PDA

View Full Version : செப்டம்பர் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திக



Mano.G.
09-09-2004, 12:04 AM
புதிய வரவு செலவு அறிக்கையில் உயிரியியல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு பண ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புண்டு

இவ்வாரம் வெள்ளிக்கிழமை பிரதமரால் அறிவிக்கபடவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் உயிரியியல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பண ஒதுக்கிடு கொடுக்கப்படும் என தாம் நம்புவதாக மலேசிய உயிரியியல் தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் மு†ம்மட் சாலே நோர் கூறினார்.

மலேசியாவில் உயிரியியல் தொழில்நுட்ப துறை மேம்பாட்டிர்க்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது என்று Datuk Dr. Salleh கோலாலம்பூரில் அனைத்துலக உயிரியியல் கண்காட்சியில் கலந்துக் கொண்டபின் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடுத்தாண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் எப்படிப்பட்ட புதிய மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பிரதமர் அறிவித்தப் பின்னரே மக்களுக்கு தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

--------------------------------------------------------


நீதிமன்றம் அன்வாரின் வழக்கை வரும் 15 ஆம் தேதி மறு பரிசீலனை செய்ய முடிவெடுக்கும்

ஊழல் புரிந்ததாக தீர்ப்பளிக்கப்பட்டு 6 ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்துவிட்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ரா†ம், அத்தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென செய்த மனுவிற்கு புத்தராஜயா கூட்டரசு நீதிமன்றம் இம்மாதம் 15 ஆம் திகதி மறு பரிசீலனை செய்யுமா என்ற முடிவை அறிவிக்கும் என மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, முதுகெலும்பு சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ரா†ம், முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்குப் பின் மிக விரைவாக குணமடைந்து வருவதாக என்று அன்வார் இப்ரா†மின் மருத்துவர் தெரிவித்தார்.

பல வருடங்களாக சிறையில் இருந்த முன்னால் துணைப்பிரதமர் அன்வார் இப்ரா†ம் கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி விடுதலையானது குறிப்பிடத்தக்கது.



--------------------------------------------------------------------------------

MIED கடன் ஊதவியின் நிபந்தனைகள் கடுமையாக்கப்படவுள்ளது - சாமிவேலு

அடுத்த ஆண்டு முதல் MIED, கல்வி கடன் வழங்கும் நிபந்தனைகளை, கடுமையாக்கப்படவுள்ளது. இதன் வழி மேலும் பல மாணவர்களின் கல்வி தொடரும் வாய்ப்பை அதிகரிக்க முடியும் என MIED தலைவரும் பொது பணித் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு தெரிவித்தார்.

இனி முதல் கல்வி ஆண்டுக்கு மட்டுமே கடன் உதவி தரப்படும் மற்ற இரு ஆண்டுகளுக்கு சுய செலவில் கல்வியை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என டத்தோ ஸ்ரீ சாமிவேலு உயர் கல்வி மாணவர்களுக்கு MIED-இன் கல்வி கடன் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இதனிடையே, வரும் காலங்களில் Tafe கல்லுரியிலும் aimst பல்கலைகழகத்திலும் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து MIED கல்வி கடன் வழங்கப்படும் என அவர் கூறினார்.



--------------------------------------------------------------------------------

பாதுகாவலரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் ஐவருக்கு காயம்

நேற்று காலை Melaka Taman Malim jaya-வில் வங்கி காவலாளரின் துப்பாகி தவறி விழுந்து சிதறிய தோட்டா பட்டு ஐவருக்கு காயம் ஏற்பட்டது. அங்குள்ள Maybank நிறுவனத்திற்கு மூன்று காவலாளிகள் பணம் கொண்டு சென்ற போது இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

பண பட்டுவாடா இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தவர்களில், ஐவருக்கு காயம் ஏற்பட்டு மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவலாளியை போலிசார் தடுத்து வைத்துள்ளனர்.

வங்கியின் கண்கணிப்பு காமிரா கொண்டு விசாராணை நடுத்தப்படும் என மத்திய மலாக்கா போலிஸ் தலைவர் Sidin Abdul Karim தெரிவித்தார்.

----------------------------------------------------------------


கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த வேண்டும் - இல.கணேசன்

இந்தியா முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா அகில இந்திய செயலாளர் இல.கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

2001-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப் பின் முடிவுகள் வெளிவந்துள்ளன. மதரீதியான ஜனத் தொகையின் ஏற்றம் மற்றும் தாழ்வு குறித்து புள்ளி விவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. அதில் இந்துக்கள் ஜனத்தொகையின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தத் தகவல் கவலை தருவதாக உள்ளது என அவர் கூறினார்.

மதமாற்றம் என்பது வெறும் வழிபாடு மாற்றமாக மாத்திரம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. மாறாக இந்துக்களாக இருந்து முஸ்லிம்களாக மாறியவர்கள் அதிகமான பகுதி நம் நாட்டை விட்டு துண்டாடி பாகிஸ்தானாக பிரிந்து இன்றும் தொந்தரவு தந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள் அதிகம் வாழும் காஷ்மீர் இன்றும் பிரச்சினை தந்து கொண்டிருக்கின்றது என அவர் மேலும் கூறினார்.

---------------------------------------------------------

செசன்ய தீவிரவாதிகளின் தலைவர்கள் பற்றி தகவல் தருபவருக்கு 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் - ரஷ்ய அரசாங்கம் அறிவிப்பு

செசன்ய தீவிரவாதிகளின் தலைவர்கள் பற்றி தகவல் தரவோருக்கு ரஷ்ய அரசாங்கம் 10 மில்லியன் டாலரை சன்மானமாக வழங்கும் என அறிவித்துள்ளது.

பெஸ்லான் பள்ளிப் பிணைப்பிடிப்பு சம்பவத்திற்கும் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் Shamil Basayev, Aslan Maskhadov ஆகிய இருவரின் கைதுக்கு உதவியாக வழங்கப்படும் தகவல்களுக்கு அத்தகைய சன்மானம் கொடுக்கப்படும்.

அந்தப் பிணைப்பிடிப்பில் குறைந்தது 335 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்கள் அடைந்தனர் என அறிவிக்கப்பட்டது.அவர்களை தேடி அடையாளங்கள் கூறுபவர்களுக்கு இந்த சன்மானம் வழங்கப்படுகிறது.

---------------------------------------------------------

உலகக் கிண்ணத் தேர்வு ஆட்டம்: இங்கிலாந்து போலந்தை சந்தித்து விளையாடியது

நேற்று இரவு உலகக் கிண்ணத் தேர்வு ஆட்டத்தில் பலம் பொருந்திய இங்கிலாந்து காற்பந்து அணி உலகப் புகழ்ப்பெற்ற போலந்து அணியை சந்தித்து விளையாடியது.

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவினால், தான் பதவி நீக்கம் செய்யபடுவதை பற்றி கவலை படவில்லை என அந்த அணியின் பயிற்றுனர் Sven Goran Eriksson நேற்று கூறியிருந்தார்.

இதனிடையே, இங்கிலாந்து அணியின் முன்னனி ஆட்டகாரர் David Bechkam போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என Sven Goran Eriksson நம்பிக்கை தெரிவித்தார்.

பரஞ்சோதி
09-09-2004, 05:15 AM
இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.

2006 உலக கோப்பை கால்பந்து தகுதிப் போட்டிகள் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறாதா?