PDA

View Full Version : ஏந்த்திகெனி - 4 ( தொடர்ச்சி -2 )சொ.ஞானசம்பந்தன்
22-05-2012, 10:41 AM
ஹெமொன் -- அப்பா , கடவுள் அளிக்கிறார் மனிதர்க்குத்
தப்பா சரியா என்பதை யறியும்
திறனில் மிகச்சிறு பகுதியை . ஒருவர்
பெறுமவற்றுள் அதனினும் முக்கியம் வேறில்லை .
ஆனால்நீ சொன்னது தவறாக இருக்காதோ ?
சொல்ல அறியேன்நான் , சொல்லுந் தகுதியை
உடையவனாய் இருக்கவும் விரும்பவில்லை.
என்றாலும் இன்னொருவர் கருத்தும் சரியாக
இருக்கலாம் ; உன்னைப் பற்றிப் பற்பலர்
சொல்வதை , செய்வதை , விமர்சிப் பதையும்
அறியும் நிலையில் இருக்கின் றேன்நான் :
எளிய மனிதன் உன்பார்வைக் கஞ்சுகிறான்
நீகேட்க விரும்பாத செய்திகளைச் சொல்லத்
தேவைப் படும்போது.
நானோ மறைவில் கேட்கின்றேன் அவள்பற்றி
ஊரார் பேசுகின்ற பரிதாபப் பேச்சினை :
பெரும்புகழ் தரற்குரிய செய்கையைச் செய்தவள்
கூர்கொடிய முடிவை விலையாய்ப் பெறுதற்குக்
கொஞ்சமும் உரியவள் அல்லள் என்கிறார் .
போரில் மாய்ந்து வீழ்ந்த சோதரனைக்
கொடிய நாய்பறவை சின்னப் படுத்தலைப்
பார்க்க மறுத்தவள்,
அடக்க மின்றிக் கிடக்க விடாதாள்
" பொற்பதக்கம் பெறுவதற்குத் தக்கவள் அல்லளோ ? "
என்றுதான் கமுக்கமாய்க் கூறுகிறார் , பரப்புகிறார் .
ஆகவே ஒரேயொரு கோணத்தில் பார்வையைப்
பதிக்காதே . நீசொல் வதுமட்டும் சரியென்றும்
பிறர்மொழிவ தெல்லாம் பிழையென்றும் நம்பி

( தொடரும் )

-----------------------------------------------------------------------------------------------------------------.

கீதம்
23-05-2012, 12:11 AM
ஹெமொனின் பேச்சில் தேர்ந்த திறனாய்வு வெளிப்படுகிறது.

தந்தையை நேரடியாக குற்றஞ்சுமத்தி அவர் அதிருப்தியையும் மனவெறுப்பையும் சம்பாதிக்காமலும், அதே சமயம்,

அவர் செயலிலும் எண்ணத்திலும் இருக்கும் தவறான போக்கைச் சுட்டிக்காட்டியும் பேசும் பேச்சு மிகவும் நயம்.

அவருக்கு முன்னால் பேச அஞ்சுபவர்கள் பற்றி எடுத்துரைப்பதும் சிறப்பு.

அன்பு மாறா மகனாகவும், ஏந்த்திகெனியின் செயலுக்குப் பரிவு காட்டுபவனாகவும், நடுநிலையில் தன்னை இருத்தி,

தந்தையின் பழிவாங்கும் எண்ணத்தை மாற்றமுயலும் ஹெமோனின் வாதம் மனம் ஈர்க்கிறது.

மிகவும் நுண்மையான உணர்வுகளையும் மொழிபெயர்த்து அழகாய் உணர்த்தும் தங்களுக்கு என் பாராட்டு.

சொ.ஞானசம்பந்தன்
23-05-2012, 07:30 AM

பாராட்டுக்கு மிகுந்த நன்றி . ஏந்த்திகெனியைப் போன்றே ஹெமோனின் பாத்திரப்படைப்பும் நேர்த்தியானது . சுவைத்துப் படித்ததற்கு என் பாராட்டு . அநேகரால் இது முடிவதில்லை .

கலையரசி
30-05-2012, 01:49 PM
எலெக்த்ரா பொற்பதக்கம் பெறும் தகுதியுள்ளவள் என்றும் அவள் மீது தவறேதுமில்லை என்பதை எவ்வளவு திறம்பட எடுத்துரைக்கின்றான் ஹெமோன்? தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொல்வது அபத்தம் என்பதை நாசூக்காக தந்தையின் மனம் புண்படாதவாறு எடுத்துச் சொல்லும் விதம் அழகு. படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-06-2012, 11:30 AM
பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . ஹெமோனின் பேச்சு மிகச் சாதுரியமானதுதான் .