PDA

View Full Version : வீர்சிங்கின் மேடை பேச்சு

lavanya
28-12-2003, 07:23 PM
வீர்சிங்கின் மேடை பேச்சு

வீர்சிங் ஒரு நாள் ஒரு பெரிய அரசியல் தலைவரின் சொற்பொழிவை கேட்க போயிருந்தான்.அந்த தலைவர் பேசியதை ஆர்வமுடன் கவனித்தான். அவர் சொன்னார் "நான் என்
மனைவியின் மடியில் படுத்திருந்த பொழுதை விட இன்னொருவரின் மனைவியின் மடியில்
படுத்திருந்த போதுதான் அதிக நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்திருக்கிறேன்..."
இப்படி சொன்னவுடன் கூட்டம் கொஞ்சம் திகைப்பாகவும் கோபமாகவும் தலைவரை
பார்த்தது. அந்த தலைவர் கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார் " அந்த இன்னொருவர்
என் அப்பா...அவரின் மனைவி என் அம்மா..."என்று சொன்னவுடன் கூட்டம் சிலாகித்து
கைதட்டியது...வீர்சிங் அதை நன்றாக குறித்து கொண்டான்...கொஞ்ச நாள் கழித்து
வெளியூரில் ஒரு பொதுமன்ற கூட்டத்துக்கு வீர்சிங்கை பேச அழைத்தார்கள். வீர்சிங்
அலங்காரமாய் மேடையேறி சிறப்பாக பேசுவதாக எண்ணிக்கொண்டு பேச்சின் நடுவில்
"நான் என் மனைவியின் மடியில் படுத்திருந்த பொழுதை விட இன்னொருவரின் மனைவியின் மடியில் படுத்திருந்த போதுதான் அதிக நிம்மதியாகவும் சந்தோஷமாகவும்
உணர்ந்திருக்கிறேன்..." என்று சொல்லி நிறுத்தினான்.கூட்டத்தில் சட்டென்று சலசலப்பு
கிளம்ப விர்சிங் சஸ்பென்ஸை உடைக்க அடுத்தது பேசப் போனான்.அவனுக்கு அடுத்தது மறந்து போய்விட்டது. "அந்த இன்னொருவர் வந்து ....வந்து....அந்த தலைவரின் அப்பாவின் மனைவி.....".அவ்வளவுதான் கூட்டம் வீர்சிங்கை அடி பின்னி எடுத்து விட்டது
----------------------------

வீர்சிங் கொஞ்ச நாள் அரசியல் வாழ்க்கையில் ரொம்ப பிஸியாக இருந்தான்.யாரும் அவனை
சந்திக்கவே முடியாத அளவுக்கு எப்போதும் ஏதாவது வேலை வந்து கொண்டிருந்தது....
ஒரு நாள் அவ்வளவு நெருக்கடியிலும் பாண்டா சிங் வீர்சிங்கை சந்தித்து பேச
அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி பேசிக்கொண்டிருந்தான். பாண்டா சிங் விர்சிங்கிடம்
கேட்டான். 'உன்கிட்டே பேசிக்கிட்டிருக்கவங்க ரொம்ப நேரம் உன்னை பேசி அறுத்தா
எப்படி அவங்களை கழட்டி விடுவே?" . வீர்சிங் சொன்னான் "ரொம்ப சுலபம்..என் பையன்
கிட்டே ஒரு ஐடியா சொல்லி வச்சிருக்கேன்...யாரும் வந்து பேசிக்கிட்டிருந்தா உடனே
என் பையன் வந்து அப்பா உங்களை தலைவர் உடனே வரசொன்னாராம்.ஆள் வந்திருக்கு"
என்பான் , வந்தவர்கள் கிளம்பி விடுவார்கள்"என்றான். மேற்கொண்டு பாண்டா சிங் ஏதோ
கேட்பதற்குள் ஜுனியர் வீர்சிங் அங்கு வந்து சொன்னான் "அப்பா உங்களை தலைவர் உடனே வரசொன்னாராம்.ஆள் வந்திருக்கு".

இளசு
28-12-2003, 09:47 PM
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹா...

அரசியல் அரங்குக்கு பொருத்தமான அம்சங்கள் அதிகம்
என் அண்ணா வீருக்கு..

கலக்குங்க லாவ்..
தொடரட்டும் அதிரடி அரசியல் வீர் காட்சிகள்..

puppy
29-12-2003, 04:40 AM
நல்லா இருக்கு லாவ்....இன்னும் கொடுங்க

மன்மதன்
29-12-2003, 08:34 AM
முதல் ஜோக்கை படித்தவுடன் என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் வடிவேலு காமெடி வந்துவிட்டது. உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி..........என்று வரும்.

Nanban
29-12-2003, 08:58 AM
முதல் ஜோக் நல்லா இருக்குது - நிறைய கேட்டுவிட்டாலும். இரண்டாவது ஜோக் அத்தனை சுகமில்லை.

poo
29-12-2003, 05:09 PM
தேர்தல் நேரமாச்சே...

இவரை எங்காச்சும் கடத்திக்கிட்டுபோய் வைக்கனும்.. தலை.. ஆட்டோவுக்கு சொல்லிவுடுங்க!!

பாரதி
29-12-2003, 05:27 PM
நல்லா இருக்கு லாவ்.

pgk53
30-12-2003, 12:48 AM
இரண்டு சிரிப்புகளுமே நன்றாகச் சிரிக்கவைத்தது.
நன்றி லாவண்யா.

அறிஞர்
02-01-2004, 08:22 AM
[quote]வீர்சிங் கொஞ்ச நாள் அரசியல் வாழ்க்கையில் ரொம்ப பிஸியாக இருந்தான்.யாரும் அவனை
சந்திக்கவே முடியாத அளவுக்கு எப்போதும் ஏதாவது வேலை வந்து கொண்டிருந்தது....
ஒரு நாள் அவ்வளவு நெருக்கடியிலும் பாண்டா சிங் வீர்சிங்கை சந்தித்து பேச
அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி பேசிக்கொண்டிருந்தான். பாண்டா சிங் விர்சிங்கிடம்
கேட்டான். 'உன்கிட்டே பேசிக்கிட்டிருக்கவங்க ரொம்ப நேரம் உன்னை பேசி அறுத்தா
எப்படி அவங்களை கழட்டி விடுவே?" . வீர்சிங் சொன்னான் "ரொம்ப சுலபம்..என் பையன்
கிட்டே ஒரு ஐடியா சொல்லி வச்சிருக்கேன்...யாரும் வந்து பேசிக்கிட்டிருந்தா உடனே
என் பையன் வந்து அப்பா உங்களை தலைவர் உடனே வரசொன்னாராம்.ஆள் வந்திருக்கு"
என்பான் , வந்தவர்கள் கிளம்பி விடுவார்கள்"என்றான். மேற்கொண்டு பாண்டா சிங் ஏதோ
கேட்பதற்குள் ஜுனியர் வீர்சிங் அங்கு வந்து சொன்னான் "அப்பா உங்களை தலைவர் உடனே வரசொன்னாராம்.ஆள் வந்திருக்கு".</span>

ஒரு முக்கிய விஷயமாக.. தலைவர் வீர்சிங்கை.. பார்க்க வந்தாராம்.. சிறிது.. நேரம் பேசியவுடன்...ஜுனியர் வீர்சிங் அங்கு வந்து சொன்னான் "அப்பா உங்களை தலைவர் உடனே வரசொன்னாராம்.ஆள் வந்திருக்கு".

தலைவர் அதை கேட்டு... "???????????"....
என்ன பண்ணியிருப்பார்.???

அப்புறம்... உறுப்பினர் பதவிக்கே வேட்டுதான்................

பாவம் வீர்சிங்.............

இளசு
02-01-2004, 05:23 PM
நல்லா இருக்கு லாவ்.

அண்ணன் சொல் தட்டாத அன்புத்தம்பியே

இப்படி பதில் எழுதச் சொன்னது என் படைப்புகளுக்குத்தான்..

மற்றவங்களை "நல்லா" பாராட்டி எழுதலாம். சரியா பாரதி? :D

பாரதி
02-01-2004, 05:28 PM
நல்லா இருக்கு லாவ்.

அண்ணன் சொல் தட்டாத அன்புத்தம்பியே

இப்படி பதில் எழுதச் சொன்னது என் படைப்புகளுக்குத்தான்..

மற்றவங்களை "நல்லா" பாராட்டி எழுதலாம். சரியா பாரதி? :D

நீங்க சொல்றது சரிதாண்ணே... ஆனா சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்..? :roll:

இளசு
02-01-2004, 05:43 PM
பாரதியின் மனப்பாத்திர கொள்ளளவை ஓரளவு அறிந்த அண்ணன் சொல்கிறேன்..

படைப்பு, பாராட்டும் கருத்துகள் வெள்ளமாய் உன்னிலிருந்து
மன்றம் மொண்டு கொள்ள
முதல் அகப்பை : உன் ஊக்கம், அமையும் நேரம்..
அடுத்த அகப்பை : உன் அண்ணனின் அடித்து/அணைக்கும் கை..

பாரதி
03-01-2004, 04:26 PM
முதல் அகப்பை : உன் ஊக்கம், அமையும் நேரம்..
அடுத்த அகப்பை : உன் அண்ணனின் அடித்து/அணைக்கும் கை..

உங்கள் அகப்பை எனக்குப் புரிந்தது.
முயற்சிக்கிறேன் அண்ணா... முடியுமா என்று தெரியவில்லை.

பைத்தியகாரன்
04-01-2004, 09:41 AM
வீர்சிங்கை விட இங்கு நடக்கும் ச்ண்டைகள் சூப்ப்ர்.