PDA

View Full Version : மனிதன்,மிருகம்.,தெய்வம்



தமிழ்குமரன்
29-12-2003, 11:36 AM
மிருகமாக இருந்த என்னை
மனிதாக்கினாள்.
அவளை
நான் தெய்வமாக்கினேன்.
அவள் எப்பொழுதும் எனக்கு மேல் அல்லவா!

Mano.G.
29-12-2003, 11:54 PM
நண்பர் தமிழ்குமரன் உங்கள் பாடல் அருமை
வாழ்த்துக்கள், கீழே உள்ளது நக்கலுக்காகவே.
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.



சுதந்திரமாய் இருந்த என்னை
திருமணம் என்ற கூண்டுக்குள் அடைத்தாய்
திடகாத்திரமாய் இருந்த எனக்கு இரத்த அழுத்த நோய் வரகாரணமானய்
இறுதியில் நோயாளியாய் என்னை
மருத்துவமணையில் சேர்த்தாய்
நீ வராமல் இருந்தால்
நான் சுதந்திர பறவை

மனோ.ஜி

இளசு
30-12-2003, 12:10 AM
தமிழ்,உங்கள் மனக்கோயில் பிரதிஷ்டை அண்மையிலா?
அத்தனை படைப்பிலும் தேவதை வாசம்...


மனோஜி,
மகிஷியும் பெண்ணே
மகாலட்சுமியும் பெண்ணே
அதுபோல் நம்மிலும் அரக்கருண்டு..

இன்னார்க்கு இன்னாரென்று...
சேராவிட்டால் தொல்லை மிகவுண்டு..

தமிழ்குமரன்
30-12-2003, 02:05 PM
அண்மையிலா அன்னமயிலா? தெரியவில்லை.

இக்பால்
31-12-2003, 11:36 AM
அண்மையிலா அன்னமயிலா? தெரியவில்லை.


தம்பி...இரண்டுக்குமே சொல்லுங்களேன்.

Nanban
05-01-2004, 11:31 AM
தமிழ்குமரன்....... தாயினும் சிறந்த கோயிலுமில்லை என்பார்களே..... உங்கள் மனதேவதையை தாயாக மாற்றி விடக் கூடாதா........?