PDA

View Full Version : 2. ஆவின்பால் - பதுமைகள் சொல்லாத விக்கிரமாதித்தன் கதைகள்



gragavan
19-01-2005, 03:59 AM
முந்தய பாகத்திற்கு இங்கே சொடுக்கவும்.
http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4772

3. ஆவின்பால்

அரசகுமார் கடத்தப்பட்டதிலிருந்தே அன்புச்செல்வருக்குக் கையும் அள்ளவில்லை. அள்ளியதை வாயும் மெல்லவில்லை. தள்ளமாட்டாத வயதிலும் காலையில் பத்து இட்டிலி இஇந்த வீட்டிலும் பகலில் கறிச்சோறு அந்த வீட்டிலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர், தடுமாறித்தான் போய்விட்டார். ஏற்கனவே கருநாட்டில் இஇருந்து வரவேண்டிய தயிரின் அளவு குறைவாக இஇருந்ததை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள் அவர் நினைவிற்கு வந்தன.

அப்போது செந்நாட்டை வெற்றிச்செல்வி என்ற பெண்மணி ஆண்டுகொண்டிருந்தார். இஇருநாடுகளுக்கும் பொதுவான பால்விரி பால்பண்ணை கருநாட்டில் இஇருந்தது. அங்கிருந்து வரவேண்டிய செந்நாட்டின் பங்கு நாளுக்குநாள் குறைந்துகொண்டேயிருந்தது. இஇதை எல்லோரும் கண்டித்து வந்தனர். ஆனால் தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் என்று சொல்லிவிட்டனர் கருநாட்டினர். பாலில்லாமல் வாடும் அவர்கள் நாட்டு கன்றுகளுக்குத் தயிர் ஊற்றி வளர்த்தனர். யார் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

அப்படியிருக்கையில் ஒருநாள் வெற்றிச்செல்வி அம்மையார் இஇருபது குதிரைகள் பூட்டிய தேரை எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கிச் சென்றார். அங்கிருந்த கருவாட்டம்மன் கோயிலில் சாமி கும்பிட்டவர் அங்கேயே அமர்ந்துவிட்டார். அங்கேயே நோன்பும் நோற்கத் தொடங்கினார். அந்த நோன்பானது கருநாட்டிலிருந்து தயிர் ஒழுங்காக வரும்வரை தயிருண்ணா நோன்பு. ஏழை எளிய மக்களைக் கண்டால் அவருக்கு உள்ளம் உருகும். அதனால் அந்த நோன்பைத் தொடங்கினார். வெற்றிச்செல்வியாருக்கு பணக்காரர்களைக் கண்டாலே ஆகாது. அவர்கள் ஆணவத்தை அழிக்க இஇரவோடு இஇரவாக அவர்களை வீட்டை விட்டுத் துரத்தி அவர்தம் பொருட்களைத் தன்வசமாக்கிக் கொண்டார். அப்படிப்பட்ட அம்மையார் தயிருண்ணா நோன்பைத் தொடங்கியதும் கருநாட்டைக் கலவரம் சூழ்ந்தது. அங்கிருந்து ஆயிரமாயிரம் செந்நாட்டினர் வீடு வாசல் இஇழந்து செந்நாட்டிற்கு ஓடிவந்தனர். பின்னர் மாமன்னர் மனிதஏறு ஒரு உறியில் தயிர் தந்து அம்மையாரின் நோன்பை முடித்துவைத்தார்.

அப்படிப்பட்ட நிலை இஇப்பொழுது ஏற்படக்கூடாது என்பதில் அன்புச்செல்வர் உறுதியாக இஇருந்தார். யாதவரிடமும் மலையம்மாளிடமும் அரசகுமாரை மீட்டுத்தருவதாக உறுதிகூறினார். பின்னர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரேமரூபன் என்ற அமைச்சர் ஆவின்பாலைப் பற்றி எடுத்துச் சொன்னார். ஆவின்பால் ஒரு ஏடு நிலையம் வைத்திருந்தார். பால் என்றால் ஏடு இஇருப்பத்தில் வியப்பென்ன. அந்த ஏடுகள் நாடெங்கும் மக்களிடையே பரவின. மாரப்பனைப் பிடிக்க படைவீரர்கள் காட்டிற்குள் சென்று பலமுறை தோல்வியுடன் திரும்பிய அதே காலகட்டத்தில் தன்னந்தனியாகக் காட்டிற்குச் சென்று மாரப்பனைக் கண்டு வந்தவர் ஆவின்பால். மாரப்பன் ஒரு கட்டுக்கதை என்று மற்ற பகுதி மக்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், மாரப்பனை ஓவியமாக வரைந்து அதை மக்களிடத்தில் காட்டி மக்களைப் பரவசப்படுத்தியவர். அத்தகைய புகழ் பெற்ற ஆவின்பாலைப் பற்றி பிரேமரூபன் சொன்னதும் அன்புச்செல்வர் ஏற்றுக்கொண்டார். அவரையும் வரவழைத்தார்.

ஆவின்பாலுக்கும் மாரப்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்னவென்றால் தாடி. ஆவின்பாலும் மாரப்பனைப் போலவே நீண்ட தாடி வைத்திருந்தார். மாரப்பனை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று மன்னர் கேட்டுக்கொண்டதும் அகமகிழ்ந்து போனார் ஆவின்பால். இத்தகைய பேறு வேறு யாருக்கு வாய்க்கும் என்று பெருமை கொண்டார். முன்பு மாரப்பனைப் பார்த்தபொழுது மாரப்பன் கொடுத்த மான்கறியும் மயிற்கறியும் இஇன்று அவரை நாவூறச்செய்தன. நாக்கைத் தீட்டிக்கொண்டு காட்டிற்குப் புறப்பட்டார்.

புறப்படும் முன் யாதவர் அவரைத் தனிமையில் சந்தித்து எப்படியாவது அரசகுமாரை அழைத்துக்கொண்டு வரவும். அதற்காக எவ்வளவு பொன் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்க ஆயத்தமாகயிருப்பதாகவும் சொன்னார். ஆவின்பாலும் இயன்றதைச் செய்வதாக உறுதி கூறினார். பின்னர் மலையம்மாளும் அவர்தம் மக்களும் ஆவின்பாலைச் சந்தித்தனர். மலையம்மா கண்ணீர் உகுத்தார். அவருக்கு வேண்டிய தைலங்களையும் குளிகைகளையும் கொண்ட பையைக் கொடுத்து அரசகுமாரிடம் கொடுக்கச் சொன்னார். பையைத் திறந்த ஆவின்பால் அதிர்ந்துபோனார். உள்ளே எல்லாவித தைலங்களும் குளிகைகளும் இருந்தன. மலையம்மாளிடம் பின்வருமாறு கேட்டார்.

"என்னம்மா இஇது. உலகிலுள்ள அனைத்து மருந்து வகைகளும் இஇதில் இஇருக்கிறதே. என்னதான் கோளாறம்மா அவருக்கு?"

துக்கம் மேலிட விடையறுத்தார் மலையம்மா. "அதுதானப்பா எனக்கும் தெரியவில்லை. என் பிள்ளைகளுக்கும் தெரியவில்லை. அவருக்கு ஏதேனும் உடற்கோளாறு இஇருந்திருக்க வேண்டும். அரவன் அவருக்கு ஏதோ ஒன்று கொடுப்பான். அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் அங்கே என்ன பாடுபடுகிறாறோ! அதனால்தான் வைத்தியர் வீட்டிலிருந்த அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டோமப்பா! அவர் சுகமாக இருக்க வேண்டும்!" பேச்சு முடிந்ததும் ஓவெனக் குரலெடுத்து அழத்தொடங்கினார். அதைப்பார்த்த மகன்களும் அழத்தொடங்கினர். அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு காட்டிற்குப் புறப்பட்டார். புறப்படும் முன் தன் குலதெய்வத்தை வணங்கிவிட்டுப் புறப்பட்டார். காட்டின் எல்லையை அடைந்தார். உண்மைச்சிறப்புக் காட்டின் ஓரத்தில் தன்னை உள்ளே அழைத்துச் செல்லவரும் மாரப்பனின் ஆளுக்காகக் காத்திருந்தார் ஆவின்பால்.

அவன் வந்தானா?

(தொடரும்...

பாரதி
19-01-2005, 05:56 AM
அன்பு இராகவன்....
நடந்ததை நகைச்சுவையாக சொல்வதற்கும், அனைவரும் புரியும் படி நையாண்டியாக சொல்வதற்கும் தனித்திறமை வேண்டும்தான்.. உங்களிடம் அது ஏராளமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

gragavan
20-01-2005, 04:42 AM
பாராட்டுகளுக்கும் ஊக்கங்களிற்கும் நன்றிகள் பல பாரதி.

அன்புடன்,
கோ.இராகவன்