PDA

View Full Version : செப்டம்பர் 3, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திMano.G.
03-09-2004, 09:29 AM
அன்வார் இப்ராஹிம் நேற்று விடுதலையானார்.

மலேசியா முன்னால் துணை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று விடுதலை செய்யப்பட்டார். உயர் நீதிமன்றம் ஓரின பாலியல் குற்றங்களுக்காக அன்வாருக்கு விதித்த 9 ஆண்டு சிறை தண்டணையை கூட்டரசு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

மூவர் கொண்ட நீதிபதி குழுவில் 2க்கு 1 என்ற வாக்குகளில் அவர் மீது விதிக்கப்பட்ட தண்டணையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தீர்ப்பை கேட்பதற்கு நீதிமன்ற வளாகத்தில் காலை 7 மணி முதல் அன்வார் இப்ராஹிம் ஆதரவளார்கள் கூடியிருந்தனர். நிலைமையை கண்காணிக்க களக தடுப்பு போலிசார் அங்கு பணியில் இருந்தனர்.

இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக அன்வார் இப்ராஹிம் உடனடியாக ஜெர்மனி புறப்படுவார் என நம்படுகிறது.
----------------------------------------------------------

அன்வார் விடுதலை; பிரதமர் கருத்து

முன்னால் துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பபை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அஹமட் படாவி கூறினார்.

இதனிடையே, நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து பின்பற்றுமாறு அன்வார் ஆதரவாளர்களை துணைப்பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக்கொண்டார். அதேவேளையில், அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமருக்கும் நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அன்வார் தனது கார் ஓட்டுனரை ஓரின பாலியலுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ப்பட்ட அன்வாரின் மேல் முறையீட்டை ஏற்றுக்கொண்டு கூட்டரசு நீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்தது.

அன்வாரின் கார் ஓட்டுனரான Azizan-னின் சாட்சியத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதாகவும் 3 கொண்ட நீதிபதிகள் குழு தீர்ப்பில் கூறியது. அன்வாரின் வளர்ப்பு சகோதரர் Sukma Dermava-னும் அதே குற்றத்திற்காக விதிககப்பட்ட 6-ஆண்டு சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கப் பட்டார்.


--------------------------------------------------------------------------------தீவிரவாத செயல்களை ஒடுக்க மலேசியா முக்கிய பங்கை ஆற்றி வருகிறது

தீவிரவாத தாக்குதலிருந்து நாட்டை பாதுகாக்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மலேசியா மேம்படுத்தி வருகிறது. இவ்வட்டார அண்டை நாடுகளில் தீவிரவாத செயல்களை ஒடுக்க மலேசியா முக்கிய பங்கை ஆற்றி வருகிறது என டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் 25-வது ஜப்பான் மலேசியா பொருளாதார மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும் இவ்வட்டாரத்தில் தீவிரவாத செயல்கள் நிகழாமல் இருக்க அண்டை நாடுகளுடன் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வதாக தற்காப்பு அமைச்சர் நஜிப் துன் ரசாக் கூறினார்.


--------------------------------------------------------------------------------சரவாக்கில் சட்ட மன்ற இடைத்தேர்தல்

சரவாக் Ba'Kelalan சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் பாரிசான் நெசனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவிக்கவிருப்பதாக சரவாக் மாநில முதல்வர் Tan Sri Abdul Taib Mahmud நேற்று கூறினார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் Dr.Judson Sakai Tagal கடந்த ஜூலை மாதம் Ba'Kelalan-னில் நடந்த ஒரு விமான விபத்தில் மரணமுற்றதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது.


--------------------------------------------------------------------------------ஆராய்ச்சி மேம்பாடு(R&D) திட்டத்தில் உள்ளுர் நிறுவனங்களின் பங்கு

மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தில் நடத்தப்படும் ஆறாய்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் உள்ளுர் நிறுவனங்கள் முதலீடு செய்யாதது குறித்து வருத்தம் கொள்வதாக அப்பல்கலைகழகத்தின் துணை வேந்தர் Professor. Datuk Dr. Dzulkifli தெரிவித்தார்.

கடந்த நான்கு வருடமாக அப்பல்கலைகழகத்தில் உருவாக்கப்படும் புதிய வெளியிட்டு பொருட்கள் பல போட்டிகளில் பங்கேற்று சுமார் 200 விருதுகளை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் பல நிறுவனங்கள் இத்துறையில் மூதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


--------------------------------------------------------------------------------


தீ விபத்தில் 100 பேர் இருப்பிடத்தை இழந்துள்ளனர்


கோதகினாபாலு அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 100 பேர் இருப்பிடத்தை இழந்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட அத்தீ விபத்தை 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 34 தீஉஅணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். அத்தீ கிராமத்தின் நடுவே இருந்த ஒரு வீட்டிலிருந்து ஆரம்பித்ததாக தீயணைப்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.


----------------------------------------------------------


புதிய நடுவர் மன்றம் அமைப்பதற்கான முயற்சியை நிறுத்த வேண்டும் - கருணாநிதி

காவிரி பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரும்பாடுபட்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வருவதற்கான சூழ்நிலை விரைவில் அமையவிருக்கிற காலக்கட்டத்தில் சற்றும் எதிர்பாராத நிலை யில் அந்தத் தீர்ப்பு வருவதைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடுவர் மன்றத்தையே கலைத்து விட்டு புதிதாக நடுவர் மன்றம் ஒன்று அமைக்க வேண்டுமென்று கர்நாடகம் கோரிக்கை எழுப்புவதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி தரக் கூடியவைகளாக இருக்கின்றன என கருணாநிதி கூறினார்.

மத்திய அரசு உடனடியாக சற்றும் தாமதமின்றி கவனம் செலுத்தி கர்நாடக அரசின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

----------------------------------------------------------------

ரஷிய பள்ளியில் 300 பேர் பிணைபிடிப்பு; 32 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஆகக்கடைசி தகவல்படி பிணைபிடிக்கப்பட்ட 300 பேர்களில் 32 பேர்கள் விடுவிக்கப்பட்டனர். ரஷியாவில் ஆயுதமேந்திய 17 பேர் கொண்ட கும்பல், சுமார் 300 பள்ளி மாணவர்களை பெற்றோர் உட்பட பிணைபிடித்து வைத்திருக்கிறது.

தயார்நிலையில் பள்ளி வளாகத்தை சுற்றி ரஷியா ராணுவம் வட்டமிட்டுள்ளது. Chechnya பிரிவினவாதிகள் என நம்பப்படும் அக்கடத்தல் கும்பல் பிணையாக்கப் பட்டவர்களை விடுக்க, Chechnya-விலிருக்கும் தனது ராணுவ படையை ரஷியா வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

நீர் ஆகாரமேதும் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. 2002-ஆம் ஆண்டு ரஷியாவின் திரையரங்கில் Chechnya பிரிவினவாதிகள் மேற்கொண்ட தீவிரவாத சம்பவத்தில் 129 பேர் கொல்லப்பட்டனர்.


--------------------------------------------------------------------------------


பிரான்ஸ் நாட்டவர்களை பிடித்து, பிணை நாடகம்

2 பிரான்ஸ் நாட்டவர்களை பிணை பிடித்து, அந்நாட்டில் முக்காடு அணிவதற்கான தடையை நீக்கச் கோரி ஈராக்கிய தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளை பிரான்ஸ் நிராகரித்தது.

தன் முடிவை மற்றிக்கொள்ளாத France, நேற்று பள்ளிகளில் முக்காடு மற்றும் இதர சமய சார்புடைய அணிகளை அணிவதற்கு தடைகள் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தடைகளை நீக்காவிடில் 2 பிணை கைதிகளையும் கொன்றுவிடுவதாக மருட்டிவரும் தீவிரவாதிகளுடன் பாரிஸ் பேச்சு வார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது.


----------------------------------------------------------------


Wayne Rooney-க்கான தேர்வு ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது

மன்செஸ்டர் யூனைடட் குழுவில் புதிதாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட Wayne Rooney தற்போது அக்குழுவில் இடம்பெற அவரது ஆட்டத்திறனை வரும் வியாழக்கிழமையன்று அக்குழு சோதிக்கவுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அக்குழுவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட Rooney இதற்கு முன்பு எவர்டன் குழுவில் விளையாடி வந்தார்.நடந்து முடிந்த EURO 2004 காற்பந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மன்செஸ்டர் குழுவில் இடம்பெற தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18 வயது நிரம்பிய Rooney-க்கு இம்மாதம் லிவர்பூல் அணியுடன் மன்செஸ்டர் மோதவிருப்பது நல்ல சவாலாகவும், மேலும் அவர் அந்த ஆட்டத்தில் தனது சிறப்பான விளையாட்டை காட்ட முடியும் என நம்பப்படுகிறது.