PDA

View Full Version : நீங்காதிச் சாக்கடைகள்!!!Dr.சுந்தரராஜ் தயாளன்
18-05-2012, 01:46 PM
நீங்காதிச் சாக்கடைகள்!!!

[இன்னிசை வெண்பா]
கங்கைதனைக் கொண்டவனாம் காடாரம் வென்றவனாம்
இங்குள்ள லங்கைதனை இங்ஙனமாய்ச் சேர்த்தவனாம்
என்றுபல தற்பெருமை எப்போதும் பேசுவதோ
நன்றல்ல நாமுணர்வோம் நன்கு

[இன்னிசைக் கலிவெண்பா]
சாதியென்ற சாக்கடையால் தாழ்ந்தோமே தட்டழிவு*
ஆதியிலே சாதியில்லை அன்பொன்றே நாமறிந்தோம்
பாதியிலே ஆரியர்தான் பாழுமிந்நோய் கொண்டுவந்தார்
மீதியுள்ள நற்குணமும் மேல்கீழாய்ப் மாறியதே!
சாதிச்சண் டையோடு சார்சமயச் சண்டைகளும்
பாதிக்கு மேல்சாகப் பாத்திரமாய் உள்ளதென்றார்
மீதியாய்ச் சாகிறவர் மேல்வறுமை கொண்டவராம்
நீதிக்கும் நிற்பதில்லை நீங்காதிச் சாக்கடைகள்;
எங்கெங்கு நோக்கிடினும் எல்லாமே ஊழல்தான்
தங்குதடை இல்லாமல் தாராளம் கைமாறும்
பங்குகளை வாங்குதலும் பாங்குடனே விற்பதிலும்
மங்காது மக்களிடம் மாறிடுமிக் கையூட்டே;
சாராயச் சாக்கடைகள் சந்துபொந்தாய் ஓடுதுபார்
ஆராயத் தேவையில்லை ஐயமில்லா திக்கொடுமை
நேராக இச்சுரண்டல் நேர்கிறதே யாராலும்
சீராக்க லாகாதே சேர்ந்து
*தட்டழிவு = நிலைகுலைவு, தோல்வி, (சென்னைப் பேரகரமுதலி)
----- Dr. சுந்தரராஜ் தயாளன்

செல்வா
19-05-2012, 01:36 AM
காலத்திற்கேற்ற அருமையான பாக்களை வடிப்பதில் மன்றில் தங்களுக்கு நிகர் தாங்களே...

பழமை பெருமை பேசிக்கொண்டு நிகழ் காலத்தை கோட்டை விடுவதில் தமிழருக்கு நிகரில்லை.

கவிதை கூறவந்த கருத்தோடு நான் ஒத்துப்போனாலும் சில நெருடல்கள்...நீங்காதிச் சாக்கடைகள்!!!

ஆதியிலே சாதியில்லை அன்பொன்றே நாமறிந்தோம்
பாதியிலே ஆரியர்தான் பாளுமிந்நோய் கொண்டுவந்தார்

இப்போது இந்தக் கருத்து பெரும் விமர்சனத்திற்குள்ளாயிருக்கிறது, இதற்கு எதிர்மறைக் கருத்துகள் பலவும் உலவுகின்றன.யாராலும்
சீராக்க லாகாதே சேர்ந்து [/SIZE][/I][/B]

யாராலும் சீராக்க முடியாது என்பது மனத்தளர்வைக் கொடுக்கிறதே ஐயா.
என்ன செய்தாலும் எதுவும் சரிபண்ண முடியாது என்ற விரக்தி கவிதையில் தொனிக்கிறது.

அதனால இருக்கும் சீர்கேடுகளை அப்படியே விட்டுவிடுவோம் என்ற எண்ணம் வாசகனுக்கு வந்து விடக்கூடாது அல்லவா?

காலத்திற்குத் தேவையான கவிதைக்கு நன்றிகள் ஐயா.

M.Jagadeesan
19-05-2012, 02:32 AM
சாதிச் சாக்கடைகளைப் பாயவிட்டது யாராக இருந்தாலும் , அந்தச் சாக்கடைகளை இன்னமும் ஓடவிடுவது அரசின் குற்றமே! பாராட்டுக்கள் தயாளன்!

jayanth
19-05-2012, 03:08 AM
இந்தச் சாக்கடைகளை எக்காலமும் நீக்கமுடியாது...

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-05-2012, 03:19 PM
காலத்திற்கேற்ற அருமையான பாக்களை வடிப்பதில் மன்றில் தங்களுக்கு நிகர் தாங்களே...

பழமை பெருமை பேசிக்கொண்டு நிகழ் காலத்தை கோட்டை விடுவதில் தமிழருக்கு நிகரில்லை.

கவிதை கூறவந்த கருத்தோடு நான் ஒத்துப்போனாலும் சில நெருடல்கள்...
இப்போது இந்தக் கருத்து பெரும் விமர்சனத்திற்குள்ளாயிருக்கிறது, இதற்கு எதிர்மறைக் கருத்துகள் பலவும் உலவுகின்றன.

யாராலும் சீராக்க முடியாது என்பது மனத்தளர்வைக் கொடுக்கிறதே ஐயா.
என்ன செய்தாலும் எதுவும் சரிபண்ண முடியாது என்ற விரக்தி கவிதையில் தொனிக்கிறது.

அதனால இருக்கும் சீர்கேடுகளை அப்படியே விட்டுவிடுவோம் என்ற எண்ணம் வாசகனுக்கு வந்து விடக்கூடாது அல்லவா?

காலத்திற்குத் தேவையான கவிதைக்கு நன்றிகள் ஐயா.
மிகவும் நன்றி செல்வா சில நெருடல்கள் குறித்து எழுதியுள்ளீர்கள். உங்களின் கருத்து சரி என்றே எனக்குப்படுகிறது. ஆயினும் ''சீராக்க லாகாதே சேர்ந்து" என்பது விரக்தியின் காரணமாய் வந்ததேயன்றி வேறொன்றுமில்லை. கையறுநிலை என்பார்களே, அத்தகையதுதான்.

கீதம்
20-05-2012, 01:08 AM
நாட்டைக் குலைக்கும் நாலாவித சீர்கேடுகளையும் குறிப்பிட்டு மனவேதனையைக் கவியாக்கிய விதத்திலும் ஆதங்கம் விஞ்சிய தமிழ் ரசிக்கவைக்கிறது.

வெண்பாவில் எளிமை புகுத்தி அனைவரும் அறிந்து வியக்கும் வண்ணம் அற்புதக் கவிபொழியும் தயாளன் ஐயாவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு.

தட்டழிவு என்னும் புதிய சொல்லும் பொருளும் அறிந்தேன் இன்று. நன்றி ஐயா.

gvchandran
20-05-2012, 07:06 AM
ஒவ்வொருவரும் சாதி பற்றி பேசவோ எழுதவோ மாட்டோம் என முடிவு எடுத்தால் சாதி ஒழிந்து விடும்
எல்லா மதங்களும் நல்லதே போதிக்கின்றன. ஆனாலும் மதத்தின் பெயரால் சண்டை. பிறருக்கு உதவுபவ்னே சிறந்த கடவுள் பக்தன் என
நான் நினைக்கிறேன்

சிவா.ஜி
20-05-2012, 10:15 AM
அழகான வெண்பாவில் அழுக்குநிறை சமூகத்தின் மீதான சாடல் ஒவ்வொரு வரியிலும் ஆதங்கத்துடன் ஒலிக்கிறது. சாதியைச் சொல்லி கீழ்படுத்துகிறார்களென்றே முற்காலத்தில் பலர் கண்ணீர் வடித்தனர்....ஆனால் இக்காலத்தில் தான் இந்த சாதி எனச் சொல்லி தங்கள் பலம் காட்டும் நிலை உருவாகியிருக்கிறது.

எல்லாமே இந்த ஓட்டுப் பிச்சைக்காரர்களான அரசியல்வியாதிகளின் பங்களிப்புதான்.

நன்றாய் சொன்னீர்கள் ஐயா. வாழ்த்துக்கள்.

vasikaran.g
20-05-2012, 11:45 AM
நல்ல கருத்து ..
வெண்பா நடை
எளிய வார்த்தை
எனும் ஆடை !

கத்தரியில்
நீண்ட
நேரம்
தென்றல்
மனதில்
நெருடலுடன்
கூடிய
வருடல் .!

நன்று நன்று ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-05-2012, 04:14 AM
சாதிச் சாக்கடைகளைப் பாயவிட்டது யாராக இருந்தாலும் , அந்தச் சாக்கடைகளை இன்னமும் ஓடவிடுவது அரசின் குற்றமே! பாராட்டுக்கள் தயாளன்!
மிகவும் நன்றி ஜெகதீசன் ஐயா :aktion033::aktion033:

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-05-2012, 10:53 AM
இந்தச் சாக்கடைகளை எக்காலமும் நீக்கமுடியாது...
உண்மைதான் ஜெயந்த்...ஆயினும் காலம் மாறலாம் காத்திருப்போம்!:aktion033::aktion033:

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-05-2012, 04:03 AM
நாட்டைக் குலைக்கும் நாலாவித சீர்கேடுகளையும் குறிப்பிட்டு மனவேதனையைக் கவியாக்கிய விதத்திலும் ஆதங்கம் விஞ்சிய தமிழ் ரசிக்கவைக்கிறது.

வெண்பாவில் எளிமை புகுத்தி அனைவரும் அறிந்து வியக்கும் வண்ணம் அற்புதக் கவிபொழியும் தயாளன் ஐயாவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு.

தட்டழிவு என்னும் புதிய சொல்லும் பொருளும் அறிந்தேன் இன்று. நன்றி ஐயா.
கீதம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் இத்தகைய பின்னுட்டங்கள் என்னை மென்மேலும் கவி எழுதத் தூண்டும் என்பது வெள்ளிடைமலை.:aktion033::aktion033:

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-06-2012, 10:32 AM
ஒவ்வொருவரும் சாதி பற்றி பேசவோ எழுதவோ மாட்டோம் என முடிவு எடுத்தால் சாதி ஒழிந்து விடும்
எல்லா மதங்களும் நல்லதே போதிக்கின்றன. ஆனாலும் மதத்தின் பெயரால் சண்டை. பிறருக்கு உதவுபவ்னே சிறந்த கடவுள் பக்தன் என
நான் நினைக்கிறேன்
மிகவும் உண்மை சந்திரன் அவர்களே. உங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி :aktion033::aktion033:

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-12-2012, 04:31 PM
அழகான வெண்பாவில் அழுக்குநிறை சமூகத்தின் மீதான சாடல் ஒவ்வொரு வரியிலும் ஆதங்கத்துடன் ஒலிக்கிறது. சாதியைச் சொல்லி கீழ்படுத்துகிறார்களென்றே முற்காலத்தில் பலர் கண்ணீர் வடித்தனர்....ஆனால் இக்காலத்தில் தான் இந்த சாதி எனச் சொல்லி தங்கள் பலம் காட்டும் நிலை உருவாகியிருக்கிறது.

எல்லாமே இந்த ஓட்டுப் பிச்சைக்காரர்களான அரசியல்வியாதிகளின் பங்களிப்புதான்.

நன்றாய் சொன்னீர்கள் ஐயா. வாழ்த்துக்கள்.
மிக மிக நன்றி..சிவா அவர்களே. எனது காலம் கடந்த பதில் பின்னுட்டத்திற்கு மன்னிக்கவும்.