PDA

View Full Version : அக்டோபர் 26, செவ்வாக்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
26-10-2004, 11:24 AM
பண அரசியல் பற்றிய வதந்திகளை விசாரிக்க வேண்டும்

பண அரசியலைப் பற்றி எத்தகைய புகார்களும் கிடைக்காவிட்டாலும், தற்போது நிலவியிருக்கும் வதந்திகளை UMNO கட்டொழுங்கு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலியல் துறை அமைச்சர் Tan Sri Muhiyiddin Yassin கூறியுள்ளார்.

பண அரசியலை தடுக்க வேண்டும், இல்லையேல் அது கட்சி நலனைப் பாத்திப்படையச் செய்யும் என்று அவர் நினைவூட்டினார்.

Serdang-ஙில் உள்ள மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தை பார்வையிட்ட பின்னர் அதனை நிருபர்களிடம் தெரிவித்தார்.
-------------------------------------------------------

அரசாங்க அதிகாரிகளிடம் பிடிப்படாமல் இருக்க பல லட்சங்களை கள்ள குடியேறிகள் செலவளிக்கின்றனர்

சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழையும் கள்ள குடியேறிகள், தங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அவர்கள் மாதம் ஒன்றுக்கு பல லட்சம் ரிங்கிட் செலவளிக்கின்றனர் என்பதை உள்நாட்டு விவகார அமைச்சர் Datuk Azmi Khalid கூறினார்.

கிடைக்கப் பெற்ற தகவலின்படி ஒவ்வொரு கள்ள குடியெறிகளும் மாதம் ஒன்றுக்கு 50 ரிங்கிட்டை, அமலாக்க நடவடிக்கையின் விபரங்களைப் பற்றி தகவல் கூறுபவர்களிடம், கொடுப்பதாக Datuk Azmi கூறினார்.

கள்ள குடியேறிகள் தங்களின் பாதுகாப்புக்காக அவ்வாறு செய்தாலும், சட்ட நடவடிக்கைகளிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை Datuk Azmi சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கள்ள குடியேறிகளை கைது செய்யும் அமலாக்க பிரிவுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


--------------------------------------------------------------------------------


வெளிநாட்டு உயர் கல்விக்கூடங்கள் இங்கு கிளைகளை அமைக்க விருப்பம்

மேலும் இரு Australia-வின் உயர் கல்விக்கூடங்கள் தனது கிளைகளை இங்கு அமைக்க விருப்பம் கொண்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் டத்தோ Dr.Shafie Mohamed Salleh கோலாலம்பூரில் நடைபெற்ற Australia கல்வி கண்காட்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்த உயர்கல்விக்கூடங்கள் உயிரியல் தொழில் நுட்பம், மருத்துவ பொறியியல் போன்ற பாடத் திட்டங்களை அமல்படுத்தவிருக்கிறது.

அதனால் அப்பல்கலைகழகங்கள் இங்கு தனது கிளைகளை நிறுவுவதில் மலேசியா வரவேற்கிறது என்று அவர் தெரிவித்தார்.

வெளிநாடு பல்கலைகழகங்கள் இங்கு கிளைகளை அமைப்பதால் மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில்கிற செலவுகளைக் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சில வெளிநாட்டு பல்கலைகழகங்கள் இங்கு தனது கிளைகளை அமைத்துள்ளது
என்பது குறிப்பிடதக்கது.


--------------------------------------------------------------------------------


மீண்டும் ஒரு வாய்ப்பு

அரசாங்கம் வழங்கி இருக்கும் பொதுமன்னிப்பு காலத்தில், சட்டவிரோத தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் அரசாங்கத்திடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு முதலாளிகள் செய்வதால் மீண்டும் அத்தொழிலாளர்களை தருவித்து சட்டப்படி வேலையில் அமர்த்தலாம் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் Datuk Azmi Khalid தெரிவித்தார்.

விண்ணப்பம் செய்யும் போது முதலாளிகள் மீதும் கள்ள தொழிலாளர்களின் மீதும் எத்தகைய சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்று அவர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐநாவின் 59-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக் கொண்ட பின்னரை அதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


--------------------------------------------------------------------------------


போதைப்பித்தர்களிடம் கைத்துப்பாகிகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில், சென்ற வருடத்தை விட இவ்வருடம் பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கோலாலம்பூர் போலிஸ் படைத் தலைவர் Datuk Mustafa Abdullah தெரிவித்தார்.

இதுவரை 313 தோட்டக்களும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த புதன் கிழமை போலிஸ் மேற்கொண்ட போதை பித்தர்கள் துடைத்தொழிப்பு நடவடிக்கையின் போது 33 தோட்டக்கள் உட்பட 26 கைத்துப்பாக்கிகளும் ஒரு தோட்டா கவச ஆடையும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து 28 முதல் 33 வயது வரையிலான 3 ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.


--------------------------------------------------------------------------------


அரசியலில் புதிய மாற்றங்களை அன்வார் ஏற்படுத்துவார்:Hasan Ali

கடந்த மாதம் தனது முதுகலும்பு சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற முன்னாள் துணை பிதரமர் Datuk Seri Anwar Ibrahim ஞாயிற்றுக் கிழமை நாடு திரும்புகிறார்.

தற்போது Jeddah-வில் தனது 'umrah' கடமையை செலுத்திக் கொண்டிருக்கும் Anwar Ibrahim நாடு திரும்பிய பின்னர், மலேசிய அரசியலில் புது மாற்றங்களை ஏற்படுத்துவார் என தாம் நம்புவதாக PAS கட்சியின் துணை தலைவர் Datuk Dr Hassan Ali நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

எதிர்கட்சிகளின் கூட்டத்தின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார். அக்கூட்டதில் Keadilan கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் முக்கிய பதவியினர் கலந்து கொண்டனர்.
-----------------------------------------------------------------------------

அதிகரித்துவரும் HIV நோயாளிகளின் எண்ணிக்கை

இந்தியா கர்நாடகா மாநிலத்தில் குறிப்பாக புற நகர பகுதிகளில் HIV நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புறநகர் ஆதரவு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் Micheal Sidible தெரிவித்தார்.

இது தற்போது அபாயகரமான நிலை எட்டியுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். HIV நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ஐநாவின் UNAIDS நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இம்முயற்சியில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் ஈடுபாடும் தற்பொது ஆதரவளிப்பதாக இருகின்றன என அவர் மேலும் கூறினார்.


--------------------------------------------------------------------------------


அதிபர் கலாமுக்கு அதிமுக கோரிக்கை

தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற மத்திய அரசாங்கத்தின் முடிவை தடுக்கும் முயற்சியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் இந்திய அதிபர் அப்துல் கலாமுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த முயற்சி அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஆளுநர் மாற்றம் தொடர்பான வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலையில் உள்ளது அது சாத்தியமில்லை என்றும் அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற ஒரு கோரிக்கை கடிதம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதிமுக கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


--------------------------------------------------------------------------------


ஆளுநர் மாற்றத்துக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

ஆளுநரை இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சமர்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், ஆளுநர் மாற்றத்துக்கு தடையோ, இடைக்காலத் தடையோ விதிக்க மறுத்துவிட்டது.

இதனால் ராம்மோகன் ராவ் உடனடியாக மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
-----------------------------------------------------------------------------

Gaza நகர் கடும் தாக்குதலுக்குள்ளானது

இஸ்ரேயில் ராணுவம் Gaza நகர் மீது கடும் தாக்குதலை நடத்தியது. Khan Younis என்ற கிளிர்ச்சிகாரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட அத்தாக்குதலில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுலிருந்து அத்தாக்குதல் நடத்தப்படுகிறது. கடும் ஆகாயப்படை தாக்குதலுக்கு Gaza நகர் உள்ளனது.

Gaza நகரிலுள்ள கிளிர்ச்சிகாரர்கள் நடத்தும் Mortar குண்டு தாக்குதலை முறியடிக்கவே அத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேயில் ராணுவம் கூறியது.


--------------------------------------------------------------------------------


பயிற்சி முகாமிற்கு அருகே சடங்கள்

இராக்கின் புதிய தேசியப் படையில் சேர்ந்திருந்த 49 பேரின் சடலங்கள் Iran-னிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பயிற்சி முகாமுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் கூட்டாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஈராக்கிய போலீஸ் கூறுகின்றது. இதுவரை அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை ஆனால் வீடு திரும்பும் வழியில் அப்படையினர் தாக்கப்பட்டிருக்கலாம் என ஈராக்கிய போலிஸ் சந்தேகிக்கின்றது.
-----------------------------------------------------------------------------------

நடுவர் செய்த தவறு;அர்செனல் முதல் தோல்வி!

Arsenal உடனான ஆட்டத்தின் போது Manchester United குழுவிற்கு நடுவர் Penalty வழங்கியதால் Arsenal குழுவின் நிர்வாகி Arsene Wenger ஆத்திரமடைந்தார்.

வழங்கப்பட்ட Penalty முறையானது அல்ல எனவும் அது நடுவர் செய்த தவறு என்றும் அவர் குற்றச்சாட்டினார்.

Old Trafford-தில் விளையாடும் போது அத்தகைய பிரச்சினை ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. அதே போன்று கடந்த வருட ஆட்டத்தின் போதும் Manchester United குழுவிற்கு Penalty வழங்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அவர்களுக்கு நடுவர்கள் மிக எளிதாக அவர்களுக்கு Penalty-யை வழங்கி விடுக்கின்றனர் என்று அவர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.


--------------------------------------------------------------------------------


உலக சாதனையை முறியடிப்பதே எனது லட்சம்:மோகனசுந்தர்

ஈப்போவை சேர்ந்த 22 வயது Moganasaundar என்ற இந்திய இளைஞர் ஒருவர், 30KM தூரம் பின்னோக்கி ஓடி,Malaysia Book Of Records எனப்படும் மலேசிய சாதனை புத்தகத்தில் தனது பெயர் பதித்திருக்கிறார்.

Perak அரங்கில் மாலை 4.30 மணியளவில் தொடங்கிய அவர் 3 மணி நேரம் 31 நிமிடம் 35 வினாடிகளில் அச்சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இது போன்ற வித்தியாசமான சாதனைகளை செய்வதற்கு விளையாட்டு சங்கங்களின் ஆதரவு மிகவும் அவசியமென ஈப்போ AAA விளையாட்டு சன்கத்தின் ஆதரவில் அச்சாதனையை புரிந்த அவர் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்கள் இம்மாதிரியான விளையாட்டுகளில் தங்களின் ஈடுபாட்டை காட்ட முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டு கொண்டார்.

தமது அடுத்தக்கட்ட முயற்சியில், தற்போது உள்ள பின்னோக்கி ஓடும் உலக சாதனையான 42.195 கீலோ மீட்டர் தூரத்தை முறியடிக்கவுள்ளதாக வணக்கம் மலேசியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இளசு
01-11-2004, 07:10 AM
எயிட்ஸ் பற்றிய செய்தி கவலையை இன்னும் அதிகரிக்கிறது.
இனியும் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க
இந்நோய் பற்றிய அறிவு, எச்சரிக்கை உணர்வு
பரவலாகப் பரவ வேண்டும்.


இனிய நண்பர் மனோஜி, நலமா?
செய்திகளுக்கு (தாமதமான ) நன்றிகள்..