PDA

View Full Version : ஏந்த்திகெனி - 4 - தொடர்ச்சி 1



சொ.ஞானசம்பந்தன்
21-05-2012, 06:16 AM
(கிரியனின் பேச்சு தொடர்கிறது )

ஆதலால் மகனே , எதிரியென அவ்ளையிகழ்.
அவள்தேடிக் கொள்ளட்டும் கணவனைக் கீழுலகில்.
எகிறினாள் தடைமீற வெளிப்படை யாகவே.
நகரம் முழுதிலும் தனியொருத்தி தானவள் .
தலைவனா கியவென் சொல்லை நகரம்
கேட்டல் வேண்டும் , நியாயமோ அல்லவோ .
ஆணை யிடுபவனுக் கடங்கி நடவாமை
அதைவிடப் பெரிய கெடுதி யில்லை !
( தொடரும் )

-------------------------------------------------------------------------------------

கலையரசி
30-05-2012, 01:29 PM
மகன் அவளைத் துறக்க வேண்டும் என்ற காரணத்துக்காக எப்படியெல்லாம் தான் செய்ததை நியாயப்படுத்திப் பேசுகிறான் கிரியன். பேச்சு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. மொழியாக்கத்துக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-06-2012, 11:31 AM
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

கீதம்
02-06-2012, 09:31 AM
ஆள்பவன் சொல்லில் நியாயமிருக்கிறதோ இல்லையோ, அதை மீறாமல் வாழ்வதே குடிமக்களின் கடன் என்னும் கிரியனின் பேச்சு, ஆளும் வர்க்கத்தினருக்கே உரிய அகம்பாவத்தைப் பறைசாற்றுகிறது. சிரத்தையுடன் மொழிபெயர்த்து படிக்கத் தருவதற்கு மிகுந்த நன்றியும் பாராட்டும்.

சொ.ஞானசம்பந்தன்
03-06-2012, 10:18 AM
பாராட்டியதற்கு மிக்க நன்றி .