PDA

View Full Version : இந்த நகரத்தின் அழகான பெண்களின் முகமூடிஆதி
14-05-2012, 01:37 PM
வெயிலில் உருகாத வெண்ணை சிலைகளை போன்று உலா வரும் இந்த நகரத்தின் பெண்கள் யாவரும், பெரும்பாலும் டாப்ஸும், லெகின்ஸுமே அணிந்தவ*ர்களாக இருக்கிறார்கள்

பொட்டில்லாத நெற்றியும், நேர்த்தி செய்து கொண்ட புருவமும், அஞ்சனமிட்ட கண்களும், ப்ளீச் செய்து கொண்ட வதனமும், உறையணிந்து செருப்பிட்ட கால்களும், மெகந்தி வரைந்த கைகளும் சிறிது நேரமேனும் உங்களை ஈர்க்காமல் இருக்க வாய்ப்பே இல்லை

பரப்பரப்பான காலையில் வாகனங்கள் செறிந்த சாலையில் இறங்கி நீங்கள் நடக்க முற்படுகையில், புத்தேளுலகுக்கு பெயர்ந்துவிட்டதை போலவும், இறுகியவுடை யணிந்த மங்கையரை காணும் போது தொன்சிற்பங்கள் நிறைந்த குகையொன்றில் நுழைந்துவிட்டதை போலவும் உணர்வு கொள்வீர்கள்

ஹரப்பா மொஹாஞ்சதாரா உருவாவதற்கு காரணமானவர்கள் இந்த நகரத்தின் மங்கையார்களாகவும் இருந்திருக்க கூடும் என்று நீங்கள் யோசிக்கமல் இருக்க மாட்டீர்கள்

இருசக்கர வாகணத்தில் இணையோடு நெருக்கமாக அமர்ந்து செல்வதையும், நெரிசலான பொதுவாகணங்களில் பிற ஆணகளுடன் சகஜமாய் அமர்ந்து பயணிப்பதையும், கூட்டமாய் ஆண்கள் நின்று புகையூதும் தேந்நீர்க்கடைகளில் வெகு சாதரணமாய் தனித்து நின்று தேந்நீர் அருந்துவதையும் பார்க்கையில், பால்மேனி பாவையரின் பக்குவமும், மனமுதிர்ச்சியும், ஆணுக்கு பெண் சமம் என்பதை அழுத்தமாய் செயல்படுத்தும் விதமும், முற்போக்கும், நிமிர்ந்த நன்னடையும் உங்களுக்கு வியப்பை தோற்றுவிக்கமல் இருக்காது

எழிலியர் அலையும் இந்த நகரத்தில் ஸேர் ஆட்டோக்கள் கக்கும் கார்பன் தடித்த டீசல் புகையில் இருந்து மூர்ச்சையாகமல் இருக்க நீங்கள் பழகி கொள்ள* வேண்டும்

தாரைவிட கருப்பான அதன் புகை உங்களின் ஆடைகளில் தன்னை நிரந்தரமாய் ஒட்டிவைப்ப*தையும், அதன் வாசத்தை நீங்கள் வீட்டுக்கும் சுமந்து சென்று பிறரோடு பகிர்ந்து கொள்வதையும் தினசரியானதாய் பழகி கொண்டால், இந்த நகரத்தில் வாழ நீங்கள் தகுதி உடையவராகிவிடுகுறீர்கள்

சொல்ல மறந்துவிட்டேன், இந்த நகரத்தின் ஆட்டோகளை மட்டும் வாடகைக்கு எடுத்துவிடாதீர்கள், அதன் கட்டணம் சொந்தமாக* ஆட்டோ வாங்குவதற்கு ஆகும் செலவைவிட ஒரு பங்கு அதிகமாகும்


இந்த நகரத்துக்கு வந்த புதிதில் நிகழ்ந்த ஒரு சம்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்னை போன்ற கல்யாணமாகாத இளையஞர்களுக்கு அது சுவாரஸ்யமற்றதாகவும், வேதனை அளிப்பதாகவும், தம் எதிர்ப்பையும் கண்டிப்பையும் மிக வன்மையாக பதிவு செய்ய அவசியமுடையதாகவும் இருக்கலாம்

இந்த நகரத்தில் இஸ்லாமிய தொகை அதிகம் என்று நான் உத்தேசித்திருந்தேன். ஆனால் என் உத்தேசம் தவறு என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு வெள்ளந்தியா இருக்கிறேன் ( அட நிஜமாதாங்க, நம்புங்க) என்பதையும் புரிய வைத்தது

ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த பொழுதில்,

நான்: இந்த நகரத்தில் இஸ்லாமியர்கள் தொகை அதிகமோ ??

அவர் : இல்லையே, ஏன் அப்படி கேட்குறீங்க ??

நான் : இங்க பெரும்பாலான பெண்கள் முக்காடிட்டு முகத்தை மறைச்சுக்கிறாங்களே, அதான் கேட்டேன்

அவர் : ஹா ஹா ஹா ஹ்ஹ ஹாஹ்ஹா

நான் : ????? ஏன் சிரிக்கிறீங்க ???

அவர் : அட பாவி நீ இவ்வளவு அப்பாவியா, இந்த ஊர்ல மாசு ரொம்ப ஜாஸ்தி அதான் வெளிய வரும் போது பொண்ணுங்க முகத்தை மூடிக்கிறாங்க, ஆம சில ஆம்பிளங்களும் முகத்தை மூடிக்கிறத நீ பார்க்கலயா ???

நான் : யோவ், அவங்யளலாம் யாருயா கவனிச்சா ? அது மட்டுமில்லம அவங்ய முகத்த பொத்துறத பத்திலாம் யாரு கவலப்பட்டடா!!!!

இப்படியாக* இந்த நகரத்தின் அழகான பெண்களை முகத்தை மூடி மறைக்க வைக்கும் மாசால் பாதிக்கப்டுவது என்னவோ என்னை போன்ற இளைஞர்கள் தான், ஆமாம், அவர்களின் மதி பொழியும் முகத்தை காணாமல் என்னை போறோர் மன உலைச்சலைக்கு உள்ளாவதையும், ஆழ்ந்த வேதனை அடைவதையும், மிக பெரிய ஏமாற்றத்தில் வீழ்வ*தையும் இந்த சமூகம் கருத்தில் கொள்ளுவதே இல்லை

மலைக*ளை வெடிக*ளால் நுணுக்கி, ம*ர*ங்க*ளை வெட்டி ப*சுமையை கொன்று, புறாக்களையும், மைனாக்க*ளையும், கிளிக*ளையும், குருவிக*ளையும், குயில்க*ளையும், அட* காக்கைக*ளை கூட* விர*ட்டி அடித்து, பெரிய பெரிய கட்டடங்களை நிரப்பி, அத்துமீறி எந்த திசையிலும் தன் கூரிய கால்களோடு வெயில் மேயும் வெம்மையுடையதகாவும், பறவைகளே இல்லாததாகவும் மாறிவிட்ட இந்த நகரத்தை, பாவையரும் பால்முகத்தை மறைத்துக் கொண்டு உலவினால் ஒழிய வாழுதற்கு சாத்தியமும் எளிதுமற்ற*தாக மாற்றிவிட்டீர்கள்

நாளை வீடுக்குள்ளும் ஒருத்தரை ஒருத்தர் காணமல் வாழுதற்கு பழகி கொண்டாலன்றி வாழுதல் எளிதல்ல என்னும் நிலையை உருவாக்குவீர்கள்

கார்பன் புகை அடர்ந்து எப்போதும் இரவு போலவே காட்சியளிக்கும் நகரத்தில் வாழும் சாபத்தை எதிர்கால சந்ததிக்கு அளிக்கவும் முடிவு கட்டிவிட்டீர்கள்

துப்பட்ட முகில் மறைக்காத சந்திர வதனத்தை காணுவதற்கேனும் இந்த நகரத்துக்காக ஏதாவது செய்யவேணும், எஞ்சோட்டு தோழர்களே..

மதி
14-05-2012, 01:56 PM
அங்க மட்டும் புதுசா பாத்த மாதிரி பேசுறீங்க..? எங்க ஊரிலேயும் பொண்ணுங்க முகத்தை மூடிக்கிட்டு தான் போறாங்க.. வெயிலுக்கும் புகைக்கும் பயந்து.! :cool:

ஆதி
14-05-2012, 01:57 PM
இங்க ரொம்ப ஜாஸ்திங்கோ

அமரன்
14-05-2012, 08:41 PM
அடங் கொக்கா மக்கா. என்னமா யோசிக்கிறாங்கப்பா.

நடுச்சாமம் கடந்தும் இணையத்தில உலவுறானே.. என்னட்டான்னு நினைச்சேன்.. இப்பத்தானே தெரியுது பயலை அடிச்ச காத்து, கறுப்பு எதுன்னு.

அன்புரசிகன்
15-05-2012, 01:17 AM
இதுக்காகவாவது காபன் வரிகளை கொண்டுவரணும் போல....

இராஜேஸ்வரன்
15-05-2012, 01:57 AM
மலைகளை வெடிகளால் நுணுக்கி, மரங்களை வெட்டி பசுமையை கொன்று, புறாக்களையும், மைனாக்களையும், கிளிகளையும், குருவிகளையும், குயில்களையும், அட காக்கைகளை கூட விரட்டி அடித்து, பெரிய பெரிய கட்டடங்களை நிரப்பி, அத்துமீறி எந்த திசையிலும் தன் கூரிய கால்களோடு வெயில் மேயும் வெம்மையுடையதகாவும், பறவைகளே இல்லாததாகவும் மாறிவிட்ட இந்த நகரத்தை, பாவையரும் பால்முகத்தை மறைத்துக் கொண்டு உலவினால் ஒழிய வாழுதற்கு சாத்தியமும் எளிதுமற்றதாக மாற்றிவிட்டீர்கள்

உண்மைதான். மிகவும் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

கீதம்
15-05-2012, 04:01 AM
புத்தேளுலகம் சென்றும் நரகவேதனையா!

நகரவாழ்வை நாசமாக்கும் நச்சுப்புகையின் வீரியம், ஆதனின் வரிகளில் தவழும் தமிழின் அழகைத் தாண்டி மனம் ஊடுருவுகிறது.

ஆதவா
15-05-2012, 04:16 AM
ஆக்சுவலி, பெங்களூரூவுக்கு போய்ட்டு வந்தப்பறம் நானெழுத வேண்டிய பதிவு இது! கடைசி பாராக்கள் தவிர்த்து..அங்க மட்டும் புதுசா பாத்த மாதிரி பேசுறீங்க..? எங்க ஊரிலேயும் பொண்ணுங்க முகத்தை மூடிக்கிட்டு தான் போறாங்க.. வெயிலுக்கும் புகைக்கும் பயந்து.! :cool:

பார்த்தேன் பார்த்தேன்... அதுமட்டுமல்ல, நீங்க உங்க மம்மியை பின்னாடி வெச்சுட்டு வண்டியில போய் ட்ராஃபிக்ல நின்னுட்டு முகத்த மூடியிருக்கிற நல்ல ஃபிகரை திட்டி நக்கல் பண்ணினதும் என் காதுக்கு வந்துச்சு!! ஒகே ஒகே!!

அன்புரசிகன்
15-05-2012, 04:51 AM
பார்த்தேன் பார்த்தேன்... அதுமட்டுமல்ல, நீங்க உங்க மம்மியை பின்னாடி வெச்சுட்டு வண்டியில போய் ட்ராஃபிக்ல நின்னுட்டு முகத்த மூடியிருக்கிற நல்ல ஃபிகரை திட்டி நக்கல் பண்ணினதும் என் காதுக்கு வந்துச்சு!! ஒகே ஒகே!!

இது OKOK மாதிரியல்லவா இருக்கு. :D

ஆதவா
15-05-2012, 04:56 AM
இது OKOK மாதிரியல்லவா இருக்கு. :D

எனக்கு ஏதும் தெரியாதுப்பா... கேள்விப்பட்டத சொன்னேன். அவ்வளவுதான்!!

மதி
15-05-2012, 05:00 AM
ஆக்சுவலி, பெங்களூரூவுக்கு போய்ட்டு வந்தப்பறம் நானெழுத வேண்டிய பதிவு இது! கடைசி பாராக்கள் தவிர்த்து..
பார்த்தேன் பார்த்தேன்... அதுமட்டுமல்ல, நீங்க உங்க மம்மியை பின்னாடி வெச்சுட்டு வண்டியில போய் ட்ராஃபிக்ல நின்னுட்டு முகத்த மூடியிருக்கிற நல்ல ஃபிகரை திட்டி நக்கல் பண்ணினதும் என் காதுக்கு வந்துச்சு!! ஒகே ஒகே!!
பைக்ல பின்னாடி இருந்தது மம்மியில்லை... :D
நான் ஏன் திட்டப்போறேன்... :icon_b:

மதி
15-05-2012, 05:00 AM
எனக்கு ஏதும் தெரியாதுப்பா... கேள்விப்பட்டத சொன்னேன். அவ்வளவுதான்!!
இது வேறயா...???

அன்புரசிகன்
15-05-2012, 05:12 AM
பைக்ல பின்னாடி இருந்தது மம்மியில்லை... :D
நான் ஏன் திட்டப்போறேன்... :icon_b:


இது வேறயா...???
சண்டையிலயாவது அமையுமோ என்ற ஒரு நல்லெண்ண நப்பாசை இருக்கலாம் அல்லவா????

மஞ்சுபாஷிணி
15-05-2012, 06:16 AM
தற்காத்துக்கொள்கிறார்கள் பெண்கள் வேறென்ன :)

மதி
15-05-2012, 06:41 AM
சண்டையிலயாவது அமையுமோ என்ற ஒரு நல்லெண்ண நப்பாசை இருக்கலாம் அல்லவா????
அப்படியில்லை ரசிகரே...! :cool:

அன்புரசிகன்
15-05-2012, 06:42 AM
அப்படியில்லை ரசிகரே...! :cool:

அப்ப எப்படி?

அதத்தானே எல்லாரும் கேட்குறாங்க...

மதி
15-05-2012, 07:02 AM
முகமூடி போட்ட பொண்ணு (ஓஓஓ) என் பைக் பின்னாடி உட்கார்ந்திருந்தபோது நான் ஏன் சண்டை போடப்போறேனு சொன்னேன்..!?:icon_b:

இப்படி தான் கனா காண வேண்டியதா இருக்கு... :traurig001:

மஞ்சுபாஷிணி
15-05-2012, 07:52 AM
:) அது சரி....

சிவா.ஜி
15-05-2012, 10:28 AM
புனே மட்டுமில்லீங்கோ ஆதன்...நம்ம சிங்காரச் சென்னையில இந்தமுறை நாலு நாட்கள் இருக்க வேண்டியதாப்போச்சு. அங்கேயும் இந்த நிலைமைதான்...அங்க மாசு....இங்க வெயிலும் தூசும். பாவம் இந்த இளைஞர்கள்...!!! அவங்களையும் ஹெல்மெட் போடச்சொல்லிக் கட்டாயப்படுத்துது அரசாங்கம்....அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினார்ங்கறதே இல்லாமப் பூடுமோ....!!!

மதி
15-05-2012, 10:29 AM
புனே மட்டுமில்லீங்கோ ஆதன்...நம்ம சிங்காரச் சென்னையில இந்தமுறை நாலு நாட்கள் இருக்க வேண்டியதாப்போச்சு. அங்கேயும் இந்த நிலைமைதான்...அங்க மாசு....இங்க வெயிலும் தூசும். பாவம் இந்த இளைஞர்கள்...!!! அவங்களையும் ஹெல்மெட் போடச்சொல்லிக் கட்டாயப்படுத்துது அரசாங்கம்....அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினார்ங்கறதே இல்லாமப் பூடுமோ....!!!
பூடுச்சே... :(

சிவா.ஜி
15-05-2012, 10:31 AM
அடக்கடவுளே.....மெய்யாலுமா...???

jayanth
15-05-2012, 10:42 AM
எ(பெ)ங்களூரிலும் அப்படிதாங்க...

மதி
15-05-2012, 11:00 AM
அடக்கடவுளே.....மெய்யாலுமா...???
அதையும் இதையும் குழப்பிக்காதீங்க.. :icon_b:

Ravee
15-05-2012, 04:44 PM
மதி வதனத்தை மனதில் வைத்து எழுதி இருப்பாரோ ஆதன்னு நெனச்சேன் .... அம்பு சரியான ஆளை குறிவைத்துதான் எய்யப்பட்டு இருக்கிறது. ஆதவா .... எடுத்து கொடுத்துட்டு காணாமல் போனால் எப்படி ?

சிவா.ஜி
15-05-2012, 07:23 PM
அப்படீன்னா என்னதான் சொல்ல வருகிறீர்கள் ரவீ....????

தாமரை
16-05-2012, 01:33 AM
கருப்பு
கட்டிக் காக்கிறதாம்
கற்பு

எத்தனையோ அரசியல்வாதிகள் பெண்களின் உடையைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறார்கள். கோஷம் போட்டிருக்கிறார்கள். போராட்டம் செய்திருக்கிறார்கள். இந்த கரிமமாசு பாருங்களேன், சப்தமே இல்லாமல் அனைவரையும் முழு ஆடை அணிய வைத்து விட்டது..

உங்கள் மனதையும் சேர்த்து இறுக கவ்விய உடைகள் இன்றைய நவீனம். அதனால் தோல்நோய் வருமென்று (வதந்தியாய்) சொன்னால் உள்ளங்களோடு சேர்ந்து உடைகளும் தளரும்.

எதையாவது எங்கிருந்தாவது
எப்படியாவது பெற்று

வித்து காசாக்கி
எதை எதையெதையோ வாங்கி நுகர்ந்து
போதையா, ஆனந்தமா, பித்தமா, கிறுகிறுப்பா
எனப் புரியாமல்
இதுதான் உல்லாசம் என

ஓடி ஓடி திசை மறந்து
தொலைந்து கொண்டு இருக்கிறோம்.

சிந்தித்தால் எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

இதுவும் மாறும்..

ஆதன், முழுமதி முகத்தைக் காண ஒரு எளிய வழி இருக்கிறது..

ஏ.சி ரெஸ்டாரெண்ட், ஏ.சி தியேட்டர் என அவர்களை அழைத்துப் போய் முயற்சி செய்யுங்கள்.

அதுக்கு முன்னால ஒரு ஏ.சி. காரும் வாங்கிடுங்க. உங்க பங்களாவையும் ஏ.சி. செஞ்சிடுங்க.

எதுவுமே தேவையில்லை என்பது உண்மை.

சன்னியாசி பூனை வள்ர்த்த கதையா, ஒண்ணுக்கு பின்னால ஒண்ணு வரிசை கட்டி வரும்.

அத்தனை தேவைகளுக்கு மத்தியில் தேவையானது மட்டும் இருக்கவே இருக்காது.

(இப்படித்தாங்க ஓடிகிட்டு இருக்கு இன்றைய உலகம்)

அன்புரசிகன்
16-05-2012, 02:03 AM
கருப்பு

ஆதன், முழுமதி முகத்தைக் காண ஒரு எளிய வழி இருக்கிறது..

ஏ.சி ரெஸ்டாரெண்ட், ஏ.சி தியேட்டர் என அவர்களை அழைத்துப் போய் முயற்சி செய்யுங்கள்.

அதுக்கு முன்னால ஒரு ஏ.சி. காரும் வாங்கிடுங்க. உங்க பங்களாவையும் ஏ.சி. செஞ்சிடுங்க.ஆதன்: ரொம்ப காஸ்ட்லி ஐடியாவா இருக்கே....:icon_hmm:

தாமரை
16-05-2012, 03:24 AM
ஆதன்: ரொம்ப காஸ்ட்லி ஐடியாவா இருக்கே....:icon_hmm:

வேற என்ன எதிர் பார்த்தீங்க... "ஏ" விற்கு பதிலா "ஓ" இருந்தா நல்லா இருக்குமேன்னா?


ஓ.சி ரெஸ்டாரெண்ட், ஓ.சி தியேட்டர் என அவர்களை அழைத்துப் போய் முயற்சி செய்யுங்கள்.

அதுக்கு முன்னால ஒரு ஓ.சி. காரும் வாங்கிடுங்க. பங்களாவையும் ஓ.சி. செஞ்சிடுங்க.

மதி
16-05-2012, 03:43 AM
ம்ம்.. அப்ப சீக்கிரமே கார் வாங்கிட வேண்டியது தான்...! :)

அன்புரசிகன்
16-05-2012, 04:18 AM
ம்ம்.. அப்ப சீக்கிரமே கார் வாங்கிட வேண்டியது தான்...! :)

உங்க உயரத்துக்கு லொறி அல்லது லான்ட்குறூசர் தான் வாங்க வேணும் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவரிடமிருந்து தனிமடல் வந்திச்சு... :D

மதி
16-05-2012, 05:28 AM
உங்க உயரத்துக்கு லொறி அல்லது லான்ட்குறூசர் தான் வாங்க வேணும் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவரிடமிருந்து தனிமடல் வந்திச்சு... :D
பெயரே குறிப்பிட்டாலும் பரவாயில்ல... சீக்கிரமே வாங்கிடுவேன். நீங்க சென்னை வரும் போது அந்த கார்ல சுத்தலாம்..! வாங்க..

மஞ்சுபாஷிணி
16-05-2012, 06:32 AM
பாவம் அன்புரசிகன் :)

மதி
16-05-2012, 06:50 AM
அவர் ஏன் பாவம்???? :confused::confused:

அன்புரசிகன்
16-05-2012, 07:00 AM
அவர் ஏன் பாவம்???? :confused::confused:

பிகாஸ் ஆப் ஏசி, லாட் ஆப் லேடி, இன்சைட் தி லாரி, ஒரே குசி

அப்புறம் எனக்கு எங்க இருக்கை இருக்கப்போகுது என்று சொல்லவாறாங்க... :D

மதி
16-05-2012, 08:06 AM
பிகாஸ் ஆப் ஏசி, லாட் ஆப் லேடி, இன்சைட் தி லாரி, ஒரே குசி

அப்புறம் எனக்கு எங்க இருக்கை இருக்கப்போகுது என்று சொல்லவாறாங்க... :D
கேட்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு...! :D

அன்புரசிகன்
16-05-2012, 08:48 AM
கேட்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு...! :D
ம்.. ம்.. இருக்கும். இருக்கும்...

சிவா.ஜி
16-05-2012, 07:06 PM
ஆமா இருக்கும்......!!!

அன்புரசிகன்
17-05-2012, 01:41 AM
ஆமா இருக்கும்......!!!

ம்.. அப்புறமா எல்லா தொலைக்காட்சியிலும் ஒரு விளம்பரத்தில் வருவார்....

அது என்ன விளம்பரம் என்று சரியாக சொன்னால் அவருக்கு மன்ற இணையப்பணம் பரிசு காத்திருக்கு... நடுவர் நான் மட்டும் தான். :D

(எப்படியெல்லாம் மக்கள உசுப்பேத்த வேண்டியிருக்கு...)

மஞ்சுபாஷிணி
17-05-2012, 06:51 AM
ஐயையோ இது இன்னும் முடியலையா..... :)

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே அன்புரசிகன் பாவமே தான் :)

சிவா.ஜி
18-05-2012, 12:42 PM
ம்.. அப்புறமா எல்லா தொலைக்காட்சியிலும் ஒரு விளம்பரத்தில் வருவார்....

அது என்ன விளம்பரம் என்று சரியாக சொன்னால் அவருக்கு மன்ற இணையப்பணம் பரிசு காத்திருக்கு... நடுவர் நான் மட்டும் தான். :D

(எப்படியெல்லாம் மக்கள உசுப்பேத்த வேண்டியிருக்கு...)

பாடி ஸ்ப்ரே விளம்பரம்தானே.....ட்டூ ஹாட்....ட்டூ செக்ஸி......மதி பாவம்....இல்லையா அன்பு?

ஆதி
21-05-2012, 10:57 AM
சென்னையிலும், பெங்களூரிலும் முகமூடி போட்ட பெண்களை பார்த்திருக்கிறேன், அவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளாக இருப்பார்கள், என்றாலும் பெரும்பாலான இருசக்கர ஓட்டிகள் அப்படி முகமூடிக் கொள்வதில்லை


பூனாவில் அப்படியல்ல 90 விழுக்காடு பெண்கள் முகமூடித்தான் பயணம் செய்கிறார்கள், பஸ், கார், சேர் ஆட்டோ, இருசக்கர வாகனம் என்று எதில் பயணிப்பர்கள் ஆனாலும் முகமூடி போட்டவர்களாகத்தான் இருப்பார்கள்


சென்னையிலும், பெங்களூரிலும் ஒரு முறைக் கூட சாலைப்பயணித்தின் போது மூச்சடைப்பதை போல உணர்ந்ததில்லை, பூனாவில் அதிகமாய் உணர்ந்திருக்கிறேன், நெடிய சிக்னலில் நடுநடுங்கியவாறு கடகடவென அகவிக் கொண்டு நம் அருகி வந்து நிற்கும் சேர் ஆட்டி அடிக்கடி கர்ஜிக்கும் போது ஒரு பாம்பென தன் கார்பன் புகையை கக்கும், சிறித்து நேரத்தில் அந்த புகையின் அடர்த்தி மூச்சுக்காற்றை கனமாக்கி சுவாகிக்க இயாலதபடிக்கி மாற்றி மூச்சுத்திணறலை உண்டு பண்ணும், அதையும் மீறி சுவாசித்தால் குமட்டல் உண்டாகும்


பூனாவில் அரசு வாகனங்கள் மிக குறைவு சேர் ஆட்டோக்களைத்தான் அதிகம் நாட வேண்டி இருக்கும், பஸ்களைவிட சேர் ஆட்டோக்களை நம்புவோர் கணக்குமிக அதிகம், பஸ்கள் ஒவ்வொரு நாளும் ஒரு நேரத்துகு வரும், அதனால் சேர் ஆட்டோக்களின் ஆட்சித்தான் பூனாவில் நடக்கிறது, ஆனால் ஆட்சித்தான் நல்லாட்சியாய் இல்லை

பெண்களை முன்னிருத்தி இந்த பதிவை எழுத காரணம், கொஞ்சம் பரிகாசம் சேர்த்து எழுதத்தான், அதுமட்டுமே காரணமுமில்லை

அற்பமான காரியங்களுக்காக அல்லது விடயங்களுக்காக சுயநலமாகவும் நடந்து கொள்கிறோம், சில நேரம் உயிரை இழக்கிறோம் அல்லது இழக்கும் அளவுக்கு போகிறோம்

அற்பமான விடயத்துக்காக கொஞ்சம் பொதுநலமாகவும், அர்த்தம் உள்ளதாகவும் நடந்து கொள்வோமே எனும் எண்ணத்தால் எழுதியது

பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

arun
26-10-2012, 09:57 PM
மதியம் ஆபீசுக்கு வரும்போது எதேச்சையாக முகமூடி அணிந்த ஒரு பெண்ணை பார்த்தேன் !

அப்போது என்னை அறியாமல் மனதுக்குள் சொன்ன வார்த்தைகள் :

நடந்து போறதுக்கு எதுக்கு முகத்தை மறைக்கனும்,பைக்குல போறோம்னு நினைப்பா ? ..

அனுராகவன்
28-10-2012, 06:01 AM
முகமூடி என்றவுடன் முஸ்லீம் பெண்களை பார்த்தால் ஏன் இவர்கள் அணிகிறார்கள் ..என்று யோசிக்க தோனும்..ஆனால் இதை யாரிடமும் கேட்டது கிடையாது..
காரணம் சண்டை வருமே!!
பிறகு குறிப்பாக கருப்பு நிறம் எதற்க்காக அணிகள் ...