PDA

View Full Version : ஆக்டோபஸ்க்கு எத்தனை கால்கள் உள்ளன?



dhilipramki
15-05-2012, 07:55 AM
ஆக்டோபஸ்க்கு எத்தனை கால்கள் உள்ளன?
எட்டு கால்கள் தானே இருக்கிறது. அதன் தலைப் பகுதியை தவிர மற்ற அனைத்தும் கால்கள் தானே, என்று ஆக்டோபசை பார்த்தவர்கள் கூறுவது இயல்பே. ஆனால், உண்மையாக அதற்கு இரண்டு கால்கள் மட்டுமே உண்டு.
சமீபத்திய கண்டுப்பிடிப்பு ஒன்றில் ஆக்டோபஸ் உடலில் இருந்து எட்டு பக்க உறுப்புகள் இருக்கிறது என்றும், அவைகளில் இரண்டு மட்டும் கால்களாகவும், மற்ற ஆறையும் கைகளாக பயன்படுத்தபடுகிறது என்றும் கூறப்படுகிறது.
அந்த பற்றிழைகள் மிகவும் வியக்கத்தக்க ஒன்று, என்று உயிரியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் ஆக்டோபஸ் தன் பற்றிழைகளை இறுக்கமாகினால் முழங்கை போன்றும், அதுவே மடக்கினால், ஒரு பந்தை போன்று கடல் படுகைகளில் உருண்டோடவும் அதனால் இயலும், என்று உரியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மூன்றில் இரண்டு பகுதி மூளையை தன்னுடைய எட்டு பற்றிழைகளில் ஆக்டோபஸ் கொண்டுள்ளது. அதாவது 50 மில்லியன் நரம்பனுக்களை வைத்துள்ளது. ஒவ்வொன்றும் தன்னிச்சையாக செயல்படக்கூடியது.
உணவை உன்ன உறிஞ்சிகளையும், சுவை அரும்புகளையும் கொண்டுள்ளது. அதனை “ஹெக்டோகட்டிலஸ்” என்று கூறப்படுகிறது. “நூற்றுக்கணக்கான சிறிய கோப்பைகள்” என்று கிரேக்க மொழியில் பொருளாகும்.
ஆனால் சிலமுறை மரபணு மாற்றத்தால் பக்க உறுப்புகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. 1998இல் ஜப்பான் நீர்வாழினக் காட்சியகத்தில் 96 பற்றிழைகள் கொண்ட ஆக்டோபஸ் ஒன்று வாழ்ந்தது. எனவே இயற்கையாக ஆக்டோபஸ்க்கு இரண்டு கால்களே இருக்கிறது.


http://www.mosaic.pro/images/products/detail/OctopusPORCOP16.jpg

ravikrishnan
15-05-2012, 08:08 AM
நன்றி! அன்பரே!அருமையான பதிவு ,அறிந்திடாத நல்ல பல விபரங்கள்.:icon_b::icon_b:

மஞ்சுபாஷிணி
15-05-2012, 08:51 AM
அரிய விஷயங்கள் அறியத்தந்தமைக்கு அன்பு நன்றிகள் திலீப்ராம்கி.

jayanth
15-05-2012, 09:12 AM
பகிர்வுக்கு நன்றி திலீப்ராம்கி.

dhilipramki
16-05-2012, 04:13 AM
பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி.