PDA

View Full Version : கண்ணாடிக் கனவுகள் (கதைக் கவிதை)



இராஜிசங்கர்
17-05-2012, 01:08 PM
பூ பழம் சகிதம் சுற்றம் சூழ வந்திருந்தாய் என் வீட்டுக்கு
பச்சை வண்ண ராசிப் புடவை அணிந்து
கையில் காபி கப்புடன் நெருங்கி வந்தேன்
இரண்டு நிமிடம் என் விழிகளுக்குள் உன்னை சிறைபிடித்தேன்
உனக்கும் அது விருப்பம் என்பதை புன்னகை மொழியில் புரிய வைத்தாய்
உன் அம்மா அப்பாவும் அன்புடனே பார்த்தார்கள்
'எங்க ராணிகேத்த ராசா தான் மாப்பிள்ளையும்' பாட்டி இரைந்தாள் சற்று சத்தமாகவே
வெட்கத்தின் விசை தாளாமல் ஓடி வந்து விட்டேன் என் தனியறைக்கு
செல்போன் மணி அடிக்கும் போதெல்லாம் நீயாக இருப்பாயோ என்று ஆர்வமுடன் எடுத்தேன்
நாளை என்ன பரிசு தருவாய்?
நம் குழந்தைக்கு அழகான தமிழ்ப் பெயர் தான் வைக்க வேண்டும்!!
ஆயிரம் ஆயிரம் திட்டமிடுதல்கள் ..
அத்தனை கனவுகளுக்கும் அடித்தளம் தர நீ வரவிருக்கும் நாளை எதிர்பார்த்திருந்தேன்
வந்தது என்னவோ தரகர் மட்டும் தான் - கையில் வேறு சில புகைப்படங்களுடன்
அந்த பையன் வீட்ல பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சுருக்கு
கொடுக்கல் வாங்கல் மட்டும் ஒத்து வரல சார்
இன்னொரு இடம் கை வசம் இருக்கு
அருமையான இடம்
நம்ம சக்திக்கு ஏத்த இடம்
நாளைக்கு வர சொல்லட்டுமா பொண்ணு பார்க்க?
அவருக்கு பழகிப் போயிருந்தது பார்ப்பதும் போவதும்
இன்னும் என் மனதிற்கு பழக்கம் ஆகவில்லை -
கனவுகள் கண்ணாடித் துகள்களாய் ஆன பிறகும்
அடுத்து பார்க்க வரும் 'ராசா'வை நோக்கி புன்னகை செய்ய.

அமரன்
17-05-2012, 09:35 PM
தொன்று தொட்டு நிலவுகின்ற அவலம். அதை அழித்தொழிக்கப் புறப்பட்டவர்கள் ஒருபுறம். அவர்களை எடுத்துக் காட்டி எல்லை தாண்டி புதிதாய் அவலம் ஆக்கியோர் மறுபுறம். மாற்றம் தேவை, எல்லாரிடத்திலும்.

jayanth
18-05-2012, 01:26 AM
எதிர்பார்புக்களுடன் இருகின்றபொழுது ஏமாற்றப்பட்ட உணர்வு...

கீதம்
18-05-2012, 06:05 AM
மனங்கள் மாறவேண்டும். அல்லது மாற்றங்களை ஏற்கப் பழகவேண்டும். முன்னிலும் இரண்டாவதே சாத்தியம் முன்னவரிடத்தில் மாற்றம் உருவாகாதபோது.

ஆங்காங்கு உடைபட்டுக்கொண்டிருக்கும் பல கண்ணாடிக்கனவுகளின் நொறுங்கல்களைக் கூட்டிக் குவித்து கவிதையாய்க் கொட்டியிருக்கிறீர்கள்.

கீறிப்போகிறது மனதை! உணர்வுகளை சொல்லாமல் சொல்லும் வார்த்தைகளின் வசியம் ஈர்க்கிறது. பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
18-05-2012, 08:47 AM
நன்றி கீதம்

ravisekar
16-08-2015, 06:06 PM
உடைந்த சில்லுகளால் சிதறியது பிம்பம்.. குறைகிறது பின்னால் பூசப்பட்ட ரசம்..
மீண்டும் ஒட்டினாலும் முதலில் அமைந்த சிதறா முழு பிம்பம் இனி கனாவே.

(தூறல் நின்னு போச்சு என்னும் பழைய பாக்கியராஜ் படத்தின் மெயின் முடிச்சே இதுதான்)

இராஜிசங்கருக்கு பாராட்டுக்கள்

aren
01-10-2019, 03:56 AM
இந்த காலத்தில் இது வேறுமாதிரியாக உள்ளது. பெண் வீட்டார்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.