PDA

View Full Version : தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு



ravikrishnan
15-05-2012, 09:06 AM
http://m.ak.fbcdn.net/a2.sphotos.ak/hphotos-ak-ash3/s320x320/545596_384361688280833_346727412044261_1123797_2014087098_n.jpg

காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.:icon_b::icon_b:
நன்றி:காட்டு பூச்சி

மஞ்சுபாஷிணி
15-05-2012, 09:19 AM
ஆஹா அருமையான விஷயமாக இருக்கிறதே.. உடல் பருமன் குறையவும் சுடு நீரில் எலுமிச்சை ரசம் கலந்து தேனும் கலந்து சாப்பிடலாம்...

அன்பு நன்றிகள் ரவிக்ருஷ்ணன் பகிர்வுக்கு.

ravikrishnan
15-05-2012, 10:14 AM
நன்றி!!அக்கா, தேநீர்க்கு பதிலாக காலையில், இதனுடன் சிறிது சர்க்கரை சிறிது உப்பு சேர்த்து பருகினால் அருமையாக இருக்கும்.

சிவா.ஜி
15-05-2012, 10:20 AM
உண்மைதான் ரவிகிருஷ்ணன். மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. நான் அனுபவத்தில் கண்டது.

பகிர்வுக்கு நன்றி.

jayanth
15-05-2012, 10:21 AM
பகிர்வுக்கு நன்றி ரவி

மஞ்சுபாஷிணி
17-05-2012, 06:52 AM
நன்றி!!அக்கா, தேநீர்க்கு பதிலாக காலையில், இதனுடன் சிறிது சர்க்கரை சிறிது உப்பு சேர்த்து பருகினால் அருமையாக இருக்கும்.

தேநீர் காபி குடிக்கும் பழக்கம் இல்ல க்ருஷ்ணா :) அதனால் நீ சொன்னது போல செய்தால் உடலுக்கும் ஆரோக்கியம்....