PDA

View Full Version : சக்தி....



பிரியன்
14-12-2004, 04:43 PM
அன்பு நண்பர் பரஞ்சோதியின் அன்பு செல்லத்த்திற்கு

அன்னமவள்..
பூத்துவிட்டாள்
பூமித்தாயின் அழகை கூட்ட

இடம் தேடி அலைந்த
காதல் அடைக்கலமானது
உயிரும் சதையுமாய்
உன்னிடத்தில் .......

இனித்தது
என் கண்ணீர்
உன் முதல் அழுகைக்காக....

இசைதட்டுகள்
இனி தேவையில்லை எனக்கு..
நீ இருக்கையில்

என்னை
என்னவளை
அழகூட்ட வந்த

இளம் நெஞ்சே
வருக ! வளர்க ! வாழ்க !!

manitha
23-12-2004, 01:04 PM
என்னைப்போன்ற பலரின்
இதயங்களை
படம்பிடித்து காட்டியது
உங்கள் வரிகள்,
அனைத்தும் அருமை.

வாழ்த்துக்கள் ப்ரியன்

பரஞ்சோதி
16-02-2005, 06:42 PM
நண்பரே பிரியன், எனது நன்றிகளை எப்படி தெரிவிப்பது என்று தெரியவில்லை, என்னுள் எழுந்த உணர்ச்சிகளையும், எண்ணத்தையும் அப்படியே கவிதையாக படைத்திருக்கீங்க.

எங்கள் வீட்டில் இசைத்தட்டு, மற்றும் மற்ற சாதனங்கள் கூட துரு பிடிக்கத் தொடங்கிவிட்டது, காரணம் சக்தியின் வருகை, முழுநேரமும் அவரோடு தான் என்னுடைய காலத்தை செலவிடுகிறேன்.

pradeepkt
17-02-2005, 04:18 AM
அண்ணா,
அப்படியே சக்திக்கும் நல்ல இசையையும், மொழியையும் அறிமுகப் படுத்துங்கள்.
இப்போ நம்ம பேசுவது எதுவும் புரியுதோ புரியலையோ ஒரு சின்ன தாக்கத்தையாவது குழந்தைகள்கிட்ட ஏற்படுத்துமாம்.

சரி, சக்தி சித்தப்பா எங்கன்னு இன்னும் கேக்கலையா?

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
19-02-2005, 05:04 AM
இதை முன்பு கவனிக்கவில்லை...

அருமையான வரிகள்.. அன்பரே....

சக்தியின் அமுதமான அழுகையும்,
பேச்சும் இருக்கும்போது....
இனி இசைத்தட்டுக்கு என்ன வேலை...