PDA

View Full Version : விளம்பர அழகி -7 (நிறைவு பெற்றது)மதுரை மைந்தன்
11-05-2012, 01:26 PM
" குற்றம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை தற்காப்புக்காக கொலை கூட செய்பவர்கள். இரண்டாம் வகை தான் செய்வதறியாமல் குற்றம் செய்பவர்கள். மன நோயாளிகள், கோபத்தில் ஒருவர் இன்னொருவரை தாக்க தாக்கப்பட்ட நபர் இறந்து விடுவது போன்றவை. சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் இந்த வகையை சேர்ந்தவை. மூன்றாவது வகை குற்றவாளிகள் தெரிந்து, திட்டமிட்டு செய்பவர்கள். காசுக்காக கொலை செய்பவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் சைக்காலஜியை நாம் விரிவாக பார்க்கப் போகிறோம்". கிரிமினல் சைக்காலஜி ப்ரொபெசர் கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தனது வாட்சை பார்த்தவண்ணம் தனது லெக்சரை தொடர்ந்தார். இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மனைவி அவர்களுடைய மகன், மகளுடன் கோயம்புத்தூரிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லவிருந்தனர். அவர்களை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு சென்று வழியனுப்ப வேண்டும். மகனுக்கும், மகளுக்கும் பரீட்சைகள் முடிந்து விடுமுறை தொடக்கம். அவருடைய பல்கலை கழகத்தில் இன்னும் ஒரு மாதம் கழித்து தான் விடுமுறை ஆரம்பிக்கும்.

வகுப்பு முடிந்து காரை எடுத்துக் கொண்டு நேரடியாக சென்ட்ரல் சென்றார். அடையாறு பெசண்ட் நகரிலிருந்த அவருடைய வீட்டிலிருந்து அவ்ருடைய குடும்பம் டாக்சி மூலமாக சென்ட்ரல் வந்தனர். அவர்களை வழியனுப்பி விட்டு ஸ்டேஷனை விட்டு கிளம்பும் போது மாலை மணி 7 ஆகி விட்டது. நேரே வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று முதலில் நினைத்தார். ஆனால் வீட்டிற்கு சென்று தனிமையில் இருப்பதை விட அடையாறு சோஷல் க்ளப்பிற்கு சென்று அவருடைய நண்பர்களை சந்திக்க முடிவு செய்தார்.

சோஷல் க்ளப் உயர் வகுப்பு மக்களுடையது. அங்கு வருபவர்கள் தொழிலதிபர்களாகவோ, அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களாக்வோ இருப்பார்கள். கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய நண்பர்கள் பிரகாசம், நடராஜன் அந்த க்ளப் உறுப்பினர்கள். அவர்கள் இருவரும் பாச்சிலர்கள். க்ளப்பிற்கு தினம் செல்பவர்கள். பிரகாசம் சி.பி.ஐ ஆபீசர். நடராஜன் போலீஸ் கமிஷனர். இவர்கள் மூவரும் மதுரையில் கல்லூரி தோழர்கள். கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கி படித்தவர்கள். கல்லூரி நாட்களில் இவர்கள் அடிக்காத லூட்டி கிடையாது. அமீர் கான் த்ரீ இடியட்ஸ் படம் எடுக்கவில்லையென்றால் இயக்குனர் ஷங்கர் இவர்கள் கதையைத் தான் நண்பர்கள் என்று படமாக்கியிருப்பார். மூவரும் இப்போது நடு வயதினர்.

" ஏய் கிட்டா என்னது அபூர்வமா இந்த பக்கம்" என்றார்கள் பிரகாசமும் நடராஜனும் கிருஷ்ணமூர்த்தியை க்ளப்பில் பார்த்தவுடன். மூவரும் ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து சென்று அமர்ந்தனர். " பிரண்ட்ஸ், நான் இன்னும் ஒரு மாசத்துக்கு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கிட்டா என்ற கிருஷ்ணமூர்த்தி.

" மனைவி, பசங்க எல்லோரும் விடுமுறைக்கு கோயம்புத்தூருக்கு இப்பதான் வழியனுப்பிட்டு வறேன்" என்றார் கிட்டா.

" ஓ நைஸ், அப்போ நாம தனம் பார்ட்டி வச்சுக்கலாம் உன்னோட வீட்டில்" என்று சொல்லி சிரித்தார்கள் பிரகாசமும் நடராஜனும். பார்ட்டி என்பது அவர்களுக்கு விஸ்கி, பீர் இவைகளுடன் தாக சாந்தி செய்வது. அன்றும் தாக சாந்திக்காக ஆர்டர் செய்தனர்.

" கிட்டா, தனியா இருக்கச்சே ஏதாவது குட்டியை தள்ளிக்கிட்டு போய் எஞ்சாய் பண்ணப் போறயா?" கண்களை சிமிட்டிக் கொன்டு சிரித்தனர் பிரகாசமும் நடராஜனும்.

" சே சே அப்படியெல்லாம் செய்ய முடியுமா? நான் இப்போ கவுரமான ப்ரொபசர். எங்கிட்ட பல மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு நல்ல உதாரணமாக இருக்கணும். மேலும் எனாகு ஒரு மகள் இருக்கிறாள். அதனால் நீங்க சொல்ற தப்பெல்லாம் செய்ய மாட்டேன்" என்றார் கிட்டா.

" கமான் பாய், காலேஜ் டேஸ்ல ஹாஸ்டல்ல டெக்ஸ்ட் புத்தகத்துக்குள்ள சரோஜா தேவி புஸ்தகம் எல்லாம் படிச்சதை மறந்துட்டையா?" என்று சொல்லி விஷமமாக சிரித்தார் பிரகாசம்.

" அந்த பருவம் வேற. நல்லது கெட்டது தெரியாம இருந்தோம். இத்தனை வருடங்களில் நமக்கு ஒரு முதிர்ச்சி வரவில்லையென்றால் அது துரதிருஷ்டம்" என்றார் கிட்டா.

" இங்கே பாருய்யா புத்தர் பெருமானை. புத்தா உன்னை வணங்குகிறோம்" என்றார் நாக்குழற நடராஜன். போதை தலைக்கேற ஆரம்பிதிருந்தது அவருக்கு.

க்ளப்பில் மது பானங்கள் தருவார்களே ஒழிய சாப்பாடெல்லாம் கிடையாது. குடிக்கும் போது சைட் டிஷாக வறுத்த முந்திரி பருப்பு, கடலை இவை கிடைக்கும். பிரகாசமும் நடராஜனும் நன்றாக குடித்துவிட்டு தள்ளாடத் தொடங்கினர். க்ளப்பின் செக்யூரிட்ட்ய் அவர்கல் இருவரின் கார் டிரவர்களை அழைத்து அவர்களுடைய வீடுகளுக்கு கூட்டி செல்லுமாறு ஏற்பாடு செய்தார். அச்சமயம் இரவு 9.00 மணியாக இருந்தது. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அலவிற்கு குடிக்கவில்லையென்றாலும் போதை சற்று இருந்தது. போதையுடன் காரை செலுத்தி வீடு திரும்ப அவருக்கு விருப்பமில்லை. செக்யூரிட்டியை கூப்பிட்டு " என்னை 10.30 மணியளவில் எழுப்பு" என்று சொல்லி அங்கிருந்த சோபாவில் சரிந்தார்.

திடீரென்று தன்னிடம் யாரோ பேசுவதை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி செக்யூரிட்டி அங்கு நின்று கொண்டு " சார் மணி 10.30 ஆகி விட்டது" என்றதும் எழுந்து கண்களை துடைத்துக் கொண்டு க்ளப்பை விட்டு வெளியே வந்தார். கார் பார்க்கிற்கு சென்று தனது காரை எடுக்க திரும்பியவர் அருகிலிருந்த துணிக்கடையின் விளம்பர மாடலை கவனித்தார். கடையை மூடிவிட்டார்கள். ஆனால் ஷோ கேஸில் மட்டும் விளக்குகள் எரிந்தன. அந்த விளம்பர மாடல் பெண்ணின் பதுமை அவரை ஈர்த்தது. அவளின் அழகு, ஒயில், மோனாலிசா சிரிப்பு அவரை கவர்ந்தது.

" ஹூம் இந்த மாதிரி ஒரு பெண் தற்சமயம் எனக்கு கிடச்சா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்" என்று எண்ணத் தொடங்கினார். அவருடைய மனசாட்சி அவரை இடித்தது " உள்ளே பெரிய புத்தர் மாதிரி பேசினையே இப்போ ஏன் உன் புத்தி தடுமாறுகிறது". மனக்கண் முன் பிரகாசமும் நடராஜனும் தோன்றி " கண்ணா, லட்டு தின்ன ஆசையா?" என்று ஏளனம் செய்தனர். எல்லாத்துக்கும் காரணம் குடி போதை தான் என்று இனிமேல் குடிக்க கூடாது என்று தீர்மானித்தார்.

அப்போது ஷோ கேஸின் கண்ணாடியில் அவரருகே ஒரு உருவம் நிழலாடியதை கவனித்து அவர் திரும்பினார்.

" நான் ரொம்ப அழகா இருக்கேனா?" என்று கேட்டுக் கொண்டு அந்த விளம்பர அழகி நிஜ உருவில் அங்கு நின்றாள்.

தொடரும்

ஆதி
11-05-2012, 02:12 PM
வாங்க ஐயா, மன்றத்தில் தங்களின் கதையை வெகுநாட்களுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி

நிழலாடியது என்று சொன்னது பேயா இருக்குமோ ஒரு சின்ன பயம் வந்துச்சு, அந்த பொம்மை பெண்ணின் நிழல்தானா ஓ.கே, அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்

தொடருங்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
11-05-2012, 04:34 PM
நீண்ட தினங்களுக்கு பிறகு ஒரு தொடர்கதை ...தொடருங்கள் மதுரை மைந்தன் அவர்களே !

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-05-2012, 04:35 PM
நன்றி மதுரை மைந்தன் அவர்களே...தொடருங்கள்.:)

சிவா.ஜி
11-05-2012, 06:50 PM
அருமையான ஆரம்பம். சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள் நண்பரே.

Hega
11-05-2012, 08:38 PM
நல்லதொரு ஆரம்பம்..

அடுத்து தொடருங்கள் ஐயா..

ravikrishnan
12-05-2012, 01:49 AM
ஐயா,கதையை சீக்கிரமாக தொடருங்கள்,ஆவலுடன் எதிர்பார்கிறோம்,மன்றத்தின் மூலமாகதான் கதை படிக்கும் ஆசை எனக்கு வந்துள்ளது.:icon_b::icon_b:

மதுரை மைந்தன்
13-05-2012, 11:24 AM
இந்த கதைக்கு பின்னூட்டங்கள் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!

மதுரை மைந்தன்
13-05-2012, 11:26 AM
திடீரென்று அந்த மாடல் அழகி தன் கண் முன்னால் வந்து நின்றதும் அதிர்ந்து போனார் கிட்டா. " என்ன சார் நான் பேயோ பிசாசோனு பயந்துட்டீங்களா?. இதோ என்ன்னொட நிஜ கால்களை பாருங்க" என்று சொல்லி தான் அணிந்திருந்த ஸ்கர்ட்டையும் சிறிது உயர்த்தி தன் கால்களை காட்டினால் அந்த பெண். கிட்டாவுக்கு அவளுடைய கால்களை விட எலக்ட்ரிக் தொடைகளை பார்த்ததும் மனது தடுமாறியது.

" பயப்படாதீங்க. இந்த பொம்மை உருவில் இருப்பது நான் தான். என் பெயர் ஸ்டெல்லா. நான் இங்கே பக்கத்தில ஒரு ஓட்டல ரிஷப்னிஸ்டா இருக்கேன். தினம் இந்த வழியா வீட்டுக்கு போகும் போது என்னோட பொம்மை உருவத்தை யாரும் ரசிக்கறாங்களானு பார்ப்பேன். ஒரு நாள் இப்படித்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் வேகமா வந்து சுற்றும் முற்றும் பார்த்துட்டு என் முகம் பக்கம் இருக்கற கண்னாடில தன் முத்தத்தை பதித்தான். முட்டாள், கண்ணாடில இருந்த தூசெல்லாம் அவன் வாயில" என்று சொல்லி சிரித்தாள் அவள். " அவன் என்னை பாக்கலை ஏன்னா நான் மறைவா பக்கத்து மரத்துக்கு பின்னலிருந்து தான் கவனிப்பேன். இன்னிக்கு உங்களை பார்த்ததும் படித்த ஜென்டில்மேனாக இருக்கும் உங்கள் முன்னால் வந்தேன். நான் அதிகம் படிக்கலை. ஆனா எங்க அப்பா மதுரைல பெரிய மருத்துவர்" என்று சொன்னாள் அவள்.

" என்னது மதுரைல பெரிய மருத்துவரா? அவர் பேரு?" என்று ஆவலாக கேட்டார். " எங்க அப்பா பெயர் சவுரி ராஜன்" என்று சொல்லவும் கிட்டாவுக்கு ஆச்சரியம் தாங்கலை. " என்னது சவுரி ராஜன் பொண்ணா நீ?" உங்க அப்பாவும் நானும் மதுரை அமெரிக்கன் கல்லூரில பி.யூ.சி ஒண்ணா படிச்சோம். பி.யூ.சி பாஸ் பண்ணி அவன் மருத்துவ கல்லூரில சேர்ந்தான். நான் அமெரிக்கன் கல்லூரியிலேயே இளங்கலை, முது கலை பட்டப் படிப்புகளை தொடர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும் கொஞ்ச் நாள் அதே கல்லூரியில் விரிவுரையாளரா பணி புரிந்தேன். அந்த சமயத்தில நானும் உங்க அப்பாவும் அண்ணா நகர்ல பக்கத்து வீட்டுக்காரர்கள். அப்போ நீ சின்ன குழந்தை. இப்போ வளர்ந்து பெரியவளாயிட்டே. அது சரி, இப்போ உங்க அப்பா என்ன பண்றார்?" என்று கேட்டார் கிட்டா.

" எங்க அப்பாவும் அம்மாவும் ஒரு கார் ஆக்ஸிடென்டில இறந்து போயிட்டாங்க. அதற்கப்புறம் சென்னைக்கு எங்க மாமா வீட்டுக்கு வந்தேன். மாமா குடும்பம் அம்பத்தூர்ல இருக்காங்க. எனக்கு இந்த வேலை கிடைச்சதும் பக்கத்துல ஒரு அப்பர்ட்மெண்ட் வீட்டுல குடியிருக்கேன். உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க" என்று கேட்டாள் அவள். சவுரி ராஜனும் அவரது மனைவியும் காலமானதை கேட்டு கிட்டா வருந்தினார். தன் மகள் போன்ற பெண்னைப் பற்றி விகாரமாக எண்ணியதை நினைத்து வெட்கப்பட்டார் கிட்டா.

" என் மனைவி ஒரு ஹவுஸ் வொய்ப். எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க. பசங்களோட விடுமுறைக்காக என் மனைவி அவர்களுடன் கோயம்புத்தூர் சென்றிருக்கிறாள்" என்றார் கிட்டா.

" ஓ! அப்ப நீங்க தனியாகத்தான் இருக்கீங்களா?. நான் இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். உங்களை மாதிரி பெரியவங்களை அதுவும் எங்க அப்பாவோட சினேகிதரை சந்திச்சது நான் ரொம்ப லக்கி. என்னோட அபார்ட்மெண்ட் பாக்கதில தான் இருக்கு. நீங்க என்னோட வீட்டுக்கு வறணும். வந்தீங்கனா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்" என்று சொல்லி தன் கைகளை கூப்பினாள் அவள்.

கிட்டவுக்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது. " இப்போ ரொம்ப லேட்டா ஆயிடுச்சு. எனக்கு நாளைக்கு வகுப்புகள் இருக்கு. ஆகவே இன்னொரு நாள் வறேன்" என்று சொல்லி பார்த்தார் அவர். ஆனால் ஸ்டெல்லா அவரை மிகவும் கெஞ்சவே " சரி. நான் போய் என் காரை எடுத்து வருகிறேன்" என்று சொல்லி தன் காருடன் அங்கு வந்தார். ஸ்டெல்லா காருக்குள் ஏறி அவருக்கு வழி சொல்ல அவர்கள் அவளுடைய அபார்ட்மெண்டுக்கு சென்றார்கள்.

ஸ்டெல்லாவின் அபர்ட்மெண்ட் சிரியதாக இருந்தாலும் எல்லா வசதிகளும் கொண்டிருந்தது. ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த கிட்டா " இங்கே பாருமா நீ கூப்பீட்டனு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு கிளம்பறேன்" என்றார்.

" சார் வந்தது வந்தீங்க காபி சாப்பிட்டு போங்க " என்று சொல்லி காப்பியை தயாரிக்க சமைலைறக்கு சென்றாள் ஸ்டெல்லா. காபியை அவள் தந்த போது கை நழுவ காபி கிட்டாவின் சட்டையை நனைத்தது. " ஓ ஐ ஆம் சாரி" என்று சொல்லி பதை பதைத்தாள் அவள். " பரவாயில்லைமா இது தற்செயலாக நடந்தது தானே. நான் க்கரில் செல்லும் போது பனியனுடன் போக முடியும்" என்று சொல்லி சட்டையை கழட்டினார் கிட்டா.

அதே சமயத்தில் அங்கே புயலென் நுழைந்தான் ஒரு இளைஞன். பார்க்க முரடனாக தெரிந்தான். " ஏய் ஸ்டெல்லா ஏன் இன்னிக்கு லேட்ட வந்தே" என்று அவளை பார்த்து கேட்டவன் பார்வை பனியனுடன் இருந்த கிட்டாவை பார்த்ததும் கோபமாக " ஏய் யாருய்யா நீ நானில்லாத சமயத்தில் என் ஆளு கிட்ட என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?" என்றான். " பீட்டர் இவர் எங்க அப்பாவொட சினேகிதர்" என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவள் கன்னத்தில் பளீரென்று அறைந்து " சிறுக்கி நான் இல்லாத போது வேற ஆளொட சகவாசம் வச்சிருக்கயா" என்று கத்தினான் அவன். கிட்டா அவனை சமாதானம் செய்ய முயன்ற போது வெறி வந்தவன் போல " உன்னை என்ன செய்யறேன் பாரு" என்று சொல்லிக்கொண்டு கிட்டாவின் கழுத்தைப் பிடித்து இறுக்கினான். கிட்டா மூச்சு திணறுவதை பார்த்து செய்வதறியாத ஸ்டெல்லா பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை அவர் கைகளில் கொடுத்தாள். கிட்டா தான் என்ன செய்கிறோம் என்பதறியாமல் அவனை கத்தியால் குத்த அவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். மூச்சு இன்னும் திணற, வியர்வை வெள்ளத்தில் குளித்த கிட்டா அவனை புரட்டினார். அவன் இறந்து கிடந்தான்.

தொடரும்

சிவா.ஜி
13-05-2012, 07:29 PM
ஆஹா...அடுத்த பாகத்திலேயே ஒரு கொலையா....சுவாரசியம் கூடுகிறது. ரொம்ப அழகா எளிமையா சொல்ற உங்க கதை சொல்லும் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தொடருங்கள் நண்பரே.....ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

jayanth
14-05-2012, 03:43 AM
விறுவிறுப்பு...(.) தொடருங்கள் மதுரை மைந்தன்(.)

மதி
14-05-2012, 04:10 AM
பரபரவென நகரும் பாகங்கள்.. பாடம் எடுத்தவரே கொலை செய்தாரா..? தொடருங்கள் மதுரையாரே..!

கீதம்
14-05-2012, 05:54 AM
ஸ்டெல்லாவின் போக்கு விசித்திரமாகவும், ஏதோ தீவிரத் திட்டத்துடன் காய் நகர்த்துவது போலவும் தெரிகிறது.

மிகவும் சுவாரசியமாகக் கொண்டு செல்லும் நேர்த்தி ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள். தொடருங்கள் மதுரை மைந்தன் அண்ணா.

மஞ்சுபாஷிணி
14-05-2012, 07:14 AM
" குற்றம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
தொடரும்
ஆரம்பமே அசத்தல் ஐயா...

குற்றங்களின் வகையை குறித்து அருமையாக சொல்லிவிட்டு... அதன்பின் மனைவி நார்மலா ஊருக்கு போய்விட்டால் கணவன் எப்படி எல்லாம் இருப்பார்னு விவரித்துவிட்டு... நான் அப்படி எல்லாம் இல்லப்பா என்று விளக்கினாலும் அவர் ஆழ்மனது கேட்பதைப்போல நிஜத்தில் வந்து நின்ற பெண்ணைப்பார்த்து வியர்த்தது பயத்தில் அவர் மட்டுமல்ல வாசகர்களாகிய நாங்களும் தான் ஐயா....

அன்பு வாழ்த்துகள் ஐயா....

மஞ்சுபாஷிணி
14-05-2012, 07:30 AM
திடீரென்று அந்த மாடல் அழகி தன் கண் முன்னால் வந்து நின்றதும் அதிர்ந்து போனார் கிட்டா.
தொடரும்
கிட்டாவோட கூட படிச்சவரோட பொண்ணா ஸ்டெல்லா.. குட் குட்.....

ஸ்டெல்லா விடாப்பிடியா தன் வீட்டுக்கு கிட்டா சாரை கூட்டிட்டு போகும்போதே நினைச்சேன் என்னவோ அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு.... ஆச்சா ஆச்சா.. கத்தி எடுத்து பீட்டரை குத்தியாச்சா.. இனி என்னாக போகுதோ டென்ஷனா இருக்கு...

அன்பு வாழ்த்துகள் ஐயா....

அன்புரசிகன்
14-05-2012, 08:30 AM
துருதுரு என கதை மிகவும் சுவாரசியமாக நகர்கிறது.


தொடருங்கள்.

மதுரை மைந்தன்
14-05-2012, 11:09 AM
அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர் ஸ்டெல்லாவும், கிட்டாவும். ஸ்டெல்லா விசும்பலுடன் " பாவி என்னால் உங்கள் மீது கொலை குற்றம் விழுந்திருக்கிறது. நான் உங்களிடம் கத்தியை கொடுத்தது கத்தியை காட்டி அவனை பயமுறுத்துவீர்களென்று. ஆனால் அது இப்படி முடியும் என்று நான் எதிர் பார்க்கவில்லை".

கிட்டாவுக்கு அதிர்ச்சியில் பேசமுடியவில்லை. தற்காப்பிலும் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமலும் நடந்த இந்த விபத்து இது. கொலை குற்றத்திலிருந்து தப்பித்தால் என்னுடைய இப்போதைய மன நிலையை மாணவர்களுக்கு உதாரண்மாக கூறலாம் என்று நினைத்து விரக்தியுடன் சிரித்தார். " நடந்தது நடந்து போச்சு. இதில் உன் குற்றம் என் குற்றம் எதுவும் இல்லை. இவன் யார்? எப்படி உன் வீட்டுக்கு வந்தான் என்று கூற முடியுமா?" என்று கேட்டார் அவளிடம்.

"இவன் என் பாய் பிரண்ட். என் மேல வெறிததனமான காதல் வச்சிருக்கிறான். இந்த நேரத்தில இவன் எப்படி இங்கே வந்தான் என்று எனக்கு தெரியாது. வாசல் கதவை நான் தாழ் போட மறந்திருப்பேன். இவன் பெயர் பீட்டர். மெக்கானிக்காக வேலை பார்க்கிறான்" என்றாள் ஸ்டெல்லா.

" நாம போலீசுக்கு தெரிவிக்கலாமா?" என்று கேட்ட ஸ்டெல்லாவிடம் " அய்யய்யோ, போலீசுக்கு நான் தான் கொலை செய்தேன் என்று தெரிஞ்சால் என் மானமே போயிடும். நான் ஒரு கவுரமான ப்ரொபெசர். எனக்கு சென்னைல நல்ல பேரு இருக்கு. என்னோட நண்பர் போலீஸ் கமிஷனர். இன்னொருத்தர் சி.பி.ஐ ஆபீஸர். எனக்கொரு ஐடியா தோணறது. நான் இங்கே வந்தது யாருக்கும் தெரியாது. உன்னையும் என்னையும் தொடர்பு படுத்தி போலீசால் பார்க்க முடியாது. அதனால நாம இந்த பாடியை அப்புறப்படுத்தி ஒரு கண்காணாத இடத்தில தொலைச்சுடணும். உங்கிட்ட பழைய சேலை இருந்தா கொண்டு வா. அதில் இவனை மூட்டையாக கட்டி என்னுடைய காரில் கொண்டு போய் சென்னையை விட்டு தள்ளி கடலில் போட்டு விட்டு வருகிறேன். நீ அதற்குள் இங்கிருக்கிற ரத்தக் கறை அப்புறம் என்னுடைய கைரேகைகள் பட்ட இடங்கள் எல்லாவற்றையும் சுத்தம் செய். நான் பாடியை தொலைத்து விட்டு நேரடியாக் என் வீட்டுக்கு செல்கிறேன். நீ யாரிடமும் நான் வந்ததைப் பற்றி எதுவும் கூறாதே " என்றார் கிட்டா.

ஸ்டெல்லவுடைய பழைய சேலையில் பாடியை கட்டி தூக்கி கொண்டு ஸ்டெல்லவிடம் " வெளியில் சென்று யாராவது இருக்கிறார்களா என்று பார்" என்றார் கிட்டா. ஸ்டெல்லா ஆல் க்ளியர் சொன்னவுடன் வேகமாக பாடியை கொண்டுபோய் கார் டிக்கியில் போட்டு மூடினார். காபி கறை படிந்த சட்டையை அணிந்து கொண்டு காரை கிளப்பி வேகமாக கடற்கரை சாலையில் சென்று சென்னையை விட்டு வெளியே வந்து எண்ணூரையெல்லாம் கடந்து ஒரு ஒதுக்கு புறமான கடற்கரையோரம் காரை நிறுத்தினார். டிக்கியிலிருந்த பாடியை கொண்டு போய் கடலில் வீசி விட்டு காரை ரோட்டில் கொண்டு போய் நிறுத்தினார். பின்னர் கையில் டார்ச் லைட்டுடன் கடற்கரை மணலில் பதிந்திருந்த டயர்களின் தடங்களை அழித்தார்.

தன் வீட்டிற்கு திரும்பிய கிட்டாவால் சரியாக தூங்க முடியவில்லை. காலையில் கண் முழிக்க சிரம்மாக இருந்தது. கல்லூரிக்கு போன் செய்து உடல் நிலை சரியில்லை என்று சொல்லி அன்று விடுப்பு எடுத்தார். நாள் முழுவதும் மனப்போராட்டத்தில் களைத்து போய் மதியம் சிறிது உறங்கினார். மாலையில் காரை எடுத்துக் கொண்டு க்ளப்பிறகு சென்றார். அங்கு நண்பர்களை சந்தித்தால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தார். க்ளாபில் அவர் வந்து சிறிது நேரத்தில் பிரகாசமும் நடராஜனும் அங்கு வந்தார்கள்.

ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து மது பானங்களுக்கு ஆர்டர் செய்தபின் நடராஜன் பேச்சை துவக்கினார் " நான் உங்களுக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் சொல்லப்போறேன். இன்னிக்கு காலையில் எண்ணூருக்கருகில் கடற்கரையோரமா ஒரு பாடி கிடந்தது. அதை இன்வெஸ்டிகேட் பண்ணின இன்ஸ்பெக்டர் அந்த பாடி நாங்கள் வலை வீசி தேடி வந்த ஒரு தீவிர வாதி என்று சொன்னார்" என்றார் அவர்.

பிரகாசம் கூறினார் " தீவிர வாதி கொலை செய்யப்பட்டன் என்றால் அவனை கொலை செய்தவருக்கு நாம் விருது வழங்க வேன்டும். நீ என்ன சொல்றே கிட்டா?" என்று கிட்டாவை கூர்ந்து பார்த்து கேட்டார்.

தொடரும்

அன்புரசிகன்
14-05-2012, 11:22 AM
கதையில் ஒரு சிறு திருப்பம். சுவாரசியமாக உள்ளது. தொடருங்கள்.

கீதம்
14-05-2012, 12:28 PM
கதையில் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது.

நண்பரின் கேள்விக்கு கிட்டாவின் பதில் என்ன?

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிவா.ஜி
14-05-2012, 07:40 PM
எதிர்பாராத திருப்பம் கதையை மேலும் சுவாரசியமாக்குகிறது. இறந்தவன் தீவிரவாதியா...அவனது நோக்கம் என்ன....எப்படி அங்கே வந்தான்.....சீக்கிரம் சொல்லுங்க நண்பரே. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மஞ்சுபாஷிணி
15-05-2012, 08:59 AM
ஸ்டெல்லாவும் பீட்டரும் சேர்ந்து எதுனா சதி திட்டம் தீட்டுறாங்களா? அந்த பிளான் பிரகாரம் தான் பீட்டரை கத்தியால் கிட்டா குத்தியதா?... அப்டின்னு ஒரு கோணத்தில் படம் பார்த்த இயல்புடன் படிச்சால், இல்லம்மா இல்ல டெட்பாடி கரைல ஒதுங்கி கிடக்குது இன்னொரு திடுக் அவன் ஒரு தீவிரவாதி...

இதுல பிரகாசம் வேற விருது தரலாம்னு சொல்லிட்டார்.... கிட்டா என்ன சொல்லப்போறாரோ?

jayanth
15-05-2012, 09:18 AM
சுவாரசியமாகக் கொண்டு செல்லும் நேர்த்தி ரசிக்கவைக்கிறது. தொடருங்கள்...

இராஜேஸ்வரன்
15-05-2012, 02:00 PM
கதை மிகவும் சுவாரஸ்யமாக செல்லுகிறது. அடுத்து என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தொடருங்கள்.

மதுரை மைந்தன்
15-05-2012, 08:35 PM
தன்னால் கொல்லப்பட்டவன் ஒரு தீவிர வாதி என்றறிந்து கிட்டாவின் மனத்தில் குற்ற உணர்வு சற்று குறைந்தது. அதனால் தான் தன்னை குறு குறுக்க பார்த்துக் கொண்டு பிரகாசம் " தீவிர வாதியை கொன்றவர்க்கு விருது வழங்க வேண்டும்" என்றவுடன் " நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் தீவிர வாதிகளும் நம்மைப் போல் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நடராஜனுக்கு தெரிந்திருக்கும் பஞ்சாபில் காலிஸ்தான் தீவிர வாதிகளை அடக்க கமிஷனர் ரெபோரியோ அவர்களிடம் உங்கள் தீவிர வாதத்தை கை விடுங்கள். இல்லையேல் உங்கள் குடும்பங்கள் பாதிக்கப் படும் என்று ஒரு மிரட்டலை விடுத்ததும் அவர்கள் அடங்கி விட்டார்கள். ஆகவே தீவிர வாதத்தை ஒடுக்குவதற்கு தீவிர வாதிகளை கொல்ல வேண்டாம். சாதாரண மனிதர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது அபாயகரமானது" என்றார் அவர்.

சற்று மவுனத்திற்கு பிறகு அவர் நடராஜனிடம் " கொலையாளி யார் என்று கண்டு பிடித்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

" அதற்குள் எப்படி முடியும்? பாடி இன்று காலையில் தான் கிடைத்தது. அவன் நேற்றிரவு கொல்லப்பட்டிருக்கலாம் என்று ரிகர் மார்ட்டிஸ் சொல்கிறது. ஒன்று நிச்சயம். கொலையாளி பாடியை ஒரு காரில் கொண்டு போயிருக்க வேண்டும். நள்ளிரவு நேரம் ஊர் அடங்கிய வேளையில் காரை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. பாடி ஒரு பழைய சேலையில் சுற்றப்பட்டிருந்தது. கொலையில் ஒரு பெண்ணும் சம்பத்தப்பட்டிருக்க வேண்டும். நாளை உங்களுக்கு மேல் விவரங்களை கூறுகிறேன்" என்றார் நடராஜன்.

அவர்களிடமிருந்து விடை பெற்று வீடு திரும்பிய கிட்டாவின் மனதில் பல வித போராட்டங்கள். தன்னால் கொல்லப்பட்டவன் ஒரு தீவிர வாதி என்றாலும் ஒரு உயிரை எடுத்ததில் அவர் மனசாட்சி அவரை உறுத்தியது. ச்டெல்லா சொன்ன மாதிரி அவனை கத்தியை காட்டி வெறுமனே மிரட்டியிருக்கலாமோ தான் அவசர்ப் பட்டு விட்டோமோ என்று வருந்தினார். ஆனால் அந்த நேரத்தில் தனது மன நிலை எப்படி இருந்தது என்று அவரால் நினைத்து பார்க்க முடியவில்லை. போலீசுக்கு தன்னையும் ஸ்டெல்லாவையும் இணைத்து குற்றம் சாட்ட துளியும் வாய்ப்பில்லை என்பதை நினைத்து சற்று நிம்மதி அடைந்தாலும் பாடியை சுற்ரியிருந்த சேலையின் வண்ணான் குறி மூலமாக ஸ்டெல்லாவை கண்டு பிடித்து தன்னையும் வளைத்து விடுவார்களோ என அஞ்சத் தொடங்கினார். இவ்வாறு எண்ணி எண்ணி களைத்துப் போய் உறங்கலானார்.

மறு நாள் கல்லூரியில் வகுப்பை தொடங்கிய அவர் மாணவர்களிடம் " நான் முந்தைய வகுப்பில் குற்றங்களின் வகைகளையும் குற்ற வாளிகளின் மன நிலையயும் சிறிது விவரித்தேன். இன்று, முதல் வகை குற்றமான தற்காப்புக்காக கொலை செய்யும் குற்றவாளியின் மன நிலையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். சந்தர்ப்ப சூழ்னிலையால் பலசாலியான ஒரு வாலிபன் சற்று வயதான ஒருவரை தாக்குகிறான். அவன் அவர் கழுத்தை பிடித்து குரல் வளையை நெறுக்குகிறான். அவருக்கு மூச்சு திணறுகிறது. அவனுடைய இரும்பு பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை அவரால். முழி பிதுங்க திணறுகிறார் அவர். அச்சம்யம் அவருடைய மன நிலையை கற்பனை செய்து பாருங்கள். வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருந்த அவருக்கு ஒரு ஆயுதம் கிடைக்கிறது. அவர் அதைக் கொண்டு அவனை சதக் சதக் என்று குத்தினேன்" என்று கத்திக் கொண்டே மயங்கி விழுந்தார் கிட்டா.

பேராசிரியர ஏன் திடீரென்று உணர்ச்சி வசப்பட்டார் என்று குழம்பி போன மாணவர்களில் ஒருவன் ஓடிப் போய் பக்கத்து கடையிலிருந்து சோடா ஒன்றை வாங்கி வந்து அவர் முகத்தில் தெளித்தான். தன் நினைவு திரும்பிய கிட்டா " சாரி, நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்" என்று சொல்லி வகுப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். அன்று க்ளப்பிற்கு சென்று நண்பர்களை சந்திக்கும் மன நிலையில் அவர் இல்லாத்தால் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டார்.

இரவு படுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கும் போது கிட்டா வீட்டு போன் ஒலித்தது. போனை எடுத்த அவரிடம் ஸ்டெல்லா பதட்டமாக " அங்கிள், நாம் ஆபத்தில் சிக்கியிருக்கிறோம். என்னுடைய எதிர் வீட்டில் வசிக்கும் ஒருவன் அவனுக்கு என் மேல் ஒரு கண் வெகு நாளாக இருந்தது. இன்றிரவு நான் வேலை முடிந்து வீடு திரும்பியதும் என் பின்னாலேயே அவனும் வீட்டுற்குள் நுழைந்து விட்டான்.

" என்ன வேண்டும் உனக்கு?" என்று நான் அவனிடம் கோபமாக கேட்டேன்.

அதற்கு அவன் " கூல் பேபி, அது எப்படி இளைமையான என்னை விட்டு விட்டு வயசான ஒருத்தரை பிடிச்சிருக்கே? " என்று சொல்லி விகாரமாக் சிரித்தான்.

" தட் இஸ் நன் ஆப் யுவர் பிஸினெஸ், வந்த விஷயத்தை சொல்லு" என்றேன் நான் அவனிடம்.

" நீயும் உன் பாய் பிரண்டும் சேர்ந்து ஒருத்தனை கொலை செய்து அந்த பாடியை அப்புறப் படுத்த உன்னோட பாய் பிரண்ட் காரில் எடுத்து செல்வதை என் கண்ணால் பார்த்தேன். விளக்கு வெளிச்சம் சரியாக இல்லாததால் காரின் நம்பரை பார்க்க முடியவில்லை. இதை நான் போலீசிடம் சொல்லாமல் இருக்கணும்னா நீ எனக்கு 10 லட்ச ரூபாய் தரணும்" என்று சொல்லி உரக்க சிரித்தான்.

" நீ சொல்வதெல்லாம் பொய் உங்கிட்ட என்ன சாட்சியம் இருக்கு?' என்றேன் நான்.

அதற்கு அவன் " ஆர். கே என்று எம்பிராய்டரி செய்த ரத்தம் தோய்ந்த* அவனுடைய கர்சீப் எங்கிட்ட இருக்கு. பாடியை எடுத்து போகும் போது பாண்ட் பாக்கெட்டிலிருந்து நழுவி விழுந்தது அது. " என்றான்.

தொடரும்

சிவா.ஜி
15-05-2012, 08:39 PM
அருமையான தொடர்ச்சி. நழுவி விழுந்த கர்சீப்....அடுத்த மர்மத்துக்கான அடிகோலாய்.....தொடருங்க நண்பரே....வாழ்த்துக்கள்.

Ravee
15-05-2012, 11:55 PM
இதுக்குத்தான் சொல்றது மனைவிமார்கள் அம்மாவீட்டுக்கு போகக்கூடாதுன்னு .... பாருங்க பேராசிரியர் மனைவி போனதாலே எத்தனை பிரச்சனை .பீட்டரை கத்தியாலே குத்தினதுக்கு ஸ்டெல்லாவை போட்டுத்தள்ளி இருக்கலாம் . பாவம் கிட்டா .... :traurig001:

அன்புரசிகன்
16-05-2012, 12:03 AM
விளம்பர அழகியே காசை கறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாரோ அல்லது உண்மையான செய்தியா... பார்க்கலாம். தொடருங்கள்.இதுக்குத்தான் சொல்றது மனைவிமார்கள் அம்மாவீட்டுக்கு போகக்கூடாதுன்னு .... பாருங்க பேராசிரியர் மனைவி போனதாலே எத்தனை பிரச்சனை .பீட்டரை கத்தியாலே குத்தினதுக்கு ஸ்டெல்லாவை போட்டுத்தள்ளி இருக்கலாம் . பாவம் கிட்டா .... :traurig001:

என்ன ஒரு வில்லத்தனம். :D

மதுரை மைந்தன்
16-05-2012, 08:43 PM
ஸ்டெல்லா போனில் தொடர்ந்தாள்.

" அங்கிள் வந்தவன் வீட்டிலிருந்த மேசை சோபா நாற்காலி எல்லவற்றையும் பரிசோதித்தான். முகர்ந்து கூட பார்த்தான். பின்னர் என்னிடம் நீயும் உன்னோட அந்த பாய் பிரண்டும் ஸ்மார்ட்டா வேலைசெஞ்சிருக்கீங்க. ரத்தக் கறையோ கைரேகைகளோ இல்லாமல் எல்லாவற்றையும் அழித்திருக்கிறீர்கள். இப்ப என் கை வசமிருக்கும் கர்சீப் ஒரு தடயம் என்றாலும் வேறொரு ஸ்ட்ராங்கான தடயம் வேண்டும் உங்கள் இருவரையும் தூக்கு மேடைக்கு அனுப்ப என்று சொல்லி அறையெங்கும் தூண்டி துருவி தேடினான். இறுதியில் ஆஹா கிடைச்சிடுச்சு என்று சொல்லி சோபாவின் அடியிலிருந்து ஒரு தங்க சங்கிலியை எடுத்தான். அதன் நடுவில் பீட்டர் என்று பதிந்த ஒரு பதக்கம் இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி யடைந்தேன். நீங்களும் பீட்டரும் கட்டி புரண்ட போது அவன் கழுத்திலிருந்து அந்த செயின் அறுந்து விழுந்திருக்க வேண்டும்.

" ஹா ஹா 10 லட்ச ரூபாய் உடனே கொடு செயினையும் கர்சீப்பையும் வாங்கிக் கொள் என்று சொல்லி சிரித்தான் அந்த கயவன். என்ன செய்வதென்று தெரிய்யமல் நான் அவனிடம் " அத்தனை பணம் என்னிடம் இல்லை" என்றேன். அதற்கு அவன் " அப்போ உன் பாய் பிரண்டிடம் வாங்கி கொடு" என்றான். நான் பதை பதைத்து " ஓ நோ நான் அவரை இதில் சம்பந்தப் படுத்த மாட்டேன். என்னோட டாடி என் பெயரில் 5 லட்ச ரூபாய்க்கு பிக்ஸட் டெபாசிட் போட்டு வச்சிருக்கிறார். அதை எடுத்து உன்னிடம் வீசுகிறேன் என்னை மேல் கொண்டு தொந்தரவு பண்ணாதே. தயவு செய்து போலீசிடம் காட்டி கொடுத்துடாதே" என்று மன்றாடினேன்.

" சரி, நாளைக்கு வருவேன் பனத்தை காஷாக கொடு. அப்புறம் மீதி பணத்தை வாங்கிக்கறேன்" என்று சொல்லி சென்றிருக்கிறான். இப்போ நாம் என்ன பண்றது" என்று சொல்லி அழுதாள் ஸ்டெல்லா.

" இந்த மாதிரி பிளாக் மெயில் பண்றவங்களை எதிர் கொள்ள மூன்று வழிகள் இருக்கின்றன. முதலாம் வழியில் அவன் கேட்கும் பணத்தை திரும்ப திரும்ப கொடுத்தல் அது நாம்மல் முடியாது. இரண்டாம் வழி நாம் போலீசில் சரணடைவது. இதனால் அவனுக்கு ஆபத்து ஏற்படும். அவன் நம்மை தீர்த்து கட்ட பார்ப்பான். மூன்றாவது வழி நாம் அவனை தீர்த்து கட்டுவது. மூன்றாவது வழி ஒன்று தான் சரியாகப் படுகிறது எனக்கு " என்றார் கிட்டா ஸ்டெல்லாவிடம்.

" என்னது இன்னொரு கொலையா? நான் மாட்டேன். " என்று பயந்த ஸ்டெல்லாவிடம் கிட்டா " நமக்கு வேற வழியில்லை. எனக்கு தெரிந்த பார்மஸிக் காரரிடம் விஷ மருந்து பவுடர் கிடைக்கிறது. அதை வாங்கி நான் உன்னிடம் தருகிரேன். நாளைக்கு அவன் பணத்தை வாங்கி செல்ல வரும்போது காபியிலோ ஜூஸிலோ அதை கலந்து அவனிடம் கொடு. மருந்து உடனே வேலை செய்யாது அவன் உன் வீட்டை விட்டு வெளியே சென்று ஒரு அரை மணி நேரம் கழித்து தான் வேலை செய்யும். அவன் உன் வீட்டில் வைத்து இறக்க கூடாது" என்றார் கிட்டா.

" நாம் எப்படி போலீசார் கண்ணில் படாமல் சந்திப்பது?" என்று கேட்டாள் ஸ்டெல்லா.

" நீ வேலை பார்க்கிற ஓட்டல் லிப்ட் ஒன்றில் சந்திப்போம். நான் அங்கு அந்த பவுடரை அங்கு தருகிறேன்" என்று சொன்னார் கிட்டா.

" சரி, அப்படியே செய்வோம். கர்த்தர் தான் நம்மை காப்பாற்ற வேண்டும். குட் நைட்" என்று சொல்லி முடித்தாள் ஸ்டெல்லா.

மறு நாள் பார்மஸிக்கு சென்று விஷ மருந்தை வாங்கி ஸ்டெல்லாவிடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்து விட்டு வீடு திரும்பினார் கிட்டா.

அன்று ஞாயிற்றுக்கிழமை கிட்டா வழக்கம் போல் டி.வி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது வாசல் அழைப்பு மணி ஒலித்தது. யாராக இருக்கும் என்று வியந்த வண்னம் சென்று கதவை திறந்தார். அங்கு நடராஜனும் பிரகாசமும் நின்று கொண்டிருந்தனர். " ஹலோ கிட்டா. நாங்கள் இருவரும் எண்ணூரை தாண்டியிருக்கும் கடற்கரையோரத்தில் பீட்டரின் பாடி கிடைத்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நீயும் எங்களுடன் வர வேண்டியிருக்கிறது" என்றார் நடராஜன்.

தொடரும்

jayanth
16-05-2012, 09:00 PM
விறுவிறுப்பு... தொடரட்டும்...!!!

அன்புரசிகன்
16-05-2012, 11:58 PM
அடடடா... BP ஐ ஏத்துறீங்க...
நல்ல சுவாரசியமா நகர்கிறது. தொடருங்கள்.

மஞ்சுபாஷிணி
17-05-2012, 06:11 AM
தன்னால் கொல்லப்பட்டவன் ஒரு தீவிர வாதி என்றறிந்து கிட்டாவின் மனத்தில் குற்ற உணர்வு சற்று குறைந்தது.

தொடரும்
அதானே. என்ன தான் தீவிரவாதி என்றாலும் அவனைக்கொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு? கிட்டா மனித நேயமிக்க மனிதர் என்று அவர் தீவிரவாதியைக்கொன்றோம் என்று மகிழாமல் தவறு செய்துட்டதை நினைத்து வருந்தும் நிலையை மிக அருமையா சொல்லி இருக்கீங்க இலமூரியன் ஐயா....

கொலை என்றாலே எங்காவது சாட்சியை விட்டிருப்பாங்க.. அதை வெச்சு ப்ளாக்மெயில் பண்ண யாராவது முளைப்ப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன். அதே போல ஆச்சு. ஸ்டெல்லா செம்ம கேம் ஆடிண்டுஇருக்காளோன்னு டவுட்...

கிட்டா தன் கையால் ஒருவன் இறந்ததை தாங்கும் மனநிலை இல்லாததால் தான் அடுத்த நாள் குற்றவாளிகள் சம்மந்தமா வகுப்பு எடுக்கும்போது மயங்கி விழுந்திருக்கார்....

கதையாசிரியரின் திறமை இதில் மிக அருமையா வெளிப்பட்டிருக்கு. அதாவது குற்றம் சதா புரிபவனுக்கும் குற்றம் பழக்கம் இல்லாதவன் புரிவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்... அதை மிக அருமையா புரியவெச்சிருக்கீங்க ஐயா... இந்த பகுதியில் சுவாரஸ்யம் கூடினது மட்டுமில்ல...இனி கிட்டா வாழ்க்கையில் ஒரு ப்ளாக்மெயிலர் நுழையப்போறார்னு புரிஞ்சுப்போச்சு... நிம்மதி போச்சு கிட்டாக்கு :(

மஞ்சுபாஷிணி
17-05-2012, 06:17 AM
ஸ்டெல்லா போனில் தொடர்ந்தாள்.

" அங்கிள் வந்தவன் வீட்டிலிருந்த மேசை சோபா நாற்காலி எல்லவற்றையும் பரிசோதித்தான்.

தொடரும்
எனக்கு ஸ்டெல்லா மேலே தான் ரொம்ப சந்தேகமாக இருக்கிறது... கிட்டா ஏன் இப்படி செய்கிறார்? ஒரு கொலையை மறைக்கவே முடியாத நிலையில் இன்னொரு கொலையா :( என்னாகப்பொகுதோ....

நடராஜன் வேற பீதிய கெளப்பறாரே...

சஸ்பென்ஸா கொண்டுப்போறீங்க ஐயா.. கதை அடுத்து எந்த கட்டத்தை தாண்டும் என்று ஊகிக்கவே முடியாதபடி கதாசிரியர் சிறப்பாக எழுதியிருப்பதற்கு ஒரு சபாஷ்....

மதுரை மைந்தன்
18-05-2012, 10:15 AM
பிரகாசமும் நடராஜனும் வந்து கூப்பிட்டவுடன் மறுக்க முடியாமல் அவர்களுடன் காரில் எண்ணூருக்கருகில் இருந்த கடற்கரைக்கு சென்றார். போகும் வழியில் " என்னை எதற்காக அழைத்து செல்கிறீர்கள்?" என்று சந்தேகத்துடன் கேட்டார் கிட்டா. " நீ ஒரு கிரிமினாலஜி ப்ரொபெசர். நீ எங்களுடன் வந்தால் எங்கள் கண்களுக்கு தென்படாத தடயம் எதுவும் உனக்கு தெரியலாம். அதற்கு தான் உன்னை அழைத்து செல்கிறோம். டென்ஷன் ஆகாதே" என்றார் நடராஜன்.

கடற்கரைக்கருகில் சாலையில் காரை நிறுத்தி விட்டு மூவரும் கீழிறங்கினர். கிட்டா காரை விட்டு இறங்கி பாடி கிடைத்த இடத்தை நோக்கி நடக்கலானார். அவர் பின்னால் வந்த நடராஜன் " எப்படி கிட்டா நீயே அந்த பாடியை கடலில் எறிந்த மாதிரி இவ்வளவு சரியாக பாடி கிடந்த இடத்திற்கு எங்களுக்கு வழி காட்டுகிறாய். " என்று கேட்டார். அப்போது தான் தன் தவறை உணர்ந்த கிட்டா தானே தன்னை காட்டி கொடுத்து விடுவோமோ என்று அஞ்சி " நான் ஒரு உத்தேசமாக நடக்கிறேன். பேப்பரில் பாடி கிடைத்த இடத்தின் வருணனையை வைத்து தான் போகிறேன்" என்று சொல்லி சமாளித்தார். பிரகாசமும் நடராஜனும் பாடி கிடைத்த இடத்துக்கருகில் தடயங்களை வெகு நேரம் சோதித்தனர். கிட்டாவும் அவர்களுடன் சேர்ந்து தேடினார். இறுதியில் மூவரும் காருக்கு திரும்பினார்கள். காரில் ஏற இருந்த சமயம் நடராஜன் ரோடுக்கருகில் மணலில் ஒரு ஷூ வின் தடயத்தை தற்செய்லாக கண்டுபிடித்தார். சற்று தள்ளி நின்று கொண்டிருந்த கிட்டாவின் ஷூ சைசும் தடயமும் ஒத்து போவதை கண்டார் அவர்.

காரில் சென்னைக்கு திரும்பும் போது, நடராஜன் கிட்டாவிடம் " கொலை நடந்த இரவு க்ளப்பிலிருந்து எப்போது நீ வீடு சென்றாய் கிட்டா" என்று கேட்டார். கிட்டா அதற்கு " ஏன் நீங்கள் சென்ற சிறிது நேரத்தில் நானும் வீடு திரும்பினேன். என் மீது சந்தேகம் இருந்தால் சொல்லு நடராஜன்" என்றார். அதற்கு நடராஜன் சிரித்துக் கொண்டே " நீ தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டுவிட்டால் எங்கள் வேலை சுலபமாகி விடும்" என்றார். கிட்டவுக்கு நடராஜன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு " நீங்கள் நல்ல திறமைசாலிகள். நான் தான் குற்றவாளி என்று கண்டுபிடுயுங்களேன் பார்க்கலாம்" என்றார் கிட்டா. பிரகாசம் குறுக்கிட்டு " ஏய் இது என்ன விளையாட்டு. கிட்டாவை நமக்கு நன்றாக தெரியும். அவனால் இந்த மாதிரி கொலையெல்லாம் செய்திருக்க முடியாது. நீ சீரியஸாக எடுத்துக்காதே கிட்டா" என்று கிட்டாவை சமாதான*ப் படுத்தினார்.

வீட்டிற்கு திரும்பிய கிட்டாவின் மனத்தில் நிம்மதி இல்லை. என்னதான் பிரகாசம் சமாதன்ப்படுத்தினாலும் நடராஜனுக்கு தன் மீது பெருத்த சந்தேகம் இருப்பதை நினைத்து கலங்கினார். ஸ்டெல்லாவுக்கு போன் செய்தார்.

" என்ன அவன் வந்தானா? நீ அவனுக்கு ஜூசில் மருந்தை கலந்து கொடுத்தாயா? அவன் போய் விட்டானா?" என்று பதை பதைப்புடன் கேட்டார்.

" அவன் வந்து பணத்தை வாங்கி கொண்டு போய் விட்டான். மீண்டும் வந்து மீதி 5 லட்ச ரூபாய்களை வாங்கப் போவதாக சொல்லி சென்றான். பணத்தை கொடுத்ததும் அவன் என்னிடம் இந்த பணத்தை நீயே வைத்துக் கொள் வா நாமிருவரும் மலேஷியா, சிங்கப்பூர் சென்று ஜாலியாக வாழ்வோம் என்றான். அவன் வருவதற்கு சற்று முன்னர் தான் தொலைக் காட்சி செய்தியில் போலீசார் பீட்டரின் கேர்ல் பிரண்டை கண்டுபிடித்து விட்டதாகவும் அவளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு கேஸை விரைவில் முடிக்கப் போவதாகவும் கூறினார்கள். போலீசார் குறிப்பிட்டது நானாகத்தான் இருக்கும் என்பதால் அவனுடன் ஓடினால் என் மீது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிடும். அதனால் நான் அவனுடன் செல்ல மறுத்தேன். பணத்தை வாங்கி அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போது நான் அவனிடம் ஜூஸ் கலந்து வருவதாக கூறி சமையலறைக்கு சென்று இரு க்ளாஸ்களில் ஒன்று எனக்கும் மற்றொன்றில் மருந்து கலந்த ஜூஸ் அவனுக்கும் என்று எடுத்து வந்தேன். ஜூஸை அவனிடம் கொடுத்தேன். க்ளாஸை வாங்கிக் கொண்டு என்னையே உற்று பார்த்தான் அவன். பிறகு நீ ஏன் இந்த ஜூஸை சாபிடக்கூடாது எனக்கு உன் க்ளாஸை தா என்றான். நான் க்ளாஸை வாங்க மறுத்தேன். அவன் கையிலிருந்த க்ளாஸை விட்டெறிந்து என் கன்னத்தில் அறைந்தான். என்னை கொல்ல சதி திட்டமா போடுகிறாய். ஜாக்கிரதை. நாளை மீண்டும் வருவேன். மீதி 5 லட்ச ரூபாய்களை தா. இடையில் போலீசுக்கோ வெறு எவருக்கோ என்னைப் பற்றி கூறினால் என்னுடைய கூட்டாளிகள் உன்னை தீர்த்து கட்டி விடுவார்கள் என்று எச்சரித்து சென்றான்" ஸ்டெல்லா இவ்வாறு கூறினாள் விசும்பலுடன்.

போனை கீழே வைத்த கிட்டா தன் கழுத்தை சுற்றி தூக்கு கயிறு இறுகுவதாக உணர்ந்தார். கொஞ்ச நேரம் மவுனமாக இருந்து விட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் தூக்க மாத்திரைகள் கொண்ட பாட்டிலை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்தார். பக்கத்து மேசையில் இருந்த மனைவி, மகன், மகளின் போட்டோக்களை பார்த்து கண்ணீர் சிந்தினார். "என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டேன்" என்று சொல்லி பாட்டிலை திறந்து உள்ளங்கையில் மாத்திரைகளை கொட்டி அவற்றை ஒரே முழுங்காக முழுங்கி விட்டு சோபாவில் சரிந்தார்.

அடுத்த பகுதியில் நிறைவு பெரும்

சிவா.ஜி
18-05-2012, 12:52 PM
எளிய நடையில் அருமையான மர்மத்தொடர். வாசிக்க அருமையாய் இருக்கிறது. விரைவில் முடியப்போகிறதே என்ற ஏமாற்றம். முடிவைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.

jayanth
19-05-2012, 08:26 AM
அதற்கு நடராஜன் சிரித்துக் கொண்டே " நீ தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டுவிட்டால் எங்கள் வேலை சுலபமாகி விடும்" என்றார். கிட்டவுக்கு நடராஜன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு " நீங்கள் நல்ல திறமைசாலிகள். நான் தான் குற்றவாளி என்று கண்டுபிடுயுங்களேன் பார்க்கலாம்" என்றார் கிட்டா.

தடயங்கள் எதுவும் இல்லாமல் நடராஜன் கிட்டா மேல் ஏன்/எப்படி சந்தேகப்படுகின்றார்...???

பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

தொடருங்கள் மதுரை மைந்தன்...!!!

sarcharan
19-05-2012, 09:22 AM
கிட்டா என்னிக்கு ஸ்டெல்லாவ பாத்தாரோ அன்னிக்கே சனி அவரை முன்னால பாத்துட்டான் போல, போதாகுறைக்கு எமனை வேறு உடன் கூட்டிக்கிட்டு வந்துட்டான் போலும்!

மதுரை மைந்தன்
20-05-2012, 11:33 AM
ஸ்டெல்லா வீட்டை விட்டு கிளம்பிய அவன் 5 லட்ச ரூபாய் கொண்ட பையை சுமந்து கொண்டு ஜாலியாக விசிலடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அவனுடைய போதாத காலம் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு இன்ஸ்பெக்டர் கண்களில் விழுந்தான். அவன் ஒரு தேடப்பட்டு வரும் தீவிர வாதி என்று அறிந்திருந்த இன்ஸ்பெக்டர் பைக்கில் அவனை அணுகினார். இன்ஸ்பெகடரை கண்டதும் வேகமாக் நடக்க ஆரம்பித்த அவனை "ஏய் நில்லு. பையில் என்ன வைத்திருக்கிறாய்" என்று கேட்ட வண்ணம் அவனைப் பின் தொடர்ந்தார். அவனிடம் துப்பாக்கி இருந்து தன்னை சுட்டு விட்டால் ஆபத்து என்று அவர் சற்று தள்ளியே பின் தொடர்ந்தார். வேகமாக சென்ற அவன் திடீரென்று பக்கத்து சுரங்கப் பாதைக்குள் சென்றான். பைக்கை நிறுத்தி விட்டு கையில் ரிவால்வருடன் இன்ஸ்பெக்டர் மெல்ல அந்த சுரங்க பாதைக்குள் இறங்கினார். அதில் ஆள் நடமாட்டாம் ஏதும் இல்லை. சுரங்க பாதையின் மற்றொரு வெளி செல்லும் பாதை மூடி இருந்ததே அதற்கு காரணம். அந்த வெளி கேட்டை அடைந்த அவன் வெளியே செல்லவும் முடியாமல் வந்த வழியில் திரும்பவும் முடியாமல் பொறியில் சிக்கிய எலி போல அலைந்தான். சற்று நேரத்தில் ஹாண்ட்ஸ் அப் என்று சொல்லிக் கொண்டு இன்ஸ்பெக்டர் அவன் முன் ரிவோல்வருடன் நின்றார். வேறு வழியில்லாமல் அவன் அவரை நோக்கி தாறு மாறாக சுட ஆரம்பித்தான். குறி வைத்து சுடுவதில் நிபுணரான அந்த இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி ரவைகள் அவன் நெஞ்சை துளைத்தன. கீழே உயிரற்று விழுந்த அவனை மெல்ல அணுகி அவனை புரட்டி பார்த்து அவன் இறந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டு இன்ஸ்பெக்டர் அவனுடைய சட்டை பாண்ட் பைகளை சோதனை இட்டார். பீட்டர் என்று பொறித்த வில்லை கொண்ட தங்க சங்கிலி அவருக்கு கிடைத்தது. எண்ணூரில் கிடைத்த பாடி பீட்டர் என்ற தீவிர வாதியுடையது என்று அவருக்கு தெரியும். பக்கத்த்தில் கிடந்த பையில் பல் ரூபாய் நோட்டு கற்றைகள் இருந்ததையும் கவனித்தார். உடனே அவர் கமிஷனர் நடராஜனுக்கு போன் செய்து விவரங்களை கூற நடராஜன் அங்கு வந்து சோதனை யிட்டார்.

தன் வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவுக்கு அந்த பிரேக்கிங் நியூஸ் பரவசத்தை ஏற்படுத்தியது. நியூஸில் நடராஜன் " எண்ணூரில் கிடைத்த பாடியின் கொலையாளி பிடி பட்டான். அவனும் ஒரு தீவிர வாதக் குமபலை சேர்ந்தவன். கொலையுண்ட பீட்டர் மற்றொரு தீவிர வாதக் குமபலை சேர்ந்தவன் இரு கும்பலுக்கும் இருந்த விரோதத்தில் பீட்டர் கொல்லப்பட்டிருக்கிறான். ஆகவே இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. கொலையாளி பணம் படைத்தவர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டவன். அவனிடமிருந்து சிக்கிய 5 லட்ச ரூபாய் பெறுமான நோட்டு கற்றைகளை அவைகளின் எண்கலைக் கொண்டு எந்த வங்கியிலிருந்து யார் பணத்தை எடுத்தார்கள் என்றறிந்து அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்படும்" என்று கூறினார். தங்கள் மீது கொலை பழி விழவில்லை, 5 லட்ச ரூபாய் திரும்ப கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை கிட்டாவுடன் பகிர்ந்து கொள்ள அவருக்கு போன் செய்தாள். பல முறை போன் செய்தும் அவர் அதை எடுக்காதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

சோபாவில் சரிந்திருந்த கிட்டாவின் தோள் மீது ஒரு கை விழுந்தது. தூக்கத்திலிருந்து மெதுவாக கண் திறந்த கிட்டவின் முன்னால் க்ளப்பின் செக்யூரிட்டி நின்று கொண்டு " சார் மணி 10.30 ஆகி விட்டது" என்றதும் மலங்க மலங்க முழித்தார். அது வரை தான் கண்டது ஒரு கனவு என்று உறைத்ததும் அவருக்கு உற்சாகம் பொங்கியது. தான் மறு பிறவி எடுத்து விட்டதாக மகிழ்ந்தார். செக்யூர்ரிட்டியின் கைகளை பிடித்துக் கொண்டு " நலமா இருக்கிறீர்களா அய்யா" என்று சொல்லி தன் பர்ஸை திறந்து ரூபாய் நோட்டுக்களை அவர் கையில் திணித்தார். செக்யூரிட்டிக்கு ஒரே திகைப்பு. நன்றி அய்யா என்று சொல்லி வணங்கினார் கிட்டாவை.

க்ளப்பை விட்டு வெளியே வந்த கிட்டவிடம் வாசல் காவலாளி " சாவியை கொடுத்தீங்கனா நான் போய் காரை எடுத்துக்கிட்டு வறேன்" என்றான். அவன் கழுத்தில் பீட்டர் என்று பொறித்த வில்லையுடன் ஒரு செயின் இருந்ததை பார்த்த கிட்டா உணர்ச்சி பொங்க அவன் கைகளை பற்றிக் கொண்டு நா தழு தழுக்க " பீட்டர் எப்படி இருக்கே. வீட்டில சம்சாரம் குழந்தைகள் நலமா" என்று விசாரித்து விட்டு அவனிடமும் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். " காரை நானே போய் எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு கார் பார்க்கிற்கு செல்ல திரும்பினார். கவலாளி பீட்டருக்கு கையில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை பார்த்து ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

கார் பார்க்கிற்கு செல்லும் முன் அந்த துணிக்கடையின் ஷோ கேஸிலிருந்த விளம்பர அழகியின் பொம்மையை அருகில் சென்று உற்று பார்த்தார். " உன் அழகை ரசித்தற்கு என்னை என்ன பாடு படுத்தி விட்டாய்" என்று சொல்லத் தோன்றியது அவருக்கு. எல்லாத்துக்கும் காரணம் குடி போதை தான் என்று இனிமேல் குடிக்க கூடாது என்று தீர்மானித்தார்.

அப்போது ஷோ கேஸின் கண்ணாடியில் அவரருகே ஒரு உருவம் நிழலாடியதை கவனித்து அவர் திரும்பினார்.

" நான் ரொம்ப அழகா இருக்கேனா?" என்று கேட்டுக் கொண்டு அந்த விளம்பர அழகி நிஜ உருவில் அங்கு நின்றாள்.

"அய்யோ நானில்லை. ஆளை விடும்மா" என்று கத்திக் கொண்டே கார் பார்க்கிற்கு ஓடினார் கிட்டா.


நிறைவு பெற்றது

சிவா.ஜி
20-05-2012, 07:13 PM
ஆஹா....எப்படியெல்லாமோ கொண்டுபோன கதையை முழுக்க கனவுன்னு சொல்லி அழகா முடிச்சிட்டீங்களே. கிரைம் கனவு அருமை. வாழ்த்துக்கள்.

கீதம்
20-05-2012, 09:35 PM
மிகவும் சுவாரசியமான கனவு. ஆரம்பித்த இடத்திலேயே கதை முடித்து, மீண்டும் துவங்குவது இன்னும் சுவாரசியம் கூட்டும் வேடிக்கை.

கதையின் இறுதிவரை எந்தத் தொய்வுமில்லாமல் அழகாய்க் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

நம் ஆழ்மனதுக்குள் படிந்துவிட்ட சில ஆசைகள் நம் அனுமதியின்றி சமயங்களில் கனவாக வெளிப்படுமாமே....

இனி கிட்டா எந்த சலனத்துக்கும் ஆளாகாமல் சர்வ எச்சரிக்கையாய் இருப்பார்.

நல்ல கனவு, நல்ல கதை. பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

மதி
21-05-2012, 04:05 AM
எல்லாம் விளக்கமா சொல்லிட்டு கடைசியில கனவுன்னு சொல்லி முடிச்சிட்டீங்களே..! :)

நீண்ட நாள் கழித்து உங்களிடமிருந்து நல்ல கதை...! பாராட்டுக்கள்..!

jayanth
21-05-2012, 09:46 AM
வெறும் கனவுதானா...!!!

கனவே இப்படியென்றால் நிஜம் எப்படி இருந்திருக்கும்...!!!

குடித்துவிட்டு நாம் நம்மை மறந்திருக்கும் சுயநினைவில்லாதா வேளையிலும் குடியினால் எத்தனை துன்பங்கள் பார்த்தீர்களா...!!!

பாராட்டுக்கள் மதுரைமைந்தன்...

இராஜேஸ்வரன்
22-05-2012, 01:25 PM
கதையை வெறும் கனவு என்று முடித்திருந்தாலும், கதையை சற்றும் சுவை குறையாமல் கொண்டு போவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அருமை, பாராட்டுக்கள்.

sarcharan
22-05-2012, 02:05 PM
போங்க சார், இப்படி கதையை சப்பென்று முடித்து விட்டீர்களே....

சிவா.ஜி
22-05-2012, 07:23 PM
போங்க சார், இப்படி கதையை சப்பென்று முடித்து விட்டீர்களே....
:lachen001:

Ravee
24-05-2012, 05:29 PM
முடிவுகளை மட்டும் நம் மன்றத்தார் பொறுப்பில் விட்டு இருந்திருக்கலாம் கலை கட்டி இருந்திருக்கும் . ஒரு மர்மகதை கொடுத்ததற்கு நன்றி அண்ணா ....:lachen001:

மதுரை மைந்தன்
24-05-2012, 08:31 PM
ஆஹா....எப்படியெல்லாமோ கொண்டுபோன கதையை முழுக்க கனவுன்னு சொல்லி அழகா முடிச்சிட்டீங்களே. கிரைம் கனவு அருமை. வாழ்த்துக்கள்.

பாரட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-05-2012, 08:33 PM
மிகவும் சுவாரசியமான கனவு. ஆரம்பித்த இடத்திலேயே கதை முடித்து, மீண்டும் துவங்குவது இன்னும் சுவாரசியம் கூட்டும் வேடிக்கை.

கதையின் இறுதிவரை எந்தத் தொய்வுமில்லாமல் அழகாய்க் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

நம் ஆழ்மனதுக்குள் படிந்துவிட்ட சில ஆசைகள் நம் அனுமதியின்றி சமயங்களில் கனவாக வெளிப்படுமாமே....

இனி கிட்டா எந்த சலனத்துக்கும் ஆளாகாமல் சர்வ எச்சரிக்கையாய் இருப்பார்.

நல்ல கனவு, நல்ல கதை. பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

உங்களைப் போன்ற நல்ல கதாசிரியரிடமிருந்து வந்த நடுனிலைமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
24-05-2012, 08:34 PM
எல்லாம் விளக்கமா சொல்லிட்டு கடைசியில கனவுன்னு சொல்லி முடிச்சிட்டீங்களே..! :)

நீண்ட நாள் கழித்து உங்களிடமிருந்து நல்ல கதை...! பாராட்டுக்கள்..!

நீண்ட நாள் கழித்து வந்த உங்கள் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-05-2012, 08:36 PM
வெறும் கனவுதானா...!!!

கனவே இப்படியென்றால் நிஜம் எப்படி இருந்திருக்கும்...!!!

குடித்துவிட்டு நாம் நம்மை மறந்திருக்கும் சுயநினைவில்லாதா வேளையிலும் குடியினால் எத்தனை துன்பங்கள் பார்த்தீர்களா...!!!

பாராட்டுக்கள் மதுரைமைந்தன்...

கதையை சரியாக புரிந்து கொண்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-05-2012, 08:37 PM
கதையை வெறும் கனவு என்று முடித்திருந்தாலும், கதையை சற்றும் சுவை குறையாமல் கொண்டு போவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அருமை, பாராட்டுக்கள்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-05-2012, 08:41 PM
போங்க சார், இப்படி கதையை சப்பென்று முடித்து விட்டீர்களே....

வேறு எப்படி முடித்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் மகிழ்ச்சி அடைவேன். கனவு என்று முடிக்காமல், கிட்டா சாவதையும் ஸ்டெல்லா அரெஸ்ட் ஆவதாகவும் முடித்திருந்தால் அது வழக்கமான முடிவு. அதிலிருந்து மாறுபட்டு சற்று வித்தியாசமான முடிவு தரவேண்டும் என் விரும்பினேன். உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.

மதுரை மைந்தன்
24-05-2012, 08:43 PM
முடிவுகளை மட்டும் நம் மன்றத்தார் பொறுப்பில் விட்டு இருந்திருக்கலாம் கலை கட்டி இருந்திருக்கும் . ஒரு மர்மகதை கொடுத்ததற்கு நன்றி அண்ணா ....:lachen001:

உங்களுடைய யோசனை அருமையானது. ஏன் நீங்களே ஒரு திரியை ஆரம்பித்து அதில் இந்த கதைக்கு வேறு ஒரு முடிவை தரக்கூடாது?