PDA

View Full Version : தன்னை மறந்து....நிறைவு பெற்றது



மதுரை மைந்தன்
21-05-2012, 12:56 PM
" நேரம் ஆயிண்டிருக்கு. விருந்தாளிகளை கூட்டிண்டு இவர் வந்துடுவார். சுரேஷ் கிரிக்கெட் விளையாடப் போனவன் இன்னும் காணோம். என்ன செய்வேன்? தேங்காய் இல்லாம சமையல் ஆகாது" படபடப்புடன் தன் கைகளை பிசைந்தாள் கமலா. சரி வேற வழி இல்லை என்று தீர்மானித்து பெரியவர் ராமனாதனிடம் சென்றாள்.

ராமனாதன் ரிடையர்ட் வங்கி அதிகாரி. மனைவியை இழந்து தனிக் கட்டையாக இருந்தவரின் ஒரே மகனான பிரசாத் தன்னுடன் வந்து இருக்கச் சொல்லி வற்புறுத்தினான். மருமகள் கமலாவும் அவரை வற்புறுத்தியதால் அவர்களுடன் தங்கி இருக்கிறார். பேரன் சுரேஷ் அவருடைய வாழ்வின் பெரும் பிடிப்பு.

" மாமா, சித்த இந்த பக்கத்து மார்க்கெட்டுக்கு போய் ஒரு தேங்காய் வாங்கிண்டு வறேளா? உங்களை சிரமப்படுதுறதுக்கு வருத்தமாயிருக்கு" என்றாள் கமலா.

" சிரமமா, என்னம்மா இப்படி சொல்லிட்டே. தேங்காய் தானே வாங்கிண்டு வரணும். ஒரு வாக் போற மாதிரி போய் உடனே வாங்கி வறேன்" என்று சொல்லி கிளம்பினார் ராமனாதன். அவர்கள் இருந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்கு அருகிலேயே ஒரு சூப்பர் மார்க்கெட் உண்டு அங்கு தான் சென்றார் அவர்.

தேங்காய் வந்ததும் அதை உடைத்து துருவி சமையலில் சேர்க்கலாம் அதற்கு முன் மீதி வேலைகளை முடிக்கலாம் என்று தீர்மானித்தாள் கமலா. அப்போது மாலை ஆறு மணியாகியிருந்தது. ஏழு மணிக்கு தான் பிரசாத் தனது ஆபீஸ் நண்பர்களில் புதிதாய் திருமணம் ஆன தம்பதிகளை அழைத்து வருவதாக சொல்லியிருந்தான்.

வேலை மும்முரத்தில் கடிகாரத்தில் மணியை பார்க்க முடியவில்லை கமலாவால். திடீரென்று கடிகாரத்தை பார்த்த அவளுக்கு மணி 6.45 என்று பார்த்தவுடன் தான் தேங்காய் வாங்க சென்ற மாமனார் இன்னும் வரவில்லை என்று உறைத்தது. பக்கத்து மார்க்கெட்டுக்கு போய் வர பத்து பதினந்து நிமிடங்கள், தேங்காய் வாங்க ஒரு பத்து நிமிடம் என்று வைத்துக் கொண்டால் அந்த நேரத்துக்கு அவர் திரும்பியிருக்கணுமே ஏன் லேட் ஆகிறது என்று கவலை அவளை தொற்றிக் கொண்டது. பிரசாத் வரும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்த்ததால் அவளுடைய படபடப்பு அதிகரித்தது. அந்த சமயத்தில் கையில் கிரிக்கெட் பாட்டை சுழற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்த சுரேஷிடம் " வாடா இப்பதான் வீட்டுக்கு வற வழி தெரிஞ்சுதா? உன்னோட தத்தாவை பக்கத்து மார்க்கெட்டுக்கு தேங்காய் வாங்க அனுப்பினேன். என்ன ஆச்சோ அவருக்கு. இன்னும் அவரை காணோம். நீ ஓடிப் போய் அவரை தேடு. அவரை பார்த்தீனா அவர் கையில இருக்கற தேங்காயை வேகமா ஓடி வந்து எங்கிட்ட குடு. சமையலை முடிக்கணும் எனக்கு" என்றாள் அவள்.

" போமா, எனக்கு ஒரே டயர்டா இருக்கு. தாத்தாவுக்கு எல்லாம் வற வழி தெரியும் இப்ப வந்துடுவார்" என்று தட்டி கழித்த சுரேஷை முறைத்து பார்த்த கமலா " சொன்ன பேச்சை கேக்கலைனா உனக்கு இன்னிக்கு சாப்பாடு கிடையாது" என்று கண்டித்தாள். அதைக் கேட்ட சுரேஷ் சலிப்புடன் " சரி சரி நான் போறேன். ஆனா என்னல ஓடியெல்லம் போக முடியாது. எவ்வளவு வேகமா போக முடியுமோ அவ்வளவு வேகமா போறேன்" என்று சொல்லி சென்றான்.

அவசர அவசரமாக தாளித்துக் கொட்ட வேண்டிய பதார்த்தங்களுக்கு தாளித்து விட்டு காஸ் அடுப்பை அணைத்து விட்டு தன்னை தயார் செய்து கொள்ள விரைந்தாள் கமலா. முகத்தை அலம்பி பொட்டு வைத்து சாரியை மாற்றி தலை வாரி பூ வைத்துக் கொள்ளவும் வாசல் காலிங் பெல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. மாமனார் தான் தேங்காய் வாங்கிக் கொண்டு வந்திருப்பர் என்று எண்ணிக் கொண்டே விரைந்து சென்று கதவை திறந்த அவளெதிரே பிரசாத் தனது ஆபீஸ் நாண்பன் அவனுடைய மனைவி சகிதம் நின்று கொண்டிருந்தான். அவர்களை வரவேற்று முன் பக்கத்து அறையிலிருந்த சோபாவில் அமர்த்தி விட்டு அவர்களுக்கு காபி கொண்டு வர சமையலறைக்கு விரைந்தாள் கமலா.

அவள் பின்னாலேயே வந்த பிரசாத் " என்ன சாப்பாடு ரெடியா? ஆமாம் எங்கே அப்பாவை காணோம்?" என்று கேட்டான்.

" சமையலுக்கு தேங்காய் வேணும்னு நான் தான் அவரை பக்கத்து மார்க்கெட்டுக்கு அனுப்பிச்சேன். போய் ஒரு மணி நேரத்துக்கு மேலாயிடுச்சு. சுரேஷை அனுப்பியிருக்கேன் போய் பார்த்துட்டு வர" என்று அவள் சொல்லவும் பிரசாத் வந்திருக்கும் விருந்தாளிகளையும் மறந்து " என்ன அவரை தனியா அனுப்பினயா? முண்டம் முண்டம் நான் எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன். இப்ப நான் எங்கே போய் அவரை தேடுவேன்?" என்று கத்தினான்.

அதே நேரத்தில் அங்கு மூச்சிறைக்க வந்த சுரேஷ் " பக்கத்து மார்க்கெட் புல்லா தேடி பார்த்தேன். தத்தாவை காணோம்" என்றதும் கமலாவுக்கு அதிர்ச்சியும் துக்கமும் சேர்ந்து அழத்தொடங்கினாள்.

" என்ன ஆச்சு பிரசாத் எனி ப்ராப்ளம்?" என்று அங்கு வந்து கேட்ட நண்பனிடம் " மை பாதர் இஸ் மிஸ்ஸிங். நான் இப்ப என்ன பண்ணுவேன்?" என்றான் பிரசாத்.

" ஏதாவது ஆக்ஸிடென்டில சிக்கியிருப்பாரோ? இல்லை யாராவது அவரை கடத்தியிருப்பாங்களோ" என்ற நண்பனிடம் " அப்படியெல்லாம் இருக்காது. அவருக்கு அல்ஜிமெர் வியாதி உண்டு". என்றான் பிரசாத்.

தொடரும்

jayanth
21-05-2012, 03:21 PM
அடுத்து என்ன நிகழப் போகின்றது என ஆவலுடன்...:fragend005::fragend005::fragend005::icon_rollout::icon_rollout:


தொடருங்கள்...

சிவா.ஜி
21-05-2012, 07:44 PM
ம்.....தொடருங்க....!!! எதிர்பார்ப்புடன்.

meera
22-05-2012, 12:59 AM
நல்ல தொடக்கம் அண்ணா. என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன்...... காத்திருக்கிறோம். தொடருங்கள்.:icon_b:

மதுரை மைந்தன்
22-05-2012, 12:02 PM
ம்.....தொடருங்க....!!! எதிர்பார்ப்புடன்.

நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
22-05-2012, 12:03 PM
நல்ல தொடக்கம் அண்ணா. என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன்...... காத்திருக்கிறோம். தொடருங்கள்.:icon_b:

நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
22-05-2012, 12:05 PM
" அல்ஜிமேர் வியாதி என்றால் என்ன?" பிரசாத்தின் நண்பன் கேட்ட கேள்விக்கு பிரசாத் " இது ஒரு மூளை சம்பந்தப்பட்ட வியாதி. இந்த வியாதி வருபவர்களுக்கு முதலில் குறைந்த காலத்திற்கு ஞாபக மறதி ஏற்படும். அச்சம்யம் அவர்களுக்கு தாங்கள் எங்கிருந்து வந்தோம் யார் நமது உறவினர்கள் என்பதெல்லாம் மறந்து விடும். ஞாபக சக்தி மீண்டும் திரும்ப வரலாம். ஆனால் நாளடைவில் அவர்கள் தனது முழு ஞாபக சக்தியையும் இழந்து தனக்குள் முடங்கி இறுதியில் பேச்சு நின்று இறந்து விடுவார்கள். இதற்கு மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வியாதி வந்தவர்களை அவர்களுடைய நெருங்கிய குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்தால் அவர்கள் நீன்ட நாட்கள் வாழமுடியும். என்னோட தந்தைக்கு இது ஆரம்ப கட்டம். கமலாவிட்ம் நான் இதை கூறாத்து தப்பா போயிடுச்சு.இப்ப அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும். திடீரென்று ஞாபக சக்தியை இழந்ததால் ஏதாவது பஸ்ஸிலோ ரயிலிலோ கூட பயணம் செய்திருக்க கூடும். தேங்காய் வாங்க அவர் தன் பர்ஸை எடுத்து போயிருப்பதால் அவர் கையில் கொஞ்சம் பணம் இருக்கும். அது தீர்ந்தவுடன் தான் அவருக்கு பிரச்சினை ஆரம்பிக்கும் " என்றான்.

" இப்ப நாம் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுப்போமா?" என்ற நண்பனிடம் " சாரி விருந்துக்கு வந்த உங்களை கவனிக்க முடியாமல் போய்விட்டது. நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அப்பாவோட போட்டைவை கொடுத்து கண்டுபிடிச்சு தர வேண்டப்போகிறேன். ப்ளீஸ் எஞ்சாய் யுவர்செல்ப். கமலா இவர்களுக்கு சாப்பாடு போடு. நான் வேகமா போய் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லி கிளம்பிய பிரசாத்திடம் கமலா " போற வழியில அப்ப்டியே ஒரு தேங்காய்" என்று சொல்லி முடிக்கும் முன்னால் பிரசாத் இடைமறித்து " என்ன இன்னமும் தேன்காயை நீ விடலையா?" என்றான். அதற்கு கமலா " நான் தேங்காயை வழியில் பிள்ளையாருக்கு விடல் போடுங்கோ மாமா சீக்கிரம் வீடு திரும்பணும்னு வேன்ட்டிண்டு" என்றாள். "சரி அப்படியே செய்யறேன்" என்று சொல்லி பிரசாத் தனது காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தான்.

அன்று மாலை ஆறு மணிக்கு தேங்காய் வாங்கி வர பக்கத்து சூப்பர் மார்க்கேட்டுக்குள் நுழைந்த ராமனாதன் திடீரென்று தலையில் ஒரு வலி ஏற்படவும் தலையை கையில் பிடித்துக் கொண்டு கண்களை மூடினார். சிறிது நேரம் கழித்து கண்களை திறந்த அவருக்கு தான் எங்கிருக்கிறோம் எப்படி அங்கே வந்தோம் என்றெல்லாம் நினைவுக்கு வராமல் ஸ்தம்பித்து சிலை போல் நின்றார். அப்போது அங்கே வந்த கோபாலனும் மீனாவும் ராமனாதனை பார்த்தவுடன் " சார் எப்படி இருக்கீங்க? நீங்க ரிடையர் ஆனதற்கப்புறம் இப்ப தான் பார்க்கிறோம்" என்றார்கள். இருவரும் ராமனாதன் பணியாற்றிய அதே வங்கியில் அவருடன் பணியாற்றியவர்கள். அவர்களுடைய வீடு நகரத்தின் மறு கோடியில் இருந்தாலும் மார்கெட்டுக்கு அருகிலிருந்த கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் சில சாமான்களை வாங்க மார்க்கெட்டுக்கு வந்தர்கள். அவர்களுடன் அவர்களுடைய மகன் ரவியையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். ரவிக்கு ஏழு வயது. பார்க்க துரு துரு வென்று இருந்தான். கோபாலன் மீனாவிடம் " சார் எனக்கு அப்பா மாதிரி. எனக்கு நல்ல அட்வைஸ் தருவார்" என்றதை கேட்ட ராமனாதனுக்கு லேசாக சில நினைவுகள் வந்தன. தனக்கு ஒரு மகன், மருமகள், பேரன் இருப்பது அவரது நினைவுக்கு வந்தாலும் அவர்கள் முகங்கள் நினைவுக்கு வரவில்லை.

"சார் எங்கே தங்கி இருக்கீங்க. வாங்க நான் என்னோட கார்ல ட்ராப் செய்யறேன்" என்று கோபாலன் சொன்னதும் அவருக்கு தான் எங்கே தங்கி இருந்தோம் என்று நினைவுக்கு வராமல் எங்கே போவது என்றும் தெரியாமல் " நான் உங்க கூட வறேன்" என்றார். கோபாலனுக்கு அவருக்கு ஒரு மகன் இருப்பது தெரிந்திருந்தாலும் அந்த மகன் என்கிருக்கிறார் என்ற விவரமெல்லாம் தெரியாது. அவன் அவரிடம் " சார் உங்க பையன் கூட இதே ஊர்ல தானே இருக்கிறார். அவருடைய விலாசம் சொல்லுங்க. நாங்க உங்களை அவரிடம் கூட்டி செல்கிறோம்" என்றான். விலாசம் எதுவும் நினைவுக்கு வராமல் பரிதாபமாக நின்ற ராம்னாதனிடம் அவன் " பரவாயில்லை. நீங்க எங்க கூட வந்து தங்குங்க. நாங்க உங்க பையன் விலாசத்தை கண்டுபிடிச்சு உங்களை அவரிடம் சேர்ப்பிக்கிறோம்" என்று சொன்னவுடன் சற்று நிம்மதி அடைந்த ராமனாதன் அவர்கள் பின் தொடர்ந்தார்.

தொடரும்

மதுரை மைந்தன்
22-05-2012, 12:06 PM
அடுத்து என்ன நிகழப் போகின்றது என ஆவலுடன்...:fragend005::fragend005::fragend005::icon_rollout::icon_rollout:


தொடருங்கள்...

நன்றி நண்பரே!

இராஜேஸ்வரன்
22-05-2012, 01:35 PM
விலாசம் எதுவும் நினைவுக்கு வராமல் பரிதாபமாக நின்ற ராம்னாதனிடம் அவன் " பரவாயில்லை. நீங்க எங்க கூட வந்து தங்குங்க. நாங்க உங்க பையன் விலாசத்தை கண்டுபிடிச்சு உங்களை அவரிடம் சேர்ப்பிக்கிறோம்" என்று சொன்னவுடன் சற்று நிம்மதி அடைந்த ராமனாதன் அவர்கள் பின் தொடர்ந்தார்.

நல்ல காலம். ராமனாதன் நினைவின்றி அலையாமல் தன்னுடன் வேலை செய்த கோபாலனுடன் போவது திருப்தியாக இருக்கிறது. கதை மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
22-05-2012, 07:31 PM
புதுரக வியாதியுடன் பெரியவர்....என்ன ஆனார்...எப்படி வீடு சேர்ந்தார்....புதுமையான கதைக்களத்துடன் தொடரும் கதை...ஆவலை அதிகரிக்கிறது. தொடருங்கள் நண்பரே.

மதுரை மைந்தன்
23-05-2012, 08:34 PM
நல்ல காலம். ராமனாதன் நினைவின்றி அலையாமல் தன்னுடன் வேலை செய்த கோபாலனுடன் போவது திருப்தியாக இருக்கிறது. கதை மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
23-05-2012, 08:35 PM
புதுரக வியாதியுடன் பெரியவர்....என்ன ஆனார்...எப்படி வீடு சேர்ந்தார்....புதுமையான கதைக்களத்துடன் தொடரும் கதை...ஆவலை அதிகரிக்கிறது. தொடருங்கள் நண்பரே.

நன்றி நண்பரே!

ஜானகி
24-05-2012, 01:31 AM
''டிமென்ஷியா''..என்பதுவும் இதுபோன்றதா ? அதற்கு மருந்து, நிவாரணம் உண்டா ?

மதுரை மைந்தன்
24-05-2012, 11:28 AM
''டிமென்ஷியா''..என்பதுவும் இதுபோன்றதா ? அதற்கு மருந்து, நிவாரணம் உண்டா ?

அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease) என்பதை வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். ‘முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய்’ எனலாம். இது பொதுவாக 65க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி, வழமையான வயது முதிர்வதின் தாக்கம் அல்ல.

இது படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்றது. ‘மூளை அசதி நோய்’ எனவும் சொல்கிறார்கள் அதுதான் அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease).

இது வரவர தீவிரமடைந்து செல்கிற நோய். மாற்ற முடியாதது. சிகிச்சைகளினால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியுமே அன்றி, முற்று முழுதாக நிறுத்த முடியாது

மதுரை மைந்தன்
24-05-2012, 11:57 AM
போலீஸ் ஸ்டெஷனுக்குள் நுழைந்த பிரஸாத் நேரே இன்ஸ்பெக்டரிடம் சென்று " சார் என்னோட அப்பாவை காணோம். கண்டுபிடிச்சு தரணும்" என்றான்.

" உங்க அப்பாவை எப்போதிலிருந்து காணோம்?"

" இன்னிக்கு சாயங்காலம் 6.00 மணிக்கு பக்கத்து மார்கேடுக்கு தேங்காய் வாங்க போனவர் இது வரை வீடு திரும்பலை."

" அவருக்கு எவ்வள்வு வயசிருக்கும்"

" வயசு 70 ஆகறது".

அதைக்கேட்டதும் சத்தமாக சிரித்து " இந்த க்ரேஸி மோகன் ட்ராமால சொல்ற மாதிரி 70 வயசு பெரியவர் நடக்கறதே கஷ்டமாச்சே ஏன் வீட்டை விட்டு ஓடிப்போனார்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

" சார், நாங்க வயசானவர் அல்ஜிமேர் வியாதியில் ஞாபக மறதி நோய் வந்து எங்கே போயிருக்கிறாரோனு கவலையா இருக்கோம் நீங்க தமாஷ் பண்றீங்களே".என்றான் பிரஸாத்.

" சாரி மிஸ்டர். உங்க அப்பா காணோமப் போன விவரத்தை ஒரு பேப்பர்ல எழுதி பெட்டிஷன் கொடுங்க. அதோட அவர் போட்டோவும் இருந்தா நாங்க கண்டுபிடிக்கறதுக்கு ஏதுவா இருக்கும். ம்... என்ன சொன்னீங்க அவருக்கு ஞாபக மறதி வியாதியா? அப்போ அவர் உங்க வீட்டு விலாசத்தை மறந்து எங்கேயாவது சுத்திக்கிட்டிருப்பார். உங்க பெட்டிஷனையும் போட்டோவையும் காப்பி எடுத்து எல்லா போலீஸ் ஸ்டெஷன்களுக்கும் அனுப்பறோம். தகவல் கிடைச்சவுடனே உங்களுக்கு தெரிவிக்கறோம். பெட்டிஷன்ல உங்க விலாசம், போன் நம்பர் எல்லாம் குடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.

அவர் கிட்டயே ஒரு காகிதம் வாங்கி பெட்டிஷன் எழுதி ராமனாதனின் போட்டோவையும் இணைத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினான் பிரஸாத்.

ராமனாதனை அழைத்துக் கொண்டு தங்கள் வீடு திரும்பிய கோபாலனும் மீனாவும் அவருக்கு தங்களுடைய கெஸ்ட் ரூமை ஒழுங்கு படுத்தி கொடுத்தார்கள். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த ராமனாதனிடம் தங்கள் மகன் ரவியை அழைது சென்று அறிமுகப் படுத்தினார்கள். " ரவி, இவரும் உனக்கு ஒரு தத்தா தான்" என்ற கோபாலனிடம் ரவி "பெங்களூர் தத்தா மாதிரியா?" என்று கேட்டான். மீனாவின் பெற்றோர்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள்.

ஹாலில் ராமனாதனையும் ரவியையும் விட்டு விட்டு உள்ளே சென்றவுடன் கோபாலனிடம் மீனா " ஏன்னா, இவரை இங்கே கூட்டிக் கொண்டு வந்திருக்கிறோம். இவரோ வயசானவர். இவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுனா நாம் என்ன பண்ணறது?" என்றாள்.

" அதைப் பத்தி இப்ப கவலைப்பட வேண்டாம். மிஸ்டர் ராமனாதன் ஹெல்தியாகத்தான் தெரிகிறார். உங்க அப்பா அம்மா அமெரிக்காவுக்கு உன்னோட தங்கை பிரசவத்துக்கு கிளம்பி போனதுக்கப்புறம் ரவியை பார்த்துகறதுக்கு நல்ல பேபி ஸிட்டர் கிடைக்கற வரைக்கும் இவர் இங்கே இருக்கறது நல்லது. எப்போ அவரோட பையன் அவரை தேடிண்டு வராறோ அப்போ அவரை அனுப்பிச்சிடுவோம்." என்று மீனாவை சமாதனப்படுத்தினான் கோபாலன்.

ஹாலில் எதிர் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த ராமனதனும் ரவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

" தாத்தா உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா?" என்று கேட்டான் ரவி.

ராமனாதன் கல்லூரி நாட்களில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். பின்ன்னால் வங்கியில் பணியாற்றிய போது வங்கியின் டீமில் விளையாடி இருக்கிறார். டி.வி.யில் ஒரு மாட்ச் விடாமல் பார்ப்பார். ஆனால் தற்சமயம் ஞாபக மறதி நோயில் வாடும் அவர் ரவியிடம் "கிரிக்கெட்டா அப்படினா?" என்று கேட்டவுடன் ரவியின் முகம் வாடி விட்டது.

" என்ன நீங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ஆயிட்டீங்களா?" என்று கேட்டுக் கொண்டு அங்கு வந்த கோபாலனிடம்
ரவி " இந்த தத்தாவை எனக்கு பிடிக்கலை. எனக்கு பெங்களூர் தாத்தா தான் வேணும்" என்றான்.

தொடரும்

மதுரை மைந்தன்
04-06-2012, 11:41 AM
" இந்த தாத்தாவை பிடிக்கலை. எனக்கு பெங்களூர் தாத்தா தான் வேண்டும்" என்று ரவி சொன்னவுடன், கோபாலன் 'ஏன் அப்படி சொல்றே?" என்றான்.

" இந்த தாத்தாவுக்கு கிரிக்கெட் தெரியலை" என்று ரவி சொன்னவுடன் கோபாலனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது.

" சார் நீங்க கிரிக்கெட் வீரராச்சே. நம்ம பாங்க் டீமுக்கு காப்டனாக கூட இருந்திருக்கீங்களே" என்று சொன்ன கோபாலனை ஒன்றும் புரியாமல் பார்த்தார் ராமனாதன்.

கோபாலனுக்கு குழப்பமாக இருந்தது. அவன் ராமனாதனுக்கு நினைவு மறதி நோய் வந்திருக்கும் என்று தீர்மானித்தான். அதான் சூப்பர் மார்க்கெட்டில பேந்த பேந்த முழிச்சுண்டு நின்றிருந்தார் என்று உணர்ந்தான்.

ரவியை தனியாக அழைத்து போய் " ரவி, இந்த தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் ஒண்ணும் பேசாம இருக்கார். உனக்கு எப்படி பெங்களூர் தாத்தாவை பிடிக்குமோ அதே மாதிரி இவரை எனாகு பிடிக்கும். இவர் எங்க அப்பா மாதிரி. எனாகு அப்பான்னா அப்போ உனக்கு இன்னோரு தாத்தா. நீ தான் அவரை கவனமா பாத்துக்கணும். அவருக்கு கிரிக்கெட் நல்லா விளையாட தெரியும். நாளைக்கு உன்னோடு நிச்சயம் விளையாடுவார். இப்போ போய் அவரோடு பிரண்டா இரு" என்றான்.

தனது சோபாவுக்கு திரும்பிய எதிரில் அமர்ந்திருந்த ராமனாதனை பார்த்து மெல்ல சிரித்தான். அவர் அதற்கு ஒன்றும் பதிலுக்கு சிரிக்காதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

" வாங்க சார், டின்னர் ரெடி" என்று மீனா அழைத்ததும் ராமனாதன் டைனிங் டாபிளில் அமர்ந்து அமைதியாக சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடிந்தவுடன் கோபாலனிடம் அவர் தயங்கி தயங்கி " நான் ரவி கூட அவனோட அரையில் படுத்துக் கொள்கிறேன். எனக்கு தனியா இருக்க பயமாக இருக்கு" என்று சொன்னவுடன் கோபாலனுக்கும் மீனாவுக்கும் ஆச்சரியமாக போயிற்று.

" அதனாலென்ன சார், ரவியோட அறையில் ஒரு ஸ்பேர் படுக்கை இருக்கு. நீங்க அதில படுத்துக்கலாம்" என்றான் கோபாலன்.

ரவியின் அறைக்கு படுக்க சென்ற ராமனாதன் அங்கு மேசையில் இருந்த காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து பார்த்தார்.

ரவி அவரிடம் "தாத்தா உங்களுக்கு கதை சொல்ல தெரியுமா? பெங்களூர் தாத்தா எனக்கு படுக்க போகறதுக்கு முன்னாலா ஒரு கதை தினம் சொல்வார்" என்று கூறிவிட்டு அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.

ஆவலாக ரவி கதை கேட்டதும் ராமனாதன் தன் கையிலிருந்த காமிக்ஸ் கதையை அவனுக்கு படித்து சொன்னார்.

" வேட்டையாட வந்த துஷ்யந்தன், காட்டிலே விளையாடிக் கொண்டிருந்த சகுந்தலையை கண்டு காமவசமாகி, அங்கேயே அவளைக் கந்தர்வ மணம் செய்துகொள்கிறான். அடையாளமாக ஒரு மோதிரமும் தருகிறான். அவ்வளவு அவசரமாக மணம் செய்தவன் உடனே அவளை அரண்மனைக்கு அழைத்துப் போவதுதானே. இல்லை. ஓர் அரசிக்குரிய மரியாதைகள் தந்து தன் பரிவாரங்களுடன் வந்து அழைத்துப் போவதாக சொல்லி தப்பிவிடுகிறான்.

ராஜ்ஜியத்துக்கு திரும்பியதும் சகுந்தலையை மறந்துவிடுகிறான் துஷ்யந்தன். சகுந்தலை அரண்மனைக்கு வந்து முறையிட்டபோது அவளை முற்றாக மறுத்து உதாசீனம் செய்கிறான். பிறகு அரசன் கொடுத்த மோதிரத்தை மீனவன் கண்டு பிடித்ததும் ஞாபகம் மீண்டு சகுந்தலையை திருப்பி ஏற்றுக்கொள்கிறான்".

கதையை ரவிக்கு சொல்லும் போதே ராமனதனுக்கு தானும் தன்னுடைய மனைவியை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தார். அவரால் முடியவில்லை. ஆனால் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று சற்று ஞாபகம் வந்தது. அது கோபாலானா என்று அவருக்கு நிச்சயமாக ஞாபகம் வரவில்லை. மனைவி இல்லாமல் மகன் எப்படி வந்திருப்பான் என்று யோசிக்க ஆரம்பித்தார். பல வாறு முயற்சித்தும் மனைவியின் ஞாபகம் வராமல் களைத்து போய் நித்திரையில் ஆழ்ந்தார்.

தொடரும்

கீதம்
06-06-2012, 03:07 AM
அல்ஜைமரால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய திரைப்படமொன்று என்னை மிகவும் பாதித்தது. அதன் விளைவாய்தான் மறதி (http://www.tamilmantram.com/vb/showthread.php/20690-மறதி?highlight=) என்றொரு கவிதையை எழுதி மன்றத்தில் பதித்தேன்.

இந்தக்கதையில் வரும் பெரியவரைப் போல எத்தனையோ பேர் இப்படி மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதியவர்கள் பெரிதும் இன்பம் காணுவது தங்களுடைய இளவயது நினைவுகளை எண்ணிப் பார்ப்பதிலும் பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளுவதிலும்தான். ஆனால் அப்படி எதுவுமே நினைவுக்கு வராமல் படுத்தும்போது அவர்களுடைய நிலையை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. நெஞ்சு கொள்ளாத சோகம்தான் மிகுகிறது. நாளை நமக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாதே என்னும் பதைப்பும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நல்லவேளையாக, பெரியவர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடம் அடைக்கலமாகியுள்ளார். இல்லையெனில் அவர் நிலை?

வயதானவர்களை பாதிக்கும் உளம் மற்றும் மூளை சார்ந்த பிரச்சனையைக் கையிலெடுத்திருப்பதன் மூலம் அனைவரையும் அறியச் செய்யும் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடரும் பகுதிகளுக்காய் காத்திருக்கிறேன்.

மதுரை மைந்தன்
06-06-2012, 09:44 AM
அல்ஜைமரால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய திரைப்படமொன்று என்னை மிகவும் பாதித்தது. அதன் விளைவாய்தான் மறதி (http://www.tamilmantram.com/vb/showthread.php/20690-மறதி?highlight=) என்றொரு கவிதையை எழுதி மன்றத்தில் பதித்தேன்.

இந்தக்கதையில் வரும் பெரியவரைப் போல எத்தனையோ பேர் இப்படி மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதியவர்கள் பெரிதும் இன்பம் காணுவது தங்களுடைய இளவயது நினைவுகளை எண்ணிப் பார்ப்பதிலும் பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளுவதிலும்தான். ஆனால் அப்படி எதுவுமே நினைவுக்கு வராமல் படுத்தும்போது அவர்களுடைய நிலையை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. நெஞ்சு கொள்ளாத சோகம்தான் மிகுகிறது. நாளை நமக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாதே என்னும் பதைப்பும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நல்லவேளையாக, பெரியவர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடம் அடைக்கலமாகியுள்ளார். இல்லையெனில் அவர் நிலை?

வயதானவர்களை பாதிக்கும் உளம் மற்றும் மூளை சார்ந்த பிரச்சனையைக் கையிலெடுத்திருப்பதன் மூலம் அனைவரையும் அறியச் செய்யும் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடரும் பகுதிகளுக்காய் காத்திருக்கிறேன்.

உங்களுடைய பொன்னான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி!

கீதம்
03-07-2012, 01:31 AM
இந்தக் கதையின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம் மதுரை மைந்தன் அண்ணா.

sarcharan
03-07-2012, 06:56 AM
அண்ணே, எங்களுக்கு இந்தக்கதை மறந்துபோறதுக்கு முன்னாடி அடுத்த இன்னிங்க்ஸை சீக்கிரம் தொடங்குங்க...

மதுரை மைந்தன்
03-07-2012, 11:41 AM
ரவிக்கு படுக்குமுன் கதைகள் சொல்வது ராமனாதனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை தந்தது. சிறிது சிறிதாக அவருக்கு கிரிக்கெட் பற்றிய நினைவுகள் வரத் தொடங்கியன. ரவியுடன் சேர்ந்து தோட்டத்தில் விளையாட ஆரம்பித்தார். ரவியின் உற்சாகத்திற்கு அளவே இல்லை. "எனக்கு இந்த தாத்தாவைத் தான் பிடிக்கும்" என்று கோபாலனிடம் அவன் சொல்லுமளவுக்கு அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டது.

அன்றும் வழக்கம் போல் கோபாலனும் மீனாவும் வங்கிக்கு சென்ற பின் ராமனாதன் சிறிது தள்ளாடிய வண்ணம் வந்து சோபாவில் அம்ர்ந்தார். அது வரை டி.வி பார்த்துக் கொண்டிருந்த ரவி அவரைக் கண்டதும் துள்ளி எழுந்து வாங்க தாத்தா கிரிக்கெட் விளையாடலாம் என்று அவர் கையைப் பிடித்து எழுப்பியவன் " தாத்தா உங்க கை ஏன் இவ்வளவு சூடா இருக்கு?" என்று கேட்டு விட்டு அவர் நெற்றியில் கை வைத்து பார்த்தான். " தாத்தா உங்களுக்கு ஜூரமா?" என்று கேட்டான். ராமனாதன் பதில் பேசாமல் கண்ணை மூடிக் கொண்டார். அவரிடமிருந்து முனகல் சத்தம் வேறு வந்தது.

ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் வங்கிக்கு போன் செய்து கோபாலனிடம் விஷயத்தை சொன்னான். " அப்பா தத்தாவுக்கு ஒரே ஜூரம். உடம்பு கொதிக்குது. உடனே வாங்க" என்றான். கோபாலன் அவனிடம் " ரவி எனக்கு வங்கியில் நிறைய வேலை இருக்கு. உங்க அம்மவும் பிஸி. நீ படுக்கை அறையில் டேபிள் டிராயர்ல மாத்திரைகள் இருக்கும். அதில் மெடாஸின்னு எழுதியிருக்கும். தாத்தாவுக்கு ஒரு மாத்திரை பொடுத்து அவரை படுத்துக்க சொல்லு. அப்புறம் ஒரு கர்சீபை தண்ணீல நனைச்சு தாத்தாவோட நெத்தில வைச்சு ஒத்தடம் கொடு. நான் ஒரு மணி நேரம் கழிச்சு டாக்டரை அழைச்சிண்டு வறேன்" என்றான். "சரிப்பா" என்று சொல்லி ரவி படுக்கை அறைக்கு தத்தாவை கையை பிடித்து அழைத்து போய் மாத்திரை கொடுத்து அவரை படுத்துக் கொள்ள சொன்னான். கோபாலன் சொன்ன மாதிரி கர்சீப்பை தண்ணீரில் நனைத்து ராமனாதனின் நெற்றியில் வைத்தான். அவரின் முனகல் நின்று அமைதியாக தூங்குவதை பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ராமனாதன் அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ரவி அப்படியே தூங்கி விட்டான். திடீரென்று " என்ன ரவி தூங்கிட்டயா?" என்று கேட்டுக் கொண்டு நின்றிருந்த கோபாலனை பார்த்து கண்ணை முழித்தான் ரவி. கோபாலன் அவர்களுடைய பாமிலி டாகடர் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வந்திருந்தான். டாகடரிடம் " இவர் எங்க வங்கியின் முன்னாள் மானேஜர் ராமனாதன். இவருக்கு காய்ச்சல்னு ரவி போன் பண்ணினான்." என்றவுடன் கிருஷ்ண மூர்த்தி படுத்திருந்த ராமனாதனின் கை நாடியை பிடித்து பல்ஸ்களை செக் உப் செய்தார். பிறகு ஸ்டெதெஸ்கோப்பை வைத்து அவரின் உடம்பை பரி சோதித்தார். பிறகு " இது ஒரு இன்ஃபெக்ஷன். நான் மாத்திரைகள் எழுதி தறேன். தினம் மூணு வேளை ஒவ்வொரு மாத்திரைகளை கொடுங்கள். ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும்" என்றவர் " உங்க முன்னாள் மானேஜர் உங்க வீட்டுக்கு எப்படி வந்தார்?" என்று கேட்டார். கோபாலன் ராமனாதன் தனியாக மார்கெட்டில் நின்று கொண்டிருந்ததையும் அவர் தான் எங்கே தங்கியிருக்கோம் என்று தெரியாமல் முழித்ததையும் அவரை தங்களுடன் அழைத்து வந்ததையும் விவரித்தான்.

கோபாலன் கூறியதைக் கேட்ட டாக்டர் " ஓ இவருக்கு அல்ஜிமேர் வியாதி வந்திருக்கு. வயதாக, வயதாக மூளையின் பரப்பில் பீடா அமிலாய்ட் எனும் வேதிமம் படிகிறது. இது ஞாபக சக்தியைக் குறைக்கிறது. Alzheimer's disease எனும் வியாதிக்கு மிக முக்கிய காரணம் "neurofibrillary tangles" எனு முடிச்சுகள் மூளையில் விழுவதாகும். " என்று விளக்கினார். " இந்த வியாதிக்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுபிடிக்கலை. தானாக அவருக்கு ஞாபகங்கள் வந்தால் அதிசயம் தான்" என்று சொல்லி கிளம்பினார்.

மறு நாள் டாக்டர் கோபாலனுக்கு போன் பண்ணி " இன்னிக்கு பேப்பரை பார்த்தியா? உங்க முன்னாள் மானேஜரோட பையன் அப்பாவை காணோம்னு விளம்பரம் கொடுத்திருக்கிறார்" என்றார்.

தொடரும்

கீதம்
03-07-2012, 10:49 PM
அப்பாடா! ஒருவழியாய் பெரியவரை அவரது மகனிடம் ஒப்படைக்க வழி தெரிந்துவிட்டது. ஆனாலும் மனதுக்குள் சிறு உறுத்தல். தந்தைக்கு மகனை அடையாளம் தெரியுமா? இல்லையெனில் மகனின் நிலை? கதையின் போக்கோடு நோயின் தன்மை குறித்தும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அறிவுறுத்துவது வரவேற்கத் தக்கது. எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, உடனே தொடர்வதற்கு நன்றி அண்ணா.

மதுரை மைந்தன்
16-07-2012, 09:52 AM
அப்பாடா! ஒருவழியாய் பெரியவரை அவரது மகனிடம் ஒப்படைக்க வழி தெரிந்துவிட்டது. ஆனாலும் மனதுக்குள் சிறு உறுத்தல். தந்தைக்கு மகனை அடையாளம் தெரியுமா? இல்லையெனில் மகனின் நிலை? கதையின் போக்கோடு நோயின் தன்மை குறித்தும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அறிவுறுத்துவது வரவேற்கத் தக்கது. எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, உடனே தொடர்வதற்கு நன்றி அண்ணா.

நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
17-07-2012, 10:35 AM
ராமனாதனின் மகன் பிரசாத் பேப்பரில் கொடுத்திருந்த விளம்பரத்தை ப்ற்றி கோபாலனிடம் கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார். " பெரியவருக்கு அல்ஜிமேர் வியாதி கொஞ்சம் மைல்ட் ஆகத் தான் வந்திருப்பது போல தெரிகிறது. இந்த ஸ்டேஜ்ல குறுகிய கால அல்லது சமீபத்திய நினைவுகள் நின்று போயிருக்கும். அவர் கொஞ்ச நாள் முன்னால தான் மகனோட தங்கியிருந்துருப்பார். அதான் மகனோட வீட்டு விலாகம் அவருக்கு மறந்திருக்க வேண்டும். ஆனால் பழைய நினைவுகள் அப்படியே இருக்கும். அதனால அவருக்கு தனக்கு ஒரு மகன், மருமகள், பேரன் இருப்பது நினைவிருந்திருக்கும். ஆனால் அவர்களோட முகங்கள் நினைவுக்கு வராது. அவரோட அதிர்ஷ்டம் அவரோட மகன், மகள் பேரன் மாதிரி நீங்கள் மூவரும் இருப்பதால் அவருக்கு குணமடைய வாய்ப்புகள் அதிகம். இந்த வியாதிக்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவருக்கு தனது பழைய விருப்பு வெறுப்புகள் கூட நினைவிருந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் பழையபடி அவர் ஈடுபாடு செலுத்துவதாக ரவியிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். இப்ப நீ என்ன பண்னப் போகிறாய்?".

கோபாலன் அவரிடம் " ரவியின் பள்ளி விடுமுறை முடிய ஒரு வாரம் இருக்கிறது. பெரியவர் வீட்டிலிருப்பது எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. ரவியை தனியே வீட்டில் இருக்க முடியாது. அவனை ஏதாவது காபாகத்தில் தான் சேர்க்க வேண்டும் என்றிருந்தோம். பள்ளி துவங்கிய பிறகு அவனை நாங்களே வங்கியிலிருந்து வரும்போது அழைத்து வருவோம். "

" சரி தான் உங்களோட சுய நலத்துக்காக பெரியவரை அவரோட மக்னிடமிருந்து பிரிக்க கூடாது" என்று சொன்னார் டாக்டர்.

" நோ நோ சுய நலம் அப்ப்டியில்லை. மார்க்கெட்டில் எங்கு போவதுனு தெரியாம பரிதாபமா நின்றிருந்த அவரை என்னுடைய தந்தை மாதிரியானவரை நாங்கள் எங்கள் வீட்டிற்கு அழைத்து வரவில்லையானால் அவர் எங்கே சென்றிருப்பாரோ என்ன ஆகியிருக்குமோ அவருக்கு" என்றான் கோபாலன்.

" அதான் சொன்னேனே பெரியவருக்கு உங்களை பார்த்தது அதிர்ஷ்டம். ஆனா இந்த ஒரு வாரம் முடியும் போது அவரோட மகனை போனில் கூப்பீட்டு விஷயத்தை சொல்லி அவரோட அனுப்பறது தான் உங்க கடமை. ஒரு விஷயம் முக்கியமா நான் சொல்லணும். அவரோட மகன், மருமகள், பேரன் வரும்போது அவர் கிட்ட இந்த வியாதியைப் பற்றி பேசாமல் இருப்பது அவருக்கு நல்லது. அவரை நார்மலா ட்ரீட் பண்ணனும். அவர் ஏதோ உங்களை பார்த்துட்டு போக வந்த மாதிரி சொல்லணும். அவர்கிட்ட அவருக்கு பிடித்த விஷயங்களை பேசணும். இன்னும் ஒரு வேண்டுகோள். எப்படியாவது இன்னியிலிருந்து அவரை மெடிடேஷன் பண்ண வை. மெடிடேஷன் மூளைக்கு ஓய்வு கொடுத்து இந்த வியாதியின் மூலமாக பழுதடைந்திருக்கும் மூளையின் செல்களை புதிப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி செய்தால் அவர் பழைய நிலைக்கு கூட திரும்ப முடியும்" என்றார் டாக்டர்.

" சரி சார் அப்படியே பண்றேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை" என்றான் கோபாலன்.

டாக்டர் சொன்ன மாதிரி ராமனாதனிடம் பக்குவமாக மெடிடேஷனைப் ப்ற்றி சொல்லி அவருடன் அமர்ந்து தானும் செய்தான் கோபாலன். அந்த வாரக் கடைசியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாத்திற்கு போன் செய்து ராமனாதன் தங்களுடன் தான் இருக்கிறார் என்றும் அவருடன் எப்படி நடந்து கொள்ல வேண்டும் என்று டாக்டர் கூறிய அறிவுரைகளையும் கூறினான்.

ஞாயிற்றுக்கிழமை பிரசாத், கமலா, சுரேஷ் ஆகியோர் கோபாலன் வீட்டிற்கு வந்தார்கள். அனைவரும் முன் அறையில் சோபாவில் ராமனாதனை சுற்றி அமர்ந்துகொண்டு சகஜமாக உரையாடினார்கள். கோபாலனும் பிரசாத்தும் ஐபிஎல் மாட்ச்சுகளைப் பற்றி விவாதித்தார்கள். சுரேஷும், ரவியும் படுக்கை அறைக்கு சென்று அங்கு டிவியில் காமிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அனைவரும் மதிய உணவு சாப்பிட்டார்கள். உண்வுண்டு சிறிது நேரம் கழித்து
பிரசாத் ராமனாதனிடம் " அப்பா நாம் வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்டான். அதுவரை ஒன்றும் பேசாமல் இருந்த ராமனாதன் " கமலா, சமையலுக்கு தேங்காய் வேணும்னு கேட்டயே இவங்க வீட்டு தோட்டத்தில ஒரு தென்னை மரம் இருக்கு. அதிலிருந்து ஒரு காயை நாம் எடுத்துக்கலாமே" என்றவுடன் அனைவரும் மகிழ்ச்சியில் கை தட்டினார்கள். கமலாவுக்கும் பிரசாத்துக்கும் அவருக்கு பழைய நினைவுகள் திரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியானார்கள்.

ராமனாதன் பிரசாத் கமலாவுடன் கிளம்பினார். அதுவரை பேசாமல் இருந்த ரவி " தாத்தா இங்கே தான் இருக்கணும். எனக்கு இந்த தாத்தா வேணும்" என்று அழ ஆரம்பித்தான்.

" ரவி இப்படி அழக்கூடாது. தாத்தா அடிக்கடி நம்ம வீட்டுக்கு வருவார். அவரை சந்தோஷமா வழியனுப்பு" என்று கரகரத்த குரலில் கூறினான் கோபாலன்.

ரவியின் அருகில் வந்த ராமனாதன் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து " நீ சமத்து பையனாச்சே. நல்லா படி. நிறைய கிரிக்கெட் விளையாடு. நான் ஞாயிற்றுக்கிழமை தோறும் கட்டாயம் வருவேன்" என்று சொல்ல ரவி கண்ணீரை துடைத்துக் கொண்டு டாடா என்று கையசைத்தான்.

முற்றும்

மதுரை மைந்தன்
17-07-2012, 11:10 AM
http://img827.imageshack.us/img827/8973/aljimer.jpg (http://imageshack.us/photo/my-images/827/aljimer.jpg/)

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல* மனித மூளையின் செயல்பாடுகளை எட்டு பகுதிகளாக பிரிக்கலாம். கதையில் வரும் பெரியவருக்கு உண்டான முதல் கட்ட வியாதியில் குறுகிய கால நினைவுகள் அல்லது சமீபத்திய நினைவுகள் விட்டு போகும். மீதியிருக்கும் ஏழு (கறுப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள) செயல் பாடுகள் மூலம் அவரை கவனித்துக் கொள்பவர்களின் துணையுடன் அவருக்கு அந்த குறுகிய கால நினைவுகள் திரும்ப பெற முடியும் என்பதை கதையின் வாயிலாக அறியலாம். வியாதி முற்றும்பொழுது சிறிது சிறிதாக அனைத்து செயல் பாடுகளையும் இழந்து இறுதியில் நோயாளி மரணமடையக்கூடும்.

ராஜா
17-07-2012, 05:22 PM
அறிவியல் அடிப்படையிலான தொடருக்கு நன்றி மதுரையண்ணா..!

கீதம்
18-07-2012, 12:36 AM
மனம் தொட்ட கதை. இந்தக் கதையில் வரும் பெரியவரைப்போல் எத்தனை முதியவர்கள் தங்கள் இறுதிநாட்களை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டுணர இயலா நிலையில் கடத்துகிறார்களோ? சொன்ன செய்தியையே திரும்பத் திரும்ப சொல்வதும் இந்த வகையில் சேருமோ? முதியவர்களுக்கு உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் பாதிப்புகள் வருமென்பதைப் புரிந்துகொண்டு, சுற்றத்தாரும் சுற்றியிருப்போரும் ஆறுதலாய் செயல்பட்டால், அவர்களை முழுமையாக மீட்க முடியாவிட்டாலும், குற்றவுணர்வு உண்டாகாமலாவது காப்பாற்றலாம். நல்ல மனிதர்களால் பின்னப்பட்ட சமுதாயத்தில் நல்லதே நடக்கும் என்னும் அருமையான கதைக்கும், அல்ஜைமர் நோய் பற்றிய அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து அறியச் செய்தமைக்கும் மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

jayanth
18-07-2012, 03:23 AM
மனதைக் கனக்க வைத்து பின் லேசாக்கிய கதை. அருமையான ஒரு கதைக்கு நன்றி மைந்தன்...!!!

கலைவேந்தன்
18-07-2012, 05:44 AM
அல்ஜிமெர் வியாதியைப் பற்றியும் அதன் விளைவுகளைப்பற்றியும் அறியச்செய்த அருமையான படைப்புக்கு நன்றி இலமூரியன்.

மதுரை மைந்தன்
18-07-2012, 10:47 AM
அறிவியல் அடிப்படையிலான தொடருக்கு நன்றி மதுரையண்ணா..!

நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றத்தில் உங்களுடைய அன்பான பின்னூட்டம் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி ராஜா அய்யா!

மதுரை மைந்தன்
18-07-2012, 10:51 AM
மனம் தொட்ட கதை. இந்தக் கதையில் வரும் பெரியவரைப்போல் எத்தனை முதியவர்கள் தங்கள் இறுதிநாட்களை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டுணர இயலா நிலையில் கடத்துகிறார்களோ? சொன்ன செய்தியையே திரும்பத் திரும்ப சொல்வதும் இந்த வகையில் சேருமோ? முதியவர்களுக்கு உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் பாதிப்புகள் வருமென்பதைப் புரிந்துகொண்டு, சுற்றத்தாரும் சுற்றியிருப்போரும் ஆறுதலாய் செயல்பட்டால், அவர்களை முழுமையாக மீட்க முடியாவிட்டாலும், குற்றவுணர்வு உண்டாகாமலாவது காப்பாற்றலாம். நல்ல மனிதர்களால் பின்னப்பட்ட சமுதாயத்தில் நல்லதே நடக்கும் என்னும் அருமையான கதைக்கும், அல்ஜைமர் நோய் பற்றிய அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து அறியச் செய்தமைக்கும் மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

அல்ஜிமேர் வியாதி பற்றி நீங்கள் அறிந்திருந்தும் கதையை பாராட்டி பின்னூட்டங்கள் தவறாமல் இட்டு என்னை தொடர்ந்து உற்சாகப் படுத்தி வந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
18-07-2012, 10:52 AM
மனதைக் கனக்க வைத்து பின் லேசாக்கிய கதை. அருமையான ஒரு கதைக்கு நன்றி மைந்தன்...!!!

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
18-07-2012, 10:54 AM
அல்ஜிமெர் வியாதியைப் பற்றியும் அதன் விளைவுகளைப்பற்றியும் அறியச்செய்த அருமையான படைப்புக்கு நன்றி இலமூரியன்.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கலைவேந்தரே!. என் பெயரை மாற்றிவிட்டீர்கள். தமிழ் மன்றத்தில் எனது பெயர் மதுரை மைந்தன்.

சுகந்தப்ரீதன்
19-07-2012, 08:49 PM
அல்ஜிமர் வியாதியைபற்றி உங்கள் கதையின்மூலமாக இப்போதுதான் நான் அறிகிறேன்..!!

வாசகனை திருப்திபடுத்தும் வகையில் கதையில் உணர்வுகளோடு அறிவியல் தகவல்களையும் ஒன்றச்செய்து, வாசிப்பவனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் உங்கள் எழுத்துக்கள் என்றுமே போற்றத்தக்கவை மதுரையண்ணா..!!

தொடர்ந்து தொடரில் கலக்குங்கண்ணா..!!:icon_b:

மதுரை மைந்தன்
19-07-2012, 09:18 PM
அல்ஜிமர் வியாதியைபற்றி உங்கள் கதையின்மூலமாக இப்போதுதான் நான் அறிகிறேன்..!!

வாசகனை திருப்திபடுத்தும் வகையில் கதையில் உணர்வுகளோடு அறிவியல் தகவல்களையும் ஒன்றச்செய்து, வாசிப்பவனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் உங்கள் எழுத்துக்கள் என்றுமே போற்றத்தக்கவை மதுரையண்ணா..!!

தொடர்ந்து தொடரில் கலக்குங்கண்ணா..!!:icon_b:

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!