PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) -நட்சத்ரன் அத்தியாயம்-23natchatran
04-09-2004, 06:44 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-23

தலைக்குமேல் கலகலவென்று சுழன்றுகொண்டிருந்தது மின்விசிறி.சாயந்திரம் ஹாஸ்டலுக்குப் போய் அறையைச் சுத்தமாகக் காலிசெய்துவிட்டு வந்திருந்தான் மூர்த்தி.இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை ண்டுகளுக்கு இனி இந்த அறையில்தான் வாசம்..
கொஞ்சநாளில் என்னென்னெவெல்லாம் நடந்தேறிவிட்டது! எல்லாம் அவன் சக்தியை மீறி தன்னாலேயே நடந்ததாகத்தான்பட்டது.எதுவும் அவன் பிடியில் இல்லை. காற்றிலாடும் பட்டமென விதியின்போக்கில் இயங்கி இப்போது இந்த இடத்தில் இருப்பதாக அவனுக்குத் தோணிற்று.நடந்துகொண்டிருக்கும் எதையும் கட்டுப்படுத்தமுடியும் என்றும் தோணவில்லை.
அடுத்த செமஸ்டர் ஹாஸ்டல் இல்லாவிட்டால் ஸ்காலர்ஷிப் அளவு குறைந்துவிடும். பிறகு மெஸ்பில்லை சமாளிப்பது அப்பாவுக்கு சிரமமாகிவிடும்..இதையெல்லாம் அய்யரிடமும், மாமியிடமும்-புவனாவும் கேட்டுக்கொண்டிருந்தாள்- சற்றுமுன் மெஸ்சில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் சொல்லிவைத்தான்.
அதுக்கென்ன ஸார்..நீங்க எவ்ளோதான் சாப்பிட்றப்போறீங்க? முடிஞ்சவரைக்கும் ஹாஸ்டலைவிட இங்கே உங்களுக்கு கம்மியா வர்றாப்லெ பாத்துக்கிறோம்..படிப்பு விஷயத்துக்கு உதவாமே வேறெதுக்கு உதவப்போறோம்? என்றார் அய்யர். அவர் அவனை ஸார் என்று அழைப்பது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் அவன் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.அது அவர் இஷ்டம் என்று விட்டுவிட்டான்.
இனி, படிப்பு,படிப்பு, படிப்புதான்.. வேறெதைப்பற்றிய சிந்தையும் தனக்குள் எட்டிப்பார்க்கக்கூடாது..எல்லாம் ஓரளவு செட்டில் கிவிட்டபடியால் இனி நிம்மதியாகப் படிக்கலாம்..
ஒருமுறை அறையை நோட்டமிட்டான்: எவ்ளோ சுத்தம்! அவன் ஹாஸ்டலுக்குக் அறையைக் காலிசெய்யப்போன சமயத்தில், இந்த அறையைக் கழுவிச் சுத்தமாக்கி சாம்பிராணிப் புகையெல்லாம் காட்டி கமகமக்கச் செய்திருந்தாள் மாமி. இந்தச் சூழல் போதும், தான் வெற்றிகரமாகப் படித்துமுடிக்க என்று நினைத்துக்கொண்டான் மூர்த்தி.
சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தான். பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதே நேரம் மாமி தன் வீட்டுக்கூடத்திலிருந்து உள்பக்கக் கதவைத் தட்டினாள்.
என்ன மாமீ?
டீ வேணுமாடா கண்ணூ?
வேணாம் மாமி..நீங்க தூங்குங்க..
இடையில் அய்யரின் குரல்: எங்க ஸார் தூக்கம் வர்றது..? நாங்க தலைசாய்க்க அந்த அந்தான்னு ஒண்ணு, ஒண்ணரை ய்டும்..அதெப்பத்திக் கவலைப்படாதேங்கோ! ஒரு டீ குடிச்சுட்டுட்டு படிங்கோ! அப்பத்தானே நன்னா படிக்கலாம்! இல்லென்னா தூக்கம் கண்ணெக் குத்துமோனோ?
மூர்த்திக்கு டக்கெனப் பதில் சொல்ல வாய் வரவில்லை. எதையோ சொல்ல நினைக்கையில், அவன் வாய் குழறித் தடுமாறினான்.
என்ன ஸார்..பேச்சையே காணோம்? என்று கதவின் மறுபக்கமிருந்து கேட்டார் அய்யர்.
இல்லெ ஸார்..உங்களுக்கெதுக்கு செரமம்னு பார்த்தேன்.. என திக்கித் திக்கி மெதுவான குரலில் பதிலளித்தான்.
அதெல்லாம் சிரமம் ஒண்ணுமில்லே! எங்களுக்கு புவனாவைத் தவிர யாருமில்லே! ஒங்க படிப்புக்காவது உதவாமெ என்ன செய்யப்போறோம், சம்பாரிச்சு?எங்களுக்கும் ஒரு அர்த்தம் வேணுமோனோ..கதவைத் தொறங்கோ!
அவசரமாய்க் கட்டிலை விட்டெழுந்து உள்பக்கக் கதவைத் திறந்தான் மூர்த்தி.அய்யரும் மாமியும் சொல்லிவைத்தார்போல அறைக்குள் பிரவேசித்தார்கள்..
ஒரேயடியா படிச்சிண்டேயும் இருக்கப்படாது பாருங்கோ! அதான் தொந்தரவு பண்ணிண்டிருக்கோம்! உங்களைக்கேட்காமலே இவ டீ போட்டு எடுத்தாந்துட்டா! றிடுமோனோ..அதான் சீக்கிரம் கதவெத் தெறக்கச் சொன்னேன்..இனி நான் அடிக்கடி இங்க வந்து தொல்லை பண்ணமாட்டேன்..னா, கதவைத் தொறந்திண்டு எப்பவேணா நீங்க எங்க ஹாலுக்கு வரலாம்..புவனாதான் தூங்குமூஞ்சி, சீக்கிரமே மூதேவி பிடிச்சிண்டிடும் அவளுக்கு..நாங்கெல்லாம் ஒருமணிக்கு மேலதான் தலைசாய்க்கிறது! என்று அவன் முகத்தைப் நேராகக் கூர்ந்து பார்த்துப் பேசினார் அய்யர். அவரது மழிக்கப்படாத முகத்திலும், தலையிலும் பாதிக்குப்பாதி நரைமுடிகள்..புருவம் மட்டும் கருப்பாயிருந்தது..
மாமி டீ டம்ளரை அவனிடம் நீட்டினாள். டீ டம்ளரின் சூடு அவன் உள்ளங்கைகளில் கதகதப்பாய் இறங்கிற்று.
ரொம்ப சூடில்லெடாம்பீ! நல்லா த்திட்டேன்..சரியாருக்கும், குடி என்றாள் மாமி.
கட்டிலில் உட்கார்ந்துகொண்டு,டீயை நுனிநாக்கில் ஒரு சிப் உறிஞ்சிய மூர்த்தி, டீ ரொம்ப நல்லாருக்கு ஸார்.. என்றான் அய்யரைப் பார்த்து. அய்யர் மீசையை முற்றுமாய் மழித்திருந்தபோதும், அதன் நரைத்த சுவடுகள் அவரது மேலுதட்டை நிரப்பியிருந்தன. நல்ல லாட மீசை வைக்கலாம் இவர்.. என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் மூர்த்தி.பின் மாமியைப் பார்த்து, நைட் ஒருமணிவரைக்கும் என்ன பண்ணிட்டிருப்பீங்க மாமி? என்று கேட்டான்.மாமி சட்டென முகம் சிவந்து, அதெ அவாளைக் கேட்டுத் தெரிஞ்சிக்கோடாம்பீ!என்றாள்.
அவன் அய்யரைக் கேள்விக்குறியோடு பார்க்க, ரெண்டுபேரும் ஒருத்தர் முகத்தைப் பார்த்து எதாவது கதைபேசிண்டிருப்போம் ஸார்.. என்று இழுத்தார்.
ஏன் பொய் சொல்றேள்! உள்ளதைச் சொல்லுங்கோ! பாஷன் டீவீ பார்க்கமாட்டேள்? என்று குட்டை உடைத்தாள் மாமி: புவனாக் குட்டி அப்பிடி கட்டில்லெ விழுந்துட்டாப் போதும், அவா பாஷன் டீவியெ வெச்சுண்டு பார்ப்பார் பாரு, அப்பிடிப் பார்ப்பார், கண்ணைக்கூட சிமிட்டாமெ! என்றாள் குலுங்கிச் சிரித்தபடி.
சீ, போடி கழுதே! படிக்கிற புள்ளையாண்டே எதெதெப் பேசுறதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்?சரீ,வா..ஸார் படிக்கட்டும்!
என்ன இது..சின்னப் புள்ளையெப்போய் சார், மோருன்னுட்டு? பேசாமே, வாடாம்பீ, போடாம்பீன்னு கூப்டுங்கோ! என்றாள் மாமி.
அய்யர் ஏதும் பேசாமல் அவன் முகத்தைப் ஏறிட்டார்.
மா ஸார்! சும்மா வாடா, போடான்னே கூப்டுங்க..என்றான் மூர்த்தியும்.
சரீ..கூப்டாப் போச்சு..அப்ப வரட்டுமா ஸார்..? என்று லேசாய்ச் சிரித்துவிட்டு அறையைக் காலிசெய்தார் அய்யர்.
அவர் போகையில், சற்று நன்கு திறந்த கதவின் வழி அய்யர் வீட்டு ஹால் முக்கால்பாகம் தெரிந்தது.ஹாலைத் தாண்டியிருந்த அறையில் புவனா தூங்கிக்கிடப்பதும் அறைகுறையாகப் பட்டது.பாவம்..புவனாவுக்கு உடம்புக்குச் சரியில்லைபோலும்.அவனிடம் அவளால் சரியாகப் பேசமுடியவில்லை.
அதுவரை அவனெதிரே நின்றுகொண்டிருந்த மாமி,இப்போது கட்டிலுக்கெதிரே சுவரோரமாய்க் கிடந்த மர ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டாள்.
டீ நல்லார்ந்துச்சாடாம்பீ? என்று கேட்டாள் அவன் முகத்தை ர்வத்துடன் பார்த்து.அவளது மையிட்ட கண்கள் இப்போது மேலும் அகண்டு ஒளிவீசின.
பிரமாதம் மாமீ.. அய்யர் குடுத்து வச்சவர், இல்லையா மாமி?
நீயும்தாண்டா குடுத்துவச்சவன்! என் சமையலைத் தானேடாம்பீ நீயும் சாப்பிடப்போறே இனி..? என்றவள், கலகலவெனச் சிரித்துக்கொண்டாள்.அவளது சிரிப்பில் ஒரு ழமும் முழுமையும் இருப்பதாகப்பட்டது.
மூர்த்தி சிரிப்பில் மலர்ந்து இளகிய அவளது அளவான, செதுக்கிவைத்ததுபோன்ற சிவந்த முகத்தை, ழ்ந்த ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
காலெல்லாம் பயங்கர வலிடாம்பீ! பகல் பூரா மெஸ்லெ நிக்கிறோமா.. என்ற மாமியின் முகபாவத்தில் ஒருவித மெல்லியவலி தென்பட்டது.சற்றுநேரம் அவனது முகத்தை கூர்மையுடன் பார்த்துக்கொண்டிருந்த அவள் ஸ்டூலில் அமர்ந்தபடியே தன் இடதுகாலை எடுத்து வலதுகாலில் அட்டணக்கால் போட்டுக்கொண்டு சற்று ஓய்வாக அமர்ந்தாள். அப்போது செம்பூக்கள் நிறைந்திருந்த அவளது சேலை சற்றே மேலேறி அவளது சிந்த,வாளிப்பான முழங்கால்களைக் காட்டின.அவற்றின் வளமையும் பளபளப்பும் அவன் கண்களில் மின்னித்தெறித்தன.
படிப்பதற்காக தன் கையில் எடுத்த பாடப்புத்தகத்தை மூடிவைத்தான்.ஒரு சிறுபெண்ணின் உற்சாகத்துடன் தொடர்ந்து பழங்கதைகளைப் பேச ரம்பித்தாள் மாமி. அவள் பேசியதை மனதில் வாங்காமல் வெறுமனே தலையாட்டியபடி அவளது முழங்கால்கள் மற்றும் பாதங்களின் வளைவுநெழிவுகளையும் அசைவுகளையும் ரசித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி.

(தொடரும்..)