PDA

View Full Version : ஏந்த்திகெனி - 2

சொ.ஞானசம்பந்தன்
11-05-2012, 07:15 AM
யாரோ அடக்கம் செய்துவிட்டதாய்க் காவற்காரருள் ஒருவர் வந்து சொன்னதைக் கேட்ட கிரியன் :

எதிர்ப்பாளர் நெடுநாளாய் உள்ளனர் இவ்வூரில்;.

என்மீது குற்றம் சுமத்து பவர்கள்.

மறைவாய்த் தலையை ஆட்டிக் கடிவாளம்

மறுக்கின் றார்கள் வாயில்வைத் திருக்க.

அவர்தம் கடமையோ என்னடி பணிதல் .

அறிவேன் நன்றாய் அவர்கள்தான் பணந்தந்து

இந்தச் செயலைச் செய்வித்தார் என்பதை .

ஏனெனில் மக்களுக்கு ஏதுமிலை பணம்போல்.

அதனினும் தீயது வேறெதுவும் படரவில்லை.

அதுதான் நகரங் களையே அழிப்பது;

மனைகளைத் துறக்க மாந்தரைத் தூண்டுவது ;

மனிதரின் தூய இதயங் களையும்

கெடுத்துத் தகாத செயல்புரிய வைப்பது ;

எதனைச் செய்யவும் தயங்காக் கயமையும்

பயபக்தி யின்றி ஒழுகும் புத்தியும்

மானிடர்க் கதுதான் கற்பிக் கின்றது .

ஆனால் இதையெலாம் காசுக்குச் செய்தவர்

விலைதர வேண்டியவர் என்றேனும் ஒருநாள் .

மற்றபடி நானின்னம் சீயசின் பகதனெனில்

உன்னிடம் சொல்கிறேன் உரைக்கிறேன் வஞ்சினம் :

தன்கையால் அடக்கஞ் செய்த ஆலை

நீங்கள் கண்டறி வதற்கும் என்முன்

நிறுத்து வதற்கும் தவறுவீ ராயின்

ஹேடீசிடம் உங்களை யனுப்புமுன் தொங்க

விடுவேன் உயரே கைகளைக் கட்டி .
-----------------------------------------------
குறிப்பு : ஹேடீஸ் - நம் எமனுக்கு நிகரான தெய்வம்.

கீதம்
12-05-2012, 08:06 AM
பணத்தால் என்னென்ன செய்யமுடியும் என்று அலசப்படும் பட்டியலும்,

அடக்கம் செய்தவனைக் கண்டுபிடிக்காவிடில் காவலருக்கு அளிக்கப்படவிருக்கும் தண்டனையில் வெளிப்படும் குரூரமும்,

கிரியனின் குணத்தை அற்புதமாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மொழிபெயர்ப்புக்கு நன்றி. இன்னும் தொடருங்கள்.

தன்கையால் அடக்கஞ் செய்த ஆலை என்ற இடத்தில் தன்கையால் அடக்கஞ் செய்த ஆளை என்று இருக்கவேண்டுமோ?

சொ.ஞானசம்பந்தன்
13-05-2012, 06:21 AM

விமர்சனத்துக்கு மிக்க நன்றி . ஆளை என்றுதான் இருக்கவேண்டும் . பிழையைச் சுட்டியதற்கு நன்றி. பணம் அந்தக் காலத்திலேயே பத்தும் செய்திருக்கிறது என்பது இந்தப் பகுதியால் தெரிகிறது .

கலையரசி
21-05-2012, 03:15 PM
பணம் பண்ணும் வேலைகளை அடுக்கிவிட்டு அடக்கம் செய்தவனைக் கொண்டு வந்து நிறுத்தாவிடில் என்ன நடக்கும் என்று ஆணையிடும் கிரியனின் வார்த்தைகளை அழகிய கவிதையாய் மொழியாக்கம் செய்துள்ளீர்கள், நன்றாயிருக்கிறது.

சொ.ஞானசம்பந்தன்
22-05-2012, 10:19 AM
பணம் பண்ணும் வேலைகளை அடுக்கிவிட்டு அடக்கம் செய்தவனைக் கொண்டு வந்து நிறுத்தாவிடில் என்ன நடக்கும் என்று ஆணையிடும் கிரியனின் வார்த்தைகளை அழகிய கவிதையாய் மொழியாக்கம் செய்துள்ளீர்கள், நன்றாயிருக்கிறது.
பாராட்டுக்கு மிகுந்த நன்றி .