PDA

View Full Version : நினைவுகளின் நெடி.....

மஞ்சுபாஷிணி
16-05-2012, 04:16 PM
http://i4.tagstat.com/image05/f/969b/00F0054rVqr.jpg
நினைவுகளின் நெடி
நிலைகுலைய வைக்கிறது

துரோகங்களின் கணக்கோ
தலைச்சுற்ற வைக்கிறது

பிரிவின் வேதனையோ
உயிரை வதைக்கிறது

செய்த தவறுகளை
மறந்து மன்னித்துவிட்டால்
ஆசுவாசம் கிடைக்குமா?

மன்னிக்கும் மனப்பாங்கு
மனிதனுக்கு இருக்குமா?

மறக்கும் சக்தி
உள்ளத்துக்கு உண்டா?

விடை தெரியாத கேள்விகள்
விடியும்வரை அலைக்கழிக்கிறது

உறக்கம் மறுத்த விழிகளோ
விட்டம் வெறிக்கிறது

முடிவற்ற தொடராய்
நெஞ்சம் வலிக்கச்செய்கிறது

செயல்களின் காரணகர்த்தா
இறைவன் என்றால்
விதி என்றுச்சொல்லி
சமாதானம் அடையலாம்

மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
சாத்வீகமாய்
எதிர்க்க துவங்கலாம்!!!

jayanth
16-05-2012, 04:28 PM
நினைவுகளின் நெடி நெஞ்சைத் துளைத்தது. அருமை...!!!

மஞ்சுபாஷிணி
17-05-2012, 06:08 AM
அன்பு நன்றிகள் ஜெயந்த் கருத்துப்பகிர்வுக்கு.

கீதம்
17-05-2012, 12:45 PM
நெஞ்சம் கமறும் நினைவுகளின் நெடியினைத் தவிர்க்கச் சொல்லிய உபாயம் வெகு அருமை.

மௌனமாய், சாத்வீகமாய் எதிர்க்கும் வல்லமை இருந்தால் எதையும் வெல்லலாம்.

நற்கருத்துகள் தாங்கிய கவிதைக்குப் பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.

அமரன்
17-05-2012, 09:53 PM
மனக்குளத்தில் அடுத்தடுத்து விழுந்த சிறு கற்களினால் உண்டான அலைகள் கவிதை ஆக்கி உள்ளன.

கவிதை கல்லாக்கப்பட்டு வாசகன் உள்ளத்தின் மேற்பரப்பில் வீசப்பட்டுள்ளது. சிறு மீனேனும் காயப்படக் கூடாது எனும் எண்ணத்துடன் வீசப்பட்டிருப்பது கவிஞனின் நல் மனசு என்பதா? சர்ச்சைகளுக்குள் சிக்காமல் சாமர்த்தியத்துக்குள் ஒளிந்து கொள்ளும் குணம் என்பதா?

எதுவானாலும் கருக்கட்டல் நிச்சயம்.

vasikaran.g
18-05-2012, 03:59 AM
நினைவுகள்
மெல்ல
வருடிய
மயிலிறகு !
ஏதோ நினைவுகள்

மஞ்சுபாஷிணி
21-05-2012, 08:51 AM
நெஞ்சம் கமறும் நினைவுகளின் நெடியினைத் தவிர்க்கச் சொல்லிய உபாயம் வெகு அருமை.

மௌனமாய், சாத்வீகமாய் எதிர்க்கும் வல்லமை இருந்தால் எதையும் வெல்லலாம்.

நற்கருத்துகள் தாங்கிய கவிதைக்குப் பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.

அன்பு நன்றிகள் கீதம்...மௌனம் பயங்கர ஆயுதம்...

மஞ்சுபாஷிணி
21-05-2012, 08:52 AM
மனக்குளத்தில் அடுத்தடுத்து விழுந்த சிறு கற்களினால் உண்டான அலைகள் கவிதை ஆக்கி உள்ளன.

கவிதை கல்லாக்கப்பட்டு வாசகன் உள்ளத்தின் மேற்பரப்பில் வீசப்பட்டுள்ளது. சிறு மீனேனும் காயப்படக் கூடாது எனும் எண்ணத்துடன் வீசப்பட்டிருப்பது கவிஞனின் நல் மனசு என்பதா? சர்ச்சைகளுக்குள் சிக்காமல் சாமர்த்தியத்துக்குள் ஒளிந்து கொள்ளும் குணம் என்பதா?

எதுவானாலும் கருக்கட்டல் நிச்சயம்.

சாமர்த்தியம் போறாதுப்பா இந்த கவிஞனுக்கு :) ஏனெனில் சாமர்த்தியமாக பேசவே தெரியாதப்ப எப்படியாம்? :)

அன்பு நன்றிகள் அமரன்.

மஞ்சுபாஷிணி
21-05-2012, 08:53 AM
நினைவுகள்
மெல்ல
வருடிய
மயிலிறகு !
ஏதோ நினைவுகள்

அழகிய குட்டி கவிதையில் பின்னூட்டம். அன்பு நன்றிகள் வசீகரன்.

சிவா.ஜி
21-05-2012, 10:04 AM
மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
சாத்வீகமாய்
எதிர்க்க துவங்கலாம்!!!
பொறுமையாய், அமைதியாய், மௌனமாய், சாத்வீகமாய்...இருக்கலாமென முடித்திருந்தால்...சிறப்பானதாக இருக்காது....எதிர்க்கத் துவங்கலாம் என்ற வார்த்தைகளில் இருக்கிறது வலிமை.

துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்ங்க மஞ்சு.