PDA

View Full Version : எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

ravikrishnan
12-05-2012, 12:59 PM
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!:icon_b::icon_b:

நன்றி:சித்தமருத்துவம்

சிவா.ஜி
12-05-2012, 01:43 PM
ரொம்ப நாளா நான் செஞ்சிக்கிட்டிருக்கறதுதான்....எல்லோரும் சாப்பிடுங்க...உண்மையிலேயே மிக நல்லது. பகிர்வுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-05-2012, 04:26 PM
மிகவும் நன்றி...ரவி...செய்திக்கு.:) இப்போதே சாப்பிட ஆரம்பித்துவிடுகிறேன்.:)

ravikrishnan
13-05-2012, 04:00 AM
அன்பான இரு ஐயா அவர்களுக்கு, எனது நன்றிகள்!!!

jayanth
13-05-2012, 04:18 AM
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி ravikrishnan.

M.Jagadeesan
13-05-2012, 05:28 AM
உணவே மருந்து என்பர். நம்வீட்டு சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு மருந்துதான். " வெந்தயம் உண்பார் பந்தயத்தில் வெல்வார் " என்று சொல்லும் அளவிற்கு , வெந்தயம் நம் உடலைச் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ravikrishnan
13-05-2012, 06:55 AM
எனக்கு வற்றுவலி வரும்போது வாழைபழத்தில் வெந்தையம் வைத்து சாப்பிடுமாறு எனது பாடி சொல்லுவார்.இப்போது நினைவுக்கு வருகிறது, நன்றி ஐயா,!!

மஞ்சுபாஷிணி
13-05-2012, 07:14 AM
ஹப்பா நிம்மதி... ஊருக்கு போகுமுன் உடல் எடையை எப்படிடா குறைக்கிறது எக்சர்ஸைஸ் செய்யாமன்னு நினைச்சேன், செய்து பார்த்துட வேண்டியது தான்.. ஹுஹும் வெந்தயம் சாப்பிட்டு பார்த்துட வேண்டியது தான். இனிமே எங்காத்துல வெந்தயக்குழம்பு, வெந்தயரசம், மேத்தி தேப்லா, வெந்தய கிச்சடி.. யாரெல்லாம் இனிமே என் வீட்டுக்கு வராங்களோ அவங்களுக்கும் இது தான்...

அன்பு நன்றிகள் ரவிக்ருஷ்ணன் பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு...

மஞ்சுபாஷிணி
13-05-2012, 07:15 AM
ரொம்ப நாளா நான் செஞ்சிக்கிட்டிருக்கறதுதான்....எல்லோரும் சாப்பிடுங்க...உண்மையிலேயே மிக நல்லது. பகிர்வுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.

உங்களுக்கே இது நியாயமா சிவா? இன்னும் உடல் எடையை குறைச்சால் காத்துல தான் பறக்கணும்... :)

M.Jagadeesan
13-05-2012, 08:21 AM
ஹப்பா நிம்மதி... ஊருக்கு போகுமுன் உடல் எடையை எப்படிடா குறைக்கிறது எக்சர்ஸைஸ் செய்யாமன்னு நினைச்சேன், செய்து பார்த்துட வேண்டியது தான்.. ஹுஹும் வெந்தயம் சாப்பிட்டு பார்த்துட வேண்டியது தான். இனிமே எங்காத்துல வெந்தயக்குழம்பு, வெந்தயரசம், மேத்தி தேப்லா, வெந்தய கிச்சடி.. யாரெல்லாம் இனிமே என் வீட்டுக்கு வராங்களோ அவங்களுக்கும் இது தான்...

அன்பு நன்றிகள் ரவிக்ருஷ்ணன் பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு...

விருந்தாளிகள் நம் வீட்டுக்கு வராமல் இருக்க, வந்த விருந்தாளிகளை விரட்ட நல்லவழி!

மஞ்சுபாஷிணி
13-05-2012, 08:27 AM
நிஜம்மாவா? விருந்தாளிகளை விரட்ட வெந்தயமா? ஆச்சர்யமா இருக்கே ஜகதீசன்? நல்லவேளை வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே சொல்லிட்டீங்க. தப்பிச்சோம்.... :)

ravikrishnan
13-05-2012, 12:44 PM
நிஜம்மாவா? விருந்தாளிகளை விரட்ட வெந்தயமா? ஆச்சர்யமா இருக்கே ஜகதீசன்? நல்லவேளை வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே சொல்லிட்டீங்க. தப்பிச்சோம்.... :)

:lachen001::lachen001: எல்லோரும் சேர்ந்து தலைப்பையே மாத்திட்டிங்க விருந்தாளிகளை விரட்ட வெந்தயமா?:lachen001::lachen001: நன்றி மஞ்சு அவர்களே!!

மஞ்சுபாஷிணி
13-05-2012, 04:36 PM
நாம வெந்தயம் விருந்தாளிகளுக்கு கொடுத்தால் அவங்க மிளகு கொண்டு வந்திருப்பாங்க தானே ரவிக்ருஷ்ணன்? அதில் சப்ஸ்ட்யூட் பண்ணிருவாங்க :)

அமீனுதீன்
13-05-2012, 05:04 PM
அருமை

சிவா.ஜி
13-05-2012, 07:26 PM
மஞ்சு நான் உடல் எடையைக் குறைக்க வெந்தயம் சாப்பிடவில்லை(குறைக்க அங்க என்ன இருக்கு) சர்க்கரையைக் கட்டுப்படுத்தத்தான். 6 வருடமாய் சர்க்கரையை....மாத்திரைகளின்றி கட்டுப்படுத்திக்கொண்டு வருகிறேன். அதில் வெந்தயமும் ஒரு உதவி. மற்றபடி உடற்பயிற்சி...உணவுக் கட்டுப்பாடு.

மஞ்சுபாஷிணி
17-05-2012, 06:58 AM

ஐயோ அடடா.. அப்டியா? அதான் நானும் ஆச்சர்யப்பட்டேன், ஏற்கனவே ஒல்லியா இருக்கும் சிவா இன்னும் உடல் குறைத்தால் அப்புறம் எப்படின்னு.. இப்ப தான் விஷயம் புரிகிறது... என் வீட்டுக்காரரும் தினமும் காலை வெந்தயப்பவுடர் வெந்நீரில் கரைத்து குடிக்கிறார் சுகருக்காக தான்....

சரியாக்கிட முழுமையா யோகாவில் சாத்தியம்... மறக்காம ஊருக்கு வரும்போது அம்மாக்கிட்ட கத்துக்கோங்க....

meera
17-05-2012, 08:53 AM
அருமருந்து. தகவலை பகித்தமைக்கு நன்றி ரவி.

ஆனா எனக்கு எடையை அதிகமாக்க வழி சொல்லுங்களேன்...........:sprachlos020:

மஞ்சுபாஷிணி
17-05-2012, 10:18 AM
அருமருந்து. தகவலை பகித்தமைக்கு நன்றி ரவி.

ஆனா எனக்கு எடையை அதிகமாக்க வழி சொல்லுங்களேன்...........:sprachlos020:

மீரா எடை அதிகமாக்கினால் சிரமம்பா...

முப்பது வயதுக்கு மேலே ஆனால் தானாவே உடல் எடை ஏறும்....

பகல்ல சாப்பிட்டு தூங்கினாலும் வெயிட் போட்ரும்....

பழைய சாதத்தில் நிறைய தயிர் விட்டு குட்டி வெங்காயம் கட் பண்ணி போட்டு காலைல பல் தேச்சுட்டு சாப்பிட்டா தேவாமிர்தமா இருக்கும்...

எனக்கு கல்யாணம் ஆகும்போது ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு அம்மா செய்த பல முயற்சிகளில் இந்த பழைய சாதமும் ஒன்று.. நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் வெயிட் போட்ரும்....

என் அட்வைஸ் என்னன்னா உடம்பு ஏற நீங்க எந்த முயற்சியும் எடுக்கவேண்டாம். தானாவே வெயிட் போட்ரும்....

அமீனுதீன்
17-05-2012, 12:39 PM
கலையில் வென்னீரில் தேனை கலந்து சாப்பிட்டால்
உடல் எடை குறையுமென நாட்டு வைத்தியம் சொல்கிறது

பால்ராஜ்
18-05-2012, 02:12 AM
வெந்தயத்துக்கு ஆங்கிலத்தில் ஹிந்தியில் என்ன பதம் என்று யாராவது கூறமுடியுமா??

தாமரை
18-05-2012, 02:23 AM
ஹிந்தியில் மேத்தி என்று சொல்வார்கள். கன்னடத்தில் மெந்தேவு.. ஆங்கிலத்தில் Fenugreek

M.Jagadeesan
18-05-2012, 04:08 AM
ஹிந்தியில் மேத்தி என்று சொல்வார்கள். கன்னடத்தில் மெந்தேவு.. ஆங்கிலத்தில் Fenugreek

தெலுங்கில் மெந்துலு என்று சொல்வார்கள்.

பால்ராஜ்
18-05-2012, 04:14 AM
நன்றி
உலுவா என்று மல்லுக்கள் கூறுவைதைக் கேட்டு நல்ல பரிச்சயம் உண்டு!!

சின்ன வயதில் தந்தை வாழைப் பழத்துக்குள் எல்லாம் வைத்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்..!
வெயிட் என்பதைவிட சின்ன தொப்பையைக் குறைப்பதுதான் எனது நோக்கம்..

என்னதான் உடல் பயிற்சி செய்தாலும் ஒரு குட்டி தொந்தி வந்துவிடத்தான் செய்கிறது..

பால்ராஜ்
21-07-2012, 05:12 AM
சென்ற பதிப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் வெந்தயம் வாங்கி விட்டேன்..
காலை காஃபிக்கு முன்பு.. வழக்கம் ஆகி விட்டது.

எடை குறைப்பது என்பது ஒரு பாயிண்ட் ஃபார்முலாவாக இருக்க முடியாது...
கொஞ்சம் டயட் கண்ட்ரோல்... உடல் பயிற்சி.. என்று எல்லாவற்றையும் செய்வதே..

இரண்டு கிலோ குறைத்துள்ளேன்...
கூடிய சீக்கிரம் 70 கிலோ வாக இன்னும் 3 கிலோ குறைக்க வேண்டும்!!

ராஜா
22-07-2012, 06:22 AM
ஹப்பா நிம்மதி... ஊருக்கு போகுமுன் உடல் எடையை எப்படிடா குறைக்கிறது எக்சர்ஸைஸ் செய்யாமன்னு நினைச்சேன், செய்து பார்த்துட வேண்டியது தான்.. ஹுஹும் வெந்தயம் சாப்பிட்டு பார்த்துட வேண்டியது தான். இனிமே எங்காத்துல வெந்தயக்குழம்பு, வெந்தயரசம், மேத்தி தேப்லா, வெந்தய கிச்சடி.. யாரெல்லாம் இனிமே என் வீட்டுக்கு வராங்களோ அவங்களுக்கும் இது தான்...

அன்பு நன்றிகள் ரவிக்ருஷ்ணன் பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு...

நல்லவேளை.. தப்பிச்சேன்.. இன்னிக்கு உங்கவீட்டுப் பக்கம் வரலாம்ன்னு இருந்தேன்..!

இராஜிசங்கர்
23-07-2012, 08:48 AM
அதெல்லாம் சரி தான்...ஆனால் வெந்தயம் கசக்குமே??? எங்கள மாதிரி குட்டிப்பிள்ளைகளுக்குப் பிடிச்ச மாதிரி எப்டி பண்ணலாம்னு நல்லா சமையல் தெரிஞ்ச யாரவது சொல்லுங்கப்பு..

கீதம்
23-07-2012, 11:53 PM
அதெல்லாம் சரி தான்...ஆனால் வெந்தயம் கசக்குமே??? எங்கள மாதிரி குட்டிப்பிள்ளைகளுக்குப் பிடிச்ச மாதிரி எப்டி பண்ணலாம்னு நல்லா சமையல் தெரிஞ்ச யாரவது சொல்லுங்கப்பு..

வெந்தயக் களி செய்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். என் அம்மா செய்வார்கள். நான் இதுவரை செய்ததில்லை. உங்களுக்காக செய்முறையை இணையத்திலிருந்து எடுத்துப் பதிவிடுகிறேன் ராஜி.

தேவையானவை:

புழுங்கலரிசி -- 1 கப்
வெந்தயம் -- 1/4 கப்
கருப்பட்டி -- 1/2 கப்
சுக்குப்பொடி -- ஒரு ஸ்பூன்
ஏலப்பொடி -- 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் -- 5 ஸ்பூன்
உப்பு -- ஒரு சிட்டிகை

புழுங்கலரிசி (5 மணி நேரம்), வெந்தயம் (முதல் நாள் இரவே) இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.

இரண்டையும் ஒன்றாக நெருநெருவென ஆட்டவும்.இதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

கருப்பட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிடவும்.இதை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். (கருப்பட்டி இல்லையெனில் வெல்லம் சேர்க்கலாம்.)

இந்த கருப்பட்டி பாலுடன் ஆட்டிய மாவை போட்டு ,ஏலப்பொடி,சுக்குப்பொடி,நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டிப் படாமல் கிளறியபடியே இருக்கவேண்டும்.

தண்ணீர் தொட்டு பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும். அது தான் பதம்.

இராஜிசங்கர்
24-07-2012, 04:55 AM

ராஜிக்கு ஒரு வெந்தயக்களி பார்சல்ல்ல்ல்ல்ல் ................http://www.desismileys.com/smileys/desismileys_0025.gif

மதி
24-07-2012, 05:13 AM
செஞ்சு (சாப்பிட்டு) பாக்கணும்.. தினமும் வெந்தயப்பொடி மட்டும் சாப்பிடுறேன்... :(

கீதம்
24-07-2012, 05:28 AM
எனக்குப் பிடித்தது வெந்தயப் பொங்கல். செய்வது மிகவும் எளிது. ஒரு டம்ளர் அரிசியுடன் ஊறவைத்த வெந்தயம் (ஊறவைக்குமுன் கைப்பிடியளவு), பூண்டுப் பற்கள் நாலைந்து, உப்பு, மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழையவிட்டு எடுத்தால் அருமையாக இருக்கும். சிலர் இதில் தேங்காய்ப்பூ சேர்ப்பார்கள்.

கீதம்
24-07-2012, 05:29 AM
ராஜிக்கு ஒரு வெந்தயக்களி பார்சல்ல்ல்ல்ல்ல் ................http://www.desismileys.com/smileys/desismileys_0025.gif

கத்தியும் ஃபோர்க்கும் வச்சு களி சாப்பிடப் போறீங்களா ராஜி? சாப்பிட்ட மாதிரிதான். :)

M.Jagadeesan
24-07-2012, 06:42 AM
நான் கடந்த ஆறு மாதமாக வெந்தயம் சாப்பிட்டு வருகிறேன். 68 கிலோவிலிருந்த என் எடை தற்போது 62 கிலோவாகக் குறைந்துவிட்டது. சர்க்கரையும் கட்டுப்பாட்டில் உள்ளது. உணவுக்குப்பின் மூன்று வேளையும் இரண்டு பல் பூண்டு மென்று தின்று வருகிறேன். இதனால் கொழுப்பும் குறைந்துள்ளது.

இராஜிசங்கர்
25-07-2012, 04:34 AM
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

கீதாக்கா ஒரு சந்தேகம்...வெந்தயத்த ஊற வெச்ச தண்ணிய மட்டும் குடிக்கனுமா??இல்ல வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிடணுமா??
அப்டியே கொஞ்சம் சக்கரை போட்டுக்கலாமா??ஏன் கேக்குறேன்னா ஒரு தடவ வயிற்று வலிக்கு வெந்தயம் சாப்பிடச் சொன்னங்க..நானும் சரின்னு சாப்பிட்ட பிறகு கசந்து ஒரே ஒவ்வ்வே...http://www.desismileys.com/smileys/desismileys_6848.gifவயிறு வலிச்சத விட வாந்தி எடுத்தது தான் பெரிய பாடப் போய்டுச்சு..http://www.desismileys.com/smileys/desismileys_2319.gif

கீதம்
25-07-2012, 11:15 AM
கசப்பும் ஒரு சுவையென்று பழகினவங்களுக்கு வெந்தயம் கசப்புத் தெரியாது. வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரையும் குடிக்கலாம். ஆனால் ஊறவைப்பது கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீராக இருந்தால் நல்லது. ஊறிய வெந்தயத்தையும் சாப்பிடலாம். அப்படி சாப்பிடப் பிடிக்காதவர்களுக்குதான் சமையல் வழிமுறைகள்.

Raji77
05-04-2013, 05:31 AM
செய்து பார்த்து சொல்கிறேன் ஐயா

rema
06-04-2013, 04:14 AM
நல்ல பகிர்வுக்கு நன்றி ரவிக்ருஷ்ணன்..

கும்பகோணத்துப்பிள்ளை
09-04-2013, 07:23 PM
எங்கள மாதிரி தனியா (குடும்பத்த விட்டு) இருக்கறவங்களுக்கு வெந்தயம் கொஞ்சம் வேறமாதிரி தொந்தரவு கொடுக்குமுங்கோ!!!.:rolleyes:

கும்பகோணத்துப்பிள்ளை
09-04-2013, 07:26 PM
அதிகமாச்சாப்பிட்டா காதுமந்தமாகுமின்னு எங்க பாட்டிச் சொல்லக்கேட்டிருக்கிறேன்! வேற ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க!