PDA

View Full Version : யூரிபிடீசின் எலெக்த்ரா

சொ.ஞானசம்பந்தன்
06-04-2012, 06:55 AM
( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய் வரச் செய்தனர் . அவள் வருவது தெரிகிறது )

ஒரேஸ்தஸ் - அன்னை ..நாம் என்ன செய்யவேண்டும் ? கொல்வது ?

எலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து ?

ஒ - இல்லை , ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை ?

எ - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை .

ஒ - அப்பொல்லோ , எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் ?

எ - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி ?

ஒ - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக ?

எ - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க ?

ஒ - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு

!எ - தெய்வக் குற்றம் ஆகும் , தந்தைக்கு உதவாவிட்டால் .

ஒ - அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும் .

எ - என்ன விலை தந்தைக்கு , பழி தீர்க்காவிடில் ?

ஒ - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு , கடவுளின் பெயரில் .

எ புனித முக்காலியில் அமர்ந்தா ?

ஒ - ஒரு நாளும் ஒப்பமாட்டேன் , அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை .

எ - ஆக , கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை .

ஒ ( நீண்ட யோசனைக்குப் பின்பு)

அப்படியானால் சரி , எப்படிச் செய்வேன் ? இவளுக்கும் அதே பொறியை வைப்பதா ?

( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர் .)

-----------------------------------------------------------------------------------------------

கீதம்
06-04-2012, 10:58 AM
தாயின்பால் கொண்ட பாசமா ஈர்ப்பா, ஒரேஸ்தஸை அவளைக் கொல்லவிடாமல் தடுக்கிறது. ஏலெக்த்ராவுக்கோ, தந்தையிடமிருந்த பாசமும் ஈர்ப்பும் தம்பியின் முலம் தாயைப் பழிவாங்கத் தூண்டுகிறது. தயங்கும் தம்பியைத் உசுப்பிவிடும் வார்த்தைகளில் தென்படும் சாமர்த்தியம் வியக்கவைக்கிறது..

புகழ்பெற்ற கிரேக்க நாடகங்களின் வசனங்களைப் பற்றியறியும் அருமையான வாய்ப்பை வழங்குவதற்கு தங்களுக்கு மிகவும் நன்றியும் பாராட்டும்.

இந்தப் பகுதிகளைத் தொடர்ச்சியாக ஒரே திரியின்கீழ் தொடர்ந்தால் வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமென்பது என் கருத்து.

சொ.ஞானசம்பந்தன்
07-04-2012, 06:53 AM

திறமையான விமர்சனத்துக்குப் பாராட்டு . அதிகம் பேர் விரும்பாமையால் இதை நான் தொடரப்போவதில்லை .

sarcharan
10-04-2012, 10:06 AM
ஐயா.. தொடராதவர்கள் லிஸ்டுல நீங்களும் சேரப்போகிறீர்களா!

பலரோடும் நீங்கள் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :)

உங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். :)

சொ.ஞானசம்பந்தன்
10-04-2012, 10:34 AM
ஐயா.. தொடராதவர்கள் லிஸ்டுல நீங்களும் சேரப்போகிறீர்களா!

பலரோடும் நீங்கள் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :)

உங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். :)

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .உங்களைப் போலப் பலரது விருப்பமாக இருக்கக்கூடும் . எனவே தொடர்வேன் .

தாமரை
10-04-2012, 10:43 AM
அமைதியாக கற்பதே பிடித்த விஷயம். அதனால் உங்கள் கதையை ஆவலுடன் படித்து வருகிறோம்.

உலக இலக்கியங்களை உங்களைத் தவிர எங்களுக்குச் சொல்லுவாரில்லை.

சொ.ஞானசம்பந்தன்
16-04-2012, 05:27 AM
அமைதியாக கற்பதே பிடித்த விஷயம். அதனால் உங்கள் கதையை ஆவலுடன் படித்து வருகிறோம்.

உலக இலக்கியங்களை உங்களைத் தவிர எங்களுக்குச் சொல்லுவாரில்லை.

உங்களைப் போன்ற ஓர் அறிஞரின் பாராட்டைப் பெறுவது என் அகம் குளிரவைக்கிறது . நன்றி . தொடர்வேன் .

அன்புரசிகன்
16-04-2012, 05:58 AM
பாடசாலைக்காலங்களில் கலை பயிலும் மாணவர்கள் நாட்டியநாடகம் என்று செய்துகாட்டுவது ஞாபகம் வந்தது. பெயர் தான் உச்செரிக்க முடியவில்லை. பரசுராமன் கதை (கொஞ்சம்) போல் இருந்தது. தொடருங்கள்.