PDA

View Full Version : அன்புடன் நிலைத்து.....

மஞ்சுபாஷிணி
12-05-2012, 03:48 PM
http://2.bp.blogspot.com/-yRMqsa0Dz-Q/TXUKHbwhThI/AAAAAAAAAOM/htkXMmViejs/s1600/kindness-3.jpg
தவறுகள் இல்லாத உலகமுமில்லை
தவறே செய்யாத மனிதனுமில்லை

அறிந்து தவறுகள்செய்ய நாம் சிறுபிள்ளைகளில்லை
அறியாது செய்த தவறுகளை மன்னிக்கவும் தயங்குவதில்லை

பிழையில் இருந்து வெற்றியைக்காண முயல்வோருமுண்டு
பிழை செய்து தன்னை திருத்திக்கொண்டோருமுண்டு

திருந்தியப்பின் வெற்றியும் நாடி வருவதுமுண்டு
வெற்றியும் நின்று என்றும் நிலைப்பதுமுண்டு

பொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்
பிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்

கோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்...

நாஞ்சில் த.க.ஜெய்
12-05-2012, 06:32 PM
தவறுகள் கற்று தரும் உண்மையான ஆசான் ..உணர்ந்தவர்கள் மனதில் இறுதியில் உதிக்கும் தத்துவம் இந்த கவிதை...

மஞ்சுபாஷிணி
13-05-2012, 07:16 AM
அன்பு நன்றிகள் ஜெய் கருத்து பகிர்வுக்கு...

ஆதி
13-05-2012, 07:17 AM
//பொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்
பிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்

கோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்...//

சத்தியமான வார்த்தைகள் அக்கா

தவறே செய்யாத மனிதனுமில்லை, தவற்றை உணர்ந்து திருந்தாதவன் மனிதனுமில்லை

வாழ்த்துக்கள் அக்கா

மஞ்சுபாஷிணி
13-05-2012, 07:21 AM

சரியே ஆதி... தவறு ஏற்படுவது இயல்பு தான்.... அந்த தவற்றை மன்னிப்பதால் மேன்மை தான் நமக்கு...அன்பு நன்றிகள் ஆதி...

vasikaran.g
13-05-2012, 11:44 AM
கவிதை
தத்துவம் !
ஏற்று
கொள்ள
வேண்டிய
வாழ்க்கை
சத்தியம் .!

ஜான்
13-05-2012, 12:23 PM
தினம் தினம் இறந்து பிறக்கவேண்டும் என்று இதற்காகத்தான் சொல்கிறார்களோ?

சிவா.ஜி
14-05-2012, 07:53 PM
ஆழமாய் சிந்திக்க வேண்டிய வரிகள். கோபம் என்பது அடுப்புப் பாலாய் அனல் குறைந்ததும் அடங்கிட வேண்டும்....நீறு பூத்த நெருப்பாய் இருப்பின்...உருவாக்கியவரையே அழித்துவிடும்.

வாழ்த்துக்கள் மஞ்சு.

அமரன்
14-05-2012, 08:20 PM
உரிமை உடையவங்கதான் கோப்படுவாங்க.. என் மேல நீங்க கோபப்படுறதே இல்லை. அப்படின்னு சிணுங்கிறவங்களுக்கும் இருக்கத்தான் செய்றாங்கக்கா..

நன்னெறிக்கவிதைக்கு நன்றிக்கா.

ravikrishnan
15-05-2012, 12:59 AM
கவிதை அருமை அக்கா!!,கற்கவேண்டிய பாடம்:icon_b::icon_b:

மஞ்சுபாஷிணி
15-05-2012, 05:43 AM
கவிதை
தத்துவம் !
ஏற்று
கொள்ள
வேண்டிய
வாழ்க்கை
சத்தியம் .!

ஒற்றை வார்த்தைக்கோர்வையில் அழகிய கருத்துச்செறிவுள்ள பின்னூட்டம்.. அன்பு நன்றிகள் வசீகரன்..

மஞ்சுபாஷிணி
15-05-2012, 05:46 AM
தினம் தினம் இறந்து பிறக்கவேண்டும் என்று இதற்காகத்தான் சொல்கிறார்களோ?

தினம் தினம் இறக்க தெரிந்தவனால் மட்டுமே தான் பிறக்கவும் முடியும் வேகமாக.... அன்பு நன்றிகள் ஜான் தம்பி :)

மஞ்சுபாஷிணி
15-05-2012, 05:47 AM
ஆழமாய் சிந்திக்க வேண்டிய வரிகள். கோபம் என்பது அடுப்புப் பாலாய் அனல் குறைந்ததும் அடங்கிட வேண்டும்....நீறு பூத்த நெருப்பாய் இருப்பின்...உருவாக்கியவரையே அழித்துவிடும்.

வாழ்த்துக்கள் மஞ்சு.

சரியாச் சொன்னீங்க சிவா.... கோபத்தையே தவிர்க்கத்தான் முயலவேண்டும்.. கோபத்தில் எங்கும் நன்மை விளைந்ததா தெரியலைப்பா :( அழிவுகள் தான் அதிகம் பார்க்கிறேன்....

அன்பு நன்றிகள் சிவா....

மஞ்சுபாஷிணி
15-05-2012, 05:49 AM
உரிமை உடையவங்கதான் கோப்படுவாங்க.. என் மேல நீங்க கோபப்படுறதே இல்லை. அப்படின்னு சிணுங்கிறவங்களுக்கும் இருக்கத்தான் செய்றாங்கக்கா..

நன்னெறிக்கவிதைக்கு நன்றிக்கா.

ஆஹா கோபத்தை ஆசையா விருப்பத்தோடு வரவேற்பதை இப்ப தான் பார்க்கிறேன் :) உரிமையா கோபப்படுவது செல்லமா கோபப்படுவது போல பட்டால் பிரச்சனை இல்லை :) அதுவே ஆங்காரமாக கத்தினால் காணாமயே போயிருவாங்க எதிர்ல இருக்கிறவங்க... எனக்கு கோபப்படுபவர்களிடம் பேசவே பயம் தான்.... அதனால் அதிகமா கோபப்படுவோரை விட்டு ஒதுங்கிவிடுவேன் நான்.... :) அமரன் உங்களுக்கு கோபம் வராது தானே? எனக்கு கோபம் வராது :)

அன்பு நன்றிகள் அமரன்.

மஞ்சுபாஷிணி
15-05-2012, 05:50 AM
கவிதை அருமை அக்கா!!,கற்கவேண்டிய பாடம்:icon_b::icon_b:

ஆமாம் வாழ்க்கையில் நல்லவை நிலைத்து அல்லாதவை கடந்துவிட கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் வேண்டும் கோபத்தை விட்டொழிக்கவும் வேண்டும் மன்னிக்க முயலவும் வேண்டும்... மன்னிப்பு கேட்பதில் முதலில் நிற்கவும் வேண்டும்....

அன்பு நன்றிகள் ரவிக்ருஷ்ணன்....