PDA

View Full Version : திருப்புகிறேன் என்னை அன்பின் பக்கம்!



நாகரா
10-05-2012, 06:22 AM
இற்றை அற்றை இடையே
இருதயத் தூடே இருக்கு
இறைமை*யாம்* ஒற்றைக் கற்றை!
இறைமை 'ஐ' ஓர்மை உண்மை
இரையாய் உண்ணச் சேர் நெஞ்சை!
திரிந்து தெரியுந் தோற்றப் பிழைகள்
திருத்துந் தெளிவு மார்புள் மழைக்க
அறியாத் தலையால் கால்போன போக்கில்
திரியும் மயக்கில் ஈனப் பிழைப்பு!
இறங்கி இறைமை இரங்கும் உயிர்க்கு!
இருதயத் தூடே சுரக்கும் அன்பின் பெருக்கு!
அன்பை விளங்கா உன்மத்தம் தலையாய்
அன்பே பதியா பூட்ஸே காலாய்
நெஞ்சை மறந்த மனித மிருகம்
என்னில் மறைந்த இருண்ட பக்கம்!
யான் மறுத்த வெறுத்த இருண்மை மருண்மை
தான் பொறுக்கும் அன்பே அருண்மை தெருண்மை!
மறைந்தன வெளிப்பட வைக்கும் அன்பே!
மறந்தன தெளிந்திட வைக்கும் அன்பே!
மறுப்பும் வெறுப்பும் நீக்கும் அன்பே!
திருப்புகிறேன் என்னை அன்பின் பக்கம்!
திருமகன்(ள்) என்னை ஈன்ற தன்பே!
திருநிலை சேர நான் ஆர்? அன்பே!!!
(இற்றை = இகம், அற்றை = பரம்)