PDA

View Full Version : புதிய தொழில்நுட்பம் - உள்ளிணைந்த முறைமை (Embedded S



lavanya
28-12-2003, 07:19 PM
விளையாட்டு பொம்மைகளில் எம்படட் சிஸ்டம்

எம்படட் சிஸ்டங்களுக்கு மற்றுமொரு சிறந்த எடுத்துகாட்டு நவீன எலெக்ட்ரானிக்
பொம்மைகள்.இவை இண்ட்டலிஜிண்ட் டாய்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. 1980 ன்
பிற்பாதியில் வந்த பொம்மை பற்றி உங்களுக்கு தெரியும்.டெட்டி ரக்ஸ்பின் (Teddy Ruxpin)
என்ற கரடி பொம்மை.இதில் ஒரு ஆடியோ கேஸட் பிளேயர் உள்ளிணைக்கப்பட்டு இருக்கும்.இதை இயக்கினால் பாடலுக்கு தகுந்தவாறு வாயை அசைப்பதுடன் கண்களை
மூடி முடி திறக்கும். இவற்றை அறிவுத்திறன் என்று சொல்ல முடியாது.

நிறைய நேர சோதனைத்திட்டங்களுக்கு பிறகு டைகர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
அறிமுகப்படுத்திய பர்பி பொம்மையும் , சோனி நிறுவனத்தின் அய்போ என்ற எந்திர நாயும்
முக்கியத்துவம் வாய்ந்தவை.

பர்பியின் அறிவு கூர்மை

1998 - ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இண்ட்ராக்டிவ் இண்டல்லிஜெண்ட் பொம்மை பர்பி.
இதன் முதுகை தடவுங்கள்.அதன் சிறிய வாலை ஆட்டும்.அதன் இடுப்பில் மெதுவாக
கிள்ளுங்கள். சிரிக்கும் அல்லது குறும்பாய் ஏதும் கமெண்ட் அடிக்கும்.அதன் வாயை
கொஞ்சுங்கள்.சாப்பிட உணவூட்ட சொல்லும்.

இவை மனிதர்களைப் போன்றே குழந்தை பர்பி நிலையிலிருந்து முதிர்ச்சி அடையும்
நிலை வரை வளாரும்.இது போல் பர்பி வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வெவ்வேறு
விதமான செயல் புரியும்.

பர்பியை வாங்கியவுடன் முதலில் மழலை பர்பிஸ் என்ற தனது சொந்த மொழியில் பேசும்.
உங்களுடன் பழக பழக அது சிறிது காலத்திற்கெல்லாம் ஆங்கிலம் சரளமாக பேசும்.அது
எவ்வளவு தூரம் பேசுகிறது என்பது அதனுடன் நீங்கள் எவ்வளவு தூரம் நெருங்கி
பழகுகிறீர்கள் என்பதை பொறுத்தது.நீங்கள் உம்மணாமூஞ்சியாயிருந்தால் அதுவும் அப்படித்தான் இருக்கும்.இப்போது புரியுமே நான் ஆரம்பத்தில் சொன்ன பொம்மை கதை.

பர்பியின் செயற்கை அறிவு
பர்பியானது 160 சொற்கள் கொண்ட உள்ளிணைந்த சொற்களஞ்சியத்தை கொண்டது.
இதை கொண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட சொற்றொடர்களை உருவாக்கும் திறன் கொண்டது.
இதனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பதில் கிடைக்கும் (அதற்காக நீங்கள் அதை
மாத்தியாஸே எல்லாம் பாட சொல்ல கூடாது)

இந்த பொம்மையில் ஐந்து சென்ஸார்கள் உண்டு..தொடுவதை உணரும் சென்ஸாரும்,
கிள்ளுவதை உணரும் சென்ஸாரும் முக்கியமானவை.உள்ளிணைந்த மைக்ரோபோன் ஆனது பெறும் ஒலிக்கு தகுந்தவாறு ரியாக்ஷனை தூண்டும்.லைட் சென்ஸாரானது ஒளியில்
ஏற்படும் செறிவு வேறுபாட்டை கண்டறியும்.

எந்திர நாய் அய்போ
எழுத்திலும் தூரதர்ஷனிலும் வந்த சுஜாதாவின் என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோ
நாய் பற்றி உங்கள் எல்லோர்க்கும் தெரியும். அது சுஜாதாவின் கற்பனை.ஆனால் எம்படட்
சிஸ்டம் மெய்படுத்த இன்று அய்போ சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அய்போ

Aibo என்ற சொல்லில் உள்ள Ai என்பது Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு)
என்பதை குறிக்கிறது.bo என்பது Robot என்பதன் பின்பாதி.அதாவது ரோபோட்டின் நடுஉரு
எழுத்துக்கள்.ஜப்பானிய மொழியில் அய்போ அல்லது எய்போ என்றால் தோழன்,கூட்டாளி.

எய்போவும் பர்பியைப் போன்றே வேறுபட்ட உணர்வுகளை கண்டறியும் சென்ஸார்களை கொண்டது. மனிதர்களுடன் பழக பழக கற்றுக்கொள்வதுடன் முதிர்ச்சி அடையவும் செய்யவும்.இது குரலேற்பு முறைமை ( Voice Recognition System) என்ற தொழில்நுட்பத்தில்
சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.எடுத்துக்காட்டாக பந்தைப் போட்டு விளையாட சொன்னால்
விளையாடும்.நீங்கள் ஏதாவது திட்டினால் உங்களை திரும்பி கூட பார்க்காது.

எய்போவிற்கு நீங்கள் ஒரு பெயரை சூட்டலாம்.இந்த பெயரை சொல்லி அழைத்தால்
திரும்பி பார்க்கும்.எலெக்ட்ரானிக் வாய்ஸில் பதில் பேசும்.ஒரே சமயத்தில் 50 சொற்கள்
வரை ஏற்றுக்கொண்டு பதில் சொல்லும். ( தெருநாய்களுடன் சேர்ந்து ஊர் சுத்தாது..திருடன்
போடும் பிஸ்கட்டை ஏற்காது இப்படி சொல்லி கொண்டே போகலாம்)

இந்த எய்போ ஒரு சிசிடி கேமராவையும் தொலைதூர சென்ஸாரையும் கொண்டது.
எனவே வழியில் உள்ள பொருள்கள் மீது இடித்து கொள்ளாமல் தடைகளை கடந்து நடை
போடும். இந்த கேமராவை பயன்படுத்தி படம் எடுக்கலாம். குறிப்பட்டதை போட்டோ
எடு என கட்டளையிட்டு அந்த போட்டோக்களை கம்ப்யூட்டரில் பார்த்து கொள்ளலாம்
(ராமநாராயணன் படத்தில் நடிக்க தோதான எய்போக்கள் எல்லாம் இப்போது சர்வதேச
அங்காடிகளில் விற்பனை ஆகிறதாம்)

எம்படட் சிஸ்டத்தின் மிக சிறந்த படைப்பாக நவீன எய்போவை சொல்கிறார்கள்.
இது 18 இணைப்புகளை கொண்டது.250 வேறுபட்ட அசைவுகளை கொண்டது.நடனமாடும்
ஓடும்,குளிரில் நடுங்கும்,உட்காரும்,படுத்து கொள்ளும்..இன்னும் சில சேஷ்டைகள் செய்யும்.

எம்படட் சிஸ்டத்தின் இயக்க தொகுப்பு தளங்கள்
* www.microsoft.com/windows/embedded/ce/default.asp
* www.linux.com
* www.microsoft.com/windows/embedded/nt/default.asp
* www.3com.com
* www.java.sun.com
* www.myapplience.com
* www.furby.com

இளசு
28-12-2003, 10:04 PM
என் பாராட்டுகள் மீண்டும் லாவ்.
அசத்தும் கட்டுரை.
உங்கள் குரு சொன்ன ஜீனோ - தீர்க்கதரிசனம்..


இந்த தொழில் நுட்பம் - உண்மையான நாய்க்குட்டிகளுக்கு
பாதுகாப்பாளர் கிடைப்பதற்கு பாதகம் தராதே..?

அய்போ "செத்துவிட்டால்" அதீத மன அழற்சி வருமாமே வளர்த்தவருக்கு
உண்மையா?

மெய்யுறவுகளை விட்டு விலகி, மெய்நிகர் உறவுகளை இவ்வளவு சிரத்தையுடன்
உருவாக்கினால், எதிர்காலத்தில் கணவன், மனைவி, குழந்தை வகை
அய்போக்களும் வர வாய்ப்புண்டா?

மூர்த்தி
29-12-2003, 01:47 AM
லாவின் கட்டுரைகள் அனைத்தும் அருமை.இந்த கட்டுரையும் நல்ல பயனுள்ள தகவல்களைக் கொண்டதுதான்.

puppy
29-12-2003, 06:59 AM
நன்றி லாவ்...இதை போய் பாருங்க.....
http://www.embedded.com/
http://www.ddjembedded.com/

poo
29-12-2003, 06:10 PM
வெகு சுவாரஸ்யம்...

மீண்டுமொரு கட்டுரையோடு வர வாழ்த்துகிறேன்!

இளசு
29-12-2003, 10:54 PM
லாவின் கட்டுரைகள் அனைத்தும் அருமை.இந்த கட்டுரையும் நல்ல பயனுள்ள தகவல்களைக் கொண்டதுதான்.

அருமையாச் சொன்னீங்க மூர்த்தி..


இங்கும் சுட்டித்தங்கம்.. நன்றி பப்பி..

lavanya
29-12-2003, 11:10 PM
நன்றி பப்பி..கூடுதல் சுட்டிகள் தந்தமைக்கு..முன்பே தெரிந்திருந்தால்
இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்...

மூர்த்தி
30-12-2003, 01:49 AM
இப்பவும் ஒன்றும் பரவாயில்லை லாவ்.தொடருங்கள் உங்கள் பணியை.உங்களுக்காகக் காத்திருக்கிறோம்!

இக்பால்
30-12-2003, 05:31 AM
லாவண்யா தங்கை... நல்ல கட்டுரை. மன்றத்திற்கு புதிய அறிவு கொடுத்து
வருகிறீர்கள்.-அன்புடன் அண்ணா.

Dr. Agaththiyan
30-12-2003, 08:27 PM
பாராட்டும் நன்றியும். கட்டுரை அருமை.

poornima
11-01-2009, 02:19 PM
இந்த கட்டுரை நிறைவுற்றது என்று நினைக்கிறேன். நன்றி