PDA

View Full Version : முதியோர் இல்லம்.M.Jagadeesan
24-05-2012, 04:32 AM
பொன்னம்மாள் டேவிட் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது மணி ஏழு. மருமகள் மெர்சி இன்னமும் தூங்கிக்கொண்டு இருந்தாள். காலைக்கடன்களை முடித்துக்கொண்டு , குளித்துவிட்டு வந்தாள். மணி எட்டாயிற்று. இன்னமும் மெர்சியின் தூக்கம் கலைந்தபாடில்லை. நேராகத் தன் மகனிடம் சென்ற பொன்னம்மாள் டேவிட்,

" என்னடா ஜான்சன்! இது வீடா இல்லை சோம்பேறிகள் மடமா? உம் பொண்டாட்டி இன்னமும் தூங்கிட்டிருக்கா! ஒரு பொண்ணா லட்சணமா ஆறு மணிக்கு எழுந்து , வீடு வாசல் பெருக்கிக் கோலம் போடவேண்டாம்?எந்த வீட்லடா நடக்கும் இந்த அநியாயம்? நான் சுகர் பேஷண்டுன்னு தெரியுமில்ல?வேளாவேளைக்கு நான் சாப்பிட வேணாம்? காலம் போன காலத்துல , வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவான்னு தானே இவளைக் கட்டிவச்சேன்! போற போக்கைப் பாத்தா , மூணுவேளையும் நான் சமைச்சுப் போட்டா இவ ஒக்காந்து சாப்பிடுவா போல இருக்கே! இதென்னடா கொடுமை?"

" அம்மா! எதுக்கம்மா சண்டை போடறீங்க? அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை! அதான் தூங்கிட்டிருக்கா! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்கம்மா!"

" டேய்! நான் அவளை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போலாம்டா! ஆனா என் வயிறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலையே! பசி தாங்காத உடம்புடா இது." பொன்னம்மாள் டேவிட்டின் குரல் தளுதளுத்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.அவள் தன் மகனை நோக்கி

" ஜான்சன்! நான் முதியோர் இல்லம் போறேன்." என்று சொன்னாள்.

" என்னம்மா இது! இப்படி பேசறீங்களே! நான் வேணுமின்னா டிபன் செஞ்சு தரட்டுமா?"

" வேணாம்; வழியில எங்காவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன் ."

' சரி; உங்க இஷ்டம்! நான் சொன்னா கேக்கவா போறிங்க?; முதியோர் இல்லம் சேர்ந்தவுடனே எனக்கு போன் பண்ணுங்க!"

" சரிடா!"

அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு முதியோர் இல்லம் வந்து சேர்ந்தாள் பொன்னம்மாள் டேவிட்.

பொன்னம்மாள் டேவிட்டைப் பார்த்தவுடனே , அவளுடைய P.A. விசாலம் ஓடிவந்து வரவேற்றாள்.

" வாங்க பிரசிடென்ட்! எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க! என்ன மேடம்! உங்க கார்ல வராம ஆட்டோவில வந்திருக்கீங்க?"

' என் கார சர்வீசுக்கு விட்டிருக்கேன்! அதான் ஆட்டோவில வந்தேன்! ஆண்டுவிழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டீங்களா ?"

" எல்லாம் பக்காவா இருக்கு மேடம்!"

" மினிஸ்டர் எப்ப வரார்?"

" சரியா பத்து மணிக்கு வந்துருவார் மேடம்!"

" ஒ.கே! "

பொன்னம்மாள் டேவிட் தன் செல்போனை எடுத்துத் தன் மகனுக்குப் பொன் செய்தாள்.

" ஜான்சன்! நான் பத்திரமா முதியோர் இல்லம் வந்து சேந்துட்டேன்!"

" சரி அம்மா! சாயங்காலம் ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டிற்குப் போகும்போது நான் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்."

" தேங்க்ஸ்டா!"

கீதம்
24-05-2012, 07:09 AM
அம்மா முதியோர் இல்லம் போகிறேன் என்னும்போது என்னடா மகன் இவ்வளவு சாதாரணமாய் சரி, போங்க என்று சொல்கிறாரே என்று படிக்கும்போதே புருவத்தில் முடிச்சு விழுந்தது. இறுதியில் புன்னகையோடு முடிச்சவிழ்த்தேன்.

என்னதான் வசதியாக இருந்தாலும், முதியோர் இல்ல நிர்வாகியாய் இருந்தாலும் முதுமையில் கவனிப்பாரற்ற நிலை வருத்துகிறது. அதுவும், அவர் ஒரு சர்க்கரை நோயாளி எனும்போது இன்னும் பாவமாய் உள்ளது.

இறுதித் திருப்பம் ரசிக்கவைத்தாலும் உள்ளிருக்கும் யதார்த்தமும் மனம் உரசிப் போகிறது. பாராட்டுகள் ஐயா.

மஞ்சுபாஷிணி
24-05-2012, 09:02 AM
வயது முதிந்தவர்களை தன்னை விட மூத்தவர்களாக நினைக்காமல் தன் குழந்தைகளாக நினைத்து அவர்களுக்கு டைமுக்கு உணவும் எப்போதும் அன்பும் அரவணைப்பும் தருவது அவசியம்...

ஆனால் இந்த கதையில் இருக்கும் ட்விஸ்டை ரசித்தேன்...

சரி நான் முதியோர் இல்லத்துக்கு கிளம்பறேன்னு சொன்னதுமே இயல்பாக மகனும் சரி என்று சொல்லும்போது கதை இப்படி தான் போகிறது என்பதை அறியமுடிந்தது. அதாவது முதியோர் இல்லத்தை நடத்தும் நிர்வாகியாகவோ அல்லது அங்கு பணிபுரிபவராகவோ தான் இருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிந்தது.

காலை உடம்பு சரி இல்லை என்று சோர்வாக படுத்திருப்பதால் மகனுக்கு இது தெரிந்திருப்பதால் கொஞ்சம் சீக்கிரமே எழுந்து தாய்க்கு (டயபடிக்) தேவையான உணவை சமைத்து வைத்திருந்திருக்கலாம்...

கதையின் போக்கு மிக அருமை சார்.... ரசிக்கவும் மதிக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சார்...

ஜான்
24-05-2012, 01:50 PM
சீரியஸாக ஆரம்பித்து ட்விஸ்ட் வந்தவுடன் புன்சிரிக்க வைக்கிறது !

M.Jagadeesan
24-05-2012, 04:43 PM
அம்மா முதியோர் இல்லம் போகிறேன் என்னும்போது என்னடா மகன் இவ்வளவு சாதாரணமாய் சரி, போங்க என்று சொல்கிறாரே என்று படிக்கும்போதே புருவத்தில் முடிச்சு விழுந்தது. இறுதியில் புன்னகையோடு முடிச்சவிழ்த்தேன்.

என்னதான் வசதியாக இருந்தாலும், முதியோர் இல்ல நிர்வாகியாய் இருந்தாலும் முதுமையில் கவனிப்பாரற்ற நிலை வருத்துகிறது. அதுவும், அவர் ஒரு சர்க்கரை நோயாளி எனும்போது இன்னும் பாவமாய் உள்ளது.

இறுதித் திருப்பம் ரசிக்கவைத்தாலும் உள்ளிருக்கும் யதார்த்தமும் மனம் உரசிப் போகிறது. பாராட்டுகள் ஐயா.


" Twist " உள்ள கதைகளை எழுதும்போது மிகவும் எச்சரிக்கையாக எழுத வேண்டியுள்ளது. இந்தக் கதையில் கையாளப் பட்டுள்ள " TWIST " யாரும் எளிதில் ஊகிக்கக் கூடிய ஒன்று என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

சிவா.ஜி
24-05-2012, 04:46 PM
முதியோர் இல்லம் நடத்தும் நிர்வாகிக்கே ஒருநாள் முதியோர் இல்லம் போய் நிரந்தரமாய் வசிக்கும் நிலை வரும் போலிருக்கிறதே. நல்ல ட்விஸ்ட். வாழ்த்துக்கள் ஐயா.

M.Jagadeesan
24-05-2012, 04:48 PM
தங்களின் பாராட்டுக்கு நன்றி மஞ்சுபாஷிணி அவர்களே!

M.Jagadeesan
24-05-2012, 04:49 PM
ஜான் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

M.Jagadeesan
24-05-2012, 04:50 PM
சிவா.ஜி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

ஆளுங்க
24-05-2012, 05:09 PM
நல்ல கதை ஐயா...

சாதாரணமாய் முதியோர் இல்லம் போகிறேன் என்று சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது.. ஆனால், இறுதியில் புன்னகைக்க வைத்தது!

அமீனுதீன்
24-05-2012, 05:12 PM
நல்ல கதை, நிஜமாகிவிட கூடாது, நன்றி

M.Jagadeesan
24-05-2012, 05:15 PM
ஆளுங்க அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

M.Jagadeesan
24-05-2012, 05:16 PM
அமினுதீன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

சுகந்தப்ரீதன்
22-06-2012, 01:32 PM
வீட்டுக்கு வீடு வாசப்படி...

அதை ரத்தினச் சுருக்கமாய் உணர்த்தும் கதை..!! வாழ்த்துக்கள் ஐயா..!!

சொ.ஞானசம்பந்தன்
29-06-2012, 07:50 AM
திடீர்த் திருப்பமுள்ள நல்ல கதை . கடமை உணர்வுள்ள மகனாயிருந்தால் தாயின் உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பான்

தாமரை
29-06-2012, 08:00 AM
கதையில் இருக்கும் இன்ன பிற நீதிகளான

சோம்பி இராமை, அடுத்தவருக்கு உபயோகமாய் இருத்தல் போன்ற நல்ல அம்சங்கள் டிவிஸ்டை விட நன்றாக இருக்கின்றன. நமக்கும் இப்படி ஒரு ஆசை இருக்கு. பார்ப்போம்