PDA

View Full Version : எங்கே போவது......பிரியன்
27-12-2004, 04:28 PM
எங்கே போவது ....


பூகம்பத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் உயிர் நீத்த கணக்கிலடங்கா உயிர்களுக்கு எ‎ன் கண்ணீர் அஞ்சலி


ஏன் ?
ஏன் ?
‏இத்தனை வேகம்
உ‎ன் வடிவம் பொலிவாக்கிட
பல்லாயிரம் உயிர்கள்
உதிரும் சோகம் திணித்து


ஏ‎ன் ஏன்??
உ‎ன்னை தாய் என்று சொல்லி வளர்த்த
பிய்த்து எறியபட்ட எம்வீட்டு பிஞ்சுகளுக்கு
தெரிந்திருக்கது. உ‎ன் அதிர்வி‎ன் அர்த்தம் ??
தாயி‎ன் மார்புச்சூடென்று நினைத்திருக்கும்..
அவர் வாழும் போது கொண்டிருந்த
தாகம் தீர்க்கவில்லையே
பொங்கிப் புகுந்த உ‎ன் உவர் வெள்ளம்?/,


உயிரோடு இருந்த ஒவ்வொரு நாளும்
உணவுக்காக கடைக்கொடியில் நி‎ன்றவனுக்கு
மரணப் பரிவட்டம் சூட்டுகிறாயே..??
தினமும் செத்து வாழ்ந்தவனுக்கு
மரண வாழ்வும் கொந்தளிப்பில்
ஏ‎ன்?
ஏன்?


வணங்கும் வடிவில் எல்லாம் வந்து
வழக்கு தீர்க்கிறாயே ...
இல்லாதவர் வாழ்விற்கு
படைத்தவனும் பகையானால்


விடியலுக்கு எ‎ங்கே போவது ???
விடியலுக்கு எ‎ங்கே போவது ???

manitha
29-12-2004, 02:09 AM
Originally posted by priyan@Dec 28 2004, 01:28 AM
எங்கே போவது ....


பூகம்பத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் உயிர் நீத்த கணக்கிலடங்கா உயிர்களுக்கு எ‎ன் கண்ணீர் அஞ்சலி


ஏ‎ன் ஏன்??
உ‎ன்னை தாய் என்று சொல்லி வளர்த்த
பிய்த்து எறியபட்ட எம்வீட்டு பிஞ்சுகளுக்கு
தெரிந்திருக்கது. உ‎ன் அதிர்வி‎ன் அர்த்தம் ??
தாயி‎ன் மார்புச்சூடென்று நினைத்திருக்கும்..
அவர் வாழும் போது கொண்டிருந்த
தாகம் தீர்க்கவில்லையே
பொங்கிப் புகுந்த உ‎ன் உவர் வெள்ளம்?/,


93822இயற்கையன்னை
இறக்கமில்லாமல்
ஈன்ற பிள்ளைகளை
இறையாக்கியதை
கூறிய கவிதை வரிகள்
நெஞ்சை பாராமாகியது உங்களது கவிதை வரிகள்.

pradeepkt
29-12-2004, 03:01 AM
மனிதா,
எழுத்துப் பிழையா என்று தெரியவில்லை...
ஆனால் உண்மை.


"இறக்கமில்லாமல்"
மிகச்சரி - எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இறங்கி வந்து மக்களைக் காக்க வேண்டும். கடலையே கடவுளாக நம்பிய மக்களின் மனதில் இப்போது இயற்கையன்னை கொஞ்சம் உயரம் இறங்கித்தான் இருக்கிறாள்


"இறையாக்கியதை"
உண்மை. வேறில்லை. இரையாகவா ஆக்கினாள்? அன்னைக்கா அவ்வளவு பசி? அவர்களை "இறை" ஆக்கிவிட்டாளே? ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே!


ப்ரியன், நிஜமாகவே இச்சூழ்நிலையைப் பாரமாக்கின உங்கள் வரிகள்.
அஞ்சலி!!!!

பிரியன்
29-12-2004, 03:52 AM
நண்பர்களே நம் வாழ்நாள் கால துயரம் இது....


மன்ற நண்பர்கள் அனவரும் பாதிக்கபட்டவர்களுக்கு உதவுங்கள்...
முடிந்த உதவிகளை செய்யும்படி தெரிந்தவர்களிடமும் கேளுங்கள்..
அந்த மக்களின் துயர்துடைப்பில் நம் பங்கும் இருக்கட்டும்.........

gragavan
29-12-2004, 08:36 AM
Originally posted by pradeepkt@Dec 29 2004, 09:01 AM
மனிதா,
எழுத்துப் பிழையா என்று தெரியவில்லை...
ஆனால் உண்மை.


"இறக்கமில்லாமல்"
மிகச்சரி - எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இறங்கி வந்து மக்களைக் காக்க வேண்டும்.* கடலையே கடவுளாக நம்பிய மக்களின் மனதில் இப்போது இயற்கையன்னை கொஞ்சம் உயரம் இறங்கித்தான் இருக்கிறாள்


"இறையாக்கியதை"
உண்மை.* வேறில்லை.* இரையாகவா ஆக்கினாள்?* அன்னைக்கா அவ்வளவு பசி?* அவர்களை "இறை" ஆக்கிவிட்டாளே?* ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே!


ப்ரியன், நிஜமாகவே இச்சூழ்நிலையைப் பாரமாக்கின உங்கள் வரிகள்.
அஞ்சலி!!!!
93850
உண்மைதான் பிரதீப்! நானும் அந்த எழுத்துப் பிழைகளை ரசித்தேன். அவை கொடுக்கும் துயரங்கள் மிகுந்த வலிகளையும் மீறி.


அப்பப்பா!
எங்கள் சொந்தங்களைக்
கொண்டு போன தண்ணீர் மட்டுமல்ல
எங்கள் கண்ணீரும் உப்புதான்!
இரண்டுமே பரிமாண அளவில் மீறி!
இத்தனை நாள் கரிக்கவில்லை!
இன்றைக்குக் கரிக்கிறது உணவில்!
கடலே!
உப்பில்லாப் பண்டம்தானே குப்பைக்கு?
உன்னுப்பைத்தானே தின்றோம்!
எங்கள் உடம்பில் ஒட்டவில்லையா, என்ன?


இங்கே அலுவலகத்தில் நாங்கள் ஆண்டிறுதிக் கொண்டாங்களுக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். அதை நிறுத்தி விட்டோம். ஆண்டிறுதிக் கொண்டாட்டம் இல்லை. நிறுவனத்தில் அனைவரும் ஒரு நாள் சம்பளத்தை மீட்புப் பணிக்காகக் கொடுக்கிறோம். வேறு பொருட்களையும் சேகரிக்கின்றார்கள். இன்னமும் ஏதோ செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் என்னவென்று தோன்றவில்லை. இன்னும் சிலகாலம் கடலுணவு உட்கொள்வதை நிறுத்தி வைத்திருக்கிறேன்.


வேதனையுடன்,
கோ.இராகவன்


வதனரூபர் வந்தது கனவா? நினைவா?
http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4765

மன்மதன்
29-12-2004, 08:42 AM
சோகத்தை கவிதையாக்கிய ப்ரியனின் வரிகளில் வலிமை..
அன்புடன்
மன்மதன்

உதயா
30-09-2005, 11:22 AM
யுனிகோட் ஆக்கப்படாமல் உள்ளது?