PDA

View Full Version : ஏந்த்திகெனி 3

சொ.ஞானசம்பந்தன்
15-05-2012, 06:11 AM
கிரியன் - செய்தாயாநீ யதனை ? ஏற்கிறாயா , மறுக்கிறாயா ?

ஏந்த்திகெனி - சொல்கிறேன் ; செய்தேன்தான் , மறுக்க வில்லை .

கிரி செய்யத் தடையாணை இருந்தது தெரியும்?

ஏந்த்தி தெரியும் ; எப்படித் தெரியாமல் போகும் ?
பொதுஅறிவிப் பல்லவோ ?

கிரி இருப்பினும் மீறத் துணிச்சல் கொண்டாய் ?

ஏந்த்தி நிச்சயமாய்.
அதற்குக் கட்டளை இட்டது சீயசல்ல;
கீழுலகத் தெய்வங்க ளோடுறையும் திக்கே
மாந்தர்க்கு வரையறுத்த சட்டமன்று என்சட்டம் .
மேலும்நான் எண்ணவில்லை எழுதாத சட்டங்களை,
கடவுளரின் நிலையான சட்டங்களை மீறுதற்கு
மானிடனை உன்சட்டம் அனுமதிக்க முடியுமென .
ஏனென்றால் இன்றிருந்தோ நேற்றிருந்தோ அல்ல
எப்போதும் அமலாகும் அச்சட் டங்கள்.
மனிதன் ஒருவனின் தீர்மானம் நினைந்தஞ்சி
தெய்வத் தின்முன் தண்டனைநான் பெறமாட்டேன்
நான்சாக வேண்டும் அறிவேன் முன்னமே .
-- அறியாமல் இருப்பது எப்படி ? --
அதற்குன்றன் அறிவிப்பு தேவை யில்லை.
ஆனால் அகால மரணம் அடைவதால்
ஆதாயம் பெறுவதாய் எண்ணுகின் றேன்நான்
என்போல் படுமோசச் சூழலில் உழல்வார்
நன்மை சாவதில் எங்ஙனம் எய்தார் ?
எதுஎப் படியோ துன்பமன்று எனக்கு
விதியினிவ் விளைவை ஏற்றல் , இதுமெய் .
ஆனால் ஒருமகன் என்தாய்க்குப் பிறந்தவன்
அவனுடல் அடக்கம் ஆகாமை இறந்தபின்
அதுவே துயரமாய் இருக்கும் எனக்கு.
சோகந் தராது எனக்கு நேர்வது .
நடந்துகொண் டேன்நான் பைத்தியம் போலென்று
உனக்குத் தோன்றின் என்னைக் கிறுக்கி
என்பவன் கிறுக்கனா யிருத்தல் கூடும்
.....................................................................
சோதரனை அடக்கஞ்செய் தடைந்த பெருமையினும்
மேலான மதிப்பினை நான்பெறுவ தெப்படி ?
அங்கிருந்தார் அனைவரும் ஆதரித்தார் என்னை..
அச்சம் அவர்நாவை அடக்காமல் .இருந்தால்
அறிவித் திருப்பார் வெளிப்படை யாக.
_________________________________________________

குறிப்பு : 1 - திக்கே - நீதிதேவதை.
2 - அதற்குன்றன் - அதற்கு உன் தன் = அதற்கு உன்னுடைய.

கீதம்
16-05-2012, 04:56 AM
ஏந்த்திகெனியின் துணிவு வியக்கவைக்கிறது. தன் தமையனை அடக்கஞ்செய்ய எவருடைய அனுமதியும் தேவையில்லை என்னும் உறுதியான எண்ணமும், அதை ஒட்டிய வாதமும் தேர்ந்த உலகானுபவத்தைப் பறைசாற்றுகின்றன.

இன்றிலிருந்து, நேற்றிலிருந்து என்றில்லாமல் எப்போதும் அமலில் இருக்கும் கடவுளின் சட்டங்கள் என்னும் வரிகள் அவள் அறிவார்ந்த வாதத்துக்கு சான்று. பாராட்டுகள். இன்னும் தொடருங்கள்.

சொ.ஞானசம்பந்தன்
16-05-2012, 06:46 AM

பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . ஏந்த்திகெனி அறிவும் துணிவும் உள்ள பெண்ணகத் தான் படைக்கப்பட்டிருக்கிறாள் . அவளைச் சரியாய் எடை போட்டதற்கு என் பாராட்டு .

கலையரசி
21-05-2012, 03:24 PM
”ஒருமகன் என்தாய்க்குப் பிறந்தவன்
அவனுடல் அடக்கம் ஆகாமை இறந்தபின்
அதுவே துயரமாய் இருக்கும் எனக்கு.
சோகந் தராது எனக்கு நேர்வது .
நடந்துகொண் டேன்நான் பைத்தியம் போலென்று
உனக்குத் தோன்றின் என்னைக் கிறுக்கி
என்பவன் கிறுக்கனா யிருத்தல் கூடும்
.....................................................................
சோதரனை அடக்கஞ்செய் தடைந்த பெருமையினும்
மேலான மதிப்பினை நான்பெறுவ தெப்படி ?
அங்கிருந்தார் அனைவரும் ஆதரித்தார் என்னை..
அச்சம் அவர்நாவை அடக்காமல் .இருந்தால்
அறிவித் திருப்பார் வெளிப்படை யாக.”

எவ்வளவு அழுத்தந்திருத்தமாக அவளது கருத்துக்களை எடுத்துரைக்கிறாள்?
அவளது வாதத்தை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது “அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே” என்ற பாரதியின் கவிதை நினைவுக்கு வருகின்றது. முடிவாய் அரசனையும் சேர்த்துக் கிறுக்கு என்று சொல்லிவிட்டாள்! அற்புதமான கதாபாத்திரம் ஏந்திக்கெனி!

சொ.ஞானசம்பந்தன்
22-05-2012, 10:22 AM

பாராட்டுக்கு மிக்க நன்றி . மூலத்தில் படிக்க முடிந்தால் எவ்வளவு இன்பம் அடையலாம் !