PDA

View Full Version : முற்றும்..



rambal
07-04-2003, 05:25 PM
வரலாறு தெரியாத
தலைமுறை..

வரம்பு மீறின
வன்முறை...

பண்பாடு மறந்த
நாகரிகம்...

வாழை இலை போய்
வேக உணவு விடுதி..

மனிதம் மறந்த
ம(ந்தி)னிதர்கள்..

பாம்பாட்டி பட்டம் போய்
காட்டுமிராண்டிகள்..

நிச்சயமற்ற வாழ்வு..
சொற்ப ஆசை...

கந்தகம் கலந்த
காற்று..

இருந்தாலும் பரவாயில்லை
எனும் மனோபவம்..

இன்னும் என்ன பாக்கி?
முற்றும் தானே...

இளசு
07-04-2003, 05:57 PM
இல்லை ராம்....
இது தொடரும்..
இயற்கை ஒரு வட்டம் போட்டு
ஆரம்பப் புள்ளிக்கு வந்து.. மீண்டும்
ஆரம்பித்து ... தொடரும்....

பார்க்க நாம் இருக்க மாட்டோம்.
அவ்வப்போது வண்டியில் இருந்து இறங்கும் போது
அவரவர்க்கு "தனிப்பட்ட " முற்றும்....!!!

poo
08-04-2003, 01:10 PM
தொடர்கதையாய் இருப்பதனால்தான் என்னவோ உலகமும் உருண்டையாய்...

ராம் மீண்டும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்!!!

karikaalan
08-04-2003, 01:49 PM
ராம்பால்ஜி!

வன்முறைக்கு வரம்பு உண்டா?
நாகரிகமும், பண்பாடும் வெவ்வேறா?
சுற்றுச்சூழல் நிர்வாகம் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கும்போது, இவ்வளவு கந்தகம் மட்டுமே காற்றில் அலைய விடப்படலாம் என்று சொல்கிறது. தொழில் நடத்துபவர்கள் அதுவே சித்தம் என்று அவ்வளவு கந்தகம் வெளியிடுகிறார்கள். விடவே கூடாது என்று அவர்களும் சொல்வதில்லை; இவர்களும் செவிசாய்ப்பதில்லை.

வாழிய பாரத மணித்திருநாடு; வாழிய வாழிய வாழியவே!!

===கரிகாலன்

rambal
08-04-2003, 04:00 PM
வன்முறைக்கு வரம்பு உண்டு..
நான் எழுதுவது கூட ஒருவிதமான
வன்முறைதான்..
ஆனால்,
வரம்பான வன்முறை..

பண்பாடும் நாகரிகமும் வேறுவேறுதான்..
நம் நாட்டில்
முழங்காலிற்கு கீழ் உடை..
இது நம் பண்பாடு..
இடுப்பை காட்டக்கூடாதென்பது
மேற்கத்திய பண்பாடு..
எதை வேண்டுமானாலும் காட்டலாம்
என்பது
நாகரிகம்..
அதைக் கையாண்டால்
அநாகரீகமன்றோ..
சென்னையில்
ஸ்பென்சருக்கும் நுங்கம்பாக்கம்
லேண்ட் மார்க் எதிரில் இருக்கும்
காபி பப்பிற்கும் போனால் தெரியும்..
ஏதோ நீங்கள் அயல் நாட்டிற்கு வந்து விட்டது போன்ற ஓர் உணர்வை..

மற்றபடி அப்படி சுத்திக் கொண்டிருந்தவன்
இன்று ஞானோபதேசம் செய்கிறேன்.. அவ்வளவே..

(தவறாக எடுக்க மாட்டீர்கள் என்பதால் தான் இந்தப் பதில்)

gankrish
11-04-2003, 12:24 PM
ராம் கவலையை விடுங்கள். இது ஒரு சுழற்ச்சி. இது கண்டிப்பாக மாறும். இப்போ நாம் அயல் நாட்டவரை போல் மாறுகிறோம், அவர்கள் நம்மை பார்த்து மாறுகிறார்கள். சென்னை இப்போது மிகவும் மோசம் ஆகிவிட்டது. இதற்க்கு நான் இருக்கும் பம்பாய் தேவலை.

Nanban
11-04-2003, 02:42 PM
நம் நாகரீகம்
ஆதாம் ஏவாள்
காலம் போய்
கற்று வரும்
புது உத்திகளை.

நடுவே வியாபாரிகளை
கொஞ்சம் ஒதுங்கச் செய்தால்
மேலையோ, கீழையோ
நடுக்கம் தராத
நாகரீகம்
வரத்தான் செய்யும்.....

பூமகள்
06-07-2008, 06:39 AM
வரலாறு தெரியாத
தலைமுறை..

வரம்பு மீறின
வன்முறை...
வரலாறறிய நேரமின்றி
விழுங்கப்படும்..
விரைவு விக்கல்கள்..

இன்றைய தலைமுறை..!

மீறியவை..
வன்முறையும்..
உண்முறையும்..!

பண்பாடு மறந்த
நாகரிகம்...

இருந்தாலும் பரவாயில்லை
எனும் மனோபவம்..

இன்னும் என்ன பாக்கி?
முற்றும் தானே...
மறக்கப்படும்
பண்பாடு..
மறைக்கப்படும்..
நியாயங்கள்..

நல் சமுதாயத்தின்
வேரழுகல்..
அலட்சியப் போக்காகும்..
மனோபாவம்..

முற்றினால்..
உலகம் முற்றும்..

---------------------------------------------------
அழகிய கவிதை...
யோசிக்க வைத்துவிட்டீர்கள்..:icon_rollout:

பாராட்டுகள் ராம்பால் அண்ணா..! :)
பெரியண்ணாவின் பின்னூட்ட பதில் அழகோ அழகு.

ஆதவா
06-07-2008, 06:53 AM
மற்றபடி அப்படி சுத்திக் கொண்டிருந்தவன்
இன்று ஞானோபதேசம் செய்கிறேன்.. அவ்வளவே..

(தவறாக எடுக்க மாட்டீர்கள் என்பதால் தான் இந்தப் பதில்)

அப்படி விழுந்தவர்கள்தாம் இப்படி எழுதுவார்கள்.

மழுங்கிய எண்ணமும்
அவ்வெண்ணத்தினால் வீழ்ச்சியும்
வீழ்தலில் எழுச்சியும்
அவ்வெழுச்சியின் ரகசியமும்
அந்த ரகசியத்தின் நிரந்தரமும்
அந்த நிரந்தரத்தின் உறுதியும்
அந்த உறுதியின் செயற்பாடும்
அச்செயற்பாட்டின் நீட்சியும்

தெரிந்தவர்களுக்கு....

ராம்....

நன்றாகத்தான் இருக்கும்..

முற்றும்.

pkarthi28
10-07-2008, 05:56 PM
உங்கள் வருத்தம் சரிதான். ஆனால் இது முற்றும் என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் கூறியது அனைத்தும் வினைகள். அதற்கான விளைவுகள் இன்னும் பாக்கி உள்ளது. விளைவுகள் முற்றும் வரை திருந்த வாய்ப்பும் உள்ளது. திசை மாறுபவர்கள் திருந்தினால் மகிழ்ச்சி.

அதை விடுங்கள். கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்...,:)