PDA

View Full Version : பெண்மைக்கு ஞானம் அறிவுறுத்தல்(ஆண்மைக்கும் பொருந்தும்)



நாகரா
11-05-2012, 06:16 AM
வீணே கதைக்க அழையான் தானே
நீயாய் நானாய்ப் படரும் யாவுமாய்
'ஐ''யாம்' கோனாய் இருதயத் துள்ளவன்
வாலை யாகி உவனை மணப்பாய்

மூர்த்திகள் என்னும் அனந்த விக்கிரகஞ்
சேர்த்திடு வள்ளல் பிரானவர் நற்றாளில்
போற்றிடு ஒவ்வோர் உருவும் நெஞ்சுள்ளக
மூலவர் உவர்தம் மூர்த்தியாய் ஏற்று

மூலவர் விட்டே மூர்த்திகள் பற்றிக்
காலனுக் கடிமை யாய்க்குழிக் குள்ளே
வீழ்ந்திடும் மடமை யைநீ விட்டே
மார்க்குழிக் குள்ளே உவரொடு ஒன்று

மூர்த்தியும் மூலவர் திருஉரு தானேஅம்
மூர்த்தியை எடுத்தே உவருள் போடுஎக்
காழ்ப்பும்நீ அறவே விட்டு மார்க்குள்
தாழ்ப்பாள்ஒன் றுமிலா இருதயத் தேஇரு

காலமே இல்லை சோம்பலை விட்டு
ஞானமே கொள்ள நேசா தாரம்
வேகமாய் உய்வாய் வீணா சார
மோகமே விட்டே இன்றே இன்னே

நாகமே ஏறும் நாதனில் உறுதியாய்
தேகமே மாறுந் தோலது உரியும்
தானது ஊதும் நாதமும் சற்குருக்
கோனவர் ஞான போதமே கேளே

கோடி கோடியாய்ப் பொருள்அள்ளிக் கொடுத்தாலும்
தேடித் தேடியே ஓடியெங்கும் அலைந்தாலும்
சேரா வள்ளல் நாதரின்மெய்ஞ் ஞானம்நின்
வீடு தேடியே சேர்ந்தது!மெய் தான்இது!!விழி!!!

இருதயந் திறந்து சிவசத்தி பதம்எல்லாந்
திருமய வாலைத் திருஉருப் பெண்ணாம்
நினக்கே தந்தேன் சற்குரு நாதர்தான்
எனக்கே தந்த மொத்தமுந் தந்தேன்

தந்தேன் நெஞ்சஞ் சுரக்கும் அன்பின்தேன்!
வற்றா தென்றுஞ் சுரக்கும் நின்நெஞ்சின்
கண்ணுஞ் சுட்டி மறப்பும் மறைப்பும்
சுட்டுக் கரைத்தேன்!! இரு!!!பார்!!!! உணர்வாய்!!!!!

இலட்சியம் ஒன்றே! இருதய வாய்உற்றே
இரு!!தய வாய்!!!பார்!!!! இரத்தினச் சுருக்கம்!!!!!
திருவருட் பிரகாச வள்ளலார் ஏழாந்
திருமுறைப் பிரசாதம் உண்ணலாம் மார்க்கண்!!!!!!!!
(மார்க்கண் = மார்பின் கண், மார்பின் நடு விடக் கண்ணாம் இருதயத்தில்)

பதி(ன்)ஒன்றாம் நாளிது பதிஒன்றின் அருளாட்சி
புவிதன்னில் பதிந்துளப் பேருண்மை உணர்த்தும்
உந்திக்குள் ஒளிந்துனை வஞ்சிக்கும் ஆணவம்
எச்சங்கள் இன்றித் தான்முற்றிலுங் கரையும்
(உந்தி = மணிபூரக சக்கரம்)