PDA

View Full Version : 10 லட்சம் பேருக்கு சவுதியில் குடியுரிமை!!



Narathar
28-10-2004, 12:13 PM
10 லட்சம் பேருக்கு சவுதியில் குடியுரிமை!!

இங்கு மத்திய கிழக்கில் தொழில் புரியும் பல அன்பர்கள் இங்குள்ளதால் இச்செய்தியை இங்கு பதிக்கலாமென நினைக்கின்றேன்

சவூதி அரேபியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளதாம்.

முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு இந்த குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் என்ன உரிமைகளை அனுபவிக்கின்றார்களோ அதே உரிமையை புதிதாக குடியுரிமை பெறுபவர்களும் அனுபவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மருத்துவர்கள், கனினி தொழில் நுட்பவியலாளர்கள் என்று படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்லதாம்.

நம்மவர்கள் யாருக்காவது அங்கு குடியுரிமை கிடைக்குமா?
கிடைத்தால் ஏற்பீர்களா?

thamarai
28-10-2004, 06:54 PM
பயனுள்ள தகவலை பதித்திருக்கிறீர்கள்.
சவூதி அரேபியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள் இதை ஏற்பார்களா.. என்று பார்ப்போம்.
நன்றாக யோசித்து முடிவு எடுக்கவேண்டிய நேரம் இது.

அறிஞர்
01-11-2004, 02:08 AM
நல்ல செய்தி... நண்பரே.....

குடியுரிமை பெறப்போகும் நம் மக்களுக்கும் வாழ்த்துக்கள்