PDA

View Full Version : அணிகலன்களற்று



ஜான்
24-05-2012, 12:56 PM
யாவற்றையும் உதிர்த்துவிட்டு
மென்மையாகி விட்டேன் பார்
என்றது மரம் ....
வெறுமையாகிவிட்டாயே என்றேன்....

ஆமாம் ஞானியாகிவிட்டேன் என்றது!
எனக்கும்
அப்படித்தான் தெரிந்தது .....

என்றாலும் அழகில்லையே
இலைஇல்லை ,பறவை இல்லை கிளை இல்லை
நிழல்கூட இல்லை என்றேன்...
என்றேன்...

நீயும் உதிர்த்துப் பாரேன் என்றது
அட! இதோ!இந்த சட்டைகூட
சுமையாய்த்தான் தெரிகிறது!!
ஆனால்
அழகில்லாமல் போய்விட்டேனோ?!!

ஜானகி
24-05-2012, 01:31 PM
பிறர்க்கு உபயோகமாக இல்லை என்றால் அழகும் இல்லைதானே...?...மரத்தைப் பொறுத்தவரை...!

மனிதனின் அந்த சட்டை... இல்லாதவனுக்கு உபயோகமானால்....அழகுதான்...!

ஆளுங்க
24-05-2012, 02:26 PM
நல்ல கவிதை...
மரம் தன்னுடைய அனைத்தையும் இழந்து இருப்பதால் அழகாகத் தான் தெரிகிறது..
மனிதன்?

vasikaran.g
26-05-2012, 01:01 PM
அணிகலன்
அணி கலை
அணி களை..