PDA

View Full Version : அதிமேதாவி அம்மாஞ்சி



Iniyan
21-01-2004, 03:53 PM
ஆசிரியர்:
கண்ணகி மதுரையை எரித்ததில் இருந்து நமக்கெல்லாம் என்ன தெரியுது?

அதிமேதாவி:
அந்த காலத்தில தீயணைப்பு படை இல்லேன்னு தெரியுது.....

pgk53
21-01-2004, 03:56 PM
சபாஷ் இனியா...தொடருங்கள்.

puppy
21-01-2004, 03:57 PM
அடடா என்ன நீங்க அப்போ இப்போ எதுவும் எரியறது இல்லைன்னு சொல்றீங்களா.........

வேனும்னா அந்த காலத்தில தண்ணீ இல்லைன்னு சொல்லுங்க...

aren
21-01-2004, 04:00 PM
பப்பி அவர்கள் சொல்வதுபோல் அந்த காலத்திலேயும் தண்ணீர் பஞ்சம் போலுள்ளது.

இளசு
22-01-2004, 12:25 AM
நல்லா இருக்கு..தொடருங்கள் இனியன்..

aren
22-01-2004, 02:11 AM
இன்னும் அதிமேதாவியின் அதிரடிப் பேச்சுகள் இருந்தால் இங்கே அள்ளி வீசுங்கள்.

poo
22-01-2004, 12:33 PM
தொடருங்கள் சாமி..

Iniyan
22-01-2004, 09:20 PM
கடந்த இரண்டொரு வருடங்களாக நானும் என் மூளையை கசக்கி வந்தேன். தூக்கமின்மை, போதிய உடற்பயிற்சி இல்லை, அதிக வெயில், வேலை பளு, எல்லாம் என் பரம்பரை வியாதி, அது இது என பல காரணங்கள் கற்பித்து வந்தேன் எனது அதீத சோர்வுக்கு.

ஆனால் ஆண்டவன் அருளால் கடைசியில் சரியான காரணம் கண்டுபிடித்து விட்டேன். மிக அதிக வேலைப்பளு தான் காரணம்....எப்படியா? ரமணா விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லுறேன். கேட்டுக்கோ...

இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 273 மில்லியன்.

இதில் 140 மில்லியன் ஓய்வு பெற்றவர்கள்.
ஆக மிச்சம் 133 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதில் 85 மில்லியன் பள்ளியில்.
ஆக மிச்சம் 48 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதில் 29 மில்லியன் Federal கவர்மெண்ட் வேலையில்.
ஆக மிச்சம் 19 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதில் 2.8 மில்லியன் ராணுவத்தில் உலகமெல்லாம் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் வேலையில்.
ஆக மிச்சம் 16.2 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதிலும் மாநிலம், மாகாணம், நகரம், கிராம அலுவல் என்று 14,800,000 பேர் போக
மிச்சம் 1.4 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதிலயும் மருத்துவமனையிலிருக்கும் 188,000, மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் 1,211,998 பேர் கணக்கு.

ஆகக் கூடி இருக்குற வேலையெல்லாம் பார்க்க மிச்சம் இருக்குறது நீயும் நானும் தான். இதுலயும் நீ இப்படி கம்ப்யூட்டர்ல உட்க்கார்ந்து வெட்டி பொழுது கழிக்கிறே..............

puppy
22-01-2004, 09:24 PM
இந்த கதை இப்போ இப்படி போக ஆரம்பிச்சிடுச்சா.......நல்லா வேலை பார்க்கிறீங்க இனியன்

முத்து
22-01-2004, 09:29 PM
ஹா .. ஹா ..
நல்லா இருக்கு இனியன் ..
தொடருங்க ...

அப்புறம் ..
நீங்கதான் நண்பர் வந்தியத்தேவனா ..?
கொஞ்ச நாளா பார்க்க முடியாத
நண்பர் வந்தியத்தேவன்தான் வந்திருக்கிறார்
என்று நினைத்துவிட்டேன்..
உங்கள் அவதாரைப் பார்த்தவுடன் ..

aren
23-01-2004, 02:18 AM
நன்றாக உள்ளது இனியன் அவர்களே. தொடருங்கள்.

அகிலா
23-01-2004, 02:28 AM
இனியரின் பங்களிப்பு கண்டு வியக்கிறேன்...ஒவ்வெரு பகுதியிலும் தமக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கிறார்..வாழ்த்துக்கள்.

Iniyan
23-01-2004, 02:59 AM
நம்ம அம்மாஞ்சி பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து கை நிறைய மிட்டாய்களை வைத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நாலு, ஐந்து, ஆறு என இடைவிடாது நம்மாள் மிட்டாய் தின்பதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் 'தம்பி, இவ்ளோ மிட்டாய் சாப்பிடுறது நல்லதில்லை. தெரியுமா? இதனால உன் பல்லு கெட்டு போகும். கொழுப்பு ஜாஸ்தியாகும்' என்றார். அதற்கு நம்மாள் 'எங்க தாத்தா 102 வயசு வரைக்கும் இருந்தார். அது உங்களுக்கு தெரியுமா?' என்றான். 'அப்படியா. உங்க தாத்தா தினமும் இவ்ளோ மிட்டாய் சாப்பிட்டாரா என்ன 102 வயசு வரைக்கும் இருக்குறதுக்கு?' என்றார் அந்த பெரியவர். அம்மாஞ்சி 'அதெல்லாம் இல்லை. எங்க தாத்தா தேவையில்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடாம தன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருந்ததால தான் அவ்ளோ நாள் உயிரோட இருந்தார்' என்றான்.

aren
23-01-2004, 03:46 AM
நம்ம அம்மாஞ்சி பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து கை நிறைய மிட்டாய்களை வைத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நாலு, ஐந்து, ஆறு என இடைவிடாது நம்மாள் மிட்டாய் தின்பதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் 'தம்பி, இவ்ளோ மிட்டாய் சாப்பிடுறது நல்லதில்லை. தெரியுமா? இதனால உன் பல்லு கெட்டு போகும். கொழுப்பு ஜாஸ்தியாகும்' என்றார். அதற்கு நம்மாள் 'எங்க தாத்தா 102 வயசு வரைக்கும் இருந்தார். அது உங்களுக்கு தெரியுமா?' என்றான். 'அப்படியா. உங்க தாத்தா தினமும் இவ்ளோ மிட்டாய் சாப்பிட்டாரா என்ன 102 வயசு வரைக்கும் இருக்குறதுக்கு?' என்றார் அந்த பெரியவர். அம்மாஞ்சி 'அதெல்லாம் இல்லை. எங்க தாத்தா தேவையில்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடாம தன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருந்ததால தான் அவ்ளோ நாள் உயிரோட இருந்தார்' என்றான்.

அருமை. நன்றாக உள்ளது.

gankrish
23-01-2004, 05:40 AM
இனியா அருமையான சிரிப்புகள்.

poo
23-01-2004, 03:23 PM
இனியன்... நீங்களும் ஒருபக்கம்/... ஒரே கொண்டாட்டம்.. நன்றிங்கோ!!!

Iniyan
23-01-2004, 08:08 PM
ஒரு ஆமை தன் முதுகில் உள்ள ஓட்டை இழந்து விட்டால் இப்போது அந்த ஆமை நிர்வாணமாய் உள்ளதா இல்லை வீடில்லாமல் உள்ளதா?

Iniyan
23-01-2004, 08:09 PM
எதிலும் ஒட்டாத teflon கோட்டிங் இருக்கும் பாத்திரத்தில் எதுவும் ஒட்டாது என்றால் அந்த teflon எப்படி பாத்திரத்துடன் ஒட்டியது?

Iniyan
23-01-2004, 08:09 PM
விமானங்களில் இருக்கும் 'கருப்பு தகவல் பெட்டி' எப்படிப்பட்ட விபத்திலும் பாதிப்படையாது எனில் ஏன் முழு விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி தயாரிக்கும் பொருளிலேயே தயாரிக்கக் கூடாது?

Iniyan
23-01-2004, 08:09 PM
ஜோசியர்கள் எல்லாம் எதற்கு இன்னும் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்? ஏன் ஒரு பெரிய ஜெயிக்கப் போகும் லாட்டரி நம்பரை ஜோசியத்தால் அறிந்து வாங்கக் கூடாது?

aren
24-01-2004, 01:35 AM
அப்பப்பா!! மேதாவி நிச்சயமாக அதிமேதாவிதான். எப்படிப்பட்ட கேள்விகள். புல்லரிக்கிறது.

பாலமுருகன்
24-01-2004, 10:36 AM
என்னாச்ஷ இனியன்.????
நான் அறிவியல் பூர்வமா பதில் சொல்லலாம்னா... வேனாம்.. ஏற்கனவே சுமா கேட்ட கேள்விக்கு மண்டைபிச்சுகிட்டு அப்படியே கீழே வந்தா !!!! மண்டைய பிச்சிகிட்டு ஓடலாம் போல இருந்தது..

அதனால என் பங்குக்கு நானும் நாலு கேள்விய கேட்டு உங்களையும் பிச்சிக்க வைக்கலாம்னு இருக்கேன்...

பாலா

பாலமுருகன்
24-01-2004, 10:42 AM
எதிலும் ஒட்டாத teflon கோட்டிங் இருக்கும் பாத்திரத்தில் எதுவும் ஒட்டாது என்றால் அந்த teflon எப்படி பாத்திரத்துடன் ஒட்டியது?

தெரியல நீங்களே சொல்லுங்க.. எதுக்கு வம்பு...

பாலமுருகன்
24-01-2004, 10:50 AM
விமானங்களில் இருக்கும் 'கருப்பு தகவல் பெட்டி' எப்படிப்பட்ட விபத்திலும் பாதிப்படையாது எனில் ஏன் முழு விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி தயாரிக்கும் பொருளிலேயே தயாரிக்கக் கூடாது?

ஸ்விட்ச் போட்டா லைட் எரியும் லைட்ட போட்டா ஸ்விட்ச் எரியுமா? இதுக்கு பதில் என்னவோ அதே பதில்தான் எல்லாத்துக்கும்...


<<<<வர வர எல்லாரும் கடிபோட்டு ...... பாருங்க ரத்தமா வருது.....>>>>

poo
24-01-2004, 12:17 PM
அதிமேதாவின்னா சும்மாவா..

நான்ஸ்டிக் தவா- வில் வடை சுடலாமான்னும் கேட்டு சொல்லுங்களேன்!

Iniyan
12-02-2004, 08:18 PM
ஒரு விமானம் நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டது. வானில் விமானம் பறாக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமான கேப்டன் குரல் ஒலி பெருக்கியில் கேட்டது. 'நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் இந்த விமானத்தில் உள்ள பயணியர் அனைவரையும் வரவேற்கிறேன். தட்ப வெப்பத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாதால் அமைதியான பிரச்சனைகள் இல்லாத இனிய பயணமாக இருக்கும் இது. எனவே அனைவரும் நிம்மதியாக ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஐயோ.....ஆண்டவா......'

சற்றே நேர அமைதிக்குப் பின் கேப்டனின் குரல் மீண்டும். 'மன்னிக்கவும். எனது கூக்குரல் உங்களை பயப்படுத்தி இருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் அப்போது பேசிக் கொண்டிருந்த போது விமானப் பணிப்பெண் எனக்கு சூடாக காபி கொண்டு வந்தார். அதை தவறுதலாக என் மடியில் கொட்டி விட்டேன். அதனால் தான் என்னையும் அறியாமல் அப்படி கத்தி விட்ட்டேன். என் பேண்ட்டின் முன்புறத்தை இப்போது நீங்கள் பார்க்க வேண்டுமே...பெரிய கறை.....'

இப்போது பயணிகளில் ஒருவரான நம்ம அம்மாஞ்சி உரக்க 'உங்க பேண்ட் முன்னாடி ஆனது ஒண்னும் பெரிய கறை இல்லை. நீங்க கத்துனதுக்கப்பறம் இப்போ என் பேண்ட்டுல பின்னாடி இருக்குற கறைய நீங்க பாக்கணும்'

இளசு
12-02-2004, 09:38 PM
"கலக்கல்" சிரிப்பு...

பயத்துக்கும் வயித்துக்கும் சம்பந்தம் உண்டுங்கோ...

நன்றி இனியன்.

mania
13-02-2004, 03:29 AM
ஹா .. ஹா ..
நல்லா இருக்கு இனியன் ..
தொடருங்க ...

அப்புறம் ..
நீங்கதான் நண்பர் வந்தியத்தேவனா ..?
கொஞ்ச நாளா பார்க்க முடியாத
நண்பர் வந்தியத்தேவன்தான் வந்திருக்கிறார்
என்று நினைத்துவிட்டேன்..
உங்கள் அவதாரைப் பார்த்தவுடன் ..

:lol: :lol: இல்லை முத்து இவர் அருள்மொழிவர்மர் ஆகத்தான் இருக்கவேண்டும் !!(இவ்வளவு அருள் மொழிகிறாரே !!!!) :wink: :wink:
அன்புடன்
மணியா

gankrish
13-02-2004, 03:59 AM
சூப்பர் ஜோக். வயிறு குலுங்க சிரித்து சிரித்து.. எனக்கும் ஈரம் ஆகிவிட்டது (கண்)

பரஞ்சோதி
13-02-2004, 04:23 PM
சிரிக்க வைத்த சிரிப்பு, அருமை நண்பரே!. அது என்ன நீங்கள் அடிக்கடி விமான பயணம் செய்வபரா?

suma
13-02-2004, 08:09 PM
பரம்ஸ் நீங்க எப்பவும் ஆன் லைனில் இருப்பவரா?
அதிமேதாவி எதார்த்தம் .

thamarai
13-02-2004, 08:15 PM
அருமையான நகைச்சுவை....

பரஞ்சோதி
13-02-2004, 08:15 PM
பரம்ஸ் நீங்க எப்பவும் ஆன் லைனில் இருப்பவரா?
அதிமேதாவி எதார்த்தம் .

மனைவி ஊரில் இல்லை, மேலும் இது கூடவே என்னுடைய மற்ற வேலைகளையும் செய்வதால் அப்போ அப்போ இங்கேயும் எட்டிப்பார்ப்பேன். வீட்டுக்காரி அவர்கள் இருந்தால் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் அதிக நேரம் பார்க்க அனுமதி கிடைக்காது. முன்பு எல்லாம் குருஷேடர், டாம்ப் ரைடர், மேக்ஸ் பெயினி என்ற கம்ப்யூட்டர் விளையாட்டு விளையாடுவேன், தற்போது தமிழ் மன்றம்.

Iniyan
14-02-2004, 02:09 AM
சிரிக்க வைத்த சிரிப்பு, அருமை நண்பரே!. அது என்ன நீங்கள் அடிக்கடி விமான பயணம் செய்வபரா?


அவ்வப்போது நண்பா.....

Iniyan
14-02-2004, 05:39 PM
AT&T தொலைபேசிக் கம்பெனி பிரசிடெண்ட் ஜான் வால்டர் 9 மாதங்களுக்கு பின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கத்திற்காக AT&T தரப்பில் சொல்லப்பட்ட காரணம் - தலைமைப் பதவிக்கு தேவையான கூரறிவு அவருக்கு இல்லை.

பதவியை விட்டு அவர் செல்லும் போது அவருக்கு வழங்கப்பட்ட மொத்த ஓய்வூதிய தொகை $26 மில்லியன்.

எனக்கென்னமோ கூரறிவு இல்லாதது வால்டருக்கு அல்ல என்றே தோணுகிறது....


- அதிமேதாவி

Iniyan
14-02-2004, 05:45 PM
ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையனை அடையாளம் காண ஒரு அடையாள அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது.

கொள்ளையன் சம்பவத்தின் போது முக மூடி போட்டிருந்ததால் குரலை வைத்து அடையாளம் காணும் முயற்சியில், சந்தேகத்திற்குறிய அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து 'எல்லா பணத்தையும் கொடுத்துடுங்க. இல்லேன்னா சுட்டுருவேன்' என்று சொல்லும்படி காவல் துறை கேட்டது. அப்போது வரிசையிலிருந்த ஒருவன் 'நான் ஒண்ணும் அப்படி சொல்லலியே...' என்று ரொம்ப கோபமாய் கத்தினான்.............!!!!!!!!!!!!!!!!11

Iniyan
14-02-2004, 05:49 PM
தொலைபேசியில் ரொம்ப ரொம்ப அவசரமாக அம்மாஞ்சி டாக்டரை கூப்பிட்டு பதற்றத்துடன் 'டாக்டர் என் பொண்டாட்டி பிரசவ வேதனைல துடிச்சுகிட்டு இருக்கா. நீங்க உடனே வர முடியுமா?' என்றார். டாக்டர் பதற்றத்தில் இருக்கும் கணவனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் 'இது அவளோட முதல் குழந்தையா?' என்றார். அதற்கு நம்மாளின் பதில் 'இல்ல டாக்டர். நான் அவளோட புருஷன்'. என்றார்.

Iniyan
14-02-2004, 06:02 PM
அம்மாஞ்சி புத்தம் புதிதாக ஒரு விசைப்படகு வாங்கினார். ஒரு சனிக்கிழமை படகை பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய ஏரியில் சென்று ஓட்டி மகிழலாம் என்று தன் காரின் பின்னால் படகை கட்டி இழுத்து செல்லும் வசதியுள்ள சக்கரம் வைத்த இழுவை படகிலேயே இருந்ததால் படகை காருடன் இணைத்து ஏரிக்கு சென்றார்.

ஏரியில் அந்த புத்தம் புது விசைப்படகு நகர்வதாகவே தெரியவில்லை. முழு விசை கொடுத்தாலும், இஞ்சின் பெரிதாய் உருமியபடி மெல்ல மெல்ல அசைந்ததே தவிர வேகமாய் போகும் வழியை காணோம். அப்படி இப்படி என்று படாதபாடு பட்டு பக்கத்திலிருக்கும் ஒரு படகுத் துறையிலிருக்கும் ஒரு படகு செப்பனிடுபவனிடம் படகை ஏரியிலேயே இழுத்து போனார் அம்மாஞ்சி. மெக்கானிக் நன்றாக படகை பார்த்தான். ஏதும் பிரச்சனை இருப்பது போலவே தெரியவில்லை. எல்லாம் செவ்வனே இருந்தது. என்ன இது ஏன் படகு போகவே மாட்டேன் என்கிறாது என வியந்தபடி தண்ணீரில் குதித்து படகின் அடிப்புறத்தை பார்க்கப் போன மெக்கானிக் ரொம்ப விரைவாய் மேலே வந்தான் அடக்கமுடியாத சிரிப்போடும், தண்ணீருக்குள் சிரித்து அதனால் வாய் மூக்கிலெல்ல்லாம் தண்ணீர் புரை ஏறி இருமியபடியும்.

ஒரு வழியாய் அவன் சிரித்து ஓய்ந்த பின் சொன்னது 'சார், உங்க கார் இன்னும் படகோட இணைச்சே இருக்கு சார். ஆனா இப்போ கார் தண்ணிக்குள்ள........' என்றான்.

பரஞ்சோதி
14-02-2004, 07:19 PM
கலக்கல் சிரிப்புகள் நண்பரே! டாக்டரும் அம்மாஞ்சியும் சிரிப்பு தூள் போங்க. பாராட்டுக்கள்.

சில நேரங்களில் நான் கூட அம்மாஞ்சி ஆகி விடுகிறேன். இன்றைக்கு இப்படி தான் நண்பர் வீட்டிற்கு போன போது அவர் டீ வேண்டுமா காப்பி வேண்டுமா என்றால் நான் சாய் (டீ) இருந்தால் கொடுங்கள் என்றேன். அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்தார், அவர் மன்றம் வந்து சொல்லும் முன்பு நானே சொல்லிவிடுகிறேன்.

இளசு
15-02-2004, 08:51 PM
இனியன்
ஒவ்வொன்றும் தூள்.பாராட்டுகள்.

Mathu
15-02-2004, 09:07 PM
இனியன்.! அனைத்தையுமே ரசித்து சிரித்தேன்,
கலக்கிடீங்க அம்மஞ்சி, தொடர்ந்து தாங்க.!

மூர்த்தி
16-02-2004, 02:15 AM
அதிமேதாவியின் மூலம் எங்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்திய நண்பர் இனியனுக்கு நன்றிகள் பல.

poo
16-02-2004, 01:15 PM
அம்மாஞ்சிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்னு அசத்தறீங்க இனியன்..

இக்பால்
16-02-2004, 02:23 PM
இனியன் எல்லா புதிய சிரிப்புகளாகவும் நல்ல நடையிலும் இருக்கிறது.

தொடருங்கள். இந்த பதிவு ஒரு பெரிய பதிவாக மாறட்டும். அருமை.

-அன்புடன் அண்ணா.

மன்மதன்
16-02-2004, 02:29 PM
அனைத்துமே என் பாராட்டுகளை பெறுகின்றன..

ஒரு அம்மாஞ்சி நேர்முகத்தேர்வுக்கு போயிருந்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது..
அதில் ஒண்ணு. நீங்க ஏன் இதற்கு முன் செய்த வேலையை விட்டுவிட்டிர்கள்..

அதற்கு அவர் ' எங்கள் அலுவலகம் இடம் மாற்றப்பட்டது, ஆனால் எங்கே என்று எனக்கு தெரியபடுத்தப்படவில்லை.

(ஏற்கனவே வந்திருந்தால் மன்னிக்க)

இக்பால்
16-02-2004, 02:48 PM
மன்மதன் தம்பி... நீங்கள் துபாய் வந்தது எப்படி என எனக்குப் புரிந்து விட்டது. :)

மன்மதன்
16-02-2004, 02:50 PM
அடங்கொய்யா..(என்னை பார்த்து நானே)

இதுக்குத்தான் think b4 ink ன்னு சொல்லியுருக்காங்க...(என் சுட்டு விரல் என் முகத்தை நோக்கி)

இக்பால்
16-02-2004, 03:18 PM
அடங்கொய்யா..


இந்த வார்த்தையைக் கேட்டு யுகங்கள் ஆகி விட்டது. :)

Iniyan
14-12-2004, 07:31 PM
அம்மாஞ்சி தொடர்கிறார்......

அம்மாஞ்சி சொர்க்க வாசலில் நின்று கொண்டிருந்தார். சித்ர குப்தர் அவரிடம் தங்கள் வாழ்நாளில் தாங்கள் செய்த ஏதேனும் ஒரு நல்ல விசயத்தை சொல்லுங்கள் என்றார்.

சரி என்று அம்மாஞ்சி சொல்ல ஆரம்பித்தார். ஒரு முறை நான் பீகார் போய் இருந்த போது மாலை நேரம். மெல்லிய இருட்டு பரவிக் கொண்டு இருந்தது. நான் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு ஆளரவமில்லா சாலையில் ஒரு இளம் பெண்ணை நான்கைந்து முரடர்கள் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். நான் உதவும் நோக்கத்துடன் அருகில் சென்று அந்தப் பெண்ணை விட்டு விடுமாறு முரடர்களை வேண்டினேன். ஆனால் அவர்கள் யாரும் கேட்பதாய் தெரியவில்லை. எங்கிருந்து தான் எனக்கந்த வீரம் வந்ததோ தெரியாது. சட்டென அந்த முரட்டுக் கூட்டத்திடம் சென்று அவர்கள் தலைவன் போல் இருந்தனைப் பார்த்து விட்டேன் ஒரு குத்து அவன் முகத்தில். அவன் மூக்கு உடைந்து ரத்தம் வழிய நின்றான். இப்போது நான் மரியாதையாக அந்தப் பெண்ணை விட்டு விடுங்கள். இல்லையேல்....என்று மிரட்டினேன்.

சித்ர குப்தனுக்கோ ஆச்சர்யம். பார்க்க சாதுவாக இருக்கும் நீரா அப்படி செய்தது? ஆனால் தங்களின் இந்த வீர சாகசம் பற்றி என் ஏட்டில் ஒன்றும் இல்லையே? எப்போது நடந்தது இந்தச சம்பவம்? என்று கேட்டார்.

'இப்போ தான் ஒரு நிமிசம் முன்னாடி...' என்றார் அம்மாஞ்சி....

gragavan
15-12-2004, 04:09 AM
இனியன். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயிற்று. அம்மாஞ்சியை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அம்மாஞ்சியின் அச்சுப்பிச்சுகளை இன்னமும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
15-12-2004, 05:14 AM
இதை இத்தனை நாள் கவனிக்கவில்லையே...
படித்தேன் சிரித்தேன் சிரித்தேன் சிரித்தேன்

அலுவலகத்தில் அனைவரும் என்னை ஒரு அம்மாஞ்சியாய் பார்க்கிறார்கள் :)

அன்புடன்,
பிரதீப்

Iniyan
16-12-2004, 01:40 PM
அம்மாஞ்சி வெகு நாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்குப் போனார். போன இடத்தில் அவருக்கு தாங்க முடியாத பல்வலி. சரியென டெலிபோன் டைரக்டரி எடுத்து பல் டாக்டர் பெயர் தேடிய போது கோமதி என்னும் பெயரை பார்த்தார். முகவரியும் அவர் வீட்டுக்குப் பக்கத்து தெருவில். சின்ன வயதில் அவருடன் ஹைஸ்கூலில் படித்த கோமதி என்னும் அழகான பெண் அவருக்கு ஞாபகம் வந்தாள். அவள் தான் இப்போது பல் மருத்துவராய் இருக்க வேண்டும் எனக் கருதி அந்த பெண்ணை வெகு நாட்கள் கழித்து தான் சந்திக்கப் போகும் முதல் சந்திப்பிலேயே அசத்த வேண்டும் எனக் கருதி சும்மா பந்தாவாய் ஜீன்ஸ் அணிந்து கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டு ஒரு எதிர் பாராத ஆச்சர்யமாய் இருக்கட்டும் என்று போனிலேயே அப்பாய்ண்மெண்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு போனார்.

ஆனால் என்ன ஒரு ஏமாற்றம். அந்த அழகு பதுமையான கோமதி எங்கே? இங்கே குண்டாக, தடிக் கண்ணாடி போட்டுக் கொண்டு இருக்கும் இந்த பல் டாக்டர் கோமதி எங்கே? ஏமாற்றம் தாளவில்லை அம்மாஞ்சிக்கு. ஆனாலும் அவருக்கு ஆவல் தாங்கவில்லை. பரிசோதனை எல்லாம் முடிந்த பிறகு மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

'நீங்க உள்ளூரு தானா?'

'ஆமா'

'இங்க தான் படிச்சீங்களா?'

'ஆமா. ஏன் கேக்குறீங்க?'

எந்த வருசம் ஹைஸ்கூல் முடிச்சீங்க?'

'85ல'

'அட. அப்படியா? அப்ப நீங்க என் கிளாஸ்ல தான் இருந்திருக்கீங்க. என்ன ஞாபகம் இருக்கா?'

'சாரி சார் மன்னிக்கனும். ஞாபகம் இல்ல. என்ன பாடம் நடத்துனீங்க???'

Iniyan
16-12-2004, 01:45 PM
அம்மாஞ்சியும் அவர் மனைவியும் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனார்கள். இடைவேளையில் எழுந்து வெளியே வந்து டீ குடித்து விட்டு வரும் முன்னே விளக்கெல்லாம் அணைத்து படம் போட்டு விட உள்ளே வந்த அம்மாஞ்சி அந்த வரிசையின் கடைசியில் உட்கார்ந்திருந்தவரிடம் குனிந்து 'சார், நான் வெளியே போகும் போது உங்க கால மிதிச்சுட்டனா?' என்று கேட்டார். அவனும் கோபமாய் 'ஆமாப்பா ஆமா' என்றான். 'அப்ப சரி இது தான் நாம உக்காந்திருந்த வரிசை. சரிதான்' என்றார் அம்மாஞ்சி தன் மனைவியிடம்.

Iniyan
16-12-2004, 07:37 PM
அம்மாஞ்சியும் அவர் நண்பரும் ஒரு நாள் வங்கியில் வரிசையில் நின்று கொண்டுருந்தார்கள். அப்போது வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் எல்லோரையும் மிரட்டி காசாளரிடம் இருந்த பணத்தை எல்லாம் கொள்ளையடித்ததோடில்லாமல், அங்கிருந்த அனைவரின் பையில் இருக்கும் பணத்தையும் தாங்கள் கொண்டு வந்திருந்த சாக்குப் பையில் போடச்ச் சொல்ல அம்மாஞ்சி அவரது நண்பரை பார்த்தபடி 'இந்தாப்பா ராமசாமி, நான் உன்கிட்ட போன மாசம் கடன் வாங்கின 2000 ரூபாய். மறக்காம கொடுத்துட்டதா கணக்கு வச்சிக்கோ' என்றபடி தன் பையில் இருந்த பணத்தை எடுத்து கொள்ளையனின் சாக்கில் போட்டார்.

Iniyan
16-12-2004, 07:37 PM
கடைத்தெருவில் ஒரு பெண் தனது பர்ஸை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தாள். நம்ம அம்மாஞ்சி பர்ஸை அந்தப் பெண்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். நன்றி சொன்ன அந்தப் பெண்மணி தன் பர்சை திறந்து பார்த்து விட்டு ஆச்சர்யமாய்ச் சொன்னாள். 'அட என்ன ஆச்சர்யம். என் பர்ஸ் காணாம போனப்போ உள்ளே ஒரே ஒரு 500 ரூபா நோட்டு தான் இருந்துச்சி. ஆனா இப்போ பாத்தா அஞ்சு 100 ரூபாய் நோட்டு இருக்கே?' என்றாள். 'பரவால்லம்மா. போன தடவா நான் இப்படி ஒரு காணம் போன பர்சை கண்டு பிடிச்சு கொடுத்தப்ப நன்றி சொல்லி எனக்கு தர சில்லறை இல்லேன்னுடிச்சி ஒரு அம்மா. அதான்...' என்றார் அம்மாஞ்சி.

Iniyan
16-12-2004, 07:37 PM
அம்மாஞ்சி தன் கொல்லைப் பக்கமாய் ஒரு குழி தோண்டி கொண்டிருந்தார். அந்த பக்கம் போன பக்கத்து வீட்டுக்காரர் எட்டி பார்த்து 'என்ன சார்? எதுக்கு குழி? எதும் செடி வைக்கப் போறீங்களா?"

'அதெல்லாம் இல்ல. என் மீனு செத்து போச்சி. அதான்'

'அட மீனுக்கு எதுக்கு சார் இவ்ளோ பெரிய குழி?'

''இது எம் மீன தின்னு வயித்துல வச்சிருக்க உங்க பூனைக்கு'

Iniyan
16-12-2004, 07:38 PM
அம்மாஞ்சி ஒரு சின்னக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒருவர்
ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி அங்கேயே சிகரெட் பத்த வைத்தார். அம்மாஞ்சி அவரிடம் 'சாரி சார். இங்கே புகை பிடிக்கக் கூடாது என்றார்'.
'அட இதென்ன அநியாயம். நீங்க தானே உங்க கடைல சிகரெட் விக்கிறீங்க? நீங்களே இங்கே புகை பிடிக்கக் கூடாதுன்னா எப்படி?'

'சார், நாங்க இங்க கடைல ந்ரோத் கூடத்தான் விக்கிறோம்' என்றார் அம்மாஞ்சி அமைதியாக.

Iniyan
16-12-2004, 07:38 PM
அம்மாஞ்சியின் பள்ளியில் இங்கிலீஷ் டீச்சர் ஒரு கேள்வி கேட்டார்.

'அம்மாஞ்சி, I ல் தொடங்குவது போல ஒரு வாசகம் ஆங்கிலத்தில் சொல்லு'

அம்மாஞ்சி ஆரம்பித்தார் : I is

டீச்சர்: தப்பு. தப்பு. தப்பு. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கிளாசில. ஆங்கிலத்தில் I am என்று தான் சொல்ல வேண்டும். எங்கே இப்ப சொல்லு பார்க்கலாம்.

அம்மாஞ்சி : I am the ninth letter of the alphabet.

manitha
17-12-2004, 03:03 AM
இனியனின் நகைச்சுவைகள்
வயிற்று வலியை
கொண்டு வந்துவிட்டது..........

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
வாழ்த்துக்கள் இனியன்
தொடருங்கள்...........

gragavan
17-12-2004, 04:01 AM
அம்மாஞ்சி ஒரு தனி அடையாளமாக ஆகிவிட்டார். இனியன் அம்மாஞ்சியை வைத்து நகைச்சுவைச் சிறுகதைகள் எழுதுங்களேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
17-12-2004, 04:14 AM
பல சமயங்களில் அவர் "அம்மாஞ்சி"யா என்றே எனக்குச் சந்தேகம் வரும் வகையில் நகைச்சுவைகள்.
சிரித்து ... சிரித்து வயிறே புண்ணாகி விட்டது.

அன்புடன்,
பிரதீப்

Iniyan
17-12-2004, 01:54 PM
ஒரு புது பஸ் கண்டக்டர் அம்மாஞ்சி வழக்கமாய் ஆபீஸ் போகும் ரூட்டில் வந்தார்.

முதல் நாள்: அம்மாஞ்சி பஸ்ஸில் ஏறினார்.

கண்டக்டர்: 'டிக்கெட், டிக்கெட்....'
அம்மாஞ்சி : நான் டிக்கெட் எடுக்கிற பழக்கம் இல்லை.

கண்டக்டருக்கு கடுப்பான கடுப்பு. ஆனாலும் முதல் நாளே ஏதும் பிரச்சனை வேண்டாம் என விட்டு விட்டார்.

மறு நாளும் இதே கதை. மூன்றாம் நாளும் இதே. அம்மாஞ்சி டிக்கெட் எடுக்கவே இல்லை. அவ்வளாவு தான் . கண்டக்டருக்கு வந்ததே கோபம்.

'ஏன் சார், பார்க்க டீசண்ட்டா இருக்கீங்க. ஆனா டிக்கெட் எடுக்கிற பழக்கம் இல்லேங்கிறீங்க'

அம்மாஞ்சி அமைதியாக 'ஆமாங்க. நான் டிக்கட் எடுக்கிற பழக்கம் இல்ல. ஏன்னா நான் மன்த்லி பாஸ் வச்சிருக்கேன்'.

Iniyan
17-12-2004, 01:54 PM
ஒரு பெரியவர் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அப்போது 6 அல்லது 7 வயது அம்மாஞ்சி அந்த தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் அழைப்பு மணியை அமுக்க முயண்ரு கொண்டிருந்தான். ஆனால் பையனோ குட்டை. அழைப்பு மணியின் பட்டனோ அவனுக்கு எட்டாத உயரத்தில். பையன் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் எக்கி எக்கி முயன்று கொண்டிருந்தான். இதை பார்த்துக் கொண்டே இருந்த பெரியவர் அம்மாஞ்சிப் பையனுக்கு உதவி செய்யும் நோக்கில் பயனுக்கு பின்னால் சென்று அன்பாய் அவன் தோளில் கை வைத்து அழைப்பு மணியை நன்றாக ஒரு முறை அமுக்கினார். பின் மண்டியிட்டு அம்மாஞ்சியின் உயரத்திற்கு வந்து

'உனக்காக நான் அழைப்பு மணியை அமுக்கி விட்டேன். இப்போ என்ன?' என்றார்.

'இப்போ வீட்டுக்காரர் கோபமா திட்டிக்கிட்டே வந்து கதவ திறக்கும் முன்னாடி நாம இங்க இருந்து ஓடிடணும். அதான் விளையாட்டு'

Iniyan
17-12-2004, 01:55 PM
நான் என் தாத்தா போல அமைதியாக தூக்கத்திலேயே சாக விரும்புகிறேன்.


என் தாத்தாவின் காரில் இருந்த மற்ற பிரயாணிகள் போல சும்மா கத்தி அலறி பயந்து சாக விரும்பவில்லை.

Iniyan
20-12-2004, 10:31 AM
வயாதாக ஆக நம் அம்மாஞ்சிக்கு காது சரியாக கேட்கவில்லை. தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்களாக இது சம்பந்தமாக ஒரு மருத்துவரை பார்த்து வந்தார் அம்மாஞ்சி. இது வரை மூன்று தடவை ஹியரிங் எய்ட் மாற்றியும் முழுப்பலன் இல்லை. கடைசியாக அம்மாஞ்சி டாக்டரை பார்க்கப் போன போது மேல் நாட்டில் இருந்து புதிதாக வந்திருந்த ஒரு ஹியரிங் எய்டை அம்மாஞ்சிக்கு மாட்டி விட்டு சோதனைகள் செய்து பார்த்த டாக்டருக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம். இப்போது அம்மாஞ்சிக்கு முழுதுமாய் காது கேட்கத் தொடங்கி இருந்தது. அம்மாஞ்சியும் மகிழ்ச்சியாய் வீடு திரும்பினார். ஒரு மாதம் கழித்து அம்மாஞ்சி பாலோ அப் சோதனைக்கு வந்த போது டாக்டர் கேட்டார்.

'இப்ப உங்க குடும்பத்தில எல்லோரும் மகிழ்ச்சியா இருப்பாங்களே உங்காளுக்கு காது நல்லா கேக்குதுன்னு?'

'நான் இந்த சேதிய என் குடும்பத்துல யாருக்கும் இன்னும் சொல்லல. கொஞ்ச நாள் நல்லா வேலை பாக்குதான்னு பாத்துட்டு சொல்லலாம்னு வழக்கம் போல இருந்தேன். இதுல ஒரே ஒரு பிரச்சனை என்னான்னா இது வரைக்கும் என் உயில மூணு தடவ மாத்த வேண்டி வந்துருச்சி.'

mania
20-12-2004, 10:42 AM
:D :D :D
அன்புடன்
மணியா... :D :D

karikaalan
21-12-2004, 06:31 AM
இந்த அம்மாஞ்சி சாதாரணமானவர் இல்லே போல... வாழ்த்துக்கள் இனியன்ஜி!

===கரிகாலன்

இளசு
21-12-2004, 10:30 PM
பலே அம்மாஞ்சி.. சபாஷ் இனியன்!

(ராஜா சின்ன ரோஜா -ரஜினி படத்தில் கண் அறுவை சிகிச்சை செய்த முதலாளி
இப்படி உண்மையை மறைத்துக் குடும்பத்தை உரைத்துப்பார்ப்பார்

Iniyan
22-12-2004, 02:21 AM
Originally posted by gragavan@Dec 17 2004, 10:01 AM
அம்மாஞ்சி ஒரு தனி அடையாளமாக ஆகிவிட்டார். இனியன் அம்மாஞ்சியை வைத்து நகைச்சுவைச் சிறுகதைகள் எழுதுங்களேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

93411



தங்களின் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி. இனி வரும் நாட்களில் முயற்சிக்கிறேன்.

Iniyan
22-12-2004, 02:22 AM
வாழ்த்தி, பாராட்டி எழுதிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

அம்மாஞ்சி மேட்டரை தொடரலாம் தானே?

mania
22-12-2004, 03:05 AM
Originally posted by Iniyan@Dec 22 2004, 08:22 AM
வாழ்த்தி, பாராட்டி எழுதிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

அம்மாஞ்சி மேட்டரை தொடரலாம் தானே?

93578


:rolleyes: இது என்ன கேள்வி.....??? :rolleyes: கண்டிப்பாக தொடரவும்........ :D :D
ஆவலுடன்
மணியா..... :D

manitha
24-12-2004, 08:20 AM
கலக்கலான அம்மாஞ்சிதான்.........
தொடருங்கள்........

gragavan
27-12-2004, 05:48 AM
Originally posted by Iniyan@Dec 22 2004, 08:22 AM
வாழ்த்தி, பாராட்டி எழுதிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

அம்மாஞ்சி மேட்டரை தொடரலாம் தானே?

93578
கேக்கலாமா? தொடருங்க. தொடருங்க. அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
27-12-2004, 10:53 AM
அனைத்தும் அருமையான சிரிப்புகள்.

கலக்குங்கள் இனியன் அவர்களே!

Iniyan
27-12-2004, 12:57 PM
அம்மாஞ்சியின் இன்றைய சிந்தனை


ஏன் தான் இந்த அமெரிக்கர்கள் பிரெஞ்சுக்காரர்களை பழிக்கிறார்களோ தெரியவில்லை. உண்மையில் பிரஞ்சுக்காரர்கள் தான் அமெரிக்கர்களின் நண்பர்கள்.

இஸ்ரேலியர்கள் யாசர் அராபத்தை கொல்ல 10 வருடங்களுக்கும் மேலாக முயற்சித்தார்கள். முடியவில்லை.
ஜோர்டான் நாட்டினர் அவரைக் கொல்ல 1970களில் முயற்சித்தார்கள். முடியவில்லை.
லெபனான் நாட்டினர் அவரைக் கொல்ல 1980களில் முயற்சித்தார்கள். முடியவில்லை.


இரண்டே வாரங்கள் பாரிசில் அன்பான மருத்துவக் கவனிப்பில் அராபத். நடந்ததென்ன?

ஒசாமா, ஈபில் டவர் பார்த்திருக்கிறாயா???

gragavan
28-12-2004, 03:59 AM
அம்மாஞ்சியின் சிந்தனைகள் அடேங்கப்பா! நமக்கு லேசா வயித்தக் கலக்குன மாதிரி இருக்கு.

அன்புடன்,
கோ.இராகவன்

பாதிமதி எது?
http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=93824& (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=105&p=93824&)

பரஞ்சோதி
28-12-2004, 07:56 PM
நண்பர் இனியன் தூள், பாராட்டுகள்.

நம்ம அண்ணன் அம்மாஞ்சியின் தொடர் சிந்தனைகள் படிக்க ஆவலோடு இருக்கிறேன். தற்போது மன்றம் கலகலப்பாக செல்ல நீங்கள் முக்கிய காரணம்.

pradeepkt
29-12-2004, 02:52 AM
அம்மாஞ்சி அதிமேதாவிதான் ஒண்ணும் மறுபேச்சில்லை.
ஒரு கணக்காத்தேன் சிந்திக்கிறாரு.

அது சரி,
அம்மாஞ்சிக்கு இன்னொரு பேரே இனியன்தானா? இத்தனை விஷயங்களை எங்க இருந்துய்யா பிடிக்குறீங்க.
அருமை.

அன்புடன்,
பிரதீப்

Iniyan
29-12-2004, 06:03 AM
அம்மாஞ்சியின் மனைவி: ரொம்ப நாளா உங்க கிட்ட ஒண்னு சொல்லணும்னு.....

அம்மாஞ்சி : என்ன விசயம்? சும்மா சொல்லு.

மனைவி: கல்யாணமாகி இந்த 11 வருசமா நான் பேசுறாதுக்குன்னு வாய திறந்தாலே ஏதாவது குறை கண்டுபிடிச்சு கிட்டே இருக்கீங்க.

அம்மாஞ்சி: 12 வருசமாம்மா....

Iniyan
29-12-2004, 06:22 AM
அம்மாஞ்சிக்கு திடீரென பறவைகளில் ஆர்வம். பலப் பல புத்தகங்கள் படித்து ஒரு தூரத் தொலைநோக்கி ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு மரம் மரமாய் பார்த்துக் கொண்டு பொழுது கழிக்கத் தொடங்கினார். இப்படி இருக்கும் போது பறவைகளுடன் பழகுவது எப்படி என்ற ஒரு புத்தகத்தில் படித்ததை செய்து பார்க்க விரும்பி ஒரு நாள் இரவு கொல்லைப்பக்கம் போன போது ஆந்தை மாதிரியே இவர் குரல் கொடுத்தார். என்ன ஆச்சர்யம். சற்றே நேரத்தில் பதிலுக்கு ஒரு ஆந்தை குரல் கொடுத்தது. குஷியானார் அம்மாஞ்சி. தினமும் இரவு அதே நேரம் இவர் ஆந்தை குரல் கொடுக்க பதிலுக்கு ஆந்தையும் குரல் கொடுக்கத் தொடங்க அவ்வளவு தான். அம்மாஞ்சி தன்னை ஒரு பறவை விஞ்ஞானி என்றே கருதத் தொடங்கினார். மாறி மாறி ஆந்தைக்குரலில் கிட்டத்தட்ட பேசிக் கொள்ளவே தொடங்கியாகி விட்டது. இப்படியே மூன்று மாதங்கள் போக இப்போது அம்மாஞ்சி தனியாக ஒரு நோட்டுப் போட்டு அன்றைய ஆந்தை அலறல்களை குறித்து வைத்து மொழி பெயர்க்கவும் தொடங்கி விட்டார். ஆறு மாதம் ஆனது. தினமும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் அவர் கொல்லைக்கு சென்று ஆந்தையுடன் பேசி (அலறி) திரும்புவது வழக்கமாகி விட்டது.

அம்மாஞ்சியின் மனைவி அந்த வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போன போது பக்கத்து தெரு மாலதியை சந்தித்தாள். இருவரும் பேசிக் கொண்டார்கள்.

மாலதி: அக்கா, உங்கள பாத்து எவ்ளோ நாளாச்சு? உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?

அம்மாஞ்சியின் மனைவி: அவருக்கென்ன நல்லாத் தான் இருக்காரு. கொஞ்ச நாளா பறவைகள் பைத்தியம் பிடிச்சு போய் திரியுறாரு. தெனமும் ராத்திரி ஆனா கொல்லைப்பக்கம் போயி ஆந்தை மாறி கத்துறாரு. இதுல என்னா விசேசம்னா வேற ஏதோ ஆந்தை வேற இவர் கொரலுக்கு பதில் சொல்லுது.

மாலதி: அட அப்படியா? என்ன ஒரு ஒத்தும பாருங்களேன். எம் புருசனுக்கும் தினத்துக்கும் இதே வேலைதான்.

இப்போது ஓரிரு நிமிடங்கள் இருவருமே பேசவில்லை.

மன்மதன்
29-12-2004, 08:13 AM
நகைச்சுவையான தொகுப்பு..

ரசிக்கும் படி உள்ளது.. பாராட்டுக்கள் இனியன்..

தொடர்ந்து கொடுங்க.

அன்புடன்
மன்மதன்

gragavan
29-12-2004, 08:16 AM
பிரமாதம். பிரமாதம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
25-01-2005, 03:23 PM
தனது போன் ஒழுங்காக ஒலிப்பதில்லை. சில வேளைகளில் ஃபோன் ஒலிக்கும் போது அதற்கு கொஞ்சம் முன்னால் தனது நாய் முனகுவதாகவும் அம்மாஞ்சி ஒரு நாள் தொலைபேசி நிலையத்தை அழைத்து கம்ப்ளய்ண்ட் செய்தார்.

அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம். தொலைபேசி ஒலிக்கப் போவதை முன் கூட்டியே உணரும் நாயை பார்க்கவென லைன் மேன், என்ஜினியர் இருவரும் அம்மாஞ்சி வீட்டுக்கு வந்தனர். லைன்மேன் அம்மாஞ்சி வீட்டு பக்கம் இருக்கும் கம்பத்தில் ஏறி அவரது சோதனை தொலைபேசியை அம்மாஞ்சியின் வீட்டு லைனில் இணைத்து ஒரு போன் செய்தார். முதலில் போன் ஒலிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அம்மாஞ்சியின் நாய் முக்கி முனகியது. உடனே போன் அடிக்கத் தொடங்கியது.

இப்போது லைன் மேனும் என்ஜினியரும் என்ன பிரச்சனை எனப் பார்க்கத் தொடங்கினர். அவர்கள் கண்டறிந்தது இது தான்.

1. அம்மாஞ்சியின் நாய் தொலிபேசியின் எர்த் கம்பியுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

2. அந்த எர்த் கனக்சன் வயர் சரியாக இல்லாமல் லூசாக இருந்தது.

3. அம்மாஞ்சி வீட்டு தொலைபேசியை யாரேனும் கூப்பிடுகையில், தொலைபேசியை ஒலிக்கச் செய்யும் 90 வோல்ட் கரண்ட் எர்த் வயர் வழியாக லீக் ஆகி நாயின் சங்கிலியில் பாய்ந்து நாய்க்கு மெல்லிய ஷாக் கொடுக்கிறது.

4. இரண்டொரு தரம் இப்படி ஷாக்காகும் நாய் மெல்ல முக்கி முனகுகிறது. பின் அந்த ஷாக்கில் ஒண்ணுக்குப் போகிறது.

5. இப்போது நாயின் ஒண்ணுக்கால் ஈரமான தரை வழியாக எர்த் கனக்சன் முழுமையடைந்து போன் ஒலிக்கிறது.

இது எப்படி இருக்கு???

Iniyan
25-01-2005, 03:31 PM
எனது இனிய இல்லற வாழ்வின் ரகசியங்கள். - அம்மாஞ்சி.

1. வாரம் ஒரு முறை நாங்கள் பணச்செலவு பற்றி கவலைப்படாமல் வெளியில் சென்று நல்ல உயர்தர உணவு விடுதியில் உண்போம். அவள் வெள்ளிக் கிழமை போவாள். நான் சனிக்கிழமை போவேன்.

2. நாங்கள் இருவரும் தனித்தனியே தான் படுப்போம். நான் எனது ஆபீஸ் கெஸ்ட் ஹவுசில் அவள் வீட்டில்.

3. நான் பல இடங்களுக்கும் என் மனைவியை அழைத்துச் செல்வேன். ஆனால் அவள் எப்படியோ பாதை கண்டுபிடித்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுகிறாள்.

4. நாங்கள் வெளியே போகும் போது எப்போதும் நான் அவள் கையை பிடித்த வண்ணம் இருப்பேன். நான் அவள் கையை விட்டால் உடனே புடவைக்கடைக்கு புடவை வாங்கப் போய் விடுவாள்.

பரஞ்சோதி
25-01-2005, 04:53 PM
கலக்குங்க ஐயா, கலக்குங்க.

சிரித்து சிரித்து பேட் வலிக்குது.

முத்து
25-01-2005, 07:33 PM
இனியன் மிக அசத்தல்,
இன்னும் தொடருங்கள் .. :)

அறிஞர்
26-01-2005, 07:30 AM
கலக்கலாக தொடருகிறீர்கள்.. நண்பரே....

பக்கத்தில் இருப்பவர்கள்.. என்னை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்....

இன்னும் தொடருங்கள்....

மன்மதன்
26-01-2005, 09:44 AM
ஆஹா..கலக்கலா போகுது.. தொடர்ந்து சிரிக்க வைங்க..
அன்புடன்
மன்மதன்

Mathu
26-01-2005, 10:18 AM
ஆஹா.. அசத்துறீங்க இனியன்.

தொடரட்டும் அம்மாஞ்சியின் சேவை... :blush:

Iniyan
26-01-2005, 02:35 PM
2005 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் ஸ்டெல்லா விருதுகள்

அறிவிப்பாளர் - அம்மாஞ்சி

முதலில் ஸ்டெல்லா விருதுகளின் துவக்கம் குறித்து ஒரு பார்வை.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெல்லா லீபெக் என்னும் 81 வயதுப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன் சூடான காபியைத் தன் மீது தவறுதலாகக் கொட்டிக் கொண்டு காபியை சூடாகத் தந்ததற்காக உலகப் புகழ் பெற்ற மெக் டொனால்சின் மீது வழக்குத் தொடர்ந்து வென்றவர். இவரைத் தொடர்ந்து இவரின் சாதனையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இப்படி விசித்திர வழக்குகளுக்கான ஸ்டெல்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.


இனி இந்த ஆண்டிற்கான போட்டியாளர்களைப் பார்ப்போமா???

Iniyan
26-01-2005, 02:36 PM
இந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருக்கும் வழக்கு.

கேத்லீன் ராபர்ட்சன் என்ற ஆஸ்டின், டெக்சசை சேர்ந்த பெண்மணி ஒரு விசித்திர வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பர்னிச்சர் கடையை எதிர்த்த வழக்கு ஒன்றில் $80,000 வென்றார்.

அந்த வழக்கின் விபரம் :

அந்தக் கடையில் இருக்கும் போது, கடையினுள் ஓடித் திரிந்த ஒரு சிறுவனால் தடுக்கி விழுந்து கேத்லீனின் கால் ஒடிந்து விட்டது. இந்த விபத்துக்கு கடை நிர்வாகமே பொறுப்பென்று கேத்லீன் வழக்குத் தொடர்ந்து வென்றும் விட்டார்.

இது என்ன விசித்திர வழக்கு என்பவர்களுக்கான விடை இதோ:

Iniyan
26-01-2005, 02:36 PM
கடையினுள் ஓடித் திரிந்த சிறுவன் வேறு யாருமல்ல - கேத்லீனின் 5 வயது மகன் தான்.

Iniyan
26-01-2005, 02:38 PM
நான்காம் இடத்தில் இருக்கும் வழக்கு

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த 19 வயது கார்ல் ட்ருமன் தனது பக்கத்து வீட்டுகாரருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து மருத்துவச் செலவுகளுக்காக $74,000 வென்றார்.

இந்த வழக்கின் விபரம் இதோ.

கார்லின் கைகளின் மேல் பக்கத்து வீட்டுகாரர் கார் ஏற்றியதாக வழக்கு. இதனால் கார்லின் கைகள் சேதமடைந்து அந்த மருத்துவச் செலவினை கார் ஓட்டிய பக்க்த்து வீட்டுக்காரர் ஏற்க வேண்டுமென வழக்கு.

கார்லின் கைகள் பக்கத்து வீட்டுக்காரரின் கார்ச் சக்கரத்தின் அடியில் போனது எப்படி?

Iniyan
26-01-2005, 02:39 PM
அந்த இரவில் கார்ல் பக்கத்து வீட்டுகாரரின் கார் சக்கரத்தை திருடி விற்பதற்காக கழட்ட முயற்சித்துக் கொண்டிருந்த போது கார்ல் அங்கே சக்கரத்தின் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் காரின் சொந்தக்காரர் காரினை ஆன் செய்து ரிவர்ஸ் எடுத்து விட.....


பாவம் கார்லின் கைகள் நசுங்கி விட்டன.

Iniyan
26-01-2005, 02:48 PM
மூன்றாம் இடத்தில் இருக்கும் வழக்கு

பிரிஸ்டல், பென்சில்வேனியாவைச் சேர்ந்த டெரன்ஸ் டிக்சன் ஒரு வீட்டினை விட்டு வெளியேற கார் கெராஜ் வழியாக வெளியேற முயற்சித்த போது கார் கெராஜ் கதவு ஏதோ மெக்கானிக்கல் பிரச்சனையால் திறக்கவில்லை. இப்போது கெராஜில் இருந்து வீட்டிற்குள் செல்லும் கதவும் தானியங்கிப் பூட்டால் பூட்டி விட, இப்படி பிரச்சனை உள்ள கார் கெராஜ் கதவினைக் கொண்டு விடுமுறையில் வெளியூர்
சென்றிருந்த வீட்டுச் சொந்தக்காரர் 10 நாட்கள் கழித்து வரும் வரை பரிதாபமாக உள்ளே மாட்டிக் கொண்ட டெரன்ஸ் அந்த பத்து நாட்களும் கார் கெராஜில் இருந்த காய்ந்த நாய் பிஸ்கட்டையும், அங்கிருந்த பெப்சியையும் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்த பரிதாபத்திற்கு அமெரிக்க நீதி மன்றம் வீட்டுச் சொந்த்க்காரரை டெரன்சுக்கு வழங்க உத்தரவிட்ட தொகை.

$500,000

ஆமாம் அடுத்தவர் வீட்டு கெராஜில் டெரன்சுக்கு என்ன வேலை???

Iniyan
26-01-2005, 02:48 PM
டெரன்ஸ் அந்த வீட்டுக்கு சென்றாது அந்த வீட்டினைக் கொள்ளை அடிக்க.....

Iniyan
26-01-2005, 03:00 PM
இரண்டாம் இடத்தில் இருக்கும் வழக்கு.

பிலடெல்பியாவில் இருக்கும் உணவகம் ஒன்றினை ஆம்பர் கார்சன் என்னும் லேன்காஸ்டர், பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண்ணிற்கு $113,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உணவகத்தின் தவறு - உணவகத்தினுள்ளே தரையில் கொட்டிக் கிடந்த கோக் குளிர் பானத்தை உடனே சுத்தம் செய்யாதது. இதனால் வழுக்கி விழுந்து இடுப்பெலும்பு ஒடிந்த ஆம்பருக்கு ஆதரவாய் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் இது.

வழக்கின் விசித்திரம்......

Iniyan
26-01-2005, 03:02 PM
மிஸ்.ஆம்பர் அதே உணவகத்தில் அதே மேசையில் எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த அவரது பாய் பிரண்டுடனான சண்டையில் பாய் பிரண்டின் முகத்தில் 1 நிமிடத்துக்கு முன் எடுத்துக் கொட்டியதே தரையில் சிந்தி இருந்த கோக்.

Iniyan
26-01-2005, 03:24 PM
முதலிடம் -

மிஸஸ். மெர்வ் கிரசின்ஸ்கி, ஒக்லஹாமா சிட்டி, ஒக்லஹாமா. இவருக்கு ஆதரவாக $1,750,000 வழங்கச் சொல்லி ஒரு மொபல் ஹோம் தயாரிப்பு கம்பனியை உத்தரவிட்டது நீதிமன்றம்.

(முதலில் மொபைல் ஹோம் பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் - நம்மூரு வேன் போல தான் இதுவும். ஆனால் டிரைவர் சீட்டின் பின்புறம் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு பின்னால் உள்ள பகுதிக்குச் சென்றால் சின்னதாக ஒரு கிச்சன், படுக்கை, பாத்ரூம் என அனைத்து வசதியும் நிரம்பிய சின்ன வீடு. நம்மூரில் அம்மா செயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படி ஒரு வண்டி வைத்திருப்பதாய்க் கேள்வி.)

அடுத்து வழக்கின் முழு விவரம்:

புத்தம் புதிதாக ஒரு மொபல் ஹோம் வாங்கிய மிஸஸ். மெர்வ் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது குரூஸ் கண்ட்ரோலை மணிக்கு 70 மைல் வேகத்தில் செட் செய்து விட்டு பின்னால் இருக்கும் கிச்சனுக்கு ஆம்லேட் போட சென்று விட தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடிய வண்டி ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட நஷ்டத்திற்காகத் தான் இந்த நஷ்ட ஈடு.

(குரூஸ் கண்ட்ரோல் பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் - மோட்டார் வாகனங்களை ஒரே சீரான வேகத்தில் செல்ல பணிக்கும் எலக்ட்ரானிக் சாதனம். இதை ஆன் செய்து விட்டால் ஆக்ஸிலரேட்டர் அழுத்த தேவையில்லை. ஸ்டியரிங் மட்டும் பிடித்து ஓட்டினால் போதும்)

ஆமாம். இதில் மிஸஸ். மெர்வ் அவர்களின் முட்டாள்தனத்திற்கு மொபல் ஹோம் தயாரிப்பாளர் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கான நீதி மன்றத்தின் விளக்கம் இதோ.

Iniyan
26-01-2005, 03:24 PM
மொபைல் ஹோம் தயாரிப்பாளரின் தவறு : வாகன ஓட்டினர் கையேட்டில் குரூஸ் கண்ட்ரோல் செட் செய்தாலும் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங்கை பிடித்து வாகனத்தைச் செலுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக தகவல் தெரிவிக்காதது.

Iniyan
26-01-2005, 03:37 PM
அம்மாஞ்சி கார் மெக்கானிக்கிடம் சென்றார்.

'என் காரில் ஒரு பிரச்சனை. நானாக கார் ஒட்டும் போதெல்லாம் ஒரு பிரச்ச்னையும் இல்லை. ஆனால் என் காரில் யாரேனும் நான் ஓட்டும் போது என்னுடன் வந்தால் மட்டும் கொஞ்ச நேரத்தில் ரொம்ப கெட்ட வாடை அடிக்கிறது. ஏன் என்று கண்டறிய முடியுமா?'

இத்தனை வருச சர்வீசில் இது வரை பார்க்காத ஒரு புது பிரச்சனையைக் கண்டு மலைத்து நின்ற மெக்கானிக் அம்மாஞ்சியிடம் சொன்னார்.

'சார். என் சர்வீசுல இது மாதிரி கார் பிரச்சனை பார்த்ததே இல்லை சார். சர் வாங்க. உங்க கார்ல நான் உட்காந்து வர்றேன் .அந்த வாடை அடிக்குதான்னு பாக்கலாம்'.

மெக்கானிக் பேசஞ்சர் சீட்டில் இருக்க அம்மாஞ்சி காரை ஓட்டினார்.

முதலில் அதீத வேகத்தில் ஒரு வழிப்பாதையில் தவறாகச் சென்றார். பின் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மேல் காரை ஏற்றப் போய் தெய்வாதீனமாய் கடைசி நிமிடத்தில் காரை நிறுத்தினார். மேலும் 4 அல்லது 5 சிவப்பு விளக்குகளில் காரை நிற்காமல் பறந்து ரோட்டில் நின்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிளை உரசிய வண்ணம் காரை திருப்பி மெக்கானிக் செட்டுக்கு வந்து நிறுத்திய அம்மாஞ்சி கேட்டார்.

'பாத்தீங்களா...எப்படி நாறுதுன்னு? இதத் தான் சொன்னேன். தெரியுதா?'

'என்னாது தெரியுதாவா? நா அதுல தான் சார் உக்காந்திருக்கேன்' என்றார் மெக்கானிக்.

gragavan
27-01-2005, 05:21 AM
இனியன், வயித்து வலிதான் போங்க. அந்த மெக்கானிக் பாவம்! எங்கருந்துய்யா பிடிக்கிறீங்க! அடடா!

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
28-01-2005, 06:17 AM
இனியன்.. நல்ல சிரிப்புக்கள்....

வழக்கு விபரங்களும் தீர்ப்புக்களும் வெகு அருமை... சிறிய தவறுகளால்.. ஏகப்பட்ட நஷ்டங்கள் கம்பெனிகளுக்கு

pradeepkt
28-01-2005, 06:27 AM
சிரிப்புகள் மிகுந்தாலும் அங்கே தனிமனிதப் பாதுகாப்புக்குக் கொடுக்கும் மரியாதையையும் அதை மீறினால் கொடுக்கும் விலையையும் பாருங்கள்.

அந்தப் பொன்னாள் இங்கே எப்போது வருமோ?

அன்புடன்,
பிரதீப்

Iniyan
28-01-2005, 01:43 PM
அம்மாஞ்சி ஒரு பெரிய ஆர்ட் மியூசியத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மியூசியத்தின் ஒரு பெரும் பகுதிக்கு ஹீசேன் காலரி எனப் பெயரிப்பட்டு அதில் முழுக்க முழுக்க பல்வேறு சிறந்த புத்தகப் பொக்கிஷங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதிமேதாவியான அம்மாஞ்சிக்கு ஒரே ஆச்சர்யம். அங்கிருந்த மியூசியப் பணியாளரைப் பார்த்து

அம்மாஞ்சி: 'இந்த பகுதியை ஹீசேன் கேலரி எனப் பெயரிட்டு ஆனால் புத்தகங்களாய் அடுக்கி வைத்துள்ளீர்களே? எனக்குத் தெரிந்து நம்மூர் தலை சிறந்த ஓவியரான ஹீசேன் ஏதும் புத்தகங்கள் எழுதியதாகத் தெரியாதே? அபப்டி இருக்க அவர் பெயரில் எதற்கு இங்கே புத்தகங்கள்? ஓவியங்கள் அல்லவா இருக்க வேண்டும்?' எனக் கேட்டார்.

மியூசியப் பணியாளர்: 'இல்லை சார். இது லெப்பைக்குடிக் காடு அப்துல் ஹீசேன் என்பவர் நினைவாகக் கட்டப்பட்ட கேலரி' என்றார்.

அம்மாஞ்சி: 'அட அப்படியா? லெப்பைக்குடிக் காடு அப்துல் ஹீசேன் பெரிய எழுத்தாளரா? நிறைய எழுதியுள்ளாரா? இது வரை நான் அவரின் புத்தகம் ஒன்று கூடப் படித்ததில்லையே? கடைசியாக அவர் எழுதியது என்ன? ' என ஆர்வம் பொங்கக் கேட்டார்.

மியூசியப் பணியாளர் : 'அவர் எழுதியதெல்லாம் இந்த மியூசியத்திற்கு அன்பளிப்பாய் பெரிய தொகைக்கு செக் ஒன்று தான்'

Iniyan
28-01-2005, 02:06 PM
அம்மாஞ்சி ஒரு நாள் தனியாக கடற்கரையோரம் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஒரு பழைய பாசி படிந்த பாட்டில் ஒன்று இடறியது. ஆர்வக் கோளாரில் அதை எடுத்து அவர் என்னதான் இருக்கிறது என தேய்த்து சுத்தப் படுத்திய போது திடீரென புகை மண்டலம் எழுந்து அதன் நடுவில் ஒரு பூதம் தோன்றியது.

ஆச்சர்யப்பட்டுப் போன அம்மாஞ்சியைப் பார்த்த பூதம் 'என்னை வெளியில் கொணர்ந்த நன்றிக் கடனுக்காக நான் உனக்கு ஒரே ஒரு வரம் அளிக்க முடியும். என்ன வேண்டுமோ நல்லதாகக் கேள்' என்றது. ஒரு வினாடி யோசித்த அம்மாஞ்சி டக்கென தன் கையில் இருந்த புத்தகத்தைப் பிரித்து அதில் இருந்த உலக வரை படம் ஒன்றை பூதத்திடம் காட்டி, 'இதோ இங்கே பார் இந்த மத்தியக் இழக்கில் எப்ப பார்த்தாலும் சண்டை. பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலுக்கும். மதத்தீவிரவாதிகள் பிரச்சனை, பெட்ரோலுக்காய் அமெரிக்காவின் போர்கள். சீரழிந்து கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் நிலையான அமைதி ஏற்படுத்து.' என்றார்.

பூதம் இப்போது குழம்பிப் போனது. 'மானிடா. என்ன இது? கேட்பதைக் கொஞ்சம் நியாயமாகக் கேள். இந்த நாடுகள் பல நூற்றாண்டுகளாய்ப் போரிட்டு வருகின்றன. அழிவும் சேதமும் தவிர்க்க இயலாததாகி விட்டது. இதை சரி செய்ய பூதகணங்களுக்கெல்லாம் தலைவரான சிவனாலே முடியாது. அப்படி இருக்க குருவி தலையில் பனங்காய் வைப்பது போல இதை என்னிடம் கேட்கலாமா நீ? தயவு செய்து வேறு ஏதாவது கேள்'.

அம்மாஞ்சி யோசித்தார். உலக நலனுக்காக முயற்சித்துத் தோற்றாகி விட்டது. சரி, இனி நம் குடும்ப நலன் கருதுவோம் என்றெண்ணி 'சரி அப்படியாயின் எனக்கு டீவி சீரியல் பார்க்காத, என் அம்மா அப்பா (அதாவது அவளின் மாமனார், மாமியார்)வை அனுசரித்து அன்பாய்ப் போகும்படி, கனிவாய், இனிமையாய், கணவனே கண் கண்ட தெய்வம் என்று கருதும் படித்த வேலைக்குப் போகும் பெண்ணை எனக்கு மனைவியாக்கு'. என்று கல்யாண மாலை மோகனைக் கேட்பது போல கேட்டார்.

பெருமூச்சு ஒன்று விட்ட பூதம் சலிப்பாய் சொன்னது 'எங்கே அந்த வரைபடத்த காட்டு. பாப்போம்'.

Iniyan
28-01-2005, 02:13 PM
அம்மாஞ்சியின் இன்றைய சிந்தனை

அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் காலாவதியான விசாக்களுடன் அந்த நாட்டில் பத்து ஏன் சிலர் பதினைந்து வருடம் வரை தங்கி இருந்திருக்கிறார்கள்.

அதே அமெரிக்காவில் இருக்கும் வீடியோ வாடகைக்கு விடும் கடையான பிளாக் பஸ்டர் என்னும் கடையில் வாடகைக்கு எடுத்த வீடியோவைத் திருப்பித் தர ஓரிரு நாட்கள் தாமதமானால் போதும். உடனே நம்மைத் தேடிக் கண்டு பிடித்து போன் பண்ணி தாமதத்திற்காக தனிக்கட்டணம் வசூலித்து ஜமாய்த்து விடுவார்கள்.

பிளாக்பஸ்டரை ஏன் அமரிக்க இமிகிரேசனுக்குப் பொறுப்பாக்கக் கூடாது??

Iniyan
28-01-2005, 02:16 PM
பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரு நாள் இந்த உடற்பயிற்சி செய்வபர்கள், டயட்டில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களைப் போல உணரப் போகிறார்கள்....

எங்கோ ஒரு மருத்துவமனையின் கட்டிலில் எந்த உடல் நலக் குறைவும் இல்லாமல் தங்களின் இறுதி மூச்சை விட்டபடி.......

Iniyan
28-01-2005, 02:17 PM
அரசியல் தான் உலகின் இரண்டாவது பழைய தொழில். ஆனால் கொஞ்ச காலமாக எனக்கென்னமோ இதற்கும் முதல் பழைய தொழிலுக்கும் ரொம்பவே ஒற்றுமைகள் இருப்பதாய்த் தோன்றுகிறது.

Iniyan
28-01-2005, 02:27 PM
வாசித்துக் கருத்தளித்த அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் ஒவ்வொரு விமர்சனமும் எனக்கு பூஸ்ட் குடித்த தெம்பு தர நான் மேலும் மேலும் அம்மாஞ்சி மேட்டருக்காய் இப்போது அல்ந்து கொண்டு இருக்கிறேன். இவற்றில் பெரும்பாலனாவை நான் கேட்ட படித்த பல மொழி சிரிப்புத் துணுக்குகளை தமிழில் மாற்றி நம்மூர் ஸ்டைலுக்கு நகாசு செய்து வழங்குபவையே.

தங்களின் வரவேற்பும் மகிச்ழ்ழியும் கண்டு இன்னும் இன்னும் அம்மாஞ்சியை வளர்க்க ஆவலாய் உள்ளேன். அம்மாஞ்சியின் முன்னாடி நம்ம கோயான் கோபுவும், குவாட்டர் கோவிந்தும் தான்..... :blink: :blink:

பாரதி
28-01-2005, 03:47 PM
சிலவற்றை ஏற்கனவே படித்தது போல தோன்றினாலும், ரொம்ப நன்றாக இருந்தது இனியன். உங்களின் தேடுதல் வெற்றியடைய வாழ்த்துகிறேன். எங்களுக்கும் நிறைய சுவையான சம்பவங்கள் கிடைக்குமே...!

மன்மதன்
29-01-2005, 07:37 AM
வரைபட காமெடி அசத்தல்.. :D
அன்புடன்
மன்மதன்

முத்து
30-01-2005, 09:44 PM
பெருமூச்சு ஒன்று விட்ட பூதம் சலிப்பாய் சொன்னது 'எங்கே அந்த வரைபடத்த காட்டு. பாப்போம்'.

இனியன் அசத்திட்டீங்க.. :)

அறிஞர்
31-01-2005, 07:04 AM
அருமை நண்பரே... கலக்கிவிட்டீர்கள்..

மொழிபெயர்ப்பும், நகைச்சுவையும் சிறப்பை கூட்டுகின்றன தொடருங்கள்....

Iniyan
01-02-2005, 04:08 PM
தன் அலுவலகத்தில் நடந்த ஒரு விருந்திற்கப்புறம் முழு போதையில் அம்மாஞ்சி ஒரு நள்ளிரவில் வீடு திரும்பினார். அம்மாஞ்சி பொதுவாக அவ்வளவு குடிப்பதில்லை. ஆனால் அன்று நண்பர்களுடன் சேர்ந்து அந்த பைவ் ஸ்டார் ஹோட்டல் பாரில் ஏதேதோ புது விதமான காக்டெயில்கள் குடிக்கத் தொடங்கி ஒவ்வொரு கிளாசும் டேஸ்ட்டாக ஏதோ பழ ரசம் குடிப்பது போல இருக்கவே கொஞ்சம் ஓவராகி விட்டது. அம்மாஞ்சி கண் விழித்த போது அவருக்குத் தான் எப்படி வீடு திரும்பினோம் என்பது கூட நினைவில்லை. அவரது கட்டிலின் பக்கத்தில் இருந்த சின்ன மேசையில் ரெண்டு தலைவலி மாத்திரைகளும், ஒரு கிளாஸ் தண்ணீரும் அதற்குப் பக்கத்தில் ஒரே ஒரு ரோஜாப்பூவும் இருக்கக் கண்டார். அதை அடுத்து அவர் இன்று போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் எல்லாம் அயர்ன் செய்து மடித்து தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. படுக்கை அறை வழக்கத்துக்கு மாறாக ரொம்ப சுத்தமாய் இருந்தது. மெல்ல எழுந்து வெளியே வந்து பார்த்தார். வீடு முழுதுமே சுத்தமாக இருந்தது. பாத்ரூமில் அவரது பிரசில் பேஸ்ட் வைத்து தயாரா. வென்னீர் இதமான சூட்டில் விளாவி வைக்கப்பட்டு. பாத்ரூம் கண்ணாடியில் சின்னதாக ஒரு பேப்பரில் அவரது மனைவியின் கையெழுத்தில் அவருக்கு ஒரு செய்தி.

'அன்பானவருக்கு, நான் கோவிலுக்குச் செல்கிறேன். குளித்து முடித்து வந்து டைனிங் டேபிளில் உங்களுக்குப் பிடித்த இட்லி, தக்காளி சட்னி, சாம்பார் மற்றும் இடியாப்பம் பாயா செய்து ஹாட் பேகில் வைத்துள்ளேன். சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருக்கவும். நான் விரைவாய் வந்து விடுகிறேன்'.

இவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். எப்பவொ ஒரு நாள் ஓரிரண்டு பெக் அடித்து விட்டு வந்தாலே ஒரு வாரத்துக்குப் பேசாமல் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் தன் மனைவி இம்முறை தான் இவ்வளவு குடித்து விட்டு வந்தும் எப்படி இப்படி? குழம்பிப் போனார். குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தால் அங்கே எல்லாம் சூடாக தயாராக இருந்தது. பிளாஸ்கில் டிகிரி காபி வேறு. பக்கத்திலேயே அவர் தினமும் படிக்கும் ஹிண்டு பேப்பர் மடித்து படிப்பதற்கு வசதியாய் எடுத்து வைக்கப்படிருக்க அம்மாஞ்சி அசந்து போனார். இத்தனை வருட திருமண வாழ்வில் ஒரு நாளும் இல்லாத திரு நாளாய் இன்று இவ்வளவும். டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாஞ்சியின் காலேஜ் படிக்கும் மகனை பார்த்துக் கேட்டார் அம்மாஞ்சி.

'டேய், நேத்து ராத்திரி என்னடா நடந்துச்சி?'

'என்ன நடந்துச்சா? அட போங்கப்பா. பார்ட்டின்னா இப்படியா குடிக்கிறது. உங்க பிரண்டு ராஜா மாமா தான் உங்கள கொண்டாந்து ராத்திரி வீட்டுல விட்டார். உங்களுக்கு சரியான போதை. வாசல்லயே ஒரு தடவை வாந்தி எடுத்தீங்க. அப்புறமா ஹால்ல ஒருக்க. ஒரே நாஸ்தி பண்ணிட்டீங்க.'

'என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. சும்மா ஒரு பெக் போட்டுட்டு வீட்டுக்கு வந்தாலே தகராறு ப்ண்ணுற உங்கம்ம இன்னிக்கு அதிசயமா சண்டஒ போடாம எல்லாத்தையும் க்ளீன் பண்ணி எனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சி வச்சி.....'

'ஓஒ அதுவா? உங்கள க்ளீன் பண்ணுறதுக்காக நானும் அம்மாவும் சேந்து நேத்து ராத்திரி உங்க பெட்ரூமுக்குத் தூக்கி போயி உங்கள பெட்டுல போட்டோமா? அதுக்கப்புறம் அம்மா உங்க பேண்ட்ட கழட்ட பாத்தாங்க.'

'ஐயய்யோ...எனக்கு ஒண்ணுமே நினைவில்லியே?'

'ஆமா. நீங்க சுத்தமா அவுட். ஆனா அந்த நெலலையும் நீங்க 'ய்யேய், யாரு அது என் பேண்ட்ட அவுக்குறது. ம்ஹீம். எனக்கு கல்யாணம் ஆயிருச்சி. இது தப்பு' ன்னு சத்தம் போட்டிங்க. அதான்'.

pradeepkt
02-02-2005, 02:51 AM
புல்லரிக்குது இனியன்.
அம்மாஞ்சி சொல்லுற மாதிரி ஒரு கருத்தையும் வச்சிச் சொன்னீங்க பாருங்க...
கலக்கல்னா இதுதான்
நிறைய எழுதுங்க...

அன்புடன்,
பிரதீப்

gragavan
02-02-2005, 05:26 AM
அடடா! அம்மாஞ்சி உண்மையிலேயே அம்மாஞ்சிதான்.

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
02-02-2005, 08:54 AM
சூப்பர் அம்மாஞ்சி..... மனைவியை... போதையிலும் கவர்ந்துவிட்டார்...

இனி வாழ்க்கையே தடபுடல்தான்....

mania
02-02-2005, 09:33 AM
:D :D :D :D அருமை இனியன்....... :D :D
அன்புடன்
மணியா.... :D

மன்மதன்
02-02-2005, 10:34 AM
அருமையாக இருந்தது..
அன்புடன்
மன்மதன்

Mathu
02-02-2005, 11:18 AM
அனைத்தும் அருமை அம்மாஞ்சி...!

தொடர்ந்து தாருங்கள் இனியன்.

Iniyan
03-03-2005, 04:56 PM
அம்மாஞ்சி பகுதி நேர எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவரை தொலைபேசியில் அழைத்த ஒரு பெண்மணி தனது வீடு பாத்ரூமில் உள்ள வாட்டர் ஹீட்டர் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை. அதை வந்து பார்த்து சரி செய்து தர முடியுமா என்றாள். சரியென அம்மாஞ்சி அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் போன போது அந்தம்மா தான் ரொம்ப அவசரமாக ஒரு இடத்துக்குப் போக வேண்டி உள்ளதால் வீட்டுச்சாவியை அம்மாஞ்சியிடம் கொடுத்து சரி செய்து முடித்ததும் கதவை பூட்டி சாவியை எதிர் வீட்டில் கொடுத்து விட்டுப் போகுமாறு சொல்லிக் கிளம்ப அம்மாஞ்சியும் ஒத்துக் கொண்டார். அம்மாஞ்சியை வீட்டினுள் விட்டு வெளியே கிளம்பிய அந்தப் பெண் திரும்ப வந்து அம்மாஞ்சியிடம் சொன்னாள்.

'எங்க வீட்டுல பெரிய நாய் ஒண்ணும், ஒரு கிளியும் இருக்கு. நாய பாத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. ரொம்ப அமைதியா இருக்கும். ஆனா இந்த கிளி மட்டும் கொஞ்சம் லொள்ளு பிடிச்சது. எக்காரணம் கொண்டும் இந்த கிளிகிட்ட மட்டும் ஏதும் பேசாதீங்க. நல்லா ஞாபகம் வச்சிக்கங்க. கிளி கிட்ட மாத்திரம் எதுக்காகவும் பேசீறாதீங்க'

சரின்னு அம்மாஞ்சி உள்ளாற போனாரு. அப்ப அந்த பக்கம் வந்து நின்ன நாய பாத்த அம்மாஞ்சிக்கு மூச்சே நின்னு போச்சு. பெரிய நாய். பல் ஒவ்வொண்ணும் 2 இன்ச் நீளத்துல நாக்க தொங்கப் போட்டுகிட்டு பாக்கவே பயங்கரமா இருந்துச்சி. ஆனா அந்த அம்மா சொன்னபடி ரொம்ப அமைதியா அப்படியே படுத்துகிட்டு அம்மாஞ்சிய வேடிக்கை பாத்துகிட்டு இருந்துச்சி. குலைக்கல, உறுமல. சாந்தமா படுத்துகிச்சி. இவருக்கு ஆச்சர்யம்னா ஆச்சர்யம். அதுக்கு நேர் மாறா அங்க கூண்டுல இருந்த கிளி அழகோ அழகு.

இவரு அந்தம்மா சொன்ன மாதிரி ஒண்ணும் பேசாம வேலைய ஆரம்பிச்சாரு.

'ஏய்....கய்தே...உம் பேரென்ன?'

திடுக்குன்னு திரும்பி பாத்தா அந்தக் கிளிதான். அத்தோட நிறுத்தல. 'கய்தே...கசுமாலம்...நாயி....பன்னி...' இன்னும் கெட்ட கெட்ட வார்த்தயெல்லாம் சொல்லி அம்மாஞ்சிய திட்டு திட்டுன்னு திட்டுச்சி கிளி. அதுக்கும் மேலே போயி சும்மா ஒரே கத்து. கொஞ்ச நேரத்துல அம்மாஞ்சிக்கு தலைவலியே வந்துருச்சி. இருந்தாலும் பல்லக் கடிச்சிகிட்டு பேசாம இருந்தார். ஒரு வழியா வேலைய முடிச்சிட்டு கிளம்பப் போனார். அப்பவும் கிளி இவரை விட்ட பாடில்ல.

'அட உன்னத்தாண்டா... பேசேன். வாய்ல என்னா கொழுக்கட்டையா வச்சிருக்க? மானம் ரோசம் இல்ல உனக்கு'
இதும் கிளிதான்.

அம்மாஞ்சிக்கு வந்ததே கோபம். இனியும் பொறுக்க முடியாதுன்னு 'அடச்சீ....முட்டாள் கிளியே வாய மூடு'ன்னார்.

அவ்ளோ தான் கிளி கப்சிப்புன்னு ஆயிருச்சி. அம்மாஞ்சிக்கு சிரிப்பு தாளல. கெளம்பினார்.

'டாமி....திருடன்...திருடன்...பிடி..பிடி...அவன பிடி விடாத. கடி' ன்னு கத்துச்சி கிளி இப்ப.

Iniyan
03-03-2005, 05:08 PM
ஒரு கார்ப்பரேசன் லாரி டிரைவர் சிவப்பு சிக்னலில் நிறுத்தினார். அப்போது அங்கு வந்து லாரி கதவை தட்டின அம்மாஞ்சி 'சார். உங்க லாரிலேந்து என்னமோ சிந்திகிட்டே போகுது' என்றார்.

லாரி டிரைவர் அம்மாஞ்சியை கண்டு கொள்ளவே இல்லை. சிக்னல் மாறிய பின் அவர் பாட்டுக்க லாரியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

அடுத்த சிக்னலில் லாரி நின்ற போதும் இதே கதை தான். லாரியைப் பின் தொடர்ந்து தன் காரில் வந்த அம்மாஞ்சி ரொம்ப அக்கறையாய் 'என்னாங்க...நான் அப்பவே சொன்னேன். உங்க லாரிலேந்து ஏதோ சிந்துதின்னு. ஆனா நீங்க பாட்டுக்கு கண்டுக்காம வர்றீங்க. கவர்மெண்ட் காசு வேஸ்ட் ஆகுதேன்னு சொன்னா....'.

லாரி டிரைவர் ஒரு புழுவைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு திரும்ப வண்டி எடுத்தார்.

அதற்கடுத்த சிக்னலில் லாரிக்கு முன்னால் தன் காரை நிறுத்தி பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு லாரியை போக விடாமல் தடுத்து அம்மாஞ்சி கோபமாய் கத்தினார். 'இந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீசுக்கெல்லாம் வர வர ரொம்ப திமிரு ஜாஸ்தி ஆயிருச்சு. சொல்லி கிட்டே இருக்கேன். கேக்காம '

இப்ப லாரி டிரைவருக்கு வந்ததே கோபம். 'யோவ். இன்ன்னிக்கு ராத்திரி பெரிய பனிப் பொழிவு இருக்கு. நான் ரோடெல்லாம் வழுக்காம இருக்க உப்பு தூவிகிட்டு இருக்கேன்'

(மேலை நாடுகளில் குளிர் காலத்தில் கடுமையான பனிப் பொழிவு இருக்கும் போது சாலைகளில் விழும் பனி உறைந்து ஐஸாக மாறுவதை தவிர்க்க லாரியில் பின்னால் உப்புதுகள் ஏற்றி சென்று சாலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தூவுவார்கள்.)

pradeepkt
04-03-2005, 02:50 AM
இனியன் உங்களுக்கு மட்டும் எங்க இருந்துய்யா இதெல்லாம் கிடைக்குது.
சிரிச்சி சிரிச்சி வந்தான் பிரதீப்புன்னு ஆபீஸில ஒரே பேச்சாகிப் போச்சு.

சிரித்துக்கொண்டே,
பிரதீப்

அறிஞர்
04-03-2005, 03:06 AM
சூப்பரான சிரிப்புகள்..

கிளிக்கிட்ட பேச்சு கொடுத்ததுக்கு... கிளியை சூப்பு வைத்து... குடித்து இருக்கலாம்...

mania
04-03-2005, 03:23 AM
Originally posted by அறிஞர்@Mar 4 2005, 09:36 AM
சூப்பரான சிரிப்புகள்..

கிளிக்கிட்ட பேச்சு கொடுத்ததுக்கு... கிளியை சூப்பு வைத்து... குடித்து இருக்கலாம்...

96043


:rolleyes: :rolleyes: ஏன் உங்களுக்கும் அந்த கிளி மாதிரி பேசனும்ன்னு ஆசையா...
:rolleyes: :rolleyes: எப்படியோ அடுத்த அம்மாஞ்சி தயாராகிறார்.... :D :D :D
மிகவும் அருமை இனியன்.....தொடர்ந்து கொடுங்கள்.... :D :D
அன்புடன்
மணியா.... :D

Iniyan
04-03-2005, 01:39 PM
அம்மாஞ்சியிடம் டாக்டர் : "ஏங்க. நான் எழுதிக் கொடுத்த வயாகரா சாப்பிட்டதுக்கு ஏதும் சைட் எபக்ட் இருக்கா?"

அம்மாஞ்சி: "ஆமா டாக்டர். கொஞ்ச நாளா வராம இருந்த என் பொண்டாட்டியோட தலைவலி திரும்ப வந்துடுச்சி"

Iniyan
04-03-2005, 01:40 PM
அம்மாஞ்சியின் சில கேள்விகள்:

1) முதன் முதலில் ஒரு பசு மாட்டைப் பார்த்து "ம்ம்ம்ம்ம். அதோ அங்கே அந்த மாட்டின் கீழே நீள நீளமாய் விரல் மாதிரி தொங்குதே, அதைப் பிடிச்சி கசக்கி பிழிஞ்சி அதுலேந்து வர்றத குடிக்கலாம்" என்று யாருக்கு முதன் முதலில் தோன்றியது?

2) "அதோ போகுதே கோழி. அதும் பின்னாடி இருந்து வெள்ளையா உருண்டையா என்னமோ வருதே, அத நான் எடுத்து தின்னப் போறேன்." - இது யாருக்கு முத மொத தோணிச்சி?

3) வெஜிடபிள் ஆயில் - வெஜிடபிள்ள இருந்து எடுத்தது. கார்ன் ஆயில் - கார்னிலிருந்து எடுத்தது. அப்ப பேபி ஆயில்???

4) கோந்து பாட்டில் வாங்குறோமே - அந்த கோந்து எப்படி பாட்டிலுக்குள்ள ஒட்டாம இருக்கு???

5) "இலவச பரிசுகளை வெல்லுங்கள்" ன்னு விளம்பரம் பண்ணுறாங்களே? பரிசுன்னால இலவசம் தானே???

Iniyan
04-03-2005, 01:54 PM
ஒரு நாள் அம்மாஞ்சி ஒரு பாரில் உட்கார்ந்து சோகமாய்க் குடித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த அவரது நண்பர்: என்ன ஆச்சு?

அம்மாஞ்சி: அட போப்பா. என் சோகத்த ஏன் கேக்குறே?

நண்பர் :அட சொல்லேன். துக்கத்த பகிந்து கிட்ட மனசு கொஞ்சம் சாந்தி ஆகும்.

அம்மாஞ்சி: இன்னிக்கு காலைல நான் என் வீட்டு பசுமாடுகிட்ட பால் கறந்து கிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட பாதி கறந்தப்பறம் அந்த பசு தன் இடது பின்னங்காலை தூக்கி ஒரே எத்து. பாலெல்லாம் கவுந்து வீணாப் போச்சி

நண்பர்: அட, இதுக்கு தானா இவ்ளோ சோகம்?

அம்மாஞ்சி: அட போப்பா. சில விசயங்கள் எல்லாம் சொன்னா புரியாது. சரின்னு சொல்லி நான் அங்கிருந்த கயித்த எடுத்து மாட்டோட இடது கால பக்கத்துல இருந்த கொட்டகை கம்பத்துல கட்டிட்டி திருப்பி கறந்தேன். இப்போ வலது காலால ஒரு எத்து. திரும்ப பாலெல்லாம் வீணாப் போச்சி.

நண்பர்: அட திரும்பவுமா? சரி சரி. பால் போனா என்ன? அதுக்காக இவ்ளோ சோகமா குடிக்கணுமா???

அம்மாஞ்சி : அதான் சொல்றேன்ல. சில விசயங்கள் சொன்னா புரியாது. நீயும் விட மாட்றே. இப்போ பொறுமையா வலது காலையும் இன்னோரு கயிறு எடுத்து இன்னோரு கம்பத்துல கட்டினேன். பால் கறக்க ஆரம்பிச்சா இப்ப வாலை வச்சி பாத்திரத்த ஒரே தட்டு. மூணாவது தடவ பால் கொட்டிருச்சி.

நண்பர்: அடப்பாவமே. ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கே. அப்பறம் என்ன செஞ்சே?

அம்மாஞ்சி: சரின்னு வாலையும் கட்டிடுவோம்னு சுத்தி முத்தி கயிறு பார்த்தா கயிறே இல்ல. சரின்னு என் இடுப்புல என் வேட்டிக்கு கட்டியிருந்த பெல்ட்ட கழட்டி மாட்டு வால்ல கட்டி இன்னோரு முனைய மேல கூரை கம்புல கட்டினேன். எட்டி கட்டுனதுல பெல்ட் இல்லாம என் வேட்டி அவுந்துடுச்சி. அந் நேரம் பாத்து தானா என்னைய தேடி எம் பொண்டாட்டி மாட்டுக் கொட்டாய்க்கு வரணும்......

Iniyan
04-03-2005, 02:21 PM
அம்மாஞ்சியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வேலை பார்க்கும் தொழிற்சாலையில்.

நண்பர்: அடச்சே. எக்கச்சக்க வேலைப்பா. ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு எங்கயாச்சும் ஜாலியா போயிட்டு வரலாம்னு பாக்கிறேன்.

அம்மாஞ்சி : லீவா? இப்ப இருக்குற வேலைப் பளுவுல மொதலாளி லீவ் தர மாட்டாரேப்பா.

நண்பர்: அதுக்கெல்லாம் மூளை வேணும். இப்ப பாரு. நான் எப்படி நம்ம மொதலாளி கிட்ட லீவு வாங்குறேன்னு...

முதலாளி அந்தப்பக்கம் வரும் நேரம் பார்த்து சர சரெ வென அங்கிருந்த கம்பத்தை பிடித்து மேலேறிய நண்பர் அங்கிருக்கும் விட்டத்தில் காலை வைத்து பிடித்துக் கொண்டு தலை கீழாகத் தொங்கினார்.

முதலாளி: ஏய் ஏய் ஏய், அங்க என்ன பண்ணுறே தலை கீழா தொங்கிகிட்டு???

நண்பர்: நாந்தான் லைட் பல்ப். (கேணத்தனமாக சிரித்துக் கொண்டு).

சரி தான் ரொம்ப வேலை பார்த்ததுல மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சி கிட்டு முதலாளி சொன்னார்

'இந்தாப்பா. நீ ரொம்ப வேலை பாக்கிறேன்னு நெனக்கிறேன். போய் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா வா'

இதான் சாக்கென்று நண்பர் முதலாளி பார்க்காத நேரத்தில் அம்மாஞ்சியிடம் கண்ணடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

இப்ப அம்மாஞ்சியும் விறு விறுவென நண்பரை பின் தொடர்ந்து வெளியேறத் தொடங்கினார்.

முதலாளி : இந்தாப்பா அம்மாஞ்சி. நீ எங்க போற

அம்மாஞ்சி : மொதலாளி, லைட் இல்லாம என்னால இருட்டுல எல்லாம் வேல பாக்க முடியாது.

பரஞ்சோதி
05-03-2005, 03:17 AM
இனியன் அவர்களே!

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது, அலுவலகத்தில் என்னை அம்மாஞ்சியை பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.

ஒவ்வொன்றும் கலக்கல் சிரிப்புகள், இவற்றை மொத்தமாக தொகுத்து என்னுடைய புத்தக களஞ்சியத்தில் வைக்க போகிறேன். தொடர்ந்து எங்களை சிரிக்க வையுங்கள் நண்பரே!.

மன்மதன்
05-03-2005, 01:51 PM
ஒவ்வொன்றும் தனி அம்மாஞ்சி முத்திரை...நன்றாக சிரிக்க வைத்தது..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
08-03-2005, 02:56 AM
நல்ல (சைவ/அசைவ) சிரிப்புக்கள்.... பரம்ஸ் சொன்னது போல் களஞ்சியத்தில் வைக்கலாம்....

Iniyan
08-03-2005, 10:44 AM
Originally posted by அறிஞர்@Mar 8 2005, 08:56 AM
நல்ல (சைவ/அசைவ) சிரிப்புக்கள்.... பரம்ஸ் சொன்னது போல் களஞ்சியத்தில் வைக்கலாம்....

96123



என்னாங்க ! இதுல அசைவமா??? ;)

gankrish
11-03-2005, 07:31 AM
இனியா சிரித்து சிரித்து வயிறு வலிக்கறது. ஒவ்வொன்றும் அருமை.

gragavan
11-03-2005, 10:16 AM
இத எப்படி இத்தன நாளு விட்டேன். அருமை. அருமை. அருமையோ அருமை. பாராட்டுகள் இனியன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
11-03-2005, 10:25 AM
Originally posted by gragavan@Mar 11 2005, 04:16 PM
இத எப்படி இத்தன நாளு விட்டேன். அருமை. அருமை. அருமையோ அருமை. பாராட்டுகள் இனியன்.

அன்புடன்,
கோ.இராகவன்

96210


அதானே பாத்தேன் என்னடா நம்ம வழக்கமான அன்பரின் பதில் ஒண்ணையும் காணோமே என்று.

gragavan
14-03-2005, 04:47 AM
Originally posted by Iniyan+Mar 11 2005, 04:25 PM--><div class='quotetop'>QUOTE(Iniyan @ Mar 11 2005, 04:25 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-gragavan@Mar 11 2005, 04:16 PM
இத எப்படி இத்தன நாளு விட்டேன். அருமை. அருமை. அருமையோ அருமை. பாராட்டுகள் இனியன்.

அன்புடன்,
கோ.இராகவன்

96210


அதானே பாத்தேன் என்னடா நம்ம வழக்கமான அன்பரின் பதில் ஒண்ணையும் காணோமே என்று.

96211
[/b][/quote]
நான் காணாமப் போயிருவேனா? அம்மாஞ்சிதான் விட்டுருவாரா? :lol

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
01-04-2005, 10:16 AM
அம்மாஞ்சி ஒரு கடையில் விற்பனையாளராகப் பணி புரிந்து வந்தார். ஒரு நாள் அம்மாஞ்சி ஒரு வாடிக்கையாளரிடம் பேசி கொண்டிருந்ததை அவரது மேலாளர் கேட்க நேர்ந்தது.

"இல்லீங்க. ஒரு மாசத்துக்கும் மேல இல்ல. எப்பத்தான் வருமோ தெரியல. அட சொல்லப் போனா வருமான்னே தெரியல"

கேட்ட மேலாளருக்கு கோபமான கோபம். விரைவாய் வாடிக்கையாளரிடம் சென்று "மன்னிக்கணும் சார். இந்த ஆள் சொல்றத கேட்காதீங்க. இவர் தெரியாம சொல்லுறாரு. இப்ப இல்லேங்கறது சரி தான். ஆனா ஆர்டர் பண்ணீட்டேன். கூடிய சீக்கிரம் வந்துரும்" என அவசர அவசரமாய் சமாளித்து வாடிக்கையாளாரை அனுப்பி வைத்து விட்டு கோபமாய் அம்மாஞ்சியிடம் திரும்பினார்.

"யோவ். உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இல்லே வருமான்னே தெரியாதுன்னுல்லாம் கஸ்டமர் கிட்ட சொல்லவே கூடாதுன்னு எத்தினி தடவ சொல்லி இருக்கேன்? அவங்க நம்ம கடைய பத்தி என்ன நினைப்பாங்க? எப்பவுமே ஆர்டர் பண்ணி இருக்கோம். இதோ வந்துரும்னு சொல்லணும் தெரியுதா? சரி...இப்ப சொல்லு அவங்க என்ன வருமான்னு கேட்டாங்க?"

அம்மாஞ்சி: "மழை"
__________________

Iniyan
01-04-2005, 10:16 AM
டெலிபோனில் டெக்னிக்கல் சப்போர்ட் தரும் கணிப்பொறி பொறியாளருக்கும், அம்மாஞ்சிக்கும் நடந்த உரையாடல்கள் இங்கே.

டெக் சப்போர்ட்: உங்க கிட்ட இருக்குறது என்ன கம்ப்யூட்டர்?

அம்மாஞ்சி: வெள்ளைக் கலர் கம்ப்யூட்டர்

Iniyan
01-04-2005, 10:16 AM
அம்மாஞ்சி: என் கம்ப்யூட்டர் பிளாப்பி டிரைவ்ல பிளாப்பி சிக்கிகிச்சு.

டெக் சப்போர்ட்: அடடா. அங்க இருக்குற பட்டனை அமுக்கினீங்களா?

அம்மாஞ்சி: அமுக்கிப் பாத்துட்டேன். நல்லா சிக்கி இருக்கு.

டெக் சப்போர்ட்: அப்படீன்னா நீங்க எங்க கடைக்குத் தான் கொண்டு வரணும் சார். நான் ரிப்பேர் ஆர்டர் பிரிப்பேர் பண்ணி வைக்கிறேன்.

அம்மாஞ்சி: இல்லை. இல்லை. ஒரு நிமிசம். இருங்க. நான் பிளாப்பிய இன்னும் சொருகவே இல்லை. இன்னும் என் டேபிள் மேலேதான் இருக்கு. ஹி ஹிஹி/

டெக் சப்போர்ட்: ???!!!???

mania
01-04-2005, 10:34 AM
:D :D :D அனைத்தும் அருமை இனியன்.... :D :D :D
அன்புடன்
மணியா... :D

Iniyan
01-04-2005, 11:43 AM
டெக் சப்போர்ட் கூத்துக்கள் இன்னும் வரும்.... <_<

Iniyan
01-04-2005, 02:01 PM
டெக் சப்போர்ட்: உங்கள் கம்ப்யூட்டர் திரையின் இடது பக்கம் இருக்கும் "My computer" ஐகானை க்ளிக்குங்கள்.

அம்மாஞ்சி: உங்களுக்கு இடது பக்கமா ? எனக்கு இடது பக்கமா?

Iniyan
01-04-2005, 02:01 PM
அம்மாஞ்சி: என் கம்ப்யூட்டர் பிரிண்ட் செய்ய மாட்டேன் என்கிறது.

டெக் சப்போர்ட்: அப்படியா? என்ன எரர் மெசேஜ் தருது?

அம்மாஞ்சி: "Can't Find Printer" என்கிறது. நான் என் பிரிண்டரை எடுத்து என் கம்பியூட்டர் மானிட்டருக்கு முன்னால் வைத்த பிறகும் இதே தான் சொல்கிறது.

Iniyan
01-04-2005, 02:02 PM
அம்மாஞ்சி : என் கீபோர்டு பணி செய்யவில்லை.

டெக் சப்போர்ட்: முதல்ல உங்க கம்ப்யூட்டரும் கீ போர்டும் கனக்ட் ஆகி இருக்கா?

அம்மாஞ்சி : (நக்கலாக...) ஹலோ நான் என்ன பில் கேட்சா இதெல்லாம் தெரிஞ்சுகிற? தெரியாமத் தான கூப்புடுறேன்.

டெக் சப்போர்ட்: சார். உங்க கீ போர்டை கையில் தூக்குங்கள்.

அம்மாஞ்சி: தூக்கிட்டேன்.

டெக் சப்போர்ட்: இப்போ உங்க கம்ப்யூட்டரை விட்டு 15 அடி தள்ளி நகர்ந்து போங்க.

அம்மாஞ்சி: போயிட்டேன்.

டெக் சப்போர்ட்: அப்போ உங்க கம்ப்யூட்டரும் கீ போர்டும் கனக்ட் ஆகல.

Iniyan
01-04-2005, 02:02 PM
அம்மாஞ்சி: என் பிரிண்டர் சிவப்பு எழுத்துக்களை பிரிண்ட் பண்ண மாட்டேன் என்கிறது.

டெக் சப்போர்ட்: உங்க கிட்ட இருக்குறது கலர் பிரிண்டரா?

அம்மாஞ்சி : இல்லை.

Iniyan
01-04-2005, 02:02 PM
டெக் சப்போர்ட்: இப்போ F8 அடிங்க.

அம்மாஞ்சி: ம்ஹீம். இது ஒர்க் ஆக மாட்டேங்குது.

டெக் சப்போர்ட்: என்ன பண்ணுனீங்கன்னு கரக்டா சொல்லுங்க/

அம்மாஞ்சி: நீங்க சொன்னா மாதிரி F கீய எட்டு தடவ அடிச்சேன்.

Iniyan
01-04-2005, 02:02 PM
டெக் சப்போர்ட் : உங்க பாஸ்வேர்ட் - small a, Capital V, அடுத்து நம்பர் 5.

அம்மாஞ்சி : நம்பர் 5 கேப்பிடலா சுமாலா?

Iniyan
01-04-2005, 02:03 PM
அம்மாஞ்சி : எனது பாஸ்வேர்ட் பணி செய்யவில்லை.

டெக் சப்போர்ட்: சரியான பாஸ்வேர்ட் தான் கொடுக்குறீங்களா?

அம்மாஞ்சி : அட ஆமா சார். எங்கூட வேல பாக்குறவங்க கொடுக்கறத பாத்து தானே கொடுக்கிறேன்.

டெக் சப்போர்ட்: உங்க பாஸ் வேர்ட் என்ன? சொல்லுங்க சை பாப்போம்.

அம்மாஞ்சி: அஞ்சு ஸ்டார்.

Iniyan
01-04-2005, 02:03 PM
டெக் சப்போர்ட் : நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் ?

அம்மாஞ்சி: நான் இப்போதான் முத முத இமெயில் அடிக்கிறேன்

டெக் சப்போர்ட்: சரி. என்ன பிரச்சனை இமெயிலில்?

அம்மாஞ்சி: இமெயில் அட்ரசுல, a அடிச்சுட்டேன். இப்ப அத சுத்தி எப்படி ஒரு வட்டம் போடுறது?

அறிஞர்
02-04-2005, 02:51 AM
சிரிக்க வைத்த அம்மாஞ்சி சிரிப்புக்கள்.... மொழி மாற்றம் அருமை....

தொடருங்கள்.. நண்பரே....

மன்மதன்
02-04-2005, 03:26 AM
ஹாஹ்ஹாஹ்.. @ட்டகாச சிரிப்பு.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
02-04-2005, 03:40 AM
நண்பரே!

அனைத்து கலக்கல் நகைச்சுவைகள்.

சில நகைச்சுவைகள் நானே அனுபவித்திருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் வேலை செய்பவர்கள் / நண்பர்கள் கம்ப்யூட்டரை ரொம்ப பத்திரமாக உபயோகிக்கும் போது, பவர் கனெக்ஷன் கூட ஆன் செய்யாமல் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என்று உதவிக்கு என்னை அழைத்திருக்கிறார்கள்.

Iniyan
04-04-2005, 12:24 PM
ஒரு தொழிற்சாலை ரொம்ப நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்ததால் திறமையான நிர்வாகம் வேண்டும் என அம்மாஞ்சியை அனைத்து பொறுப்புகளும் உள்ள நிர்வாக மேலாளராய் புதிதாக வேலைக்குச் சேர்த்தார்கள்.

முதல் நாள் அம்மாஞ்சிக்கு அலுவலகத்தில். அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து காலை 11:30 மணிக்கு வேலை நடப்பதை பார்த்தபடி அம்மாஞ்சி சுற்றி வந்தார். தொழிலாளர்கள் எல்லோரும் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் ஒரு ஓரத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் சென்ற அம்மாஞ்சி, "உனக்கு சம்பளம் எவ்வளவு?" என்றார். கொஞ்சம் ஆச்சர்யமடைந்த அவன் சட்டென சுதாரித்து "மாசத்துக்கு 300 ரூபாய். ஏன் கேக்குறீங்க?" என்றான்.

அம்மாஞ்சி சட்டென தன் சட்டைப் பையில் கை விட்டு பணம் எடுத்து எண்ணி 900 ரூபாயை அவனிடம் கொடுத்து "இந்தா உன் மூணு மாச சம்பளம். இப்ப வேளில போ. திரும்ப இந்தப் பக்கமே வராத" என்று சப்தமிட்டார். முதலிலேயே தான் கறாரான பாஸ் என்பதை வேலை பார்க்காமல் நின்று கொண்டிருந்த ஒருவனை வேலையீ விட்டு அனுப்பியதன் மூலம் அங்கிருக்கும் அனைவருக்கும் நிரூபித்து விட்ட திருப்தியில் முகத்தில் ஒரு பெருமித புன்சிரிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி "அந்த சோம்பேறி இங்க என்ன வேலை பாத்துகிட்டு இருந்தான்னு யாராவது சொல்ல முடியுமா?" எனக் கேட்டார் அம்மாஞ்சி.

கொஞ்சமாக அசடு வழிந்தபடி அங்கிருந்த ஒரு தொழிலாளி சொன்னார். "அவன் எதிர்த்தாப்ல இருக்குற டீ கடைல வேல பாக்குற பையன். காலைல டீ கொடுத்த க்ளாசை எல்லாம் வாங்கிட்டு போக வந்திருந்தான்."

gragavan
05-04-2005, 04:55 AM
அம்மாஞ்சிய என்னான்னு சொல்றது....அம்மாஞ்சி எதுல தோத்தாலும் நம்ம சிரிக்க வைக்கத் தோக்குறதில்ல. நடத்துங்க இனியன். இன்னமும் அம்மாஞ்சி பத்தி சொல்லுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு......
http://www.tamilmantram.com/new/index.php?...011&#entry97011 (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=150&p=97011&#entry97011)

அறிஞர்
05-04-2005, 07:32 AM
இந்த அம்மாஞ்சி சிரிப்பை... முன்பே கொடுத்துவிட்டனர்.. நண்பரே.....

மீண்டும் படித்ததில் திருப்திதான்.. வாழ்த்துக்கள்

Iniyan
10-04-2005, 07:31 PM
அம்மாஞ்சியின் சிந்தனைகள்

வாக்குச் சாதுர்யம் என்பது சரியான நேரத்தில் சரியான பதிலை சொல்வது மட்டுமல்ல. ஆர்வக்கோளாறில் சரியான நேரத்தில் தவறான பதிலை சொல்லாமல் இருப்பதும் தான்.

வயதாக வயதாக உடல் எடையை குறைப்பது ரொம்பக் கடினம். ஏனெனில் உடலும் உடலில் இருக்கும் கொழுப்பும் இப்போது நெருங்கிய நண்பர்களாகி விடுவதால் தான்.

காணாமல் போன எதையும் மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் ஒரே வழி - காணாமல் போன அதே பொருளை மீண்டும் புதிதாக வாங்குவது தான்.

Iniyan
11-04-2005, 05:46 PM
AM ரேடியோவை மதியம் கேட்கலாமா?

முதன் முதலில் கடிகாரம் கண்டுபிடித்த போது அவர்களுக்கு எந்த நேரத்துக்கு கடிகாரத்தை செட் செய்ய வேண்டும் என எப்படித் தெரிந்தது?

பரஞ்சோதி
11-04-2005, 07:07 PM
கலக்குங்க நண்பரே கலக்குங்க.

மேலே கேட்ட கேள்விகள் நீங்களா கேட்டதா?

mania
12-04-2005, 04:30 AM
:D :D :D சான்ஸே இல்லை......அட்டகாசம் போங்க..... :D :D
அன்புடன்
மணியா.... :D

மன்மதன்
12-04-2005, 04:41 AM
என்னமா கேள்வி கேட்டு அசத்துறீங்க..:D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
12-04-2005, 04:51 AM
கேக்குறதப் பாத்தா அம்மாஞ்சி சும்மாஞ்சி இல்லைன்னு தெரியுது. என்னவோ நமக்கு நல்ல பொழுது போக்கு.

கலக்குங்க இனியன்.

அன்புடன்,
கோ.இராகவன்

நீர்நிலைகளில் செய்யக் கூடாதவை....
http://www.tamilmantram.com/new/index.php?...495&#entry97495 (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=150&p=97495&#entry97495)

puppy
12-04-2005, 04:57 AM
Originally posted by Iniyan@Apr 11 2005, 10:46 PM
AM ரேடியோவை மதியம் கேட்கலாமா?

முதன் முதலில் கடிகாரம் கண்டுபிடித்த போது அவர்களுக்கு எந்த நேரத்துக்கு கடிகாரத்தை செட் செய்ய வேண்டும் என எப்படித் தெரிந்தது?

97488



அம்மாஞ்சிக்கும் பூவுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் இருக்கிறது மணியா....நீங்க என்ன சொல்றீங்க ?

mania
12-04-2005, 05:54 AM
Originally posted by puppy+Apr 12 2005, 10:27 AM--><div class='quotetop'>QUOTE(puppy @ Apr 12 2005, 10:27 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-Iniyan@Apr 11 2005, 10:46 PM
AM ரேடியோவை மதியம் கேட்கலாமா?

முதன் முதலில் கடிகாரம் கண்டுபிடித்த போது அவர்களுக்கு எந்த நேரத்துக்கு கடிகாரத்தை செட் செய்ய வேண்டும் என எப்படித் தெரிந்தது?

97488



அம்மாஞ்சிக்கும் பூவுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் இருக்கிறது மணியா....நீங்க என்ன சொல்றீங்க ?

97502
[/b][/quote]

:D :D எனக்கு சந்தேகமே இல்லை. பப்பி....... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா..... :D :D

poo
12-04-2005, 06:30 AM
தலை... என்ன இப்படி காலை வாரீட்டீங்க?!!

பப்பி நலமா... கச்சேரியை ஆரம்பிச்சாச்சா?!!

mania
12-04-2005, 06:49 AM
Originally posted by poo@Apr 12 2005, 12:00 PM
தலை... என்ன இப்படி காலை வாரீட்டீங்க?!!

பப்பி நலமா... கச்சேரியை ஆரம்பிச்சாச்சா?!!

97518

:rolleyes: :rolleyes: நீ ஏன் தப்பாகவே (அம்மாஞ்சி மாதிரி .... :rolleyes: :rolleyes: :D )
புரிஞ்சிக்கற......? எனக்கு சந்தேகமே இல்லை.........பூவுக்கும் அம்மாஞ்சிக்கும் (இது வேற அம்மாஞ்சி... :rolleyes: )
தொடர்பு இல்லை என்பதில் சந்தேகமே இல்லை என்றுதான் சொன்னேன்.... :D :D :D
அன்புடன்
மணியா... :rolleyes: :rolleyes: :D
(அம்மாஞ்சிக்கே புரியும் மாதிரி சொல்லியிருக்கிறேன்....புரியலை என்று சந்தேகம் கேட்காதே... :rolleyes: :D :D )

Iniyan
12-04-2005, 01:39 PM
அம்மாஞ்சி ஒரு நாள் டிரைய்னில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் வந்த சர்தார்ஜி அம்மாஞ்சியிடம் பேச்சுக் கொடுத்தார்.

"எப்படி தமிழர்கள் எல்லாம் இவ்வளவு புத்திசாலிகளாக உள்ளீர்கள்? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்."

"அந்த ரகசியம் நாங்கள் சாப்பிடும் வெள்ளரிக்காயில் தான் உள்ளது"

"அட அப்படியா?" என வாய் பிளந்தார் சர்தார். கொஞ்ச நேரத்தில் அம்மாஞ்சி தன்னிடமிருந்த இரண்டு வெள்ளரிப்பிச்ஞ்சுகளை எடுத்து கடித்து தின்னத் தொடங்கினார்.

சர்தார்ஜி "அந்த வெள்ளரிக்காயை விலைக்குத் தருவீர்களா?" எனக் கேட்க அம்மாஞ்சி திடமாய் மறுத்து விட்டார். திரும்பத் திரும்ப சர்தார்ஜி வெள்ளாரிக்காயை தனக்கு விற்கும்படி வற்புறுத்தவே அம்மாஞ்சி சொன்னார் "இந்த வெள்ளரிக்காய் ரொம்ப விலை ஜாஸ்தி"

"அட எவ்ளோ விலைன்னாலும் பரவால்ல. சொல்லுங்க. நான் இப்பவே காசு தாரேன்"

சரி என ஒரு வெள்ளரிக்காய் 1000 ரூபாய் எனப் பேசி சர்தாரிடம் வெள்ளரியை விற்று விட்டார் அம்மாஞ்சி. சர்தார் ஆர்வமாய் வெள்ளரியை வாங்கித் தின்றார். கொஞ்ச நேரத்தில் "சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு? என்னமோ போங்க...நீங்க சொன்னாமாதிரி நான் மட்டும் புத்தி சாலி ஆகம இருந்தா அப்பறம் உங்கள் கவனிச்சுக்கிறேன் "உங்கூரு வெள்ளரி இவ்ளோ வெலையா? இதே வெள்ளரிக்காய நான் 25 பைசாக்கு வாங்கி இருப்பேன் அமிர்தசரஸ்ல. " என்றார்.

அம்மாஞ்சியின் பதில் - "பாத்தீங்களா என் வெள்ளரி ஏற்கனவே வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி"

Iniyan
12-04-2005, 01:39 PM
அம்மாஞ்சியின் புதிய கண்டுபிடிப்புகள்

1) வாட்டர் புரூப் டவல்

2) படிக்கக் கற்றுக் கொள்வது எப்படி என புத்தகம்.

3) ஹெலிகாப்டரில் எஜக்டர் சீட்

4) வாட்டர் புரூப் டீ பேக்

5) காலால் பெடல் செய்யக் கூடிய வீல் சேர்

Iniyan
13-04-2005, 01:09 AM
டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

Iniyan
13-04-2005, 01:10 AM
ஒரு முறை அம்மாஞ்சி டாக்டரை பார்க்கப் போனார்.

"டாக்டர் எனக்கு உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குது."

"என்னது ? உடம்பெல்லாம் வலிக்குதா? இப்படி மொத்தமா குத்து மதிப்பா சொல்லாம கரக்டா சொல்லுங்க. எங்கங்கல்லாம் வலிக்குது?"

அம்மாஞ்சி தன் வலது முட்டியை தன் ஆட்காடி விரலால் தொட்டு அமுக்கினார்.

"ஆ.....இங்க வலிக்குது"

பின் இடது கன்னத்தை தொட்டு அமுக்கி "ஆ...இங்கயும் வலிக்குது"

பின் தனது காது மடலைப் பிடித்து "இங்கயும் வலிக்குது" என்றார்.

டாக்டர் அமைதியாக சொன்னார்

"சார். உங்க ஆள் காட்டி விரல் ஒடைஞ்சி இருக்கு"

puppy
13-04-2005, 03:26 AM
இனியன்

சிரிக்க சிந்திக்கவும் வைக்குது.....நல்லா இருக்கு தொடருங்கள்......

பூ

கச்சேரி ஆரம்பிக்கலாம்..எங்கப்பா உங்க இளசு ? ஆளையே காணோம்.....

அன்புடன்
பப்பி

மன்மதன்
13-04-2005, 04:02 AM
அம்மாஞ்சி தொடர்ந்து சிரிக்க வைக்கிறார்.. பாராட்டுக்கள்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
13-04-2005, 04:41 AM
தொடர்ந்து அம்மாஞ்சியின் அசத்தல் சிரிப்புகள். நண்பரே தனியாக தொகுத்து புத்தகமாகவே வெளியிடலாமே.

gragavan
13-04-2005, 04:59 AM
அம்மாஞ்சி என்னை கதை எழுதத் தூண்டுகிறார். ஆனால் உரிமையாளர் பாரதி சண்டைக்கு வருவார் என்பதால் நான் வேறொரு கற்பனைப் பாத்திரத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
13-04-2005, 05:29 AM
சிந்திங்க சிந்திங்க.
நல்லா சிந்திச்சு உங்க படைப்புகளைச் சிந்துங்க சிந்துங்க.

Iniyan
13-04-2005, 10:33 AM
Originally posted by gragavan@Apr 13 2005, 09:59 AM
அம்மாஞ்சி என்னை கதை எழுதத் தூண்டுகிறார். ஆனால் உரிமையாளர் பாரதி சண்டைக்கு வருவார் என்பதால் நான் வேறொரு கற்பனைப் பாத்திரத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

97549



அண்ணாச்சி என்ன இது? அம்மாஞ்சியின் உரிமையாளார் பாரதியா??? கடத் தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு ஒடச்ச கதயால்ல இருக்கு உங்க கத.....

அம்மாஞ்சிக்கு முன்னோடி யாரு தெரியும்ல. நம்ம ஆண்டிப்பண்டாரம், குவாட்டர் கோவிந்து, கோயான் கோபு மற்றும் பாண்டேஜ் பாண்டியன் இவர்கள் தான்.

அம்மாஞ்சி பேர நீங்க பயன்படுத்துவதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. (ராயல்டி காசோலை மட்டும் எனக்கு அனுப்பிடுங்க...... :D )

பரஞ்சோதி
13-04-2005, 11:38 AM
இனியன், நம்ம அப்புசாமியை விட்டு விட்டீங்களே

Iniyan
13-04-2005, 12:28 PM
Originally posted by பரஞ்சோதி@Apr 13 2005, 04:38 PM
இனியன், நம்ம அப்புசாமியை விட்டு விட்டீங்களே

97561


சீதா பாட்டி இல்லாத அப்புசாமி நிலவில்லாத அமாவாசை வானம் போல. நான் குறிப்பிட்ட ஆட்கள் எல்லாம் தனியாய் தடாலடியாய் தகதிமி செய்பவர்கள். அது தான் காரணம் அப்புசாமி தாத்தா விடுபட்டு போனதற்கு :P