PDA

View Full Version : இது உண்மையாக இருக்குமோ?



ravikrishnan
11-05-2012, 11:18 AM
https://m.ak.fbcdn.net/a5.sphotos.ak/hphotos-ak-ash3/s320x320/559523_347262178674575_100001723879595_955435_1380921421_n.jpg

இது உண்மையாக இருக்குமோ? அன்பர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

இராஜிசங்கர்
11-05-2012, 12:06 PM
உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது ரவி.அன்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் இயல்பு தானே?ஒரு நாயையோ பூனையையோ நம்மால் அன்பு பாராட்டி வளர்க்க முடியும் என்றால் சிங்கம் கூட சாத்தியம் தானே..

கீதம்
11-05-2012, 12:20 PM
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று. அதன் காணொளி இணைப்பு கீழே.


http://www.youtube.com/watch?v=OInd3QK5Llw&feature=related


மனைவியின் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கென்றே ஸ்காட்லாந்திலிரந்து தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் வந்திருந்தனர் ஒரு தம்பதியர்.

உயிரியல் பூங்காவின் வளர்ப்பு சிறுத்தைகள் என்பதால் அருகில் சென்று தொட்டுத் தடவிப் புகைப்படம் எடுத்துக்கொள்வது சுற்றுலாப்பயணிகளின் வாடிக்கையாம்.

அப்படி அருகில் வந்த ஒரு சிறுமியை சிறுத்தைகள் தாக்க அவளைக் காப்பாற்ற வயலட் முன்வர, சிறுத்தைகள் அவரை வளைத்துக்கொண்டனவாம்.

இதில் விசித்திரம் என்னவெனில் மனைவி சிறுத்தைகளிடம் சிக்கிப் போராடிக்கொண்டிருந்தபோது கணவர் கர்மசிரத்தையாய் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாராம்.

M.Jagadeesan
11-05-2012, 12:33 PM
வளர்ப்பு சிங்கமாக இருந்தால், இந்தக் காட்சி உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.

ravikrishnan
11-05-2012, 01:52 PM
அன்பின் வெளிபாடு எப்படி இருக்கும் என்பதை அழகாக சொன்ன ராஜ் அவர்களுக்கும், (மனைவி சிறுத்தைகளிடம் சிக்கிப் போராடிக்கொண்டிருந்தபோது கணவர் கர்மசிரத்தையாய் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாராம்.)எனது ஆசான் அக்கா அவர்களுக்கும்,(வளர்ப்பு சிங்கமாக இருந்தால்), ஐயா ஜகதீசன் அவர்களுக்கும்,நன்றிகள்!!!

நாஞ்சில் த.க.ஜெய்
11-05-2012, 04:18 PM
இதில் விசித்திரம் என்னவெனில் மனைவி சிறுத்தைகளிடம் சிக்கிப் போராடிக்கொண்டிருந்தபோது கணவர் கர்மசிரத்தையாய் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாராம்.

இது எல்லாம் கால்தூசிக்கு சமம் எட்டி மிதித்து விட்டு எளிதில் வந்துவிடுவாள் என்ற எண்ணம் கணவன் மனதில் ஆழமாக இருந்திருக்கும் போல ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-05-2012, 04:27 PM
முதல் படம் உண்மை என்றே தோன்றுகிறது. காணொளிச் செய்தி பரிதாபம். நன்றி இரவி.:)

ravikrishnan
11-05-2012, 05:19 PM
முதல் படம் உண்மை என்றே தோன்றுகிறது. காணொளிச் செய்தி பரிதாபம். நன்றி இரவி.:)
நன்றி!! ஐயா.

jayanth
13-05-2012, 04:50 AM
இது உண்மையான படம்தான். National Geography/Animal planet/Discovery சானல்களில் ஏதோ ஒன்றில் பார்த்த நினைவு.