PDA

View Full Version : ஏந்த்திகெனி 4 ( தொடர்ச்சி - 2 )



சொ.ஞானசம்பந்தன்
25-05-2012, 05:09 AM
( தந்தை - மகன் தர்க்கம் தொடர்கிறது )

கிரியன் -
என்வயதில் பகுத்தறிவுப் பாடங்கள் படிக்க
வேண்டுமா அதுவும் உன்வயதுக் காரனிடம் ?

ஹெமோன் -
நானிளைஞன் , உண்மை , ஆனால் வயதைக்
காட்டிலும் செயல்களே கவனிக்கத் தக்கவை .

கிரியன்
- குழப்பம் விளைவிக் கின்றாரைப்
பக்தியுடன் வணங்கும் செயலா ?

ஹெமோன் -
கீழ்மையைப் பாராட்ட ஒருநாளும் தூண்டேன் .

கிரியன் -
ஆனால் அவளைத் தாக்கியது அந்நோய்தான் !

ஹெமோன் -
மறுக்கின்றார் தீப்ஸ்நகர் மக்கள் அனைவரும் .

கிரியன் -
எப்படிநான் ஆணைகள் பிறப்பிக்க வேண்டுமென
எனக்குப் புத்தி சொல்லுமா நகரம் ?
நீயவளை மணப்பது ஒருகாலும் நடக்காது .

ஹெமோன் -
அப்படி யென்றால் அவளிறப்பாள் அச்சாவு
அழிக்கும் இன்னொரு வரையும் .

கிரியன் -
மிரட்டலா ? எனக்கா ? அவ்வளவு துணிச்சலா ?

ஹெமோன் -
மிரட்டலா தவற்றை எதிர்த்து வாதிடல் ?

கிரியன் -
மாளட்டும் உடனேயவள் , இவன்கண் எதிரேயே !

ஹெமோன் -
நடவாது, நிச்சயமாய் என்னெதிரே மடியாள் .
உன்கண்ணும் இனியென்றும் என்தலையைக் காணாது .


( ஹெமோன் போய்விடுகிறான் )

கலையரசி
30-05-2012, 01:56 PM
"நானிளைஞன் , உண்மை , ஆனால் வயதைக்
காட்டிலும் செயல்களே கவனிக்கத் தக்கவை ."

அறிவார்ந்த பேச்சு.
ஹெமோனின் முடிவு வருத்தத்தைத் தருகிறது. மகனை இழந்தாலும் பரவாயில்லை அவள் இறக்க வேண்டும் என்று வெறி பிடித்த கிரியனின் செயல் ஆத்திரமூட்டுகிறது. அருமையான நாடகத்தை மொழியாக்கம் செய்து படிக்கச் செய்தமைக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-06-2012, 11:38 AM
ஆதிக்கக் கொடுங்கோலனின் பாத்திரம் கிரியனுடையது . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

கீதம்
02-06-2012, 09:27 AM
தந்தை மகனுக்கிடையில் நிகழும் வாக்குவாதம் இருவரின் குணாதிசயங்களைத் தெள்ளந்தெளிவாக வெளிப்படுத்துகிறது. மகன் தானும் சாவேனென்று உரைத்தாலும் அது வெறும் மிரட்டலாகவே கிரியனுக்குத் தோன்றுகிறது. அருமையான மொழிபெயர்ப்புக்குப் பாராட்டு.

சொ.ஞானசம்பந்தன்
03-06-2012, 10:19 AM
சுவைத்து வாசித்தமைக்கு பாராட்டு .