PDA

View Full Version : சினிமாவும் வன்முறையும்மதுரை மைந்தன்
21-05-2012, 09:17 PM
நீதிபதி: குற்றவாளி கூண்டில் நிற்கும் நீர் நேற்றிரவு குடித்துவிட்டு உங்கள் எதிராளியை தாக்கினீர்களா? ஆமாம் என்று ஒப்புக் கொண்டால் 10, 000 ரூபாய் அபரதாமும் இல்லை என்று மறுத்தால் 20,000 ரூபாய் அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

குற்றவாளியின் வக்கீல் அவர் காதில் ஏதோ கூறுகிறார்.

குற்றவாளி: ஆமாம் ஐயா நான் அவரை தாக்கினேன். ஏன் என்று நீங்கள் கேட்டால் என் மீது கருணை காட்டுவீர்கள். எனக்கு 3 படத்தில் தனுசுக்கு வரும் என்ன வியாதி... ஹாங் பைபோலார் டிச்சார்டருங்க.

நீதிபதி: நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது? உங்களை ஒரு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

குற்றவாளியின் வக்கீல் துள்ளி எழுந்து: கனம் நீதிபதி அவர்களே. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் சென்னையில் இதற்கான மருத்துவ வசதிகள் இல்லை. ஆகவே எனது கட்சிக் காரரை அமெரிக்காவிக்கு அனுப்பி (குற்றவாளியை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி காட்டுகிறார்) பரிசோதிக்க வேண்டுகிறேன்.

எதிர் கட்சி வக்கீல்: கனம் நீதிபதி அவர்களே குற்ரவாளியை அம்ரிக்காவுக்கு அனுப்ப வேண்டாம். எனக்கு தெரிந்த ஸ்பெஷலிஸ்ட் அமிஞ்சிக்கரையில் இருக்கிறார். அவரைக் கொண்டு பரிசோதிக்க சொல்லலாம்.

குற்றவாளியின் வக்கீல் மீண்டும் குற்றவாளியின் காதில் ஏதோ கூறுகிறார்.

குற்றவாளி: அய்யா, நான் தப்பா சொல்லிட்டேன். எனக்கு பைபோலார் டிச்சார்டர் இல்லீங்க. எனக்கு ஏழாம் அறிவு திடீர்னு வந்து எதிராளி என்னை தாக்கப் போகிறார் என்றறிந்து தான் அவரை முன் காப்பாக தாக்கினேன்.

எதிர் கட்சி வக்கீல் குற்றவாளியிடம்: ஏழாம் அறிவு வந்ததுனு சொல்றீங்களே உங்க மூதாதையர்கள்ல யாராவது சீனாவுக்கு போனாங்களா. அவர்களோட பெயர் விவரங்களை கூற முடியுமா?

குற்றவாளி கைகளை பிசைகிறார். பின்: சீனாவுக்கு யாரும் போகலைங்க. எங்க முப்பாட்டன் மதுரைல புளியந்தோப்பு சண்டியர் ஞாபகம் வந்ததுங்க.

எதிர் கட்சி வக்கீல்: அட பன்னாடை, இது ஏழாம் அறிவு இல்லை. எப்போதும் உங்கிட்ட இருக்க வேண்டிய அறிவு. மை லார்ட், குற்றவாளி பொய் காரணங்களை கூறி தண்டைனியிலிருந்து தப்பிக்க முயல்கிறார். அவருக்கு தண்டனையை இன்னும் அதிகரித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குற்றவாளியின் வக்கீல் மறுபடியும் குற்றவாளியின் காதில் ஏதோ கூறுகிறார்.

குற்றவாளி: நீதிபதி அவர்களே. எனக்கு இப்பதான் ஞாபகம் வருது. எனக்கு ரொம்ப சின்ன ஞாபக சக்தி. இந்த கஜினி படத்தில சூர்யாவுக்கு ஏற்பட்ட மாதிரி. எதிராளி தான் என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினது அதான் அவரை தாக்கினேன்.

எதிர் கட்சி வக்கீல்: ஓ சின்ன ஞாபக சக்தியா? நீங்க சொன்னீங்களே கஜினி படம் அதில் சூர்யாவுக்கு ஜோடியா நடிச்சது யாருன்னு தெரியுமா?

குற்றவாளி சிரித்துக் கொண்டே: அது எப்படிங்க தெரியாம இருக்கும். சின்ன புள்ளை கிட்ட கேட்டா கூட சொல்லும் அது அசின்னு.

எதிர் கட்சி வக்கீல்: கனம் நீதிபதி அவர்களே இவர் சொன்னதிலிருந்தே இவருக்கு குறுகிய கால ஞாபக சக்தி என்று கிடையாது.

அவர் அப்படி சொல்லி முடிக்கவும் நீதிபதி தான் ஆர்டர் ஆர்டர் என்று சொல்லி தட்டும் மர சுத்தியை குற்றவாளியை நோக்கி வீசுகிறார். அனைவரும் அதிர்ச்சிக் குளளாகிறார்கள். நல்ல வேளை சுத்தி குறியை தப்பி விடுகிறது. ஏய் என்று கத்திக் கொண்டு முன்னேறும் நீதிபதியை காவலாளிகள் பிடித்து நிறுத்த வக்கீல்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து " அய்யாவுக்கு பைபோலார் டிஸ்ஸார்டர் வந்துடுச்சு. இப்ப வைத்தியம் பார்க்க அவரை அமெரிக்கவுக்கு தான் அனுப்பணும் என்று பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி தனக்குள் சிரித்துக் கொள்கிறார்.

meera
22-05-2012, 12:34 AM
:lachen001::lachen001::icon_b:

கீதம்
22-05-2012, 05:23 AM
வருங்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒர உளவியல் நோயின் பெயருடன்தான் உலாவுவோம் போலுள்ளது.

தண்டனையிலிருந்து தப்ப எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்? யோசனை கொடுக்கிறார்கள்?

மிதமான சிரிப்பையும் தீவிரமான சிந்தனையையும் தூண்டிப்போகும் அருமையான பதிவுக்கு பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

மதுரை மைந்தன்
22-05-2012, 12:27 PM
:lachen001::lachen001::icon_b:

நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
22-05-2012, 12:28 PM
வருங்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒர உளவியல் நோயின் பெயருடன்தான் உலாவுவோம் போலுள்ளது.

தண்டனையிலிருந்து தப்ப எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்? யோசனை கொடுக்கிறார்கள்?

மிதமான சிரிப்பையும் தீவிரமான சிந்தனையையும் தூண்டிப்போகும் அருமையான பதிவுக்கு பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

சரியாக சொன்னீர்கள். நன்றி சகோதரி!

ஆதி
22-05-2012, 12:44 PM
நன்று ஐயா வாழ்த்துக்கள் :D

vasikaran.g
26-05-2012, 12:02 PM
நகைச்சுவை ..
பலாப்பழம் !
விலாவில்
வலி ..