PDA

View Full Version : செப்டம்பர் 6, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
06-09-2004, 10:24 AM
ம.இ.கா வின் மறு சிந்தனை நடவடிக்கை

ம.இ.கா வின் மறு சிந்தனை நடவடிக்கையை அதன் தலைவர் Datuk Seri Samy Vellu நேற்று காலை கோலாலம்பூரில் அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

கட்சியின் அடிமட்ட பிரிவுகளின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும் சீரமைப்பதும் இதன் நோக்கமாகும்.

அதன் முதல் கட்டமாக 62 தொகுதிகளில் சமுக பொருளாதார பணிக் குழு அறிமுகப்படுத்தப்படுகிறது.

10 பேர் கொண்ட அக்குழுவிற்கு தொகுதி தலைவர்கள் தலைமையேற்கின்றனர்.

தங்கள் தொகுதிகளில் காணப்படும் சமூக பொருளாதார பிரச்சனைகளை கண்டறிந்து தொகுதி நிலையிலேயே தீர்வு காண்பதற்கு அப்பணிக் குழு உறுப்பினர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

அந்நோக்கத்திற்காக பயிற்சிகள் வழங்க பிரத்தியேக பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரச்சனையுள்ள அல்லது பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ள அண்டை அயலக குடும்பம், இளைஞர்களின் விபரங்களை திரட்ட கட்சியின் அனைத்து தலைவர்களும் பணிக்கப்பட்டுள்ளதாக Datuk Seri Samy Vellu தெரிவித்தார்.
---------------------------------------------------------------
PBDS கட்சி உள்விவகாரம் விபரம் இன்னும் கிடைக்கவில்லை; பிரதமர்
சரவாக் மாநிலத்தில், PBDS கட்சியில் ஏற்பட்டிருக்கும் உள்விவகாரங்கள் குறித்து,அம்மாநில Barisan National தொழில்நுட்ப செயற்குழு இதுவரை தம்மிடம் எவ்வித அறிக்கையையும் வழங்கவில்லை என பிரதமர் datuk seri Abdullah Ahmad Badawi கூறினார்.

PBDS கட்சி தொடர்பான விவகாரங்களை நிர்வகித்து வரும் Datuk Radzi தற்போது சீனாவில் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், Datuk Radzi நாடு திரும்பிய பின்னரே அக்கட்சியின் உள்விவகார அறிக்கை தமக்கு கிடைக்கும் என்றார்.

நேற்று, மக்கள் முற்போக்கு கட்சியின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் Datuk Seri Abdullah செய்தியாளர்களிடம் பேசினார்.

PBDS கட்சியில் உருவாகியிருக்கும் இரு குழுக்களுக்கு இடையிலான சர்ச்சையே, அக்கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.


--------------------------------------------------------------------------------


பல்லின மக்களை பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சி PPP

PPP எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சி, இன அடிப்படையை கொண்டிராமல், பல்லின மக்களை பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சியாக, தொடர்ந்து தமது நிலையை உறுதிப்படுத்தும் என அதன் தலைவர் Datuk M Kayveas கூறினார்.

PPP இந்தியர்களை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சி என சில தரப்பினர் கூறி வருவதையடுத்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

PPP கட்சியின் 50 விழுகாட்டினர் இந்தியர்களாக இருந்தாலும், அதனை ஒரு விவகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார் அவர்.

நேற்று நடைப்பெற்ற அக்கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


--------------------------------------------------------------------------------


கர்ப்பால் சிங் DAP கட்சியின் புதுத் தலைவர்

நேற்று நடந்த முடிந்த 14-காவது DAP மாநாட்டில் வழக்கறிஞர் கர்ப்பால் சிங் அக்கட்சியின் புதிய தலைவர் பதவி ஏற்றார்.
லிம் குவான் யேங் பொது செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான லிம் கிட் சியாங் DAP கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

தாம் ஓய்வு பெரும் நேரம் வந்துவிட்டதாலும் மற்றவர்களுக்கு வழி விடும் வகையிலும் அவர் விலகிக் கொள்வதாகவும் லிம் கிட் சியாங் கூறியிருந்தார்.

DAP கட்சியின் முதல் சீனர் அல்லாத தலைவர் கர்ப்பால் சிங் என்பது குறிப்பிடத்க்கது.


--------------------------------------------------------------------------------


10 இளைஞர்களை அடையாளம் காணும்படி தேசிய சட்டத்துறை உத்தரவு

Kelantan னில், சிறப்பு தேசிய சேவை பயிற்சி திட்டத்தில் பங்கு கொள்ள தவறிய இன்னும் 10 இளைஞர்களை அடையாளம் காணும் படி, தேசிய சட்டத்துறை தலைவர், கிளந்தான் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடர்பில், போலீஸார், சுமார் 15 விசாரணை கடிதங்களை கொண்டு, அவ்விளைஞர்கம் இத்திட்டத்தில் பங்கு கொள்ளாததற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
----------------------------------------------------------------
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சு வார்த்தை நேற்று புதுடில்லியில் நடந்தது.

இதில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு ஆகிய விவகாரங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

இப்பிரச்சனைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் என இரு வெளியுறவு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

இந்தியாவுடன் தாம் சிறந்த நட்புறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கான ஆக்கபூர்வமான சிந்தனையுடன் மட்டுமே தாம் அந்நாட்டிற்கு வந்திருப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் mohd kasoori கூறினார்.

ஆனால், Mohd Kasoori டில்லிக்கு பயணமாகும் முன், இஸ்லாமாபாத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியிருப்பது, இரு நாட்டு நல்லுறவு ஒப்பந்தத்திற்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.


--------------------------------------------------------------------------------


இந்தியவின் பொடா சட்டம் நீக்கப்படும்

இந்தியாவில் நடப்பில் இருக்கும் பொடா சட்டம் விரைவில் நீக்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

புது டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாம் பிரதமர் பொறுப்பை ஏற்று 100 நாட்களே ஆகியுள்ளதால், காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு தற்போதைக்கு எவ்வித பதிலும் கூற முடியாது என்றார்.

மேலும், காவிரி நீர் பிரச்சனை பொது மக்களின் உணர்ச்சியை தூண்டக்கூடிய விவகாரமாக இருப்பதால், மத்திய அரசாங்கம் அதனை மிகுந்த கவனத்துடன் கையாளும் எனவும் அவர் சொன்னார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டங்களை தமது அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.
-----------------------------------------------------------------------
பெஸ்லான் பள்ளி முற்றுகை சம்பவத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது.

பெஸ்லான் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவம், அந்நாட்டிற்கு எதிரான தாக்குதல் என அதிபர் புட்டின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்புப் பலப்படுத்தப்படும் என்று அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.தை பூசும் லோ

வடக்கு ஒசெடியா, பெஸ்லான் நகரத்தில் செச்னியத் தீவரவாதிகள் பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்த சம்பவத்தில் 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தொலைக்காட்சியில் அதிபர் உரையாற்றினார்.

இந்தச் சம்பவம், தேசத்திற்கு சவால் விட்டுள்ளதாகவும் நாடு முழுவதிலும் பாதுகாப்பு இன்னும் கூடுதலாக்க வழிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்று அத்தொலைக்காட்சி உரையில் கூறியிருந்தார்.

ரஷ்யா எவருடைய அச்சுறுத்தலுக்கும் விட்டுத் தராதென்றும், விட்டுக் கொடுத்தால் கோடிக் கணக்கான மக்கள் வாழும் நாட்டில் இனக்கலவரம் வந்து ரத்தக்களரியே மிஞ்சும் என்று புடின் கூறினார்.

அந்த பாடசாலையில் இறந்த 350 பேரில் அதிகமானோர் பள்ளிச் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அச்சம்பவம் நடந்த பாடசாலைக்கு வெளியே, கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர்ப் பட்டியல் ஒட்டப்பட்டுள்ள நிலையில், ஏராளமனவர்கள் அந்த இடத்தில் கூடி பட்டியலில் அவர்களின் உறவினர்களை தேடிவருகிறார்கள்.

இந்த நெருக்கடியின் ஆரம்பக் கட்டத்திலேயே அதிபர் புடின், பெல்சான் வராதது குறித்தும் அதிருப்தி நிலவி வருகிறது.

பாதுகாப்பு படையினர் அந்த நகரை சுற்றிவளைத்துள்ளனர். வழிகளை அடைத்து தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் தேடிவருகின்றனர்.


--------------------------------------------------------------------------------


நேபாள பிரஜைகள் ஈராக்கில் இருந்து வெளியேறுமாறு நேபாள அரசு அறிவிப்பு

ஈராக்கில் தங்கியுள்ள நேபாள பிரஜைகள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நேபாள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் 12 நேபாள பிரஜைகள் இராக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும், நாட்டின் பிற நகரங்களிலும் வன்முறை மிக்க நடவடிக்கைகள் தூண்டப்பட்டிருந்தன.

அவ்வன்முறை செயல்களால் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து காத்மாண்டு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அமல்படுட்டுக்கு கொண்டுவந்துள்ளது.


--------------------------------------------------------------------------------


ஈராக், Kirkuk பகுதியில் 50 பேர் கொல்லப்பட்டனர்

நேற்று ஈராக், Kirkuk பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்; 40 பேர் காயமடைந்தனர்.

ஈராக்கிய போலீஸ் முகாமை நோக்கி; ஓட்டி சென்ற காரில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது என ஈராக்கிய தேசிய பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் தீவிரவாதிகள் மேற்கொண்ட அத்தாக்குதலில் போலீஸ் முகாம், எவ்வித சேதமும் அடையவில்லை.

இதனிடயே, Latifiah நகரில், ஈராக்கிய பாதுகாப்பு படைக்கும், அந்நாட்டு கிளர்ச்சிகாரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில், 16 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர்.


--------------------------------------------------------------------------------

Florida-வில் புயல் வீசியது

நேற்று காலை, அமெரிக்கா Florida மாநிலத்தின் கிழக்கு கரை பகுதியில் மணிக்கு 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு புயல் வீசியது.

அதனை தொடர்ந்து கடும் மழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பலத்த சேதமடைந்தன.சாலைகளில் உள்ள மின்கம்பிகளூம் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடையே அச்சம் நிலவியுள்ளது.மேலும், அப்பகுதியில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டிருப்பதால், சுமார் 2 million மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.--------------------------------------------------------------------

2012 ஓலிம்பிக் போட்டியில் இந்தியா 10 தங்கம்

2012 ஓலிம்பிக்கில் இந்தியா 10 தங்கம் பதக்கங்களை வென்று திரும்பும் என தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பி.டேவிதார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதக்கம் பெறுவோரில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றவர் 'ரத்தோர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்' எனும் தலைப்பில் பேசியபோது கூறினார்.

நடந்து முடிந்து ஓலிம்பிக்கில் இந்தியாவின் பின் தங்கிய நிலை குறித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்வில் இது குறித்து பேசப்பட்டது. இந்ந்஢கழ்வை, ரிலையன்ஸ் மோபைல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

கலந்துரையாடலில் பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

தடகளம், நீச்சல் ஆகிய போட்டிகளில் இந்தியா தங்கத்தை வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக அம்மாநாட்டில் சில கருத்துகள் நம்பிக்கை தெரிவித்தன.

பரஞ்சோதி
06-09-2004, 10:38 AM
இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.