PDA

View Full Version : திக்கெட்டும் புகழ் பரப்பும் தமிழ்மன்றம்



thiruarul
16-11-2004, 08:27 PM
.................................போனவாரம் தினமலர் அறிவியல் ஆயிரம் பக்கத்தில் நம் மன்றத்தைச் சுட்டியுடன் தந்திருந்தார்கள்.......................

மதிப்பிற்குரிய இளங்கரிகாலன் அவர்கள் எப்போதோ கூறியிருப்பதை இன்று கண்டபின்தான் தேடிப்பிடித்தேன்.உங்களுக்காகக் கீழே தருகிறேன்.

http://www.dinamalar.com/2004sep25/flash.asp


அறிவியல் ஆயிரம் ".....................................................

தமிழ் விவாத மன்றம்

இன்டர்நெட்டில் வளர்ச் சிக்கு ஏற்ப இன்னும் தமிழ் படைப்புகள் இன்டர்நெட்டில் இடம்பெறும் வேகம் அதிகரிக்கவில்லை எனினும் தொடக்க முயற்சிகள் நடந்து வருகின்றன

இன்டர்நெட்டில் முத்தமிழ் மன்றத்தின் முகவரி: http://www.muthamilmantram.com / இந்த தளத்தில், புதிய அறிவிப்புகள், உறுப்பினர் அறிமுகம், ஆராய்ச்சி மணி, செய்திக்களம், சிறுவர் பூங்கா, இளைஞர் மன்றம், அரசியல், வணிக வளாகம், நகைச்சுவை மன்றம், கவிதைகள், திரைக்கூத்து, நட்பு, சமையல், அழகுக் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, புதுமைப் பெண்கள், விஞ்ஞானம், மருத்துவம், அமுதசுரபி, தமிழர் நாகரிகம், பட்டிமன்றம், ஆன்மிகம், இலக்கியம் என்று பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

விவாதப்பகுதியில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முத்தமிழ் மன்றத்தைப் போலவே தமிழ் மன்றமும் செயல்படுகிறது. முகவரி: http://www.tamilmantram.com/ board/portal.php வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் இந்த மன்றத்தில் செய்த விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இளைஞர்களுக்கான இன்டர்நெட் என்று கூறும் அரும்பு நடப்பு செய்திகளை இன்டர்நெட்டில் தமிழில் வழங்கி வருகிறது. முகவரி: http://arumbu.com/ பொது அறிவு, உயிரியல், பொருளாதாரம், கல்வி, உடல்நலம், இயற்கை, செய்தி தகவல்கள், விளையாட்டு, அறிவியல் உள்ளிட்டவை இங்கு இடம்பெற்றுள்ளன.

இந்த தளங்கள் அனைத்தும் தமிழில் தகவல்களை வழங்கி வருகின்றன.

பரஞ்சோதி
17-11-2004, 07:16 AM
நன்றி திருவருள் அவர்களே!

தமிழ்மன்றத்தின் புகழ் எட்டு திக்கெங்கும் பரவி, மன்ற நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ வாழ்த்துகிறேன்.

இளசு
02-12-2004, 07:36 PM
அன்பின் திருவருள்..

செயல்வீரர் என அழைக்கலாமா உம்மை..!

உங்கள் ஈடுபாடு, செயல்திறன் -- மெச்சி வாழ்த்துகிறேன்..