PDA

View Full Version : குருபதி அருண்மொழி



நாகரா
23-05-2012, 11:53 AM
சிவத்தே வசி
அவத்தை அரி
தவத்தை அறி
தயைநீ புரி

சிவமே அறி(ரி)
அருளே புரி
கருணை பொழி
திருவாய் விழி

அகத்தே பதி
சிவமெது அறி
அன்பது புரி
வன்மனம் உரி

உள்ளே கட
உண்*மை உண
நெஞ்சைப் பிள
கண்மை திற

அருளே பொருளாம்
மறவா திரு
அன்பே உருவாய்
இறவா திரு

பதியொரு வலவன்
உருவிலா நலவன்
உருவுனில் உளவன்
உணர்வொடு எலாம்பதி

அகத்தினில் ஒளிந்தவன்
சகத்தினில் ஒளிர்பவன்
உடம்பினில் உயிரவன்
உணர்வொடு எலாம்பதி

படத்தினில் பிடிபடான்
திடத்தினில் அடைபடான்
கடத்தினில் உறைபவன்
உணர்வொடு எலாம்பதி

சடங்கினால் வசப்படான்
சமரச அகத்துளான்
ஒருவனாங் கணவனின்
உணர்வொடு எலாம்பதி

இருதயத் ததிருதே
சமரச முழக்கமே
கவனமாய் மொழியதன்
உணர்வொடு எலாம்பதி

இருதயத் தொளிருதே
சமரசத் திருநெறி
கவனமாய் வழியதன்
உணர்வொடு எலாம்பதி

யாவுளும் அகமுகன்
சாவிலாப் பெரியவன்
புகழ்ந்திட உரியவன்
உணர்வொடு எலாம்பதி

நாகரா
24-05-2012, 04:26 AM
1

பூரணன் காரணன்
ஓமய நானவன்
கருமவேர் அறுப்பவன்
உணர்வொடு எலாம்பதி

2

சுயஞ்சுடர்ப் பிரகாசன்
பவமறு தருமன்
சிவமெனும் ஒருவன்
உணர்வொடு எலாம்பதி

3

நித்தியன் நிர்மலன்
சத்தியன் சின்மயன்
களித்திடும் இன்பவன்
உணர்வொடு எலாம்பதி

4

அமுதன் நெஞ்செனுங்
குமுதத் துள்ளவன்
பனித்திடுங் கண்ணவன்
உணர்வொடு எலாம்பதி

5

நடுவுள அன்பன்
நடமிடும் இன்பன்
அணைத்திடுந் திருக்கரன்
உணர்வொடு எலாம்பதி

6

இரங்கும் அறிவன்
இறங்கும் அரியன்
உறவினில் எளியன்
உணர்வொடு எலாம்பதி

7

அருட்பெரு வல்லபன்
அரும்பெறற் சித்தவன்
உருவுளே சத்தியன்
உணர்வொடு எலாம்பதி

8 & 9

அருட்பெருஞ் ஜோதியள்
தனிக்கரு ணாகரன்
உமாசிவ ஒருமை
உணர்வொடு எலாம்பதி

10

பெரிய கடவுளாம்
பேரா முதலவன்
உயிரதில் பொருந்தினான்
உணர்வொடு எலாம்பதி

11

அருட்பே ரரசன்
அவதார புருஷன்
உலகினில் நடப்பவன்
உணர்வொடு எலாம்பதி

12

நானே நானது
தானே ஆனவன்
குறைவிலாப் பூரணன்
உணர்வொடு எலாம்பதி

13

நானே மெய்வழி
ஜீவனாம் என்பவன்
இருப்பவன் தன்மை(மெய்)
உணர்வொடு எலாம்பதி

1. தலையுச்சி
2. நெற்றி
3. தொண்டை
4. தொண்டையடி
5. இருதயம், நடு மார்பு
6. மார்படி, உதரவிதானம்
7. நாபி
8 & 9. நாபியடி
10. முதுகடி
11. முழந்தாள்
12. பாதம்

13. முழுமை, முழு மெய்

இது புறத்தே வீணே ஓடித் தேடிக் காணக் கிடைக்காத நம் விசுவரூபம்!

vasikaran.g
26-05-2012, 12:26 PM
சிவனின் பெருமை ,
மனதை ஆளுதே ..

நாகரா
11-06-2012, 04:22 AM
மனதாளுஞ் சிவத்தை உணர்ந்த உமக்கு நன்றி வசிகரன்