PDA

View Full Version : முதன் முதலில் விமானத்தில் பறந்தவர் யார்?



dhilipramki
14-05-2012, 03:03 PM
முதன் முதலில் விமானத்தில் பறந்தவர் யார்?
அது ரைட் சகோதரர்கள் தானே! என்று நீங்கள் கூறுவது நம் காதுகளில் விழுகிறது. விடையை சொல்ல வேண்டுமென்றால், அது அவர்கள் இல்லை. ஆம். ஆனால் அவர் யார் என்று நமக்கு பெயர் தெரியவில்லை, ஆனால் ரைட் சகோதரர்களை காலத்தில் வென்றவர். இவர், வானுர்தி கலை முன்னோடியான சர் ஜார்ஜ் கைலியுடன் பணியாற்றியவர். பறவைகளின் பறக்கும் செயல் மற்றும் இழுவை விசை போன்றவைகளை முழுமையாக விளக்க தன்னுடைய முன் மாதிரி பறக்கும் இயந்திரத்தை உருவாக்கினார் கைலி.
ஆனால், பறவைகளை போன்று இறக்கைகளை அசைத்ததால் வெற்றிப் பெறவில்லை. பின் 1804இல் தட்டை வடிமைப்பு கொண்ட மிதவூர்த்தி ஒன்றை உருவாக்கி காட்டினார். 1853இல் ப்ரமோடன் டலேயில், பயமறியா பிரபு, ஒரு விருப்பமற்ற வண்டியோட்டும் பணியாள் ஒருவரை அந்த விசித்திரமான கட்டமைப்பு கொண்ட இயந்திரத்தை (விமானத்தை) இயக்கச் சொன்னார்.
இவரே உலகின் முதல் விமானி.
தன்னுடைய வெற்றிபெற்ற மிதவூர்தியை எளிதாக தரையில் இறக்க, ஆரக்கால் கம்பிகளை (Spokes) கொண்ட டையர்களை இணைத்து வடிவமைத்தார் கைலி. இது மட்டுமின்றி, உயிர் காக்கும் படகு, நிலசமன் இயந்திரம் போன்ற பலவற்றை ஜார்ஜ் கைலி கண்டுபிடித்துள்ளார்.
அரை நூற்றாண்டு கழித்து 1903இல் தான், ரைட் சகோதரர்கள் கைலி மற்றும் ஏனைய வானூர்தி முன்னோடிகளின் உருவாக்கத்தை வைத்து சற்று உருமாற்றி விண்ணில் பறக்கவிட்டனர். எனவே விண்ணில் பறந்த முதல் விமானி இவர்களில் யாரும் இல்லை.


http://www.old-picture.com/wright-brothers/pictures/First-Flight.jpg

நாஞ்சில் த.க.ஜெய்
14-05-2012, 03:14 PM
தற்போதைய வானூர்திகளின் உருவாக்கத்திற்கு முன்னோடி என்று வேண்டுமானால் ரைட் சகோதரர்களை கூறலாம் ..இது போல் பல கண்டு பிடிப்புகளின் முன்னோடிகள் மறக்கடிக்க பட்டுள்ளனர் என்பதே உண்மை ...

dhilipramki
14-05-2012, 03:24 PM
தற்போதைய வானூர்திகளின் உருவாக்கத்திற்கு முன்னோடி என்று வேண்டுமானால் ரைட் சகோதரர்களை கூறலாம் ..இது போல் பல கண்டு பிடிப்புகளின் முன்னோடிகள் மறக்கடிக்க பட்டுள்ளனர் என்பதே உண்மை ...

ஆம், உலகின் பல ஆராட்சிகளை தொன்டங்கி முழு விடயங்களை கண்டு பிடித்தவர்கள் ஒருவராகவும், அதனால் பெருமையாக இன்று உலக மக்களால் பேசப்படுபவர் மற்றொவராகவும் இருக்கிறது. பென்சிலின் கண்டு பிடித்தவர் அலக்சாண்டர் பிளெமிங் என்று கூறினாலும், அது அவரின் மாணவர் ஒருவர் கண்டுபிடித்தது என்று மறைக்கப் பட்ட வரலாறு கூறுகிறது. நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-05-2012, 04:22 PM
மிகவும் நல்ல தகவல்...நன்றி திலிப் :)