PDA

View Full Version : ஏந்த்திகெனி 4



சொ.ஞானசம்பந்தன்
18-05-2012, 06:28 AM
கிரியன் - செய்தாயாநீ யதனை ? ஏற்கிறாயா , மறுக்கிறாயா ?

ஏந்த்திகெனி - சொல்கிறேன் ; செய்தேன்தான் , மறுக்க வில்லை .

கிரி:- செய்யத் தடையாணை இருந்தது தெரியும்?

ஏந்த்தி ;- தெரியும் ; எப்படித் தெரியாமல் போகும் ?
பொதுஅறிவிப் பல்லவோ ?

கிரி ;- இருப்பினும் மீறத் துணிச்சல் கொண்டாய் ?

ஏந்த்தி :- நிச்சயமாய்.
அதற்குக் கட்டளை இட்டது சீயசல்ல;
கீழுலகத் தெய்வங்க ளோடுறையும் திக்கே
மாந்தர்க்கு வரையறுத்த சட்டமன்று என்சட்டம் .
மேலும்நான் எண்ணவில்லை எழுதாத சட்டங்களை,
கடவுளரின் நிலையான சட்டங்களை மீறுதற்கு
மானிடனை உன்சட்டம் அனுமதிக்க முடியுமென .
ஏனென்றால் இன்றிருந்தோ நேற்றிருந்தோ அல்ல
எப்போதும் அமலாகும் அச்சட் டங்கள்.
மனிதன் ஒருவனின் தீர்மானம் நினைந்தஞ்சி
தெய்வத் தின்முன் தண்டனைநான் பெறமாட்டேன்
நான்சாக வேண்டும் அறிவேன் முன்னமே .
அறியாமல் இருப்பது எப்படி ? --
அதற்குன்றன் அறிவிப்பு தேவை யில்லை.
ஆனால் அகால மரணம் அடைவதால்
ஆதாயம் பெறுவதாய் எண்ணுகின் றேன்நான்
என்போல் படுமோசச் சூழலில் உழல்வார்
நன்மை சாவதில் எங்ஙனம் எய்தார் ?
எதுஎப் படியோ துன்பமன்று எனக்கு
விதியினிவ் விளைவை ஏற்றல் , இதுமெய் .
ஆனால் ஒருமகன் என்தாய்க்குப் பிறந்தவன்
அவனுடல் அடக்கம் ஆகாமை இறந்தபின்
அதுவே துயரமாய் இருக்கும் எனக்கு.
சோகந் தராது எனக்கு நேர்வது .
நடந்துகொண் டேன்நான் பைத்தியம் போலென்று
உனக்குத் தோன்றின் என்னைக் கிறுக்கி
என்பவன் கிறுக்கனா யிருத்தல் கூடும்
.....................................................................

சோதரனை அடக்கஞ்செய் தடைந்த பெருமையினும்
மேலான மதிப்பினை நான்பெறுவ தெப்படி ?
அங்கிருந்தார் அனைவரும் ஆதரித்தார் என்னை..
அச்சம் அவர்நாவை அடக்காமல் .இருந்தால்
அறிவித் திருப்பார் வெளிப்படை யாக.


_________________________________________________

குறிப்பு : 1 - திக்கே - நீதிதேவதை.
2 - அதற்குன்றன் - அதற்கு உன் தன் = அதற்கு உன்னுடைய.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


( ஏந்த்திகெனியின் தாய்மாமன் தான் கிரியன் . இவனது மகன் ஹெமோனுக்கும் அத்தைமகள் ஏந்த்திகெனிக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. தண்டனை இன்னம் நிறைவேறாத நிலையில் தகப்பனிடம் வந்தான் ஹெமோன் )


கிரியன் - குழந்தாய், உறுதிசெய்த மனைவியின் மரண
தண்டனைச் சேதிதான் தந்தைமேல் சினந்து
இங்குவரச் செய்ததா உன்னை ? அல்லது
எதுசெய்யினும் உனக்குநான் நண்பன் தானா ?


ஹெமோன் - தந்தையே , உன்மகன்நான், எனக்குத் தொடர்பான
எந்தவுன் முடிவுகளும் நல்லனவாய் இருந்து
நல்வழியில் என்னைச் செலுத்தினால் கீழ்ப்படிவேன்.
என்னைநீ நன்றாக வழிநடத்து வாயெனில்
உன்னைவிடப் பெரிதன்று எனக்கென் திருமணம் .


கிரி ;- அதுதான் குழந்தையே , அதையே இதயத்தில்
பதிக்க வேண்டும் ; தந்தை செய்த
தீர்மானம் மேலானது யாவற் றுக்கும் .
ஏனெனில் மாந்தர் தமக்குக் கீழ்ப்படிந்து
வளருங் குழந்தைகள் வேண்டுமென விரும்புவது
பகைவரைப் பழிவாங்கும் செயலில் மிகவுந்
தீவிரங் காட்டுதற்கும் தங்கள் தந்தையென
நண்பரிடம் மரியாதை செலுத்து வதற்குந்தான் .
மாறாகப் பயனற்ற பிள்ளைகள் பெற்றவனைப்
பற்றி , வேறென்ன சொல்வது , அவன்சொந்தத்
துர்ப்பாக் கியத்தை உருவாக்கு கின்றான் ,
எதிரிகள் எள்ளுவர் என்பதல் லாமல் ?

கீதம்
19-05-2012, 03:08 AM
கிரியனின் பேச்சு மகனிடம் அவன் கொண்டுள்ள நம்பிக்கையையும் அதே சமயம் மகன் தன்னை விட்டு விலகிவிடக்கூடாதேயென்னும் பதைப்பையும் காட்டுவதாக உள்ளது. தொடரும் தங்கள் பெரும் முயற்சிக்குப் பாராட்டு.

\\மாந்தர் தமக்குக் கீழ்ப்படிந்து
வளருங் குழந்தைகள் வேண்டுமென விரும்புவது
பகைவரைப் பழிவாங்கும் செயலில் மிகவுந்
தீவிரங் காட்டுதற்கும் தங்கள் தந்தையென
நண்பரிடம் மரியாதை செலுத்து வதற்குந்தான் .\\

மேற்கண்ட வரிகள் மூலம் பகைவரைப் பழிவாங்கும் செயலில் தீவிரங்காட்ட நன்மக்கள் தேவை என்னும் முதல் விஷயம் புரிகிறது. இரண்டாவதாய்க் குறிப்பிடும் 'தங்கள் தந்தையென நண்பரிடம் மரியாதை செலுத்துவதற்கு' என்பதன் பொருள் புரியவில்லை. விளக்கினால் மகிழ்வேன்.

சொ.ஞானசம்பந்தன்
19-05-2012, 07:09 AM
பின்னூட்டத்துக்கும் விமர்சனத்துக்கும் மிக்க நன்றி . அக் காலத்தில் எதிரியைப் பழி வாங்குதல் கடமை என நம்பபட்டது .
அதனால் ஆண் வாரிசு கோரினர் . ஒரேஸ்த்தசைத் தயார்ப்படுத்திய எலெக்த்ராவை நினைவு கூர்வோம் தங்களின் தகப்பனுக்குச் செலுத்தும் மரியாதையைப் பிள்ளைகள் தகப்பனின் நண்பரிடமும் செலுத்தவேண்டும் என்று பொருள் . மொழிபெயர்ப்பாதலால் விளக்கமாய் எழுதமுடிவதில்லை .

கலையரசி
30-05-2012, 01:26 PM
"மாந்தர் தமக்குக் கீழ்ப்படிந்து வளருங் குழந்தைகள் வேண்டுமென விரும்புவது" அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை! உலகமுழுக்க பெற்றோர் ஒரே மாதிரியாய்த் தானிருக்கிறார்கள். மொழியாக்கத்திற்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-06-2012, 11:26 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி .