PDA

View Full Version : புதிய தொழில்நுட்பம் - உள்ளிணைந்த முறைமை (Embedded S



lavanya
28-12-2003, 07:21 PM
புதிய தொழில்நுட்பம் - உள்ளிணைந்த முறைமை (Embedded System) - 1

நன்றி : ஜெஸிமா - கம்ப்யூட்டர் உலகம்
ரீனா - ஷெப்ரோ டெக்
அனுஷா - பிளைடெக் சொல்யூஷன்

<span style='color:#0000ff'>ஒரு பொம்மை கடையில் அரசியல்வாதி ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் பொம்மைகள் வாங்கி சென்றனர். இவர்கள் வாங்கி சென்றது ஒரே வகையை சார்ந்த பேசும் பர்பி பொம்மைகள்.
ஒருநாள் பொம்மை கடைக்காரர் ஆசிரியரின் வீட்டுக்கு ஒரு வேலையாக சென்றார்.அப்போது
அங்கிருந்த பொம்மையை மெதுவாக தடவி கொடுத்தார். அது கடைகாரருக்கு வரவேற்பு தந்து
அமரும்படி கூறியது.

அதே பொம்மை கடைகாரர் பிறிதொரு நாள் அரசியல்வாதியின் வீட்டிற்கு செல்லும்படி
நேரிட்டது.அங்கும் இவரது கடையில் வாங்கிய பொம்மை இருந்தது.அதை மெதுவாக
தொட்டவுடன் "ச்சீ தொடாதே! வெளியே போடா..." என்றது.

ஒரே வகையை சேர்ந்த இரண்டு பொம்மைகள் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வதைப்
பார்த்து கடைக்காரருக்கோ ஆச்சரியம்.

நீதி : பொம்மைகள் ஒரே வகையை சார்ந்தவகையாக இருந்தாலும் அது எங்கு,எப்படிப்பட்ட
சூழ்நிலைகளில் வளர்கிறது என்பதை பொறுத்தே அதன் செயல்பாடு இருக்கும்.</span>
என்னடா இது புதிய தொழில்நுட்பம் பற்றி தலைப்பிட்டு விட்டு பழைய அம்புலிமாமா
கிளி கதையை பத்தி சொல்றேனே என்று பார்க்கிறீர்களா? இது கதை அல்ல...தொழில்நுட்பம்
எம்படடு சிஸ்டம் என்னும் புதிய வகை தொழில்நுட்பம்.

இப்புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் பேசும் கிளியைப் போல
மட்டுமல்ல உயிருள்ள விலங்குகளை போன்றே வளரவும் மனிதர்களுடன் பழகவும்
செய்கின்றன.எல்லாம் கணிப்பொறி விந்தைகள்.
எம்படடு சிஸ்டம் - ஒரு அறிமுகம்
Embed - என்ற ஆங்கில சொல்லுக்கு உட்பொதி,உள்ளிணை என்று பொருள். Embedded என்றால் உட்பொதிக்கப்பட்ட,உள்ளிணைந்த என்று பொருள் கொள்ளலாம்.

எனவே எம்படடு சிஸ்டம் என்றால் கார்,டிவி,பொம்மை போன்ற கணிப்பீட்டு செயல் திறன்
அற்ற சாதனங்களில் உட்பொதிக்கப்பட்ட அல்லது உள்ளிணைக்கப்பட்ட கணிப்பொறி முறைமை என்று பொருள்.

உட்பொதிக்கப்பட்ட கணிப்பொறியானது குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மட்டுமே கொண்டது.எடுத்துக்காட்டாக வண்ணத்திரையில் ஒரு வலைத்திரை காண்பிக்க செய்வது
(Web Page Display in TV Screen).

எம்படடு சிஸ்டத்தில் என்ன இருக்கும்...?
* குறிப்பிட்ட பணிகளின் தன்மைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட ஹார்டுவேர் சாதனம்.
* அதை இயக்குவதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
* சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான மென்பொருள்கள்.
* இவற்றைப் பயனாளர் இயக்குவதற்கான புஷ் பட்டன்,நியூமரிக் டிஸ்பிளே,எல்சிடி திரை.
சுருக்கமாக சொல்வதென்றால் பயனாளர் இடைமுகப்பு (User Interface)

1992 ஆம் ஆண்டு PC/104 ஸ்டாண்டர்ட் என்ற தரமுறையானது எம்படடு சிஸ்டம் எப்படி
இருக்க வேண்டும் என ஒரு வரையறை தந்தது.இது ஐஎஸ்ஏ பஸ் ஸ்பெஷிபிகேஷனின்
விரிவுபடுத்தப்பட்ட தரமுறையாகும்.

எம்படட் ஆபரேட்டிங் சிஸ்டங்கள்
எம்படடு சாதனத்தின் ஹார்டுவேர் பகுதியானது சிப் ஒன்றை கொண்டிருக்கும்.இதில்தான்
நினைவகம் மற்றும் இயக்க தொகுப்புகள் மற்றும் உபகர செயலாற்றும் மென்பொருள்
எழுதப்பட்டிருக்கும். இந்த மென்பொருள்கள் பாக்கெட் பிஸிக்களில் (Palm top)மற்றும்
இன்றி தொழிற்சாலைகளிலும் தானியங்கி சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
எம்படட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயக்கதொகுப்பு எம்படட் இயக்க முறைமை
(Embeded Operating System) என அழைக்கப்படுகிறது.

இத்தகைய்ய இயக்க தொகுப்புகளே உள்ளங்கை கணிணிகள்,உயர்வகை செல்லிடப்
பேசிகள்,எம்பி3 பிளேயர்களில் பயன்படுகின்றன.

எம்படட் இயக்க தொகுப்பு விண்டோஸ்,லினக்ஸ்,மேக் என மூன்று ரகங்களில்
துவக்கத்தில் வெளியாகின.இன்றைக்கு முப்பதுக்கு மேற்பட்டவை புழக்கத்தில் இருக்கிறது.

வீட்டுப் பயன்பாட்டு பொருளில் எம்படட் சாதனங்கள் (Embedded Materials in Home Applience)
பிரிட்ஜ்,வாஷிங் மெஷின்,ஏஸி - யிலிருந்து டிவி,மைக்ரோ ஓவன் எல்லாம் இனி எம்படட் மயமாகப் போகின்றன. இனி இணையம் வழியே உங்கள் வீட்டு ஏஸியின் வெப்ப
நிலையை மாற்றலாம்.ப்ரிட்ஜில் இ-மெயில் செக் செய்யலாம்.டிவி ஓடிக்கொண்டிருக்கும்
போதே இணையம் போகலாம்.

எல்ஜி நிறுவனத்தாரின் தயாரிப்பான டிஜிட்டல் டயாஸ் (Digital DIOS)என்பது ஒரு ரெப்ரிஜிரேட்டர் மாடல்.இதை பயன்படுத்தி பிரிட்ஜுக்கான பயன்பாடுகள் தவிர இணையம்,
மெயில் சோதித்தல்,வீடியோ போன் அழைப்புகள் எல்லாவற்றையும் செய்யலாம்.அதனுள்
அப்படிப்பட்ட பிரம்மாண்ட வசதிகள் பொருத்தப்பட்டு வந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் டிஜிட்டல் நெட்வொர்க் ரெப்ரிஜிரேட்டர் (Digital Refrigirator
Network) என்பது கொஞ்சம் ஓவராய் போய் விடியோ கான்பரன்ஸ் ,கீ போர்டு வசதிகளுடன்
என்று அசர வைக்கும் அம்சங்களுடன் இருக்கிறது. இதில் உங்கள் திட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு திட்டமிடல் மேலாளாரும் (Shedule MAnager) இன்றியமையாத நாட்களை
நினைவுபடுத்த ஒரு அலாரமும் உண்டு. சமயத்தில் மெயிலும் பார்க்கலாம்.மெகா சீரியலும்
பார்க்கலாம்.

எல்ஜியின் அண்மை வெளியீடுகளான வாஷிங் மெஷின்,மைரோ ஓவன் இரண்டுமே கம்ப்யூட்டருன் இணைத்துப் பயன்படுத்தும் வசதி கொண்டதாக வந்திருக்கிறது.இதற்கு ஒரு
கேபிள் இணைப்பாக செய்கிறது.வாஷிங்மெசின் தொடர்பான
புரோக்ராம்கள்,இணையத்தளங்களை தானாக பதிவிறக்கம் செய்து கொண்டு
அதற்கேற்றார்போல் துவைத்தல் பணிகள் நடைபெறும் ( என்ன இருந்தாலும் என் புருஷன் அடிச்சி துவைக்கிறா மாதிரி இந்த மெஷின் துவைக்குமா - கீழவாசல் பாக்கியம்)

சமையலுக்கு பயன்படும் மைக்ரோ ஓவன் ஆனது ஒரு உள்ளிணைந்த மோடத்தை
கொண்டது.இதைப் பயன்படுத்தி சமையல் தொடர்பான வெப் தளங்களை தானே அக்ஸஸ்
செய்து கொள்ளும்.மேலும் இது பல்வேறு விதமான உணவுவகைகளுக்கான மைக்ரோவேவ்
நிலைகள்,சமைக்கும் நேரம் ஆகியவற்றை தானியங்கி முறையில் பதிவிறக்கி கொள்ளும்.

ஐபிஎம் நிறுவனமும் கேரியர் நிறுவனமும் இணையத்தின் வழி இயக்கும் வகையில்
ஏர் கண்டிஷன்களை தயாரிக்கின்றன.www.myappliance.com என்ற சேவையின் வழியாக
ஏர்கண்டிஷனிரின் வெப்ப நிலையை கட்டுபடுத்துவதுடன் இணையம் வழியாகவே ஆன்/
ஆப் செய்து கொள்ளலாம்.

(இன்னும் எழுதுவேன்)

இளசு
28-12-2003, 10:00 PM
என் மனமார்ந்த, வியப்பான பாராட்டுகள் லாவ்.
கணினி அறிவாளிகள் - இக்கட்டுரையின் உதவியாளர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.

நிறைய தெரிந்துகொண்டேன்.
ஜப்பான் சிறுவர் -சிறுமிகள், வளர்ந்தவர் அனைவரையும் முன்பு ஆட்டிவைத்த
சிறப்பு பொம்மைகள் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போதும் அந்த ஜூரம் உள்ளதா?

வானொலியைத் தவிர மற்ற சாதனங்கள் நம் நடமாட்டத்தைக் கட்டிப்போட்டு
விடுகின்றன.

மாவுக்கல்லில் ஆட்டும்போது உடற்பயிற்சி.
மாவு மெஷினில் சும்மா அதை அவ்வப்போது தள்ளிக்கொண்டு, தேமேன்னு
மற்ற நேரம் வேடிக்கைப் பார்ப்பது - மன அழற்சி..

பாக்கியத்தின் கணவர் பாட்டுப்பாடிக்கொண்டே ஜாலியாக (???)துவைப்பது இப்போது..
பல்வேறு புரோகிராம்களில் டிடர்ஜெண்ட், கண்டிஷனர் என்று உடலையும்
வருத்தாமல், விலகிப்போகவும் விடாமல் கட்டிப்போடும் வாஷின் மெஷின்கள்..
தானே சமாளிக்கும்படியான புரோகிராம்கள் வரை ஓகே
இன்னும் இ -மெயில் உள்பட புது அவதாரம் எடுத்தால்...???

ப்ரிட்ஜ் வெப்பநிலை மாற்ற, மைக்ரோவேவ் சிந்தனைச் சமையல் செய்ய கணினி ஓக்கே..
அங்கே வைத்து வீடியோ கான்பெரன்ஸ் நடத்த வேண்டியே ஆகணுமா என்ன?

மைக்ரோவேவ், ப்ரிட்ஜ் எதிரேயே கனநேரம் செலவழிக்கும் கன தீனிக்காரர்களுக்கு (அமெரிக்கா?)பயன்படுமோ?

(இதெல்லாம் அச்சு - பிச்சு கேள்விகள்...கண்டுக்கவேணாம்..)


உட்பொதிக்கபட்ட என்ற சொற்றொடரை மிகவும் ரசித்தேன்.
எழுத்தில் என் குரு நீங்கள். மீண்டும் பாராட்டுகள்.

poo
29-12-2003, 05:43 PM
படிக்க படிக்க வியப்பாய் இருக்கிறது...

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?????!!!

உபயோகமான விஷயங்கள்... உருப்படியாய் நாலும் தெரிந்துகொள்ள வைக்கும் அக்காவிற்கு நன்றி!!

பாரதி
29-12-2003, 05:52 PM
மிகவும் அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் லாவ். பாராட்டுக்களும் நன்றியும். இன்னமும் எழுதுங்க... அதுதான் எங்களுக்கு வேணும். (அது சரி... கீழவாசல் பாக்கியம் யார்?)

poornima
11-01-2009, 02:01 PM
உள்ளிணைந்த தொழில்நுட்பம் இன்று எல்லாவற்றிலும்...