுக்க, இது ரொம்ப அநியாயம்....டாக்டரான நானே இவ்வளவு பீஸ் வாங்குறதில்லைன்னு சத்தம் போட

வந்தவனோ....நானும் டாக்டரா இருக்கும்போது இவ்வளவு வாங்கினதில்லைன்னு சொன்னான்.

puppy
04-02-2004, 01:08 AM
டாக்டர் கார் மெக்கானிக்கை பார்த்து : நாங்க பில் பண்றதை விட நீங்க இவ்வளவு அதிகம் காசு வாங்குறீங்க.

மெக்கானிக் : இந்த பாருங்க டாக்டர் சார்...அந்த காலத்தில் ஆதாம் எப்படி இருந்தானோ அப்படியே தான் இன்னிக்கு இருக்கான்..ஆனால் கார் வருஷத்துக்கு ஒரு மாடல் வருது இல்லையா...

இளசு
04-02-2004, 01:10 AM
களிம்பு பூசிய இடத்தில் கடி....மன்னிக்கவும் மீண்டும் மீண்டும் அடி...

puppy
04-02-2004, 01:36 AM
மனநல மருத்துவரிடம் போனான் ஒருத்தன்

டாக்டர் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை....கட்டிலில் ஏறி படுத்தா கீழே யாரோ இருக்கிற மாதிரி இருக்கு.,...உடனே கீழே போய் படுத்தா மேலே யாரோ இருக்கிற மாதிரி இருக்கு...என்னால தூங்க முடியலை

இது ஒன்னும் பெரிசில்லை....6 மாதம் என்கிட்டே வந்து போ...எல்லாம் சரி ஆயிடும் என்றான்

ஆமாம் எவ்வளவு காசு கொடுக்கனும் நான் இதுக்கு டாக்டர்

ஓவ்வொரு முறை வரும்போது 300ரூ கொடுக்கனும்..

ரொம்ப அதிகமா இருக்கே டாக்டர்.....நான் தூங்க முயற்சி பண்ணி பார்க்கிறேன்

6 மாதம் கழித்து அவனை ஒரு பாரில் பார்த்த டாக்டர்.,,..ஆமாம் நீ ஏன் என்கிட்டே வரவே இல்லை என்றார்

எதுக்கு ? இங்கு வந்த குடிகாரன் பிரச்சனையை தீர்த்துட்டான்.

எப்படி ?

அவன் கட்டிலின் கால்களை வெட்ட சொல்லிட்டான்...

இளசு
04-02-2004, 01:44 AM
மெக்கானிக், பிளம்பர், குடிகாரன்..

அடுத்து என்ன மென்பொருள் பொறியாளரா?

puppy
04-02-2004, 01:50 AM
ஒரு நல்ல கடுமையான வெயில் அடித்து கொண்டு இருந்த நாளில் ரோட்டில் ஒருவன் மயங்கி விழ, ஒரு இளம்பெண் ஓடி வந்தாள் உதவி செய்ய.....உடனே கூட்டம் கூட , கூட்டத்தில் இருந்த ஒருவன் ....ஏம்மா கொஞ்சம் தள்ளி போ....நான் முதலுதவி எப்படி பண்றதுன்னு படிச்சு இருக்கேன் என்றான்...இவளும் சற்றே நகர, அவன் கை பிடித்து அவனின் நாடி பிடிச்சு பார்க்க ..இவள் அவனின் முதுகில் தட்டி.....டாக்டரை கூப்பிடும் பகுதி வரும் போது....நான் இருக்கேன் இங்கே சரியா என்றாள்

இளசு
04-02-2004, 01:56 AM
இந்த ஜோக்கில் கசப்பான ஓர் உண்மை இருக்கு பப்பி அவர்களே

மருத்துவமனையிலேயே, வெளிநாடுகளில் கூட பெண் மருத்துவர்களை
"நர்சுகள்" என நினைத்து அழைப்பவர் உண்டு..

aren
04-02-2004, 03:22 AM
நானே இந்த தப்பை ஒரு முறை செய்து மிகவும் வருத்தப்பட்டேன். என்னுடைய மகளுடன் கூடப்படிக்கும் ஒரு பெண்ணின் தாய் எங்கள் வீட்டிற்கு முதல் முறையாக வந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் மாண்டிரியால் ஜெனரல் ஆஸ்பிடலில் வேலை செய்வதாகச் சொன்னார்கள். நான் அங்கே என்ன செய்கிறீர்கள். நர்ஸாக இருக்கிறீர்களா என்று வாய்தவறி கேட்டுவிட்டேன். அவர்கள் இல்லை நான் அங்கே டாக்டராக இருக்கிறேன் என்றார்கள். நான் உடனே என்னை மன்னித்துவிடுமாறு கேட்டுக் கொண்டேன். நானே எனக்கு சூடு வைத்துக் கொண்டது மாதிரி ஆகிவிட்டது. அதன் பிறகு நான் யாரையும் இந்த மாதிரி கேட்பதில்லை. அங்கே என்ன வேலை செய்கிறீர்கள் என்றே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

நாங்கள் மாண்டிரியால் விட்டு இங்கே வந்து விட்டாலும் இன்னும் அவர்கள் எங்களுடன் கடிதத்தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிஞர்
04-02-2004, 04:33 AM
மெக்கானிக் : இந்த பாருங்க டாக்டர் சார்...அந்த காலத்தில் ஆதாம் எப்படி இருந்தானோ அப்படியே தான் இன்னிக்கு இருக்கான்..ஆனால் கார் வருஷத்துக்கு ஒரு மாடல் வருது இல்லையா...

நல்ல ஜோக்... வாழ்த்துக்கள்.. பப்பி...

இளசு. சொல்வது போல்.. அடி, களிம்பு, அடி... என்ற பாணியில் தொடர்கிறது

puppy
04-02-2004, 08:34 PM
ஒரு ஓவியன் தன் படங்களை பார்வைக்காக வைத்து இருந்தான்....எங்கோ போய்விட்டு மாலை வந்து தன் படங்கள் எதாச்சும் விறக்பட்டதா என்று கேட்டான்...அந்த காலரியின் மேனஜர் சொன்னார்..உங்களுக்கு ஒரு நல்ல விஷயமும் கெட்ட விஷயமும் இருக்கு என்றார்...

நல்ல விஷயம் என்ன என்றான் ?

ஒருத்தர் வந்தார், உங்கள் ஓவியங்கள் நீங்கள் இறந்த பிறகு நல்ல விலைக்கு போகுமா என்று கேட்டார்..நானும் கண்டிப்பாக என்றேன்...உடனே உங்கள் எல்லா ஓவியங்களையும் வாங்கி விட்டார் என்றார்...

உடனே ஓவியன்....கண்டிப்பா அது நல்ல விஷயம் தான்...ஆமாம் கெட்ட விஷயம் என்ன என்றான்

வந்து வாங்கியவர் உங்க டாக்டர் என்றான்.

puppy
04-02-2004, 08:40 PM
ஒருவன் : டாக்டர் என்னால் வீட்டில எதுவும் செய்ய முடியலை......ஒன்னும் செய்யாம இருக்கேன்..என்னன்னு பாருங்க.

டாகடர் அவனை பரிசோதித்து முடித்துவிட....

ஒருவன் : டாக்டர் எனக்கு புரியறமாதிரி மருத்துவ வார்த்தைகள் இல்லாமல் சிம்பிளா சொல்லுங்க எனக்கு என்ன பிரச்சனை என்று

டாகடர் : நீங்க ஒரு சுத்த சோம்பேறி.

ஒருவன் : அப்படியா....இப்போ அதுக்கு மருத்துவத்தில என்ன சொல்லுவாங்கன்னு சொல்லுங்க...நான் என் பெண்டாட்டி கிட்டே போய் சொல்லனும்.

இளசு
05-02-2004, 12:16 AM
கலக்குறீங்க பப்பி அவர்களே

அன்பின் ஆரென் அவர்களின் அனுபவப்பாடம் .. நமக்குப் பாடம்..நன்றி..

இளசு
05-02-2004, 01:13 AM
டாக்டர் : டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது.
உண்மையச் சொல்லுங்க. நீங்க தண்ணி போட்டது உண்மைதானே?

அவன்: நீங்க டாக்டரா, வக்கீலா? அதச் சொல்லுங்க மொதல்ல்ல்ல்ல..!

இளசு
05-02-2004, 01:15 AM
அவர்: அந்தப் பைத்தியத்தின் தலயில் டாக்டர் எலுமிச்சப்பழம் தேய்ச்சிட்டிருக்காரே ஏன்?

இவர்: அட நீங்க ஒண்ணு.. அது டாக்டர் இல்ல..நிஜப்பைத்தியம்..
கீழ கிழிஞ்ச சட்டையோட உட்கார்ந்து தலையக் காட்டிட்டு இருக்கிறவர்தான் டாக்டர்!

aren
05-02-2004, 05:13 AM
பப்பி இப்படி கலக்குகிறீர்களே. உங்களுக்கு டாக்டரான யாரையோ பிடிக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது.

இளசு அவர்களே, நீங்கள் சேம்சைடு கோல் போடுகிறாற்போலுள்ளதே, இருந்தாலும் பாவம் அந்த பைத்தியத்திடம் மாட்டிக்கொண்டு இந்த டாக்டர் இப்படி அவஸ்தைப்பட வேண்டாம்.

இளசு
06-02-2004, 12:28 AM
ஆரென் அவர்களே
தெருவில் ஒருவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும்
வித்தை மாதிரி இது..
அப்பவாவது மத்தவர்கள் அடிக்காமல் அனுதாப உச்சு கொட்டுவாங்களான்னு
ஒரு நப்பாசை..அம்புட்டுதேன்..

டாக்டர் : இந்த மாத்திரையை தினம் மூணு வேளை சாப்பிடுங்க..

அவர் : ஆகாரம்..?

டாக்டர் : அதெல்லாம் நீங்களேதான் ஏற்பாடு பண்ணிக்கணும். என்னால முடியாது.

lavanya
06-02-2004, 12:32 AM
ரகளையா போகிறது இந்த பதிவு..கலக்குகிறீர்கள் போங்கள்...
அப்புறமா நானும் வந்து சேர்ந்துக்கறேன்...

இளசு
06-02-2004, 12:59 AM
சித: அய்யோ லாவும் வராங்களா????? அண்ணே விடுங்க ஜூஊட்!


"டாக்டர்கிட்ட போனவுடனே சிரிக்க ஆரம்பிச்சிடுங்க.."
"ஏன்?"
"அவர் ஜோக் எழுதும் டாக்டர். அவர் ஜோக்கை ரசிச்சு சிரிக்கிறமாதிரி நடிச்சா பீஸ் குறைச்சிடுவார்!"

madhuraikumaran
06-02-2004, 01:19 AM
நல்லாருக்கு டாக்டர் சிரிப்பு...

இப்பல்லாம் டாக்டர்கள் பேசறதும் சிரிப்பா சிரிக்குது... ஒரு டாக்டர் ஒரு விஷ்ணு அவதாரத்தை விவகாரமா சொல்லிட்டு இப்ப சங்கடப்படுறார் !!!

suma
06-02-2004, 03:37 AM
"அந்த டாக்டர் ஒரு தீவிர ரேடியோ எப்.எம். ரசிகர்னு எப்படிச் சொல்ற?''

''எனக்கு ஜுரம் எவ்வளவு இருக்குன்னு கேட்டதுக்கு 98.3 வெரி ஹாட்டு'ன்னு சொல்றாரே."

suma
06-02-2004, 03:42 AM
''ஆபரேஷன் பண்ணா உங்க மாமியார் உடம்பு தாங்காது...''

''அப்ப உடனே ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர்.

aren
06-02-2004, 03:46 AM
சுமா, தூள் கிளப்புகிறீர்கள். நன்றாக உள்ளது.

aren
06-02-2004, 03:48 AM
ஒரு பெண் டாக்டரிடம் சென்று தான் இளைப்பதற்கு மருந்து கொடுக்கும்படி கேட்கிறாள்.

டாக்டர் ஒரு பாட்டிலில் 500 மாத்திரைகளைப் போட்டு அவளிடம் கொடுத்து, தினமும் மூன்று முறை என்பார்.

உடனே அந்தப் பெண் சாப்பிடுகிறேன் டாக்டர் என்பார்.

உடனே டாக்டர், இல்லை இது சாப்பிடுவதற்கு இல்லை. இதை தினமும் கீழே கொட்டிவிட்டு ஒவ்வொன்றாக எடுத்து இந்த பாட்டிலில் மறுபடியும் போட வேண்டும். இதையே தினமும் மூன்று முறை செய்யவேண்டும். இதுதான் நீங்கள் இளைப்பதற்கு சரியான மருந்து.

mania
06-02-2004, 05:23 AM
ஒரு பெண் டாக்டருக்கு போன் பண்ணினாள் , " என் பூனையை மூக்கில் தேனி கொட்டிவிட்டது . ரொம்ப கத்துகிறது....என்ன செய்ய ?"
டாக்டர் (ஒரு மாத்திரையின் பேர் சொல்லி ) ," இதை ஒன்று கொடுங்க நல்லா தூங்கிடும் . அப்புறம் சரியாகிவிடும் "
இரண்டு மனி நேரம் கழித்து, " டாக்டர் இன்னும் கத்திக்கொண்டுதான் இருக்கு என்ன பண்ண ?'
டாக்டர் , " அப்பிடியா... இப்போ இன்னும் ரெண்டு மாத்திரையா கொடுங்க...சரியாகிடும் "
ஒரு மணி கழித்து மீண்டும் போன் , " டாக்டர்...இன்னும் கத்திண்டு தான் இருக்கு ...பாவமா இருக்கு....என்ன பண்ன ?"
டாக்டர் (கோபமாக ஆனால் சாதாரணமாக ), நீங்க ஒரு நாலு மாத்திரைய எடுங்க. ரெண்டு பூனைக்கு கொடுங்க. ரெண்டு நீங்க சாப்பிடுங்க...சரியாயிடும் !!!!"
அன்புடன்
மணியா

suma
06-02-2004, 04:08 PM
அதுக்கு ஏன் மணியா டெண்சன் ஆரீங்க

puppy
07-02-2004, 12:22 AM
டாக்டர் குத்தினவுடன் ஏன் ரத்தம் வருது ?

குத்தினது யாருன்னு பார்க்க வருது!!!!!!!!

puppy
07-02-2004, 12:29 AM
ஆபரேஷன் தியேட்டரில் போன் வைக்க வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்.

ஏன் என்ன ஆச்சு ?

அதுவும் டெட் ஆயிடுச்சு.

அலை...
07-02-2004, 12:40 AM
டாக்டர் : இந்த மாத்திரையை தினம் மூணு வேளை சாப்பிடுங்க..

அவர் : ஆகாரம்..?

டாக்டர் : அதெல்லாம் நீங்களேதான் ஏற்பாடு பண்ணிக்கணும். என்னால முடியாது.

அய்யோ..இளசு...வலி தாங்க முடியவில்லை..சுமாவே மேல்..(சுமா பிமேல் என்று கடிக்காதிர்கள்)

puppy
07-02-2004, 12:40 AM
அந்த பல் டாக்டர் சரியான கிரிக்கெட் பைத்தியமா ஏன் ?

என் பல் ஆடுதுன்னு சொன்னா எவ்வளோ ஸ்கோர்ன்னு கேக்கிறார் ?

அலை...
07-02-2004, 12:46 AM
பப்பி..மரணக் கடி..

சிரிப்பு மருந்துக்கு.

suma
07-02-2004, 01:40 AM
தன் நோயாளி ஒருவனுக்கு கேன்சர் நோய் இருந்தது உறுதியானவுடன் டாக்டர் அவனிடம் அதனை எடுத்துக் கூறி இன்னும் இரு மாதங்களில் மரணம் உறுதி என்பதால் தேவையான பணிகளை முடித்துவிடுமாறு கூறினார். அவன் தன் நண்பர்களிடம் சென்று தனக்கு எய்ட்ஸ் இருப்ப தாகவும் அதனால் விரைவில் மரண மடையப் போவதாகவும் தன் நண்பர்களிடம் கூறினான். இதனை அறிந்த அவன் டாக்டர் அவனை அழைத்து நீ கேன்சரால் தான் சாகப் போகிறாய் என்று சொன்னேன். நீ ஏன் எய்ட்ஸ் என உன் நண்பர்களிடம் கூறி வருகிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான் "நான் இறப்பதற்கு முன்னரோ அல்லது இறந்த பின்னரோ என் நண்பர்கள் என் மனைவியை வட்டமிடக் கூடாது என்பதற்காக இந்த பொய்' என்றான்.
தினமலரில் படித்தது.

aren
07-02-2004, 02:14 AM
நல்ல கடிகள். காலையில் படித்தவுடனேயே உடம்பெல்லாம் ரணமாகிவிட்டது.

puppy
11-02-2004, 07:58 PM
சிஸ்டர் என் வயித்தில ஆபரேஷன் பண்ணி ஒழுங்கா தையல் எல்லாம் போட்டாச்சா ....

போட்டாச்சு.

ஒரு செம்பு தண்ணி கொடுங்க.....குடிச்சுட்டு ஒழுகுதான்னு பார்க்கனும்.

பரஞ்சோதி
11-02-2004, 08:02 PM
சிஸ்டர் என் வயித்தில ஆபரேஷன் பண்ணி ஒழுங்கா தையல் எல்லாம் போட்டாச்சா ....

போட்டாச்சு

ஒரு செம்பு தண்ணி கொடுங்க.....குடிச்சுட்டு ஒழுகுதான்னு பார்க்கனும்

அப்படி தண்ணீர் ஒழுகினால், எங்களுக்கு சொல்லுங்கள் நாங்கள் பிளம்பிங் வேலை எல்லாம் செய்கிறோம், நம்பிக்கையாக.

puppy
11-02-2004, 08:05 PM
டாக்டர் இனிமேல் சைக்கிளில் வாங்க கிளினிக்குக்கு

ஏன் சிஸ்டர்

நீங்க நடந்து வர்றதால உங்களை கால்நடை மருத்துவர்ன்னு எல்லோரும் கிண்டல் பண்றாங்க

puppy
11-02-2004, 08:08 PM
டாக்டர் ஜூரம் மூனு நாளா நிக்கவே இல்லை.

சரி சரி உட்காருங்க.

puppy
11-02-2004, 08:10 PM
டாக்டர் நான் ஆவிகளை பற்றி ஆராய்ச்சி செய்ய போறேன்.

அதுக்கு நான் என்ன செய்யனும்?

உங்க ஆபரேஷன் தியேட்டரை ஒரு நாள் வாடகைக்கு விடனும்.

அறிஞர்
12-02-2004, 01:25 PM
டாக்டர்கள்... பப்பியிடம்.. அவதிபடுகிறார்கள்.

காப்பாற்ற யாரும் இல்லையா?

suma
12-02-2004, 02:26 PM
டாக்டர் பர்த்டே கேக் சாப்பிட்டதும் நெஞ்சு எரியுது..
இனி மெழுகு வர்த்தி எடுத்துட்டு சாப்பிடுங்க.

இளசு
16-02-2004, 11:08 PM
பப்பி, சுமா இதோ நானும் சேம்சைட் கோல்போட வந்துட்டேன்..

பெ.த: டேய்..ராத்திரியிலே தூக்கமே வர்றதில்லைன்னு டாக்டர்கிட்டே போனியே...
என்ன சொன்னார்?

சி.த: "என் கிளினிக்குக்கு நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்துடறியா"ன்னு
கேட்டாருண்ணே..!!!!!

mania
17-02-2004, 03:50 AM
பெண் (டாக்டரிடம்)," நான் காப்பி , டீ எது குடிச்சாலும் அப்பிடியே தொண்டையிலே குத்த்ற மாதிரி இருக்கே"
டாக்டர்," குடிக்கும்போது கப்பிலேயிருந்து ஸ்பூனை எடுத்திட்டு குடி சரியா போயிடும் " !!!!!
அன்புடன்
மணியா

karikaalan
17-02-2004, 01:41 PM
டாக்டர்: நாய்க்கடியில இருந்து தப்பிக்கணும்னா, இந்த மாத்திரைய முழுங்கிட்டு, மரத்துமேலே ஏறிடு.

வந்தவர்: நாய் ரொம்ப பக்கத்துல வந்துடுச்சுன்னா?

டாக்டர்: மரத்துல ஏறினப்புறமும், மாத்திரை முழுங்கலாம்.

===கரிகாலன்

suma
19-02-2004, 10:26 PM
எனக்கு ஆபரேஷன் பண்ணாம, வேற எதாவது வழி இருக்கா? டாக்டர்.
ஹம்ம்....ஆளை வெச்சுதான் க்ளோஸ் பண்ணணும்.

suma
19-02-2004, 10:32 PM
டாக்டர், இந்த மருந்தை சாப்பிடதிலிருந்து உடம்புல்லாம் ஒரே ஊசி குத்தறா போல் இருக்கு!

ஓ அப்படியா, இருங்க பாக்கறேன், இது எதாவது 'PIN' விளைவா இருக்கும்.

karikaalan
19-03-2004, 04:44 PM
ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கும் நோயாளி:

"டாக்டர், உங்க பக்கத்துல அது யாரு, ப்ளம்பர் மாதிரி?"

ஸர்ஜன்: "ஆமா, ப்ளம்பர்தான்; ஆபரேஷன் பண்ணும்போது உங்களுக்கு மூச்சுக் குழாய்ல அடைச்சுக்கிட்டுதுன்னா? யார் சரி பண்ண? இவர்தான்."

===கரிகாலன்

பிகு. உபயம் குமுதம்

இளசு
21-03-2004, 11:34 PM
அண்ணலே... நீங்களும் பப்பி,சுமா கூட சேர்ந்தாச்சா..
அப்ப நாங்க கொஞ்ச நாள் போர்டை கழட்டிட்டு வேற தொழில் பார்க்க வேண்டியதுதான்..

poo
22-03-2004, 12:09 PM
இந்த பிளம்பர் ஜோக்கை படிக்கும்போதே நினைச்சேன்.. மன்றத்தில் பதியனும்னு..

mania
22-03-2004, 12:16 PM
அண்ணலே... நீங்களும் பப்பி,சுமா கூட சேர்ந்தாச்சா..
அப்ப நாங்க கொஞ்ச நாள் போர்டை கழட்டிட்டு வேற தொழில் பார்க்க வேண்டியதுதான்..

:lol: :lol: என்ன பிளம்பர் வேலையா ???!!! :roll: :roll: :wink:
அன்புடன்
மணியா

karikaalan
22-03-2004, 12:27 PM
மணியாஜி

இதுக்குத்தான் சிண்டு முடியறதுன்னு பேரு! நல்லாவே இருக்குது.

===கரிகாலன்

karikaalan
23-03-2004, 06:14 PM
ஏன் டாக்டர் உங்க நர்ஸிங்ஹோம்லதான் ஆபரேஷன் செய்துக்கணும்னு சொல்றீங்க? அதுல என்ன சிறப்பு இருக்குது?

டாக்டர்: பின்னே..... 24 மணி நேரமும் ஒரு வக்கீல் இருப்பாரு....

நோயாளி: வக்கீல் எதுக்கு?

டாக்டர்: புரியாம பேசறீங்களே, உயில் கியில் நீங்க எழுதி வைக்கவேணாமா?
அதுமட்டுமில்லே. நாங்க எம்மதமும் சம்மதம்னு நர்ஸிங்ஹோம் நடத்தறோம். எப்பவும் ஒரு புரோகிதர், ஒரு மௌலானா, ஒரு பாதர் அவைலபிளா இருப்பாங்க.....

நோயாளி: என்னது... இவங்கள்ளாம் எதுக்கு?

டாக்டர்: திருப்பவும்..... அடாடா.. புரியல்லையா.... சடங்குகள்ளாம் செய்யவேண்டாமா? கவலைப் படாதீங்க.. உங்க பீஸ்ல இதெல்லாம் அடக்கம்.

===கரிகாலன்

இளசு
23-03-2004, 11:24 PM
ஒரு முழுமையான (comprehensive) மருத்துவமனை என்று சொல்லுங்கள்...

poo
24-03-2004, 06:44 AM
அடடா.... அண்ணல் அண்மையில் ஏதேனும் டாக்டரால் பலமாக கவனிக்கப்பட்டாரா?!

poo
25-03-2004, 08:27 AM
டாக்டர் என்ன பில்லுல எக்ஸ்ட்ரா 100 ரூபா சேர்த்து போட்டிருக்கீங்க?!

கத்தரிக்கோலை காணோம்யா.. அதைத்தான் பில்லுல சேர்த்துவுட்டுருக்கேன்!!

மூர்த்தி
25-03-2004, 02:14 PM
எங்களூரில் நடந்த உண்மைச் சம்பவமய்யா இது.அந்த டாக்டர் இன்றுவரை ரெண்டுரூவா டாக்டராக பணியாற்றிக்கொண்டுள்ளார்.

இளசு
25-03-2004, 11:53 PM
:lol: :lol: என்ன பிளம்பர் வேலையா ???!!! :roll: :roll: :wink:
அன்புடன்
மணியா

மணியா... அன்புடன் அடிச்சீங்களே ஆப்பு.... தெறிச்சிடுச்சி போங்க.. :)

karikaalan
30-03-2004, 01:24 PM
டாக்டர் வீட்டுக்கு வந்த நண்பர், அவர் அங்கில்லாதது கண்டு, டாக்டரின் 4 வயது மகளைக் கேட்டார், அவளுடைய தந்தை எங்கே என்று.

மகள்: "டாடி, இன்னிக்கி ஒரு அப்பெண்டக்டமி ஸர்ஜரி பண்ணப் போயிருக்காரு".

அவர்: "அடே அப்பா, பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றியே, உனக்கு அதுக்கு அர்த்தம் தெரியுமா?"

மகள்: "ஓ, தெரியுமே...... 15000 ரூபாய். அனெஸ்தடிஸ்ட், ஆபரேஷன் தியேட்டர் செலவு தனி."

===கரிகாலன்

மன்மதன்
03-04-2004, 09:23 AM
கரிகாலன்-ஜி அசத்துங்க... காமெடியில் ஒரு பெரிய மெசேஜே இருக்கிறது.

mania
06-04-2004, 12:33 PM
டாக்டர் பணக்கார நோயாளியிடம் ," வருத்தமாதான் இருக்கு...என்ன பண்ன...உங்களுக்கு குணப்படுத்தமுடியாத அளவுக்கு ரேபிஸ் நோய் இருக்கு . இன்னும் கொஞ்ச நாள் தான் தாங்கும் .....ஆனா உங்களுக்கு இது கொஞ்ச நாளாவே இருந்திருக்கணும்...."
நோயாளி ," டாக்டர் ஒரு பேப்பரும் பேனாவும் தரீங்களா ?"
டாக்டர் ," ஓ....உங்க உயிலை எழுதவா...?"
நோயாளி ," இல்லை....நான் யார் யாரை கடிக்கணும்ன்னு லிஸ்ட் போட......!!!!???"
டாக்டர் ,!!!! :roll: :roll:
அன்புடன்
மணியா

Mathu
06-04-2004, 06:10 PM
டாக்டர் ,!!!! எஸ்கேப்
முதல் பலி நீ தாம்பா...
:lol: :lol: :lol:

mania
08-04-2004, 10:03 AM
பேஷண்ட் " ஏன் டாக்டர் நான் மது மங்கை சிகரெட் எல்லாத்தையும் விட்டுட்டா நிறைய நாள் வாழலாமா ?"
டாக்டர் " அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை.வாழ்வது அதே காலம்தான். ஆனா நிறைய நாள் வாழ்ந்த மாதிரி தெரியும் . அவ்வளவு தான் "
பேஷண்ட் !!!???
அன்புடன்
மணியா

karikaalan
18-05-2004, 01:46 PM
டாக்டர்களைப் பற்றி ஒரு நல்ல (!) ஜோக்:

நல்ல சர்ஜன் யார்?

"எதை வெட்டக்கூடாது என்பதை அறிந்தவரே நல்ல சர்ஜன்."

===கரிகாலன்

உபயம்: Dr. சம்பத், Chief Neuro Surgeon, Rhode Islands Hospital, USA.

மன்மதன்
18-05-2004, 01:58 PM
ஜோக் அல்ல நிஜம்.. சம்பத் சொல்லியிருப்பது... கொடுத்த கரிகாலன்ஜிக்கு நன்றி..

பரஞ்சோதி
18-05-2004, 03:47 PM
அது மட்டும் இல்லை கரிகாலன் அண்ணா, வெட்ட உதவுவதை உள்ளே வைத்து தைக்காமல் இருப்பவரும் நல்ல டாக்டர் தான். :wink:

பரஞ்சோதி
18-05-2004, 06:44 PM
நோயாளி: டாக்டர் அய்யா, முதுகு வலி தாங்க முடியலை.

டாக்டர்: ஏன் முதுகு வலிக்குது?

நோயாளி: சின்ன வயசில் இருந்து கட்டை விரலை சூப்பும் பழக்கம் அதனால் தான்.

டாக்டர்: கட்டை விரலை சூப்பினால் முதுகு ஏன் வலிக்கிறது?

நோயாளி: டாக்டர் நான் சூப்புவது கால் கட்டை விரலை.

டாக்டர்:??!!??!!!!

poo
18-05-2004, 07:02 PM
பரம்ஸ்........................................................

மன்மதன்
19-05-2004, 05:37 AM
பரம்ஸ்................................................

பரஞ்சோதி
19-05-2004, 05:39 AM
பரம்ஸ்................................................

என்ன மன்மதன். முதுகு வலிக்குதா?

அப்பாடா, இனிமேல் பேக் பெயிண், முதுகு வலி என்று யாரும் மன்றத்தில் சொல்ல மாட்டார்கள். :wink: :lol:

அறிஞர்
19-05-2004, 09:42 AM
தாங்கமுடியலை....... பரம்ஸ்................

மன்மதன்
19-05-2004, 09:47 AM
பரம்ஸ்................................................

என்ன மன்மதன். முதுகு வலிக்குதா?

அப்பாடா, இனிமேல் பேக் பெயிண், முதுகு வலி என்று யாரும் மன்றத்தில் சொல்ல மாட்டார்கள். :wink: :lol:

அட இப்பத்தான் ஞாபகம் வருது.. டிஸ்க் ஸ்லிப் பத்தி ஒரு மருத்துவ கட்டுரை எழுதணும்..

அறிஞர்
20-05-2004, 08:16 AM
அது என்ன மன்மதா..... டிஸ்க் ஸ்லிப்.........

மன்மதன்
20-05-2004, 09:20 AM
அது முதுகெலும்பை தாக்கி பிடிக்கும் தட்டு (டிஸ்க்).. மருத்துவ கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..

பரஞ்சோதி
20-05-2004, 09:59 AM
தாங்கமுடியலை....... பரம்ஸ்.................

என்ன முதுகுவலியை தாங்க முடியலையா.... :wink: :lol:

பரஞ்சோதி
20-05-2004, 10:01 AM
அது என்ன மன்மதா..... டிஸ்க் ஸ்லிப்.........

பஸ்ட் ஸ்லிப், செகண்ட் ஸ்லிப் மாதிரி ஒரு வகை ஸ்லிப் என்று நினைக்கிறேன். மன்மதன் துபாய் ஆட்டோ இல்லை இல்லை கிரிக்கெட் விளையாடுகிறார். :wink: :lol:

kavitha
28-05-2004, 06:34 AM
நோயாளி: டாக்டர் நான் சூப்புவது கால் கட்டை விரலை

டாக்டர்?!!??!!!!
அந்த நோயாளி சின்னா தானே!

மன்மதன்
30-05-2004, 12:31 PM
சின்னா யாரு கவி..??

மன்மதன்
30-05-2004, 12:35 PM
ஒரு பெண் மருத்துவரிடம் வந்து

"டாக்டர் என் காதில் ஏதோ குத்துகிறது"

மருத்துவர் அவள் காதிலிருந்து ஒரு தெர்மோமீட்டர் மாதிரி ஒன்றை எடுத்தார்..

"அடடா , இது என்னோட செவிட்டு மெஷின் .. இதை காணோம்னு ரொம்ப நாளா தேடிகிட்டிருந்தேன்.."

மன்மதன்
30-05-2004, 12:40 PM
மூளை மாற்று மருத்துவரிடம் சென்று ஒருத்தன் ஃபீஸ் பற்றி கேட்டான்..

அதற்கு டாக்டர் : ஆண் மூளை மாற்றுவதற்கு 200 டாலர் .. ஆனால் பெண் மூளையை மாற்றுவதற்கு 1000 டாலர்"

"அதன்னே டாக்டர், பெண் மூளைக்கு மட்டும் அவ்வளவு அதிகம்"

"ஏன்னா , ஆண் மூளை உபயோகப்படுத்தப்பட்டது.. பெண் மூளை உபயோகப்படுத்தப்படாமலே எப்பவும் புதியதா இருக்கும்"

பரஞ்சோதி
30-05-2004, 12:41 PM
சின்னா யாரு கவி..??

சின்னா யாரு கவி?
சொல்லு கவி?.. : :?:

அறிஞர்
31-05-2004, 03:58 AM
"ஏன்னா , ஆண் மூளை உபயோகப்படுத்தப்பட்டது.. பெண் மூளை உபயோகப்படுத்தப்படாமலே எப்பவும் புதியதா இருக்கும்"

அட மக்கா.. இது கொஞ்சம் ஓவரா இல்லை.......

அறிஞர்
31-05-2004, 03:59 AM
சின்னா யாரு கவி..??

சின்னா யாரு கவி?
சொல்லு கவி?.. : :?:

பாவம் பரம்ஸ்.. சொல்லிடு கவி.

மன்மதன்
31-05-2004, 03:31 PM
சின்னா .. ஏதாவது எதிர் அணி ஏஜண்டா இருக்கலாம்.. :D :D

poo
31-05-2004, 05:44 PM
கவிதா நம்ம ப்ரேம்குமாரைத்தான் சின்னான்னு சொல்லியிருக்காங்க!!!??

பரஞ்சோதி
31-05-2004, 07:45 PM
[quote]கவிதா நம்ம ப்ரேம்குமாரைத்தான்

யாரு அது பூ, சொல்லுங்க பூ.

பரஞ்சோதி
31-05-2004, 07:50 PM
சின்னா .. ஏதாவது எதிர் அணி ஏஜண்டா இருக்கலாம்.. :D :D

அட நம்ம ஐவர் அணி ஏஜெண்ட் 007 நீங்க, இரும்பு கை மாயாவி நான், ஸ்பைடர் மேன் சேரன், மந்திரவாதி மாண்ட்ரேக் தலை, சூப்பர் மேன் பூ ஆகியோர் இருக்கும் போது எதிரணி ஏஜெண்ட் சின்னாவை பார்த்து ஏன் பயபடுறீங்க மன்மதன்.

இளசு
31-05-2004, 09:58 PM
நிலா இல்லாத நேரம் பார்த்து மூளை ஜோக் பதித்த
மன்மதனின் மூளைத் திறத்தை மெச்சுகிறேன்...

அறிஞர்
01-06-2004, 03:42 AM
நிலா இல்லாத நேரம் பார்த்து மூளை ஜோக் பதித்த
மன்மதனின் மூளைத் திறத்தை மெச்சுகிறேன்...

என்ன மன்மதா.. அவ்வுளவு பயமா.. நிலாவை கண்டு.

kavitha
01-06-2004, 05:19 AM
இல்லையா பின்னே! நிலா வந்தா நமக்கு தானே சப்போர்ட்!

சேரன்கயல்
01-06-2004, 05:24 AM
சின்னா .. ஏதாவது எதிர் அணி ஏஜண்டா இருக்கலாம்.. :D :D

அட நம்ம ஐவர் அணி ஏஜெண்ட் 007 நீங்க, இரும்பு கை மாயாவி நான், ஸ்பைடர் மேன் சேரன், மந்திரவாதி மாண்ட்ரேக் தலை, சூப்பர் மேன் பூ ஆகியோர் இருக்கும் போது எதிரணி ஏஜெண்ட் சின்னாவை பார்த்து ஏன் பயபடுறீங்க மன்மதன்.

மன்மதனுக்கு ஜேம்ஸ் பாண்ட் - சூப்பர் தெரிவு பரம்ஸ்... :wink:
தலைக்கு மந்திரவாதி மாண்ட்ரேக் கலக்கல்... :lol:

அறிஞர்
01-06-2004, 05:38 AM
மன்மதனுக்கு ஜேம்ஸ் பாண்ட் - சூப்பர் தெரிவு பரம்ஸ்... :wink:
தலைக்கு மந்திரவாதி மாண்ட்ரேக் கலக்கல்... :lol:

நமக்கு எதிராக... எந்த மந்திரமும் பலிக்காது... ஹஹஹஹஹஹ்ஹ்

kavitha
01-06-2004, 06:19 AM
கவிதா நம்ம ப்ரேம்குமாரைத்தான் சின்னான்னு சொல்லியிருக்காங்க!!!??
ஆமாம் பூ... நீங்க எதிரணியல அதிகமா பேசாததால "தெளிவா" இருக்கீங்க!
நான் "பேரழகன்" சின்னாவத்தாங்க சொன்னேன்.


அட நம்ம ஐவர் அணி ஏஜெண்ட் 007 நீங்க, இரும்பு கை மாயாவி நான், ஸ்பைடர் மேன் சேரன், மந்திரவாதி மாண்ட்ரேக் தலை, சூப்பர் மேன் பூ ஆகியோர் இருக்கும் போது எதிரணி ஏஜெண்ட் சின்னாவை பார்த்து ஏன் பயபடுறீங்க மன்மதன்.


அதற்குள்ளே உதறலா? ஹஹ் ஹா!மன்மதன் wrote:


"ஏன்னா , ஆண் மூளை உபயோகப்படுத்தப்பட்டது.. பெண் மூளை உபயோகப்படுத்தப்படாமலே எப்பவும் புதியதா இருக்கும்"


அட மக்கா.. இது கொஞ்சம் ஓவரா இல்லை.......

கொஞ்சம் இல்லை அறிஞரே! ரொம்ப ரொம்ப! :oops:
என்ன பண்றது நாங்களெல்லாம் கொஞ்சம் உபயோகித்தாலும் "பளிச் பளிச்" "ரின்" சோப் மாதிரி
நீங்க நிறைய யோசிச்சாலும் அதே மஞ்சள் தான்! அரசாங்க "பார்" சோப் மாதிரி! :D :D

mythili
01-06-2004, 10:41 AM
கவிதா நம்ம ப்ரேம்குமாரைத்தான் சின்னான்னு சொல்லியிருக்காங்க!!!??
ஆமாம் பூ... நீங்க எதிரணியல அதிகமா பேசாததால "தெளிவா" இருக்கீங்க!
நான் "பேரழகன்" சின்னாவத்தாங்க சொன்னேன்.


அட நம்ம ஐவர் அணி ஏஜெண்ட் 007 நீங்க, இரும்பு கை மாயாவி நான், ஸ்பைடர் மேன் சேரன், மந்திரவாதி மாண்ட்ரேக் தலை, சூப்பர் மேன் பூ ஆகியோர் இருக்கும் போது எதிரணி ஏஜெண்ட் சின்னாவை பார்த்து ஏன் பயபடுறீங்க மன்மதன்.


அதற்குள்ளே உதறலா? ஹஹ் ஹா!மன்மதன் wrote:


"ஏன்னா , ஆண் மூளை உபயோகப்படுத்தப்பட்டது.. பெண் மூளை உபயோகப்படுத்தப்படாமலே எப்பவும் புதியதா இருக்கும்"


அட மக்கா.. இது கொஞ்சம் ஓவரா இல்லை.......

கொஞ்சம் இல்லை அறிஞரே! ரொம்ப ரொம்ப! :oops:
என்ன பண்றது நாங்களெல்லாம் கொஞ்சம் உபயோகித்தாலும் "பளிச் பளிச்" "ரின்" சோப் மாதிரி
நீங்க நிறைய யோசிச்சாலும் அதே மஞ்சள் தான்! அரசாங்க "பார்" சோப் மாதிரி! :D :D

ரொம்ப சரியா சொன்னீங்க கவி,
என்ன பண்ண மன்மதன், நாங்க நல்ல concentrated டா இருக்கோம், கொஞ்சம் செலவு செஞ்சாலும் பலன் ஏகமா இருக்கு. ஆனா கவி சொன்ன மாதிரி நீங்க எத்தனை உபயோகம் செஞ்சாலும், கரையவும் மாட்டேங்ரீங்க, பலனும் இல்லை. என்னப் பண்ண, ஒரு வீட்டுல ஒருத்தராவது உபயோகமா செலவழிக்கனும்ல, அதான் பெண்கள். ஆனால் ஆண்கள் தான், உபயோகம் இருக்கோ இல்லையோ, வெட்டி பந்தாவுக்காக
(இங்க பந்தாவுக்காக ஒரு "கூட்டணியே" இருக்கே :wink: )
செலவு நிறைய செய்பவர்கள் ஆச்சே :wink:

அதனால தான் மதிப்பும் (ஆண்மூளையிந் விலை தான் குறைவாச்சே) குறைஞ்சுதான் போகுது?

என்னங்க நான் சொல்லறது ?

அன்புடன்,
மைதிலி

பரஞ்சோதி
01-06-2004, 07:11 PM
மருத்துவர் மன்மதரின் அறுவை சிகிச்சை திரையரங்கில், (ஆப்பரேஷன் தியேட்டரை என் மனைவி மொழி பெயர்த்தார் - MA Mphil ஆங்கிலம்).

நோஞ்சான் நோயாளி : அய்யா, ரொம்ப குளிரா இருக்குது, கொஞ்சம் ஏஸியை குறையுங்களேன்.

மன்மதன்: யோவ், இதுக்கே குளிருது என்று சொன்னா, எப்படியா நீ மார்ச்சுவரியில் இருப்பே.

நோஞ்சான் நோயாளி: அய்யோ அந்த மனநல மேரி டாக்டரே மேல் போலிருக்குது.

எடுக்கிறார் ஓட்டம்.... :wink: :lol: :roll:

அறிஞர்
02-06-2004, 03:22 AM
அந்த நோயாளி பரம்ஸா,.....

குதிரையில ஒரே ஓட்டம் ஓடுவது போல் உள்ளது.

சேரன்கயல்
02-06-2004, 09:22 AM
ரொம்ப சரியா சொன்னீங்க கவி,
என்ன பண்ண மன்மதன், நாங்க நல்ல concentrated டா இருக்கோம், (இங்க பந்தாவுக்காக ஒரு "கூட்டணியே" இருக்கே )
என்னங்க நான் சொல்லற்து ?
அன்புடன்,
மைதிலி


அதனால் என்ன...கொஞ்சம் "தண்ணி" ஊத்தி உங்களை நாங்க dilute செஞ்சிடுறோம்... :wink:
பந்தாவுக்காக கூட்டணி இல்லை மைதிலி...பாந்தமான கூட்டணி...பந்தாவான கூட்டணி...பந்தாடும் கூட்டணி... :lol:

poo
05-06-2004, 06:49 AM
பந்தாவுக்காக கூட்டணி இல்லை மைதிலி...பாந்தமான கூட்டணி...பந்தாவான கூட்டணி...பந்தாடும் கூட்டணி...சேரன் மைக்கை கையில புடிச்சா ஒரு வழிபண்ணாம விடமாட்டார் தெரிஞ்சிக்கோங்க மைதிலி...

அறிஞர்
07-06-2004, 04:28 AM
பந்தாவுக்காக கூட்டணி இல்லை மைதிலி...பாந்தமான கூட்டணி...பந்தாவான கூட்டணி...பந்தாடும் கூட்டணி...


சேரன் மைக்கை கையில புடிச்சா ஒரு வழிபண்ணாம விடமாட்டார் தெரிஞ்சிக்கோங்க மைதிலி...
.

சேரன் (தண்ணியடிக்கும்) ()மக்கை கையில புடிச்சா ஒரு வழிபண்ணாம விடமாட்டார் .. இது தெரிந்த விஷயம் தானே...

பரஞ்சோதி
07-06-2004, 04:35 PM
மீண்டும் மீண்டும் சிரிப்பு:

மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பிரிவில்::

சகோதரி மைதிலி: ஆமாம் அக்கா, கவலைப்பட வேண்டாம், ஒன்றும் நடக்காது, தைரியமாக இருங்க, கடவுள் நம்மிடம் இருக்கிறார் என்று தானே சொன்னீங்க, அதுக்கு ஏன் அந்த நோயாளி எழுந்து ஓட்டம் எடுக்கிறார்.

சகோதரி கவிதா: நீ வேற, நான் இதை சொன்னது நம்ம டாக்டர் அறிஞர்கிட்ட.

சகோதரி மைதிலி: :?: :!: :idea: :!: :idea: :?:

அறிஞர்
08-06-2004, 07:21 AM
[quote]மீண்டும் மீண்டும் சிரிப்பு:

மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பிரிவில்::

சகோதரி மைதிலி: ஆமாம் அக்கா, கவலைப்பட வேண்டாம், ஒன்றும் நடக்காது, தைரியமாக இருங்க, கடவுள் நம்மிடம் இருக்கிறார் என்று தானே சொன்னீங்க, அதுக்கு ஏன் அந்த நோயாளி எழுந்து ஓட்டம் எடுக்கிறார்.

சகோதரி கவிதா: நீ வேற, நான் இதை சொன்னது நம்ம டாக்டர் அறிஞர்கிட்ட.

சகோதரி மைதிலி: :?: :!: :idea: :!: :idea: :?:


அட மக்கா.... :oops: :oops: அறிஞர்... பெற்றது ஆராய்ச்சி டாக்டர் பட்டம். :wink: :wink:

அவரை போய்... அறு(ரு)வை சிகிச்சை அளிக்க சொன்னால் எப்படி... :wink: :wink: :cry: :cry:

(அப்படி இப்படின்னு.. எங்களை இழுக்கிறீயா... பரம்ஸ்.. :oops: :oops: )

karikaalan
30-07-2004, 12:14 PM
தில்லியில் மருத்துவர்கள் கடையடைப்பு செய்திருக்கிறார்கள். ஏனாம்?

பின்னே; மழையே இல்லே...... டெங்கு, மலேரியா, ஃப்ளூ ஒண்ணுமே இல்லே... மருத்துவருக்கு ஏது வேலை??!!


===கரிகாலன்

இளந்தமிழ்ச்செல்வன்
30-07-2004, 07:56 PM
அடேங்கப்பா இந்த வாங்கு வாங்கறீங்க?

அது சரி நம்ம டாக்டர் அகத்தியன் எங்கே இந்த பக்கம் காணோம்?

அறிஞர்
02-08-2004, 08:39 AM
கரிகாலா.. சிரிப்பு... அருமை...... தமிழகத்தில் எப்போது கடையடைப்பு

kavitha
02-08-2004, 09:23 AM
அது சரி நம்ம டாக்டர் அகத்தியன் எங்கே இந்த பக்கம் காணோம்?

ஆமாம் இ.த.செல்வன். இப்போதைய கையிருப்பு இளசு அண்ணா தான்! :D
--------------------------------------------------------------------------------------------------------

நபர் 1: அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?

நபர் 2: காலுக்கு மாவுக்கட்டு போட்டு கழுத்தோட கட்டியிருக்கிறாரே!

************************************************************

நர்ஸ், டாக்டர் ( நோயாளியைப்பார்த்து) : கவலைப்படாதீங்க.. ஆப்ரேசன் நல்லபடியா முடியும்.. நாங்கள்லாம் இருக்கோம்ல!

நோயாளி: நீங்கள்லாம் இருப்பீங்க! நான் இருப்பேனா?

அறிஞர்
02-08-2004, 09:42 AM
கடிதாங்கலை கவி........

poo
03-08-2004, 06:57 AM
கடிதாங்கலை கவி........
ஒரு களிம்பை தயாரிச்சிட வேண்டியதுதானே?!!!

இளசு
03-08-2004, 07:00 AM
டாக்டர் மாதவன் : ஏன் அந்த பேஷண்ட் அப்படி அலறினாங்க? நீ என்ன சொன்ன அவங்ககிட்ட?

டாக்டர் விவேக் : ஆபரேஷன் முடிஞ்சோன்ன என்ன கொடுப்பீங்கன்னு கேட்டாங்க டாக்டர்.. பில்..தான்னு சொன்னேன், அதான்.

(கடித்தாலே பரவசம்)

சேரன்கயல்
03-08-2004, 08:55 AM
கடிதாங்கலை கவி........
ஒரு களிம்பை தயாரிச்சிட வேண்டியதுதானே?!!!

இனிமேலதானா அவர் தயாரிக்கணும்...அதான் பாட்டில் பாட்டிலா இருக்காமே ஆராய்ச்சிக் கூடத்தில... :lol:
(தேக்ஸா தேம்பாவுக்கு...உடல் இளைக்க ஏதோ களிம்பு கொடுத்தாராம நம்ம முல்லா :wink: )

அறிஞர்
03-08-2004, 09:27 AM
கடிதாங்கலை கவி........
ஒரு களிம்பை தயாரிச்சிட வேண்டியதுதானே?!!!

இனிமேலதானா அவர் தயாரிக்கணும்...அதான் பாட்டில் பாட்டிலா இருக்காமே ஆராய்ச்சிக் கூடத்தில... :lol:
(தேக்ஸா தேம்பாவுக்கு...உடல் இளைக்க ஏதோ களிம்பு கொடுத்தாராம நம்ம முல்லா :wink: )

உங்க தலை இளமையா இருக்குறதே.. அந்த களிம்பின் பாக்கியதானுங்கோ.

அறிஞர்
03-08-2004, 09:28 AM
(கடித்தாலே பரவசம்)

என்ன இளசு... கடித்து கடித்து.... பரவசப்படுகிறீர்.....

karikaalan
03-08-2004, 02:02 PM
டாக்டர்கள் கடையடைப்பு தில்லியில் என்று Joke எழுதியதில், நேற்றிலிருந்து மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!

இளவல்Jiக்கு வந்தனம்.

===கரிகாலன்

karikaalan
20-08-2004, 12:20 PM
நர்ஸ், ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கும் நோயாளியிடம் சொல்கிறார்:

"டாக்டர் வந்துக்கிட்டே இருக்காரு. ஞாபகமா அவர்கிட்டே நீங்க போஸ்ட் மார்டத்துக்கு வந்த பேஷண்ட் இல்லேன்னு சொல்லிடுங்க, சரியா?"

===கரிகாலன்

poo
21-08-2004, 06:07 AM
நல்ல டாக்டர்.... நல்ல நர்ஸ்....நல்ல ஜோக்..................

பரஞ்சோதி
21-08-2004, 07:58 PM
பூ, நல்ல வேலை, யார் அந்த டாக்டர், யார் அந்த நர்ஸ், யார் அந்த நோயாளி என்பதை ஐவர் அணியின் சார்பில் நீங்கள் சொல்லவில்லை.

suma
04-09-2004, 05:04 PM
'அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?''

''கண்ணுலேருந்து தண்ணியா வருதுன்னு சொன்னேன். அதுக்கு 'கண்ணுல இருக்குற பாப்பா 'மூச்சா' போயிருக்கும் பதில் சொல்றாரு''
:D :shock: :twisted:

மன்மதன்
05-09-2004, 10:21 AM
'அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?''

''கண்ணுலேருந்து தண்ணியா வருதுன்னு சொன்னேன். அதுக்கு 'கண்ணுல இருக்குற பாப்பா 'மூச்சா' போயிருக்கும் பதில் சொல்றாரு''
:D :shock: :twisted:

:roll: :roll: அப்ப மூக்கு வழியால வந்திருக்கணும்... :roll: :roll: :roll: :roll: :roll:

அன்புடன்
மன்மதன் பாய் எம்.பி.பி.எஸ்

சேரன்கயல்
07-09-2004, 08:08 PM
'அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?''

''கண்ணுலேருந்து தண்ணியா வருதுன்னு சொன்னேன். அதுக்கு 'கண்ணுல இருக்குற பாப்பா 'மூச்சா' போயிருக்கும் பதில் சொல்றாரு''
:D :shock: :twisted:

:roll: :roll: அப்ப மூக்கு வழியால வந்திருக்கணும்... :roll: :roll: :roll: :roll: :roll:

அன்புடன்
மன்மதன் பாய் எம்.பி.பி.எஸ்

ஹா ஹா ஹா...
சுமாவுக்கு ரொம்பத்தான் குசும்புப்பா... :lol:
மன்மதன்பாய்...உங்கள் கேள்வியும் நல்ல கேள்விதான்... :lol: :wink:
(ஆமாம் மூக்கு அடைப்பு ஏற்பட்டால் :idea: :?: ) :wink:

suma
08-09-2004, 12:32 AM
''பார்த்தீங்களா! உங்க பல்லை வலியே தெரியாம பிடுங்கிட்டேன்...''

''டாக்டர் நீங்க இப்ப பிடுங்கினது என்னோட பல் செட் பல்லை டாக்டர்.

மன்மதன்
08-09-2004, 08:38 AM
'அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?''

''கண்ணுலேருந்து தண்ணியா வருதுன்னு சொன்னேன். அதுக்கு 'கண்ணுல இருக்குற பாப்பா 'மூச்சா' போயிருக்கும் பதில் சொல்றாரு''
:D :shock: :twisted:

:roll: :roll: அப்ப மூக்கு வழியால வந்திருக்கணும்... :roll: :roll: :roll: :roll: :roll:

அன்புடன்
மன்மதன் பாய் எம்.பி.பி.எஸ்

ஹா ஹா ஹா...
சுமாவுக்கு ரொம்பத்தான் குசும்புப்பா... :lol:
மன்மதன்பாய்...உங்கள் கேள்வியும் நல்ல கேள்விதான்... :lol: :wink:
(ஆமாம் மூக்கு அடைப்பு ஏற்பட்டால் :idea: :?: ) :wink:

அப்ப பிளம்பரை கூப்பிட்டு பார்க்க சொல்றதுதான்.. :D :D
அன்புடன்
மன்மதன் ராஜா எம்.பி.பி.எஸ் :D

சேரன்கயல்
09-09-2004, 08:18 AM
அப்ப பிளம்பரை கூப்பிட்டு பார்க்க சொல்றதுதான்..
அன்புடன்
மன்மதன் ராஜா எம்.பி.பி.எஸ்


அட...பிளம்பருக்குத்தான் மூக்கடைப்பாம்... :roll: :wink:

karikaalan
25-09-2004, 06:16 AM
நோயாளி: ஏன் டாக்டர், இந்த மருந்தை சாப்பிட்டா நான் உடனே குணமாயிடுவேனா?

டாக்டர்: என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? என்கிட்ட ஒரு தடவை மருந்து வாங்கி சாப்பிட்டவன், திரும்பி வந்ததாக சரித்திரமே கிடையாது!

===கரிகாலன்

karikaalan
19-10-2004, 01:48 PM
டாக்டர்: என்னய்யா எக்ஸ்ரே எடுத்ததுல உன் வயித்துல நிறையா ஸ்பூன் இருக்குதே?

நோயாளி: நீங்கதானே தினமும் ரெண்டு வேளை ரெண்டு டீஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க....

மன்மதன்
06-11-2004, 12:34 PM
நல்ல வேளை பாட்டிலை சாப்பிட சொல்லலை.. நல்ல ஜோக் கரிகாலன்ஜி..
அன்புடன்
மன்மதன்

mania
18-11-2004, 11:19 AM
டாக்டர் மைதிலியிடம்......காலையில் எப்போது நீ எழுந்திருக்கிறாய்...?
மைதிலி........ முதல் சூரிய ஒளி என் ரூமில் ஜன்னல் வழியாக வரும்போது.......
டாக்டர்..... :roll: அது மிக சீக்கிரம் இல்லையா...... :roll: :roll: :?:
மைதிலி...... :roll: ...இல்லையே டாக்டர்.......என் ரூம் மேற்கு பார்த்து தானே இருக்கு...... :roll: :roll:
டாக்டர்....... :roll: :roll: :roll: :?:
அன்புடன்
மணியா...... :lol: :lol: :lol:

karikaalan
26-11-2004, 09:23 AM
உடையார்பாளையம் ஜமீனைச் சேர்ந்தவர்களோ!!

பரஞ்சோதி
19-02-2005, 05:01 PM
மீண்டும் மீண்டும் அறிஞரின் சிரிப்புகள்.

நோயாளி: டாக்டர் ஐயா, எனக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணம் வருகிறது.


டாக்டர் அறிஞர் : என் கிட்ட சிகிச்சைக்கு வந்த போது எனக்கு அது புரிந்து விட்டதே B)

அறிஞர்
22-02-2005, 03:55 AM
Originally posted by பரஞ்சோதி@Feb 20 2005, 01:01 AM
மீண்டும் மீண்டும் அறிஞரின் சிரிப்புகள்.

நோயாளி: டாக்டர் ஐயா, எனக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணம் வருகிறது.
டாக்டர் அறிஞர் : என் கிட்ட சிகிச்சைக்கு வந்த போது எனக்கு அது புரிந்து விட்டதே B)வந்த நோயாளி நீங்கன்னு... சொல்ல மறந்துட்டிங்களே.. பரம்ஸ்..... ;) ;)

பரஞ்சோதி
22-02-2005, 04:24 AM
Originally posted by அறிஞர்+Feb 22 2005, 06:55 AM--><div class='quotetop'>QUOTE(அறிஞர் @ Feb 22 2005, 06:55 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-பரஞ்சோதி@Feb 20 2005, 01:01 AM
மீண்டும் மீண்டும் அறிஞரின் சிரிப்புகள்.

நோயாளி: டாக்டர் ஐயா, எனக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணம் வருகிறது.
டாக்டர் அறிஞர் : என் கிட்ட சிகிச்சைக்கு வந்த போது எனக்கு அது புரிந்து விட்டதே B)வந்த நோயாளி நீங்கன்னு... சொல்ல மறந்துட்டிங்களே.. பரம்ஸ்..... ;) ;)
:D :D :rolleyes: :rolleyes: :D :D

அறிஞர் அவர்களே!

உண்மையில் உங்கள் வீட்டின் முன் இருக்கும் உங்களது பெயர் பலகை பார்த்து, ஒருவர் வைத்தியம் செயய் வந்தால் மேலே சொன்னது தானே நடக்கும்.

அறிஞர்
22-02-2005, 04:36 AM
Originally posted by பரஞ்சோதி@Feb 22 2005, 12:24 PM
அறிஞர் அவர்களே!
உண்மையில் உங்கள் வீட்டின் முன் இருக்கும் உங்களது பெயர் பலகை பார்த்து, ஒருவர் வைத்தியம் செயய் வந்தால் மேலே சொன்னது தானே நடக்கும்.

95715


வீட்டின் முன் இது மாதிரி மாட்டி தோரணம் செய்ய விருப்பமில்லை.. நண்பரே..... :rolleyes: :rolleyes:

puppy
07-04-2005, 11:40 AM
பூ : உடம்பெல்லாம் கண்ணாபின்னான்னு வேர்க்குது டாக்டர்

டாக்டர் : கவலைபடாதீங்க ..உட்காருங்க செக் பண்ணிடலாம்

பூ : நான் செக்கிங்க்கு வரலை டாக்டர் ..உங்க ரூம் ஏசி-ல கொஞ்சம் உட்கார்ந்துட்டு போலாம்ன்னு வந்தேன்...

பரஞ்சோதி
07-04-2005, 12:02 PM
ஏசியில் ஓசியா?

mania
07-04-2005, 12:22 PM
Originally posted by பரஞ்சோதி@Apr 7 2005, 04:32 PM
ஏசியில் ஓசியா?

97325


:D :D :D இல்லை ஓசி யில் ஏசி...... :D :D
அன்புடன்
மணியா.... :D :D

அறிஞர்
08-04-2005, 05:12 PM
ஏசி <<<<____>>>> ஓசி.....

நல்ல ஐடியாவா இருக்கே......

கீதம்
04-09-2012, 02:37 AM
ஒருங்குறியாக்கையில் படித்து ரசித்தவை... இங்கே மற்ற உறவுகளும் ரசிக்க மேலெழுப்புகிறேன்.