PDA

View Full Version : நாகத்தின் நச்சுத் துளிகள்.....



நாகரா
21-05-2012, 04:21 AM
தோற்றப் பிரமை

என் மனத்தின் குஷ்டம்
கண்முன் ரோகியாய்
நிற்கும் விகாரம்

நாகரா
22-05-2012, 11:29 AM
வரையவொணாப் பூரணம்

ஒன்பதை(9) வரைந்து பார்
உன் உள்ளிருந்து பூரணமாய் வழியும்
பூரணத்தைப் பூரணமாய்த் தேர்

நாகரா
23-05-2012, 07:16 AM
பூரண ஞாபகம்

மார்ப் பூ ரணம்!
ஆறாது ஆறாய்ப் பாய
ஞாபகம்!! பூரணம்!!!
(மார்ப் பூ = இருதய அன்பூ, அருந்தயா அன்ப, புனித நெஞ்சப் பூ, தூய நெஞ்சத் தாமரை)

நாகரா
24-05-2012, 06:34 AM
பூரண மருந்து!

மார்ப் பூ ரணம்
ஆறாமல் கசியும்
இரண களம் ஆற

நாகரா
25-05-2012, 04:57 AM
இரசவாதம்!

என்புதோற் தொகுதி
பொன்மெய்யாய் உயிர்க்கப்
பொங்கும் அன்பின் மிகுதி!
உங்குன் நெஞ்சுள் குதி!!
முறி சாவென்னுங் கருமச் சதி!!!
அறி பேரின்பப் பெருவாழ்வே அன்பின் தரும விதி!!!!

நாகரா
26-05-2012, 12:07 PM
இருதயம்!

ஒரு தயம் உயிர்கள் பால் தப்பாமல் நீ திறக்க
நின் பால் எப்போதும் திறந்துள இறைமையின்
மறு தயம் மெய்யாக மற(றை)ப்பற விளங்கும்

நாகரா
28-05-2012, 04:42 AM
இருதய அடக்கம்!

மேலே எழு!
இருதயம் எட்டு!!
பரம ஏழின் மெய் உள் வாங்கி
இறைமை உள் உயிர்க்க
இருதயந் தொட்டுக்
கீழே இரங்கு! இறங்கு!!
நேசம் நச்சி எட்ட லாகா ஞான உச்சி எட்டு!
நட்ட மாகாப் பூரணானந்தம் ஞால மெங்குங் கொட்டு!!

நாகரா
29-05-2012, 11:20 AM
மெய்ஞ்ஞானத் தவம்!

மாயைப் பிரமை பிளந்து
மாயாப் பிரம 'ஐ' நிதர்சனம்
மார்நடுப் பிளவில் விளங்கி
ஞாலக் களத்தில் இரு!
(பிரம ஐ = பிரம்மத் தலைமை, அல்லாஹ் தயாமெய்,
பரமபிதாத் தனிப்பெரும் மெய்)

நாகரா
30-05-2012, 11:15 AM
தாழுடைத்துத்
தாழும் அன்பைத்
தாழ்மையுடன் ஏற்றால்
தாழ்விலா வாழ்வு

நாகரா
01-06-2012, 09:54 AM
முப்புரி!!!

புரியப் புரிய
அன்பின் காரியம்
புரியும் தெரியும்
அன்பின் வீரியம்
கரும புரியுள்
தரும புரியின்
இரகசியம் அவிழும்

நாகரா
02-06-2012, 10:20 AM
சுடும் தீக் கை!

தம்படி செலவில்லா
அன்பின் சிகிச்சைக்கு ஆளில்லை
சத்தி திருட துட்டுங் கேட்கும்
பொய்க்குரு தீக்கைக்குப்
புற்றீசல் போல் கூட்டம்

நாகரா
08-06-2012, 04:44 AM
மரக்குரு அக தீக்கை

ஞாலம் மாயை என்றான்
நேசக் கனியால்
ஞானாதாரம்(தலை) மேல்
பாசமாய்க் குட்டியது மரம்

நாகரா
11-06-2012, 04:43 AM
முட்குரு அக தீக்கை

காயம் பொய்யென்றான்
காலடியில் மெய் சொன்னது
நெருஞ்சி

நாகரா
17-06-2012, 03:15 AM
பண்ட மாற்று!

புன்னிகரில்லேன் ஊர்ந்து
அன்பின் திரு முன்
என் அவலட்சணங்கள்
எல்லாம் வைத்தேன்
இன்புடன் ஏற்றுத்
தன் தவலயத் திருமெய்
தந்தென்னை
இக்குவலயத்தே அருட்சித்தனாய்
நிற்க வைத்தது அன்பு

நாகரா
27-10-2012, 07:09 AM
கற்பு

உடையாது நிலைக்கும் மெய்க்கல்
உதிராது மணக்கும் உயிர்ப்பூ
பறிபோகாத உயிர்மெய்க் கற்பூ

கோபாலன்
27-10-2012, 06:30 PM
கவிதைகள் அனைத்தும் அருமை. :)

நாகரா
28-10-2012, 05:23 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி திரு. கோபாலன்

நாகரா
28-10-2012, 05:24 AM
நச்சு அலைகளின் இரைச்சலில்
சிட்டுக் குருவிகளின் ஞாபகம்
விட்டுப் போனது மொத்தமாய்

நாகரா
29-10-2012, 07:32 AM
இல் அறம்!

ஆண் தன்னுள் பெண்ணை மறந்தான்
பெண் தன்னுள் ஆணை மறந்தாள்
இருவரும் மணந்தும் மணக்கவில்லை
இருதய ஒருமையாம் இணக்கம்

ந.க
29-10-2012, 07:41 AM
நன்றி-
கற்பூ
புதிய பூ
புனிதப் பூ
- உயிரின் வைப் பூ என தமிழின் தரமுயர்த்திச் சொன்னீர்கள்...நன்றி

நாகரா
29-10-2012, 08:12 AM
நாற் பூ நறுமணக்கும் உம் பின்னூட்டப் பூவுக்கு நன்றி என் கண்ணப்பூ!