PDA

View Full Version : சானியா முன்னேறுகிறார்



அறிஞர்
01-03-2005, 05:52 PM
இந்திய மங்கை..... துபாய் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இரண்டாவது ரவுண்டில்.. நடப்பு U S சாம்பியனை வென்றுள்ளார். இது மிகப்பெரிய முன்னேற்றம்...

வெற்றிக்காண வாழ்த்துக்கள்...

அறிஞர்
01-03-2005, 05:55 PM
தரம் 97லிருந்து... இன்னும் முன்னேறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

இந்த போக்கில் சென்றால்... இந்த ஆண்டில் முதல் 25 இடத்திற்குள் வந்துவிடுவார்....

பரஞ்சோதி
02-03-2005, 03:19 AM
நன்றி அறிஞரே!

எங்கே தமிழ்மன்றத்தில் விளையாட்டு பிரியர்களை காணவில்லையே என்று நினைத்தேன்.

சானியா முதல் சுற்று வென்றதும் சொன்ன வார்த்தை "வெல்ல முடியாதவர்கள் என்று யாரும் இல்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இந்தியாவின் தேவதையாக சானியா மின்னுகிறார், விரைவில் கிரிக்கெட் பிரியர்களையும் டென்னிஸ் விரும்பி பார்க்கும் நிலைக்கு கொண்டு வருவார்.

மேலும் உலக தரத்தில் முதல் 25 இடங்களுக்கும் வரும் திறமை படைத்தவராக தோன்றுகிறார். சர்வீஸ் மட்டும் இன்னமும் வேகமாக போட்டால் அவரது வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.

அறிஞர்
02-03-2005, 04:33 AM
அவருடைய ஆட்டத்தை பார்க்க கொடுத்து வைத்துள்ளது உங்களுக்கு....

நம் மக்களையே காணோமே.. என்னாச்சு

mythili
02-03-2005, 04:55 AM
நானும் நியூஸ் படித்தேன்.....தகவலுக்கு நன்றி அறிஞரே....:)

கால் இறுதி போட்டி எப்போது?

அன்புடன்,
மைத்து

அறிஞர்
02-03-2005, 05:53 AM
Originally posted by mythili@Mar 2 2005, 01:55 PM
கால் இறுதி போட்டி எப்போது?

அன்புடன்,
மைத்து



நாளை (03/03) என்று நினைக்கிறேன் மைது....

poo
02-03-2005, 08:10 AM
எந்த தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறதென தெரியுமா?!!


இவரது ஆட்டம் என்ன ஆனதென தெரிந்துகொள்ள தினமும் அதிகாலையில் செய்தி பார்க்கிறேன்..

பரம்ஸ் சொல்வதுபோல கிரிக்கெட் ப்ரியர்களை தன்வசம் இழுக்கும் டென்னிஸ் கங்குலி..புலி!


(இவர் கங்குலியின் சாயலில் இருக்கிறார்!!)

pradeepkt
02-03-2005, 08:22 AM
சானியா,
இந்திய மகளிர் டென்னிஸக்கு ஒரு மைல் கல்லாக விளங்குகிறார்.
அது மட்டுமல்ல, வாழ்வில் முன்னேறத் துடிக்கும் எத்தனையோ இளமைப் பட்டாளங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் மாறிவிட்டார்.
அரசியல்வாதிகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும் இணையாக ஹைதராபாதில் அவரது கல்லூரியில் அவருக்குக் கொடுத்த வரவேற்பைப் பேருந்தில் இருந்த படியே பார்க்க நேர்ந்தது. பெருமிதத்தில் நெஞ்சம் நிறைந்தது.

இன்னும் எவ்வளவோ இருக்கு சானியாவுக்கு. மிச்சம் வையுங்கள் வாழ்த்துகளை.

அன்புடன்,
பிரதீப்

பரஞ்சோதி
02-03-2005, 09:52 AM
டிடி தொலைக்காட்சி செய்தியில் கூட சானியாவின் டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதி கூட காட்டுவதில்லை.

இங்கே யூரோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். இலவசமாக தெரிகிறது.

பரஞ்சோதி
02-03-2005, 09:55 AM
நம்ம சானியா மிர்ஸா ஆஸ்திரேலியா ஓப்பன் சாம்பியன் செரினா வில்லியம்ஸ் உடன் விளையாடிய போட்டியை பார்த்தேன், செரினாவுக்கே தண்ணீர் காட்டி விட்டார், அருமையான ஆட்டம்.

அனுபவமும், சர்வீஸ் வேகம் இல்லாத காரணத்தால் மட்டுமே அந்த போட்டியில் தோற்றார்.

தற்போது மகளிர் டென்னிஸில் ஜெயண்ட் கில்லராக தோற்றமளிக்கிறார்.

அறிஞர்
02-03-2005, 11:46 AM
கொடுத்துவைத்தவர்... நண்பா... எனக்கு பார்க்கும் வசதியில்லை...

†தாராபாத்தில் கொடுத்த வரவேற்பு பற்றி பத்திரிக்கையில் படித்தேன்...

பரஞ்சோதி
03-03-2005, 03:55 AM
Originally posted by அறிஞர்@Mar 2 2005, 03:46 PM
கொடுத்துவைத்தவர்... நண்பா... எனக்கு பார்க்கும் வசதியில்லை...




அறிஞர் அவர்களே!

கொடுத்து வைக்க எத்தனை திட்டுகள் வாங்க வேண்டியிருக்குது தெரியுமா?

சீரியல்ஸ் பார்க்க முடியலையே, எப்போ பாரு விளையாட்டு தான் - இது அம்மா.

புது படம் சிடி வாங்கி ஒரு வாரம் ஆகுது, திருப்பி கொடுக்க வேண்டும், உங்க விளையாட்டை கிரிக்கெட்டோடு நிறுத்தக்கூடாதா - இது மனைவி.

நர்சரி ரைம்ஸ் இன்றைக்கு ஏன் போடவில்லை, சாமி பாட்டு ஏன் போடவில்லை, என்ன ஒரே காட்டு கத்தலாக இருக்கு, ஒன்றுமே புரியலையே - இது சக்தி.

இத்தனைக்கும் இடையில் விளையாட்டு பார்க்க கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.

அறிஞர்
03-03-2005, 06:59 AM
Originally posted by பரஞ்சோதி@Mar 3 2005, 12:55 PM
இத்தனைக்கும் இடையில் விளையாட்டு பார்க்க கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.



இதெல்லாம்.. இன்ப தொல்லைகள்.. நண்பா... இது மாதிரி எல்லாம் இல்லாவிட்டால்.. வாழ்க்கை போரடித்துவிடும்.... :rolleyes: :rolleyes:

அறிஞர்
04-03-2005, 02:56 AM
அதிகமான ரசிகர்களை கொள்ளை கொண்டு.... கால் இறுதி போட்டியில்..... வெளியேறிவிட்டார்......

அடுத்த பந்தயங்களில் வெற்றிக்காண வாழ்த்துவோம்

poo
04-03-2005, 03:47 AM
டென் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பினார்கள்... நேற்றைய ஆட்டத்தில் சானியாவின் முன்னேற்றத்தைக்காண ஆவலாக காத்திருந்து.. அவரது அலுப்பான ஆட்டத்தில் நொந்துவிட்டேன்.. ஏனோ நேற்று ஆரம்பம் முதலே கொஞ்சம் தளர்வாகத்தான் ஆடினார்!! (இரண்டாம் போட்டியில் மீண்டும் ஏற்பட்ட வலியின் காரணத்தாலோ?!!). எனக்கு தெரிந்து இவர் காயத்தை நன்றாக சரிசெய்துகொண்டு பிறகு ஆடவரலாம்.. அவசரப்பட்டு வாழ்நாளை வீணடிக்கவேண்டாம்!!

ஆனால்... ரசிகர்கள் கூட்டம்.. அப்பப்பா... யப்பா மன்மதா நீயும் அங்க இருந்ததாக கேள்வி.......??!!

poo
04-03-2005, 03:49 AM
கூடவே கொசுறு செய்தியாக...

யு.எஸ்.ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகளையும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் ஒளிபரப்பப் போகிறது!!

பரஞ்சோதி
05-03-2005, 03:36 AM
நம்ம ஊர் நண்பர்களும் சானியா அவர்களின் ஆட்டத்தினை கண்டு ரசிக்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி. நன்றி பூ.

அறிஞர்
05-03-2005, 04:01 AM
கேட்பதற்கு நன்றாக உள்ளது....

அனைத்து போட்டிகளையும் கண்டுகளிக்க மக்கள் ரெடிதான்.....

Iniyan
05-03-2005, 08:14 AM
http://img.photobucket.com/albums/v482/Kanchanadasan/Soft/saniamix.jpg