PDA

View Full Version : ஒரு வார்த்தை



thamarai
21-02-2005, 07:43 PM
ஒரு வார்த்தை...

முதல்பார்வையில் மலர்ந்த காதலினால்
மோகனராகத்திலும் ஓர் மெளனராகமாய்
இதயத்திற்குள் இதயராகமாய்
இசைமீட்டுகின்ற உன் நினைவலைகள்

உன் செவ் இதழ் புன்னகைக்குள்
உறைந்து போகின்ற என் மூச்சுக் காற்றே...
என் காதல் தேவதையே.. ஒரு முறையேனும்
உன்மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ

பின்னிய நீண்ட கருங்கூந்தலுக்குள்
பின்னிவிட்ட என் மனதின் ஏக்கம் தீர
மீண்டும் காதல் பார்வையினை ஒருமுறையேனும்
கன்னியவள் என்னை பார்த்திட் மாட்டாயா

உயிர் என உன்னை நிதம் நினைத்து
உன்னை என்னுள் சிறைவைத்து
நிஜமாய் என்றும் என்னுடன் நீயிருக்க
நிழலாய் உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்த என் கனவுகளுக்குள் மிதந்தே
புல்லரித்துப் போகின்ற என் ரோமங்களை
அமைதியாய் அடங்கிட ஒருமுறை ஓரேஒருமுறை
அன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை
சொல்வாயா என் செல்லமே...

அறிஞர்
22-02-2005, 03:31 AM
புத்துணர்வுக்கு ஒரு பார்வையும்.....

புத்துயிர்க்கு.. ஒரு வார்த்தையும்...... எத்தனை முக்கியம்.....

இந்த வார்த்தைக்குதான் ஏங்கும் உயிர்கள்.. எத்தனை.......

நன்றாக உள்ளது.. தாமரை....

வாழ்த்துக்கள்....

babu4780
22-02-2005, 03:46 AM
என்னுள் ஆட்டோகிராப் ஐ கிளறுகிறீர்கள், இந்த மாதிரி கவிதை ஏழுதி!!
-அருமை.

pradeepkt
22-02-2005, 04:10 AM
பெரி ... உனக்குள்ள இன்னொரு பெரி தூங்கிட்டு இருக்கானா.
எதுனாலும் சொல்லுறா.
மனசு பாரமாவது குறையும்.

அன்புடன்,
பிரதீப்

gragavan
22-02-2005, 04:37 AM
தாமரை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். மோகன ராகத்திலும் மௌன ராகமாய்.......பிண்ணிய கூந்தலுக்குள் பிண்ணிய மன ஏக்கம். நல்ல வளம். கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

ஆதாரத்தின் ஆதாரம் எது?
http://www.tamilmantram.com/new/index.php?...st=135&p=95725& (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=135&p=95725&)

gragavan
22-02-2005, 04:46 AM
Originally posted by pradeepkt@Feb 22 2005, 10:10 AM
பெரி ... உனக்குள்ள இன்னொரு பெரி தூங்கிட்டு இருக்கானா.
எதுனாலும் சொல்லுறா.
மனசு பாரமாவது குறையும்.

அன்புடன்,
பிரதீப்

பிரதீப், பெரிக்குள்ள மட்டுமல்ல எல்லாருக்கும் கண்டிப்பா இன்னொருத்தர் தூங்கிக்க்கிட்டு இருப்பாங்க. முதல் காதல்களில் முக்கால்வாசிக்கும் மேல் மூச்சு முட்டி மாண்டவைதான். அதனாலதான் கலியாணம் செஞ்ச பல பேரு ஒழுங்கா குடும்பம் நடத்துறாங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

ஆதாரத்தின் ஆதாரம் எது?
http://www.tamilmantram.com/new/index.php?...st=135&p=95725& (http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4418&st=135&p=95725&)

babu4780
22-02-2005, 06:01 AM
Originally posted by pradeepkt@Feb 22 2005, 10:40 AM
எதுனாலும் சொல்லுறா.
மனசு பாரமாவது குறையும்...


நீங்களாகவே அது 'பாரம்' ணூ முடிவுக்கு பன்னீட்டீங்க ?? இது அநியாயம்

thamarai
22-02-2005, 06:20 AM
அறிஞர், babu4780, இராகவனுக்கு நன்றிகள்.

thamarai
22-02-2005, 06:22 AM
என்னுள் ஆட்டோகிராப் ஐ கிளறுகிறீர்கள், இந்த மாதிரி கவிதை ஏழுதி!!
உங்கள் ஆட்டோகிராப் நினைவுகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் தானே..?

thamarai
22-02-2005, 06:24 AM
தாமரை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். மோகன ராகத்திலும் மௌன ராகமாய்.......பிண்ணிய கூந்தலுக்குள் பிண்ணிய மன ஏக்கம். நல்ல வளம். கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கள்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

பிரியன்
22-02-2005, 06:08 PM
நல்ல பார்வை,எளிமையான நடை.ஆழமான அர்த்தங்கள் என அருமையான கவிதைதந்த தாமரைக்கு நன்றிகள்...

kavitha
22-02-2005, 11:25 PM
நல்லாருக்கு தாமரை.. :)

thamarai
23-02-2005, 05:50 AM
பிரியன், கவிதாவுக்கு நன்றிகள்.