PDA

View Full Version : அவன்ஆதி
10-05-2012, 11:08 AM
தொடர்ந்து கற்பனை உலகத்திலேயே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் அவன்

த*ன்னுடைய* அதிந*வீன* பொய்க*ளால்
சாதுர்ய*மாய் என்னையும் அந்த* க*ற்ப*னை உல*க*த்துக்கே
இட்டுச் சென்று
அத*னை உண்மை என்று ந*ம்ப*வைத்துவிடுகிறான்

பிற*கொரு த*ருண*த்தில்
மற்ற சிலரிடம்
புதிதாய் மெருகேற்றிய சாகச*க் க*தைக*ளை
அவ*ன் கூறி கொண்டிருக்கும் போது
யாரும் அதை புளுக*ல் என்று சொல்லிவிட்டால்
அது உண்மையே என நிரூப்பிக்க* *
என்னை சாட்சிக்கு அழைக்கிறான்

அவனின் பொய்களை விடவும்
அவன் கற்பனையுலக வாழ்க்கை குறித்த* விடயங்களே
எனக்கு கவலை கூட்டுவதாகவும்
அவன் மீது பரிதாபம் கொள்ள செய்வதாகவும் இருக்கிறது

அவ*ன் க*ற்ப*னை உல*க*த்தில் கூட*
யாரையும்
ச*ந்தேக*த்தோடும்
அவ*ந*ம்பிக்கையோடும்
குழ*ப்ப*த்தோடும்
ப*ய*த்தோடும்
பொய்க*ளோடுமே அணுகுகிறான்

அவ*ன் த*ன் ஒவ்வொரு மாந்த*ரையும்
அதி தீவிர* க*ண்காணிபபுக் குட்ப*டுத்தி வைத்திருக்கிறான்

சொத்துக்காக கொலை செய்யப்பட்ட
அப்பாவின் ஆபத்தான உறவினர்களிடம் இருந்து தப்பி
தன்னையும் தன்சொத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழலின்
மிக அதிகப்படியான பயத்தாலும்
யாராலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனும்
அதீத கவனத்தாலுமே
அவ*ன் யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்*
என* எனக்கு தெரியும்

ஆதலாலே
தான் பொய்க*ளிலேயே பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும்
அவ*னின் ஸ்திரமான ந*ம்பிக்கையை
நானும் திட*ப்ப*டுத்திக் கொண்டே இருக்கிறேன்

நாளை அவன் உங்களிடம்
தன் ஜிகினா கதைகளை சொல்லலாம்
நீங்களும் நம்புவதை போலவே* பாவனைத்து
அவன் பாதுகாப்பாய் உள்ளதை உறுதி செய்யுங்க*ள்

சிவா.ஜி
10-05-2012, 01:38 PM
வாழ்க்கையின் மீதான நம்பிக்கையிழந்தவனின் வாக்குமூலம் போன்றது அந்த கற்பனாவாதியின் பிதற்றல்கள்.....எப்படியிருப்பினும்...மனிதன்...சக மனிதன்....பொய்யுரைத்தாவது அவனை வாழ வைப்போம்.

வாழ்த்துக்கள் ஆதன்.

ஷீ-நிசி
11-05-2012, 01:23 AM
பறிதாபம் - பரிதாபம்

கவிதை?! எதைப்பற்றியது என்று விளங்கவில்லை நண்பரே...

vasikaran.g
13-05-2012, 11:37 AM
கவிதை நன்று ..

ஆதி
27-05-2012, 07:55 PM
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி

அவன் நானாக கூட இருக்கலாம்

ஃபோபியாக்களோடு இவ்வலகலில் வாழுவோர் பலர், அவர்கள் தங்களின் அச்சுறுத்தும் கொடும்பயங்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள இப்படி கற்பனையான அரணொன்றை கட்டிக் கொள்கிறார்கள், அந்த அரண் பொய்மையானது என்று அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை மேலும் அச்சத்தில் தள்ளுவதைவிட, நம்பிக்கை கொடுத்து, அந்த அரண் அவர்களுக்கு தேவையற்றது என்று உணர வைத்தல் நம் கடமை

கவிதையில் கொடுத்திருக்கும் ஒரு உதாரணம் இது போன்ற எந்த பின்புல காரணமும் ஒருவனுக்க இருக்கலாம், தன்னை ஒரு கற்பனை அரணுக்குள் வைத்து பாதுக்காத்துக் கொள்ள, அதன் காரணமாக அவன் பல பொய்கள் சொல்லலாம், அவனிடம் போய் நீ பொய் சொல்ற என்று சொல்லி மேலும் அவனை தனிமைக்குழியில் தள்ளி சாவடிப்பதைவிட, அவன் அந்த பொய் அரணில் இருந்து வெளிவர எப்படி உதவ முடியும் என்று யோசிக்கலாம், குறைந்த*ப*ட்ச*ம் அவ*ன் பாதுக்காப்பாய் உள்ளான் என்று அவ*னுக்கு ந*ம்பிக்கை த*ந்தாலே போதும்

கார்பரேட் நாகரீகமும், தொழிநுட்பங்களும் சமூக விலங்கான மனிதனை சமூக வாழ்க்கையையும், சமூகத்தையும் இழக்க வைத்துக் கொண்டிருக்கின்றன, நாம் மற்றவரோடு உள்ள உறவில் இருந்தும், குடும்பந்தாரிடமிருந்தும், தொடர்பிலிருந்து விலகி, அறுந்து, புள்ளியாய் மறைந்து, அழிந்து கொண்டிருக்கிறோம்

குழந்தைகளிடம் நேரம் செலவிட முடியவில்லை, மனையுட*ம் நேரம் செலவிட இயவில்லை, அம்மா அப்பாவிடம் நேரம் செலவிட முடியவில்லை, நண்பர்களுடன் நேரம் செலவிட இயவில்லை, இப்படி நேரப்பற்றாக்குறை அதிகமாக அதிகமாக தனிமை நம்மை முழுமுற்றாய் முற்றுகையிட்டு கைப்பற்றி மனவாதைகளில் மூழ்கடிக்கிறது

இன்று மனநல மருத்துவர்களும், சாமியார் மடங்களும், போதை பொருள் விற்பனைகளும் அதிகரத்துவிட்டதின் முகாந்திரமாய் இந்த கார்பரேட் நாகரீகத்தின் வாழ்கை முறையாகவே இருக்கிறது

இப்படி பிரச்சனைகளை சுமந்து கொண்டு விஸ்வரூபமான ஒரு பெரும்வாதை குழியை விழப்போவதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு, இப்படிப்பட்ட படைப்புக்கள் கொஞ்சம் தேவைப்படுகின்றன, படைப்பென்பது வெறும் இலக்கியம் மட்டுமே அன்று அது மற்ற பிறத்துறைகளுக்கும் பொதுமையானது, ஆனால் இப்படி ஒரு விஸ்வரூபாமான ஒரு பெரும்வாதை குழியை நோக்கி பயணிக்கிறோம் என்று பதிவு செய்ய, சொல்ல, விழிப்புணர்வு ஏற்படாத என்று தாகிக்க ஏதாவது ஒரு துறையில் முன்னடவடிக்கைகள் தேவைப்படுகின்றன, அப்படிப்பட்ட ஒன்றின் பிரமாண்டத்தில் என் படைப்பும் ஒரு துரும்பென கருதி முன்வைக்கிறேன்

vasikaran.g
03-06-2012, 07:33 AM
பரிதாபம்
பெரிதாகும்
கவிதை ..
அரிதான
எண்ணம் ..