PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) -நட்சத்ரன் அத்தியாயம்-24



natchatran
04-09-2004, 07:18 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-24

அந்த வைகறை அவனுக்குப் புத்துணர்வுமிக்கதாக அமைந்தது.
திறந்திருந்த அவனது ஜன்னலில் இளம் தென்றல் நுழைந்து அவன் மெலிந்த வெற்றுடம்பில் மோதியது..நேற்றிரவின் நிகழ்ச்சிகளை அவன் மீண்டும் தன் மனத்திரையில் சுழலவிட்டான்...

மாமி அரைமணிநேரத்துக்கும் மேலாக அவனிடம் பேசியிருந்துவிட்டு "இனி படிக்கிறவேலையைப் பாருடா கண்ணு...ஏதோ இதெல்லாம் உங்கிட்ட சொல்லணும்னு தோணித்து,சொன்னேன்...என்னோட வாழ்க்கையெல்லாம் நினைச்சுப்பாத்தா எனக்கு அழுகையே வந்துடும்டாம்பீ...ஏதோ நீ இங்கெ இருக்கறதாலெ கொஞ்சம் உங்கிட்டே சொல்லி சுவாசப்படுத்திக்கிறேன்...இனி நீ படிக்க ரம்பிச்சுடு..என் கதையைக் கேட்க ரம்பிச்சா அப்றம் விடிஞ்சிடும்..!" -மனசில்லாமலே அறையைவிட்டுப் போய்விட்டாள். போகும்போது அவள் முகத்தில் ஒரு திருப்திகலந்த நிம்மதி தென்பட்டதை கவனித்தான் மூர்த்தி.அவள் போனதும் அறையில் சட்டென ஒரு வெறுமை படர்ந்துவிட்டதையும் உணர்ந்தான்.

மாமி பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க அவளுக்கு ஒரு ள்வேண்டும்! தான் பேசுவதை யாராவது உன்னிப்பாகக் கேட்பதில் அவளுக்கு பரமதிருப்தி, அவ்வளவுதான்! அலுக்காமல் சளைக்காமல் எப்படி ஒரு ஈடுபாட்டுடன் கோர்வையாகக் கொட்டித் தீர்க்கிறாள்!

அவளது குழந்தைத்தனமான பேச்சிலும் முகபாவங்களின் அபிநயிப்பிலும் அவனுக்கு ஒரு ர்வமும் உற்சாகமும் கிட்டியிருந்தது..அவளது குரலும் களங்கமற்ற முழுமையான சிரிப்பும் அவனுள் ஓர் ழ்ந்த உவகையை முகிழ்க்கச் செய்தன..அவளது அருகாமையில் அவனுக்கு விவரிக்க இயலாததொரு அமைதியும் சுவாசமும் கிட்டிற்று.

சூரியன் வரவர தன் செங்கதிர்களை வெளியே நீட்ட ஆரம்பித்தான். தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்களில் பலப்பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகளைப்போல மினுமினுத்தன வண்ணவண்ண வட்டங்கள்.

மாமியின் முகத்தை உடனே பார்க்கணும்போல் தோண, பக்கத்து அறைகளை வாடகைக்குவிடும்பொருட்டு ஓரமாய் தனியே கட்டப்பட்டிருந்த குளியலறைக்குச் சென்றான்..குளித்துக்கொண்டிருக்கையில் அவணுல் ஒருவித உற்சாகம் தலைகாட்ட, அவன் வாய் ஏதோவொரு சினிமாப்பாட்டை முனுமுனுத்தது.விரைந்து எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அவசரமாய்க்கிளம்பி முன்புற வாசல்வழியாய் மெஸ்சுக்குப் போனான்.மெஸ் பூட்டப்பட்டிருந்தது. கதவை உற்று க்கவனித்தான். அதில் இன்று மெஸ் விடுமுறை என்று ஒரு அட்டை தொங்கிற்று . அந்த அட்டையை ஒட்டி ஒரு வெள்ளைத்தாளில் ஏதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தான்.அவசரமாய் அதை எடுத்துப்பிரித்தான். அதில்,

"மூர்த்திக்கு, புவனாவுக்கு உடம்புக்கு மிக மோசமாகிவிட்டதால், அவசரமாய்க் ஆஸ்பத்ரி போகிறோம்..நீ இன்று வேறெங்காவது சாப்பிட்டுக்கொண்டு, தொடர்ந்து படி..எங்களைப் பார்க்க எங்கும் வரவேண்டாம்.."

அவனை சட்டென ஓர் வெறுமை சூழ்ந்துகொண்டது.எந்த ஸ்பத்ரிக்குப் போயிருப்பார்கள்.காரைக்குடியில் ங்காங்கே ஏழெட்டு தனியார் ஸ்பத்ரிகள் இருக்கும்..எதில் போய்ப் பார்ப்பது?

புவனாவுக்கு என்ன ச்சு! நல்லாத்தானே இருந்தாள்! கடவுளே..புவனாவுக்கு ஏதும் கிவிடக்கூடாது! நெஞ்சு படபடத்தது மூர்த்திக்கு..

கால்கள் துவள, சரளைக்கல் சாலையில் ஏறி தார்ச்சாலைநோக்கி நடந்தான்..இப்போது இளவெயில் அவன் கண்களைக் குத்திற்று. கண்களை லேசாகக் கசக்கிவிட்டுக்கொண்டான். ஏதோ தூசுபட்டதுபோல் வலதுகண்ணில் எதுவோ உறுத்திற்று..மேலும் கசக்கினான்..கண்களில் நீர்பொங்கி, பார்வையை மறைத்தது..கடவுளே..புவனாவுக்கு ஏதும் கிவிடக்கூடாது..அவள் நலமாய் சிரித்தபடி வீடுதிரும்பவேண்டும்!

தார்ச்சாலை பஸ் நிறுத்தத்தில் புவனாபோலவே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்..எப்படி அழகாகச் சிரிப்பாள் புவனேஸ்வரி..அவளிடம்பேசி எத்தனை நாட்களாகிவிட்டன!

கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்தபடி பச் நிறுத்தத்தை அடைந்தான் மூர்த்தி.சாப்பிட எங்கு போவது? ஒரே குழப்பமாக இருந்தது. இன்று கல்லூரி வளாகத்தில் தட்ஷினியும் வனஜாவும் பறீதருடன் சேர்ந்துபடிப்பார்கள்..

தனக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது, எதுவும் ஒரு சீராக இல்லாமல்! திடீரென அவனுக்கு வீட்டு ஞாபகம்வேறு வந்துதொலைத்தது.
காரைக்குடியில் பிள்ளை சமத்தாகப் படிச்சுக்கிட்டிருக்கும்.. என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள்..அப்பாவுக்கு ரொம்ப நாளா ஒரு போன்கூட செய்யவில்லை..(அவர்கள் வீட்டில் போன் இல்லை..கிராமத்தின் கடைத்தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில்தான் போன் இருக்கிறது..கடைகாரரிடம் விஷயத்தைச் சொன்னால் அது அப்பாவுக்குச் சரியாகப் போய்ச்சேர்ந்துவிடும்..அவர்கள் கிராமத்திலிருந்து இன்ஜினியரிங் படிக்கும் முதல் ள் இவன்தான் என்ற மரியாதைவேறு ஊர்க்காரர்களுக்கு உண்டு.) ஸ்டடி லீவ் விட்டிருப்பதுகூட அவர்களுக்குத் தெரியாது..சொன்னால், ஏம்ப்பா, இங்கெ வந்து வீட்டுலெ கஞ்சிதண்ணியெக் குடிச்சுக்கிட்டு,த்தங்கரைப்பக்கமோ, மாந்தோப்புக்கோ போயி காத்தாடப் படிக்கவேண்டியதுதானே.. என்பார் அப்பா..

யோசித்தபடியே நடந்து மெயின் ரோட்டின் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றான்.அங்கு பஸ்ஸக்காக நின்றிருந்த பெண் தன் இடக்கையை நீட்டி அப்போது வந்த டௌன் பஸ்ஸை நிறுத்தினாள்..அந்தப் பஸ்சின் நெற்றியில் எழுதப்பட்டிருந்த ஊர்ப்பெயரைப் படித்துப்பார்த்தான்..அது..ந..நந்தினியின் ஊராயிற்றே! ஒருகணம் யோசித்த மூர்த்தி, பஸ் கிளம்பும் தருவாயில் கம்பியைப் பிடித்துத் தொற்றிக்கொண்டான்.அப்போது நந்தினியின் முகமும் அவள் கண்களில் மெலிதாய்ப் படர்ந்திருக்கும் சோகத்தின் சாயையும் அவனுக்கு ஞாபகம் வந்தது.

(தொடரும்..)